Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேது சமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டம் யாருக்காக?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேது சமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டம் யாருக்காக?

[03 - December - 2007]

- டி.எஸ்.எஸ்.மணி-

கடந்த செப்ரெம்பர் 18.2007 அன்று `வாஷிங்டன் போஸ்ட்' டில் ஒரு கட்டுரை. `கடல் கால்வாய்த் திட்டம் இந்தியாவில் ஒரு மத உணர்வுத் தடங்கலால் தடைப்பட்டுள்ளது' என்ற ராமலட்சுமியின் கட்டுரை.

அதில் `சுற்றுச் சூழல் மற்றும் மீனவர் வாழ்வுரிமைக்கான ஒரு போராட்டம் மத முத்திரையுடன் கெடும் வாய்ப்பாக திசை திரும்பிவிட்டது' என முடிக்கப்பட்டிருந்தது.

`சுற்றுச்சூழலை அழிக்கும் ஆபத்துகளை, இந்தச் சேதுக் கால்வாய்த் திட்டம் எப்படியெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் திட்ட ஏற்பாட்டாளர்கள் முன்வைத்த `சுற்றுச் சூழல் தாக்கல் பற்றி மதிப்பீடு' மீதே நாம் காணமுடியும்.

* இந்த வங்காள விரிகுடா - பாக் விரிகுடாப்பகுதி அநேகமாக மென்மையிலிருந்து கடினம் வரையான களிமண்ணை இயற்கையாகக் கொண்டுள்ளது. தனுஷ்கோடிக்கு வடக்கிலும் தெற்கிலும் மணலைக் கொண்டுள்ளது. அதனால் தான் இந்தக் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என 140 ஆண்டுகளாகத் தள்ளிப் போடப்பட்டது. தூர்வாரி ஆழப்படுத்தல் மூலம் கால்வாய் தோண்டினால் ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டி வரும். அதன் செலவு கணக்கிலடங்காது.

* தூத்துக்குடி அருகே உள்ள `வான் தீவு' ஆதாம்பாலத்திலிருந்து 6 கி.மீ.தூரத்தில் உள்ளது. `தேசிய கடல் பூங்கா'விலிருந்து 25 கி.மீ.க்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் வரக் கூடாது என்று `வனவிலங்குச் சட்டம்' கூறுகிறது. `தேசிய கடல் பூங்கா' எனவும் `பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி' எனவும் மன்னார் வளைகுடா, யுனெஸ்கோவால் வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய `சுற்றுச்சூழல் விதிகளை' மீறி இந்தத் திட்டம் வருகிறது.

* ஏற்கனவே, பாக் விரிகுடா மண்ணில் அதிகளவு கடின உலோகக் குவிதலும் எண்ணெயும் காணப்படுகிறது. அதனால் மாசுபட்டுள்ளது. அங்கே கால்வாய்த் திட்டம் வருமானால் `பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதி' மேலும் கெட்டுவிடும்.

* கடல் விசிறி, கடல் பஞ்சு, முத்துச் சிப்பி, சங்கு, கடல் அட்டை ஆகிய வகைவகையான உயிரியல் ஊற்றுக்கள் அழியத் தொடங்கும்.

* இங்கு 600 வகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் 200 வகைகள் வணிக முக்கியம் பெற்றவை. அவற்றின் அழிவு வருமானத்தை இழக்க வைக்கும். மீனவர் வாழ்வுரிமையையும் பறித்துவிடும்.

* 1992 முதல் 1996 வரை இந்தப் பகுதியில் மீன் உற்பத்தி 55 ஆயிரம் தொன்னிலிருந்து, 2001 ஆம் ஆண்டு 2 இலட்சம் தொன்னாக 4 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த உற்பத்திக்கு இந்தத்திட்டம் ஊறு விளைவிக்கும்.

* தென்மேற்குப் பருவக் காற்றுக் காலத்தில் உயிரினங்கள் மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் விரிகுடா செல்லும். மற்றக் காலத்தில் மறுதிசை செல்லும். அவை பாம்பன் பாலம் வழியாகவும் அரிமுனை வழியாகவும் செல்லும் கால்வாய் தோண்டுவதால் அந்த உயிரினங்களின் நடமாட்டம் தடைப்படும்.

* தூர்வாரி ஆழப்படுத்தினால் கடலுக்கு அடியில் உள்ள தாவர, விலங்கு இனங்கள் அழிந்துவிடும்.

* `அரிதான உயிரினமான' கடல் பசுக்கள், பருவ மாற்றத்தில் இடம்பெயர்பவை. அவை அழிந்துவிடுமென மறைந்த பேராசிரியர் சென்னை பல்கலைக்கழக `மானுடவியல்' (Anthropology) துறைத் தலைவர் சுதர்சன் எச்சரித்திருந்தார்.

* `தமிழ்நாடு அறிவியல் கழக' முன்னாள் தலைவரான மறைந்த பேராசிரியர் சுதர்சன் `சேது கால்வாய்த்திட்டம்' சுற்றுச் சூழலையும் மீனவர் வாழ்வுரிமையையும் அழித்துவிடுமென ஓர் ஆய்வு அறிக்கையை 2004 ஆம் ஆண்டே வெளியிட்டார்.

* கட்டுமான காலத்திலும், செயல்படும் காலத்திலும் கடலை மாசுபடுத்தும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய்த் துளிகள், கிரீஸ், பெயிண்ட், பிளாஸ்டிக் பைகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்கள், கடல் நீரோட்டத்தில் கலந்து இயற்கையைத் தொடர்ந்து அழித்து வரும்.

* கப்பல் போக்குவரத்தால், அந்நிய பொருள்களும், உயிர்களும், வங்காள விரிகுடாவிலிருந்து, இந்துமகா கடலுக்கும். திசைமாறிப் பயணமாகி, பகுதிசார் உயிரின வகைகளை, சிதறடித்துவிடும் ஆபத்து அதிகமாக உள்ளது.

* `பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதி'யாக இருக்கும் மன்னார் வளைகுடாவின் செழிப்பான இயற்கை சூழலும், அதன் விசித்திரமான வளமாக இருக்கும் தாவர இனமும், விலங்கு இனமும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.

* திட்டமிடப்பட்டுள்ள சிறிய கால்வாய் வழியாக செல்லும்போது, கப்பல்கள் முட்டிக் கொண்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. அப்போது சிதறும் எண்ணெய், அடித்தள வண்ணப்பூச்சுகள் ஆகியவை கடல் வாழ் உயிரினங்களுக்கும், அவற்றின் வாழ்விற்கும் எதிரானவை.

* அமெரிக்கக் கடலில், 1990 முதல் 1999 வரை 50 ஆயிரம் எண்ணெய்ச் சிதறல்களை `எண்ணெய் அல்லாத இதர சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்களே' ஏற்படுத்தியுள்ளன. அதன் விளைவாக அமெரிக்கக் கடலில் இப்போதெல்லாம் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் குறைந்துவிட்டன.

* கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய எண்ணெய் அல்லாத சரக்கு கப்பல்கள் தான், `சுற்றுச்சூழலை' கடுமையாகப் பாதித்துள்ளன.

* பவளப்பாறைகள் `மன்னார் வளைகுடா'வின் சிறப்பு அம்சம். அவை கிடைக்கும் தீவுகள் இராமேஸ்வரத்திற்கும், தூத்துக்குடிக்கும் மத்தியில் உள்ளன. இவை `எண்ணெய்ச் சிதறல்களால் அழிந்துவிடும்.

* கடல் ஆமைகள் இங்கே அதிகம் உள்ளன. கட்டுமானப் பணியே கூட அவற்றின் உயிரைப் பறித்துவிடும்.

* தூர்வாரி ஆழப்படுத்துதலால் ஏற்படும் கடல் நீரோட்ட பாதிப்புக்களைப் பற்றி திட்ட ஆதரவாளர்கள் கவலைப்படுவதில்லை.

* தூத்துக்குடிக்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையில் இருக்கும் 21 தீவுகள்தான், சுனாமி தாக்குதலிருந்து அந்த இரண்டு கரையோர நகரங்களையும் காப்பாற்றியவை. அத்தகைய தீவுகள் இத்திட்டத்தால் அரிக்கப்பட்டு. அழியும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

* ஐ.நா.வின் ஆய்வில், இந்தியாவில் `பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதிகளாக' 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

`யுனோஸ்கோ'வின் அந்தத் தேர்வில், மிக முக்கிய பகுதிகளாக மூன்றை முடிவு செய்தார்கள். அவை நந்தாதேவி, நீலகிரி மற்றும் மன்னார் வளைகுடா. அதில் `மன்னார் வளைகுடா' வின் பல்லுயிரியலை பாதுகாக்க ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்திற்கு (UNDP) பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பு முயற்சி, சேது கால்வாய்த் திட்டத்தால் வீணாகி விடுமென மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

* மத்திய அமைச்சரவை இதை `கிழக்கின் சுயஸ் கால்வாய்' என அழைக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து, மன்னார் வளைகுடா செல்ல அதிகபட்சம் 24 மணிநேரம் மிச்சப்படும் என்பது அவர்களது வாதம்.

அத்தகைய வாதம் ஒரு மாயை என்பதை கப்பல்துறை நிபுணர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.

* பனாமா, சுயஸ் கால்வாய்கள் நிலத்தில் தோண்டப்பட்டவை. சேது கால்வாய் கடல் நீரில் தோண்டப்படுகிறது.பனாமாவும், சுயசும் 1,50 இலட்சம் தொன் எடையுள்ள கப்பல்கள் பயணிக்க உதவும். ஆனால் சேது கால்வாயில், வெறும் 30 ஆயிரம் தொன் எடையுள்ள கப்பல்களை மட்டுமே அனுமதிக்க முடியும். ரூ.2600 கோடி முதல் ரூ.3500 கோடி வரை சேதுத் திட்டத்துக்குச் செலவாகும். இதுவரை ரூ.300 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

* ஜேகப் ஜான் என்ற பொருளாதார நிபுணர் மேற்கண்ட ஆய்வில், `திட்ட அறிக்கை நகல்' அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியில் இலாபம் இல்லை என்கிறார்.

`எகனமிக் அண்ட் பொலிடிகல்' வீக்லி - 2007, ஜூலை - 2 இல் வெளியான அவரது கட்டுரையில், இத்திட்ட ஆதரவாளர்களின் வாதம் தவறு என விளக்கியுள்ளார். `எந்த ஓர் இந்திய மேற்கு கடற்கரை நகரிலிருந்து, இந்திய கிழக்குக் கடற்கரைக்குச் செல்லும் கப்பலும் சேது வழி செல்வதால் எந்தப் பலனும் பெறப்போவதில்லை.சேது கால்வாய் உள்ளே செல்லவும் திரும்ப வெளியே வரவும் `பைலட் கப்பல்' இரண்டு மணி நேரம் எடுக்கும். தனியான சர்வதேச வாடகைக் கட்டணம் கோரப்படும். கால்வாய் வழியே செல்வதற்கு தனிக் கட்டணமும் வசூலிக்கப்படும். இவை கப்பலின் செலவைக் கூட்டிவிடும் என்கிறார் அவர்.

* தூத்துக்குடியிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு 22 மணி நேர பயணம் குறையும் என்றால். ஐரோப்பாவிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு வெறும் 8 மணி நேரத்தை மட்டுமே மிச்சப்படுத்தும். ஆகவே, வெளிநாட்டுக் கப்பல்களுக்கு சேது கால்வாய் அதிகம் தேவைப்படாது. இதனால் திட்டத்திற்கு ஆகும் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் இழப்புதான் மிஞ்சும் என்கிறார் அவர்.

கட்டுரையாளர் : மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்.

http://www.thinakkural.com/news/2007/12/3/...s_page41525.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.