Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது : கண்டனங்கள்

Featured Replies

கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தலைநகர் கொழும்பிலும், சுற்றுப்புறங்களிலும் வகைதொகையின்றி ஆயிரக்கணக் கான தமிழர்களைக் கைதுசெய்து, பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய கொடுமைக்கு எதிராக நேற்று நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் பிரதான எதிர்க்கட்சி களான ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. ஆகியனவும் சேர்ந்து இந்த இனவெறிக் கைது நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்தன.

ஆனால், இ.தொ.காங்கிரஸ் எம்.பிக்களும், முஸ்லிம் எம்.பிக்களும் நேற்றுக்காலை இவ்விவகாரம் நாடாளுமன்றில் எழுப்பப்பட்டபோது சபையில் பிரசன்னமாகாமல் இருந்ததன் மூலம் இவ்விடயத்தில் தங்கள் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்தும் இக்கட்டு நிலையில் சிக்காமல் தவிர்த்தனர்.

கடந்த மூன்று தினங்களாகத் தலைநகரில் கோரத் தாண்டவமாடிய இந்தக் கொடூரக் கைது விவகாரம் நேற்றுக் காலை நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

இ.தொ.கவினதும் மற்றும் முஸ்லிம் தரப்புகளினதும் எம்.பிக்கள் சபையில் அச் சமயம் காணப்படவேயில்லை.

மலையகத் தமிழர்களும் வகைதொகை யின்றிக் கைது செய்யப்பட்டிருப்பதால், அவ்விடயம் குறித்து ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசுவதற்காக தமது அனைத்து எம்.பிக்களும் அலரிமாளிகைக்கு அச்சம யம் சென்றிருந்தனர் என இ.தொ.கா. தரப் பில் நியாயம் கூறப்பட்டது.

நேற்றுக்காலை மேற்படி சர்ச்சை நாடாளு மன்றத்தில் கிளப்பப்பட்டபோது முஸ்லிம் எம்.பிக்களும் சபையில் இருக்காவிட்டா லும்

தமிழர் கொடூரக் கைது தொடர்பாக அடுத்து, ஒருமித்து எடுக்கவேண்டிய நட வடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகத் தமிழ் பேசும் எம்.பிக்கள் நேற்று நாடாளு மன்றக் கட்டடத்தில் உத்தியோகப்பற்றற்ற முறையில் கூடியபோது அக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பியும் பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் கலந்துகொண்டார். ஆனால் இக்கூட்டத்தி லும் இ.தொ.காவின் எம்.பிக்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

நேற்று நாடாளுமன்றத்தில் தமிழர் கைது நடவடிக்கைக்கு எதிராக ஐ.தே.க., ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன் னணி ஆகிய கட்சிகள் குரல் எழுப்பின.

வழமைபோல மலையக மக்கள் முன்ன ணியின் சார்பில் பிரதி அமைச்சர் இராதா கிருஷ்ணன் இந்தக் கைது நடவடிக்கை களைக் காட்டமாகக் கண்டிக்க, அமைச்சர் சந்திரசேகரனோ வாய்மூடி மௌனமாகப் பார்த்திருந்து அரசுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொண்டார்.

அரசின் இந்தத் தான்தோன்றித்தனமான கைது நடவடிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் கண்டித்த பலரும் ஏற்கனவே கொழும்பில் விடுதிகளில் தங்கி யிருந்த தமிழர்களைப் பலவந்தமாக வவுனி யாவுக்குக் கடத்திச் சென்று நீதிமன்றத் தால் மூக்குடைக்கப்பட்ட அரசு, இப் பொழுது தலைநகரில் தமிழர்களை வகை தொகையின்றிக் கைது செய்து பூஸாவில் அடைத்துவைத்து, சர்வதேச சமூகத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி மூக்குடைபடப் போகின்றது என்று விசனம் தெரிவித்தனர்.

நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் நாடாளுமன்றம் கூடியது.

மாவை உரை

இவ்வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதி ராசா உரையாற்றுகையில்

தமது உடைமைகள், உறவுகள் அனைத் தையும் விட்டு தலைநகரில் தஞ்சம் அடைந்த தமிழர்களையும் வகை தொகை யின்றி கைதுசெய்து பூஸா முகாமில் அடைத்து வைத்துள்ளது அரசு. அப்பாவி மலையத் தமிழர்களும் இத்தகைய துன் புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள னர். கைது செய்யப்பட்டவர்களை மனிதா பிமானத்துடன் விடுதலை செய்ய வேண் டும். என்று தெரிவித்தார்.

மாவை சேனாதிராசாவின் உரையைத் தொடர்ந்து ஐ.தே.க. உறுப்பினரான லக்ஷ் மன் கிரியெல்ல, மலையக மக்கள் முன் னணியைச் சேர்ந்த பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், மேலக மக்கள் முன் னணியின் மனோ கணேசன், ஐ.தே.கட்சி யின் மகேஸ்வரன் மற்றும் ஜே.வி.பியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரும் அரசின் நடவடிக்கைகளைப் பெரிதும் கண்டித்தனர்.

கைதுகளை ஜெயராஜ்

நியாயப்படுத்தினார்

தமிழ் மக்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக சபையில் இருந்த எதிர்க்கட்சி கள் அனைத்தும் ஒரே குரலில் கண்டனம் தெரிவித்தமை ஆளும் தரப்புக்கு சிறிது எரிச்சலை ஏற்படுத்திவிட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆளும் கட்சிக் கொரடாவும், அமைச்சருமான ஜெய ராஜ் பெர்னாண்டோ புள்ளே, தலைநகரில் தமிழர்கள் கைதுசெய்யப்படுவதை நியா யப்படுத்தி அரசுக்கு வக்காலத்து வாங்கி னார்.

புலிகள் இன்று அப்பாவிகளைப் போலவே கொழும்புக்குள் ஊடுருவியுள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சுக்குச் சென்றவர் ஓர் அப்பாவிப் பெண்ணைப் போலவே சென்றார். அதே போன்று நுகேகொடவில் வெடிகுண்டு பார்சலை வைத்தவரும் சாதாரண ஒரு பெண்ணைப் போலவே சென்று பார்சலை வைத்துள்ளார். இப்படியான நிலையில் புலி களையும், அப்பாவிகளையும் எப்படி இனம் காண முடியும்? சந்தேகம் ஏற்படும்போது கைதுகள் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியாது. கைதுகள் தொடரத்தான் செய் யும். அடையாள அட்டைகளை முற்றும் முழுதுமாக நம்பிவிட முடியாது. புலிகளும் கூட அடையாள அட்டைகளைத் தயாரிக் கின்றனர். இவர்கள் வைத்திருக்கும் அடை யாள அட்டைகள் உண்மையானவை தானா என்று கண்டறியும் வரை தடுத்து வைக்கத்தான் வேண்டும்.

அப்பாவித் தமிழ் மக்களைக் கைது செய்கிறோம் எனக் கூட்டமைப்பு உறுப்பி னர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்படியா னால் புலிகளை அவர்கள் அடையாளம் காட் டட்டும், நாம் அப்பாவிகளை விடுதலை செய்கின்றோம். என்றார் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் இந்த இடக்கு முடக்கான பேச்சு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டு மல்லாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்குமே எரிச்சலை அதிகரிக்கச் செய்தது. இதனால் பல முனைகளிலும் இருந்து கண்டனக் குரல்கள் கிளம்பின.

நாட்டுக்குத் தலைகுனிவு

கிரியெல்ல பெரும் விசனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல அரசின் இந்தச் செயல் நாட்டிற்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது. இது ஒரு வெட்கக் கேடான விவகாரம் என்றார்.

இலங்கை 2500 வருடங்களாக பௌத்த போதனைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு நாடு.

தர்மத்தைப் போதிக்கும் ஒரு நாட்டில் தனிப்பட்ட முறையில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக் குள்ளாக்கப் படுகின்றனர். வகைதொகையின்றிக் கொல் லப்படுகின்றனர். நாம் பௌத்தர்கள் என்று கூறுவதற்கே வெட்கப்படவேண்டும்.

தலைநகருக்குப் பல்வேறு தேவைகளுக்காக வந்த தமிழர்கள் ஆண்கள், பெண் கள், சிறுவர், வயோதிபர் என்ற வயது வித்தியாசம் இன்றி பூஸா முகாமில் அடைக் கப்பட்டுள்ளனர்.

சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த நிலைக்குள்ளாகி இருக்கின்றனர் தமிழர்க ள்.

ஏற்கனவே தலைநகரில் இருந்து தமிழர் கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மையை உயர் நீதிமன்றம் கண்டித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அப்போது மூக்கு டைபட்ட அரசு இப்பொழுது தமிழர்களைக் கைது செய்து சட்டத்திற்கும் நீதிக்கும் சவால் விட்டுள்ளது.

முன்பு விட்ட தவறை மீண்டும்செய்கின்றது. எனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். என வலியுறுத்தினார் லக்ஷ்மன் கிரியெல்ல.

அடையாள அட்டையும் பதிவும்

அர்த்தம் ஏதும் அற்றவையா?

கடத்தப்பட்டோர் , காணாமல் போனோர், கைது செய்யப்பட்டோர் தொடர்பான விவரங்களைக் கண்டறியும் குழுவின் உறுப்பினரும், வாழ்க்கைத் தொழில் மற் றும் தொழில் பயிற்சிகள் பிரதி அமைச் சருமான பெ. இராதாகிருஷ்ணன், அரசால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, கிராம சேவையாளர்களின் பதிவு அத்தாட்சிப்பத்திரம் என்பன படையினரால் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

தம்மை ஒருவர் அடையாளம் காட்டுவ தற்கு அரசினால் வழங்கப்பட்ட அடை யாள அட்டையை விட வேறு என்ன வேண் டும்? அத்தனை ஆவணங்களையும் தம் முடன் வைத்திருந்த தமிழர்கள் கைது செய் யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள் ளனர்.

நாம் அரசுக்கு ஆதரவு வழங்குகின்றோம். ஆனால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எம்மால் பதில் சொல்ல முடியாது தடுமாற் றம் அடைகின்றோம்.

கொழும்பிலும் பிற நகர்ப்புறங்களிலும் தமிழர்கள் கைது செய்யப்படுவதை அறிந்து நானும், சகோதரர் மகேஸ்வரன் எம்.பியும் கால்நடையாகவே அலரி மாளிகைக்குச் சென்றோம். ஆனாலும் ஜனாதிபதியைச் சந்திக்க முடியவில்லை.

12 பேர் நிற்கக் கூடிய

கூட்டில் 50 பேர்

கோட்டை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பார்த்தோம். 12 பேர் மட்டுமே நிற்கக்கூடிய ஒரு கூட்டில் ஐம்பது பேரைப் போட்டு அடைத்து வைத்துள்ளனர். ஆயி ரம் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் இருநூறு பேர் மலையகத் தமி ழர்கள். இவர்கள் தொழிலுக்காக கொழும் பில் தங்கியிருப்பவர்கள்.

இப்படிக் கைதுசெய்யப்பட்டவர்கள் எல்லோரும் புலிகளா? இது திட்டமிட்டுத் தமிழர்களை அடக்கி ஆள முயலும் ஒரு செயலாகும்.

அரசு மனிதாபிமானத்துடன் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். என இராதாக்கிருஷ்ணன் கூறினார். அடுத்து தி.மகேஸ்வரன் எம்.பி பேசினார்.

மகேஸ்வரன் காட்டம்

மேற்படி கைது நடவடிக்கைகளுக்கு எதிராக ஐ.தே.கட்சியின் மகேஸ்வரன் எம்.பி. மிகக் காட்டமாக உரையாற்றினார். ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ, அரசின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, மற்றொரு சகோதரரும் பாதுகாப்புஅமைச்சின் செய லாளருமான கோட்டாபய ராஜபக்ஷ அனை வரையும் அவர் வைது தள்ளினார்.

புலிகளின் செல்வாக்கை

அரசு உயரச் செய்கிறது

மகேஸ்வரனைத் தொடர்ந்து பேசிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவும் அரசின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டித் தார்.

அப்பாவித் தமிழர்கள் கைதுசெய்யப்படுவதை ஜே.வி.பி. வன்மையாகக் கண் டிக்கிறது. புலிகளை இனம் கண்டு கைது செய்யுங்கள். அதை நாம் ஆட்சேபிக்க வில்லை என்றார் அவர்.

ஆனால் அப்பாவித்தமிழ் மக்கள் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. என்றார். uthayanpmuz6.gif

  • தொடங்கியவர்

வன்னியில் மக்கள் மீது நடத்தப்படு கின்ற விமானத் தாக்குதல்களையும் நாட் டின் பல இடங்களில் தமிழர்களுக்கு எதி ராக மேற்கொள்ளப்படுகின்ற கைது போன்ற அநியாயங்களையும் தடுத்து நிறுத்தித் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக ஐ.நா. வும், இந்தியாவும் உடனடியாக இவ்விடயத்தில் தலையிடவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார்.

வன்னி விமானத் தாக்குதல் தொடர் பாக நேற்று நாடாளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறி யவை வருமாறு:

வன்னி மீதான விமானத் தாக்குதல்கள்

கடந்த ஒரு வாரமாக வன்னியில் பல இடங்களில் நடத்தப்பட்ட விமானத் தாக் குதல்களால் அப்பாவிப் பொதுமக்கள் பலர் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் பல இடங்களில் நடத் தப்பட்ட கிபிர் விமானத் தாக்குதல்களால் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட் டனர்.

அதேபோல் கிளிநொச்சியில் ஆழ ஊடுருவித் தாக்கும் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலால் பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

மன்னார் முருங்கன் கத்தோலிக்க பாட சாலை ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக் குதலின்போது பல ஆசிரியர்கள் காயம டைந்தனர்.

இவ்வாறு வன்னி யில் மக்களை இலக்கு வைத்து பல தாக்குதல் கள் நடத்தப்பட்டு வரு கின்றன.

யாழ்ப்பாணத்தில் 10பொதுமக்களுக்கு

ஒரு சிப்பாய்

யாழ்ப்பாணத்தில் மக்கள் கடத்தப்படு கின்றனர்; கொலை செய்யப்படுகின்றனர்; அங்கு பத்துப் பொதுமக் களுக்கு ஒரு சிப்பாய் என்ற அடிப்படையில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலைமை காரணமாக மக் கள் உள்நாட்டில் இடம்பெயரத் தொடங்கி யுள்ளனர்.

இவ்விடப்பெயர்வு காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அவர்களின் சொத்துகள் சூறையாடப்படுகின்றன.

கொழும்புக் கைதுகள்

அதுமாத்திரமன்றி கொழும்பில் ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களில் சுமார் 500 பேர்வரை பூஸா தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதுபெரும் அநீதி. அப்பாவிப் பொதுமக்கள் இவ்வாறு கைதுசெய்யப்படுவதை நாம் ஏற்கமாட்டோம்.

இம் மக்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக ஐ.நாவும் இந்தியாவும் தலையிட்டு இவற்றைத் தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோல் வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க முடியாதவாறு அரச சார்பற்ற நிறுவனங்களின் கைகளை அரசு கட்டியுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊழியர்கள் சுயமாக இயங்கும் வகையில் அதியுயர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.

uthayanpmuz6.gif

  • தொடங்கியவர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் குடும்பத்தவர்கள் இப்படித் தமி ழர் விரோதமாக நடந்து கொள்வார் கள் என நான் எதிர்பார்க்கவேயில்லை. பஸில் ராஜபக்ஷ எம்.பியானபோதும் நாம் மனப்பூர்வமாக அந்நியமனத்தை விரும்பி வரவேற்றோம். தமிழர்களுக்கு நல்லது செய்வார் என எதிர்பார்த்தோம். ஆனால், நமது நம்பிக்கை வீண் போய்விட்டது. அவரும் தமது சகோ தரர் கோத்தபாய ராஜபக்ஷ போல தமிழர் விரோதியாகிவிட்டாரே....!

இப்படி நாடாளுமன்றத்தில் கவ லையும், ஆதங்கமும், விசனமும் தெரி வித்தார் ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன்.

தமிழர் கைதுக் கொடூரம் குறித்து நேற்று நடாளுமன்றத்தில் உரையாற் றியபோதே அவர் இவ்வாறு குறிப் பிட்டார். அங்கு அவர் கூறியவை வருமாறு:

3 நாள்களாகப் பட்டினி

பாதுகாப்பு அமைச்சின் செயலா ளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத் தரவின் பேரிலேயே அப்பாவித் தமி ழர்கள் பூஸாவுக்குக் கொண்டு செல் லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அடிப்படை வசதிகள் எது வுமே இல்லை. மூன்று நாள்களாக அந்தக் கைதிகள் பட்டினி போடப் பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழர்கள் கைதுசெய்யப்படுவதை மனிதாபிமான அடிப்படையில் தடுக்க வேண்டும்.

பூஸா முகாமில் நேரடியாகச் சென்று தமிழ் மக்கள் படும் துன்பங்களை பார்த்தேன்.

அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரம் பேரில் 200 பேர் மலையக இளைஞர்கள், யுவதிகள். மொத்தம் 52 பெண்கள் இவ்வாறு தடுத்து வைக் கப்பட்டுள்ளனர்.

இரவு நேரத்தில் எந்தக் கோலத்தில் கைது செய்யப்பட்டனரோ அதே ஆடை களுடன் மாற்றுடை ஏதும் இன்றி அவர்கள் அடைக்கப்பட்டிருக்கின்ற னர்.

கொழும்பில் இருந்து பூஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு மூன்று நாள்களாகச் சரியான உணவு கள் வழங்கப்படவில்லை. பின்னர் வழங்கப்பட்ட உணவினால் வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது.

அடைத்து வைக்கப்பட்டுள்ள அனை வருக்கும் 4, 5 மலசல கூடங்கள் மட் டுமே உள்ளன. அத்தனை பேரும் ஒரு மணி நேரத்துக்குள் தமது காலைக் கடன்களை முடிக்க வேண்டும்.

மந்தைகள் போல

அடைக்கப்பட்டுள்ளனர்

முடிந்ததோ, இல்லையோ ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் ஆட்டு மந் தைகளைப் போல் அடைக்கப்பட்டு விடுகின்றனர்.

பூஸாவில் கோர வேதனையை இவர் கள் அனுபவிக்கின் றனர். எம்மைக் கண் டதும் அவர்கள் கதறி அழும் காட்சி பெரும் கவலைக் கிடமாக இருக் கின் றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 25 வருட நாடாளுமன்ற அனுபவம் உடை யவர். மக்களின் துன்பம் அறிந்தவர். எனவே தமிழ்மக்கள் வகைதொகை யின்றி கைது செய்யப்படுவதை மனி தாபிமானத்துடன் அவர் அணுக வேண் டும். அவர்களை விரைந்து விடு தலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வந்தபோது அவராவது தமிழ் மக்க ளுக்காகப் பேசுபவராக இருப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரும் தமிழர் விரோதியாக செயற்படுவது பெரும் வேதனை அளிக்கின்றது.

நல்ல பௌத்தர்கள், தமிழர்கள் துன்புறுத்தப்படுவதை அங்கீகரிக்க மாட்டார்கள்.

எனவே பூஸா முகாமிலும் ஏனைய இடங்களிலும் தடுத்து வைக்கப்பட் டுள்ள தமிழர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார் மகேஸ்வரன் எம்.பி

uthayanpmuz6.gif

தென்னிலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டமைக்கு (தமிழ்நாடு) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

சிறிலங்கா காவல்துறையினரால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டமைக்கு அனைத்துலக மன்னிப்புச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.