Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் ரெடி...கமலும் ரஜினியும் ரெடியா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pg5.jpg

படிய வாரிய தலை. ஒட்ட வெட்டிய நகம், வீட்டில் ஒவ்வொரு இடத்திலும் கலையாத ஓர் ஒழுங்கு... சின்னச் சின்ன விஷயத்துக்கு சிரத்தை எடுப்பவர்கள்தான் சிகரத்தை எட்டுகிறார்கள் என்பதற்கு இன்றளவும் சாட்சி, இயக்குநர் சிகரம் கே.பி.தான்... இவர் கேர்ஃபிரீயாக இருக்கும் ஒரே தருணம் பேரப்பிள்ளைகளோடு அடிக்கும் லூட்டிதான்! குழந்தைகளோடு இருக்கும்பொழுது குழந்தையாகவே மாறிவிடுகிறார். `குசேலன்' என்றதும் இயல்பான கம்பீரம், குறும்பான சிரிப்பு என சிகரம் சிம்மாசனத்தில் அமர்ந்தது...

`குசேலன்' எப்படி போய்க் கொண்டிருக்கிறது? அதில் உங்களை நடிக்க அழைத்தார்களாமே?

``நாங்கள் எதிர்பார்த்ததைவிட ரொம்ப பிரமாதமா போய்க்கிட்டிருக்கு. ஏற்கெனவே `கத பறையும் போள்'னு மலையாளத்தில் வந்தாலும், அதில் நிறைய மாற்றம் செய்து பி. வாசு எழுதிய ஸ்கிரீன் பிளே ரொம்பப் புதுசா அழகா இருக்கு. அதில் என்னை நடிக்க அழைச்சாங்க. `ஒரு டைரக்டர் கேரக்டர் வருது. நீங்கள் செய்தால் நல்லா இருக்கும்'னு டைரக்டர் வாசு கேட்டதும் நான் உடனே, `வேறு யார் படமா இருந்தா கூட பரவாயில்லை. நானே என் படத்தில் எப்படி நடிக்கறது' என்று சொன்னேன். அவர்களும் அதைப் புரிந்து கொண்டார்கள். இதுதவிர நான் அங்கே இருந்தால் ரஜினியும் மற்றவர்களும் ரொம்ப ரெஸ்ட்ரிக்ஷனா ஃபீல் பண்ணுவாங்க. அவர்கள் இயல்பா இருப்பது தடைபடும். எதற்கு கஷ்டம்னு மறுத்துவிட்டேன்.''

pg5a.jpg

ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரிய ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகராக ரஜினி இன்று புகழ் பெற்றிருக்கிறாரே?

``ரஜினியின் இந்த வளர்ச்சிக்கு அவர் மட்டுமே காரணம். எல்லாத்திலும் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை, அதுதான் உலகம் பூராவும் இன்று அவரைப் பேச வைத்திருக்கிறது. இன்னொரு காரணம், அவரிடம் உள்ள ஆன்மிகமும், தெய்வ பக்தியும்தான். இதற்கெல்லாம் மேலாக இன்னொ ருவர் இருக்கிறார். அவரது மனைவி லதா ரஜினி. இதை ஏன் சொல்றேன்னா ரஜினி மனநிலை சரியில்லாமல் குழம்பிப்போயிருந்தபோது அவரை அரவணைத்து தைரியப்படுத்தி இந்த அளவு உயர்ந்து நிற்பதற்கு லதாவும் உதவினார்.''

நீங்களும் ரஜினியும் தனிப்பட்ட முறையில் சந்திக்கும்போது பழைய நினைவுகளை பேசிக்கொள்வீர்களாமே?

‘‘My words are few with him. அவர் என்னை வைத்திருக்கும் இடம் அப்படி. அதை நான் Maintain பண்ணியாகணும். சும்மா தோளில் கை போட்டு ஜாலியா பேசற மாதிரி இல்லை. K.Bன்னு என் பெயரைச் சொன்னாலே உடனே அவரிடம் ஒரு ரியாக்ஷன் வந்துவிடும். என்னிடம் பேசும்போது சீட்டின் நுனியில் உட்கார்ந்து இருக்கிற மாதிரி உட்கார்ந்திருப்பார். நான் ஏதாவது சொன்னால் சரி சரின்னு தலையாட்டி விட்டு நான் அந்தப் பக்கம் போனதும் என் மகள் புஷ்பாவிடம், `சார் ஒரு மேட்டர் சொன்னார். அது வேண்டாம் நல்லாயில்ல' என்பார். சினிமாவைத் தவிர, அவரின் மற்ற எந்த விஷயத்திலும் என் அபிப்பிராயத்தை இன்று வரை திணித்ததில்லை. அப்படித்தான் என்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.''

pg5b.jpg

நீங்கள் டைரக்ட் பண்ணினால் ரஜினி, கமல் இரண்டு பேரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க முடியும். கமல் கூட ஒரு பேட்டியில் இதைச் சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு சந்தர்ப்பம் இனிமேல் அமையுமா?

(சிரிக்கிறார்) ``கமல் அப்படிச் சொல்லியிருந்தால் அது பந்தை என் பக்கம் தள்ளி விடற விஷயம்தான். The ball is in your court என்பார்கள். நீ கோட்டை விட்டால் அது என் பொறுப்பு இல்லை என்றுதான் அர்த்தம். கமலையும், ரஜினியையும் இணைக்க வாய்ப்பே இல்லை. தலைக்கு மேலே வளர்ந்துவிட்டார்கள். அவர்களிடம் போய் `இப்படிப் பண்ணு, அப்படிப் பண்ணு'ன்னு நான் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. அவர்களுக்காகவே தோன்றி `கே.பி. சாருக்காக நாம சேர்ந்து நடிப்போம்' என்று முடிவு எடுத்து என்னிடம் சொல்லட்டும். நான் வேண்டாம்; உலகத்திலேயே மிகச் சிறந்த இயக்குநர் யார்னு அவர்கள் சொல்லட்டும். ஹாலிவுட்டில் இருந்தாலும் சரி, வேறு எங்கு இருந்தாலும் சரி அழைத்து வர நான் ரெடி.''

உங்களுக்கு இருக்கும் பிரச்னைகளை ரஜினியிடம் சொல்லித்தான் `எனக்கு ஒரு படம் செய்து தர வேண்டும்' என்று கேட்டீர்களாமே?

``ஆமாம். பிரச்னை யாருக்குத்தான் இல்லை. கமலுக்கு வராத பிரச்னையா? அவற்றையெல்லாம் அவர் சந்திக்கத்தானே செய்தார். சினிமான்னாலே பிரச்னைதானே. நான் பண்ணிய தவறுகளை கவனிக் காமல் போனது, சில படங்கள் சரியா போகாததால் ஏற்பட்ட நஷ்டம். இவை சரியாகணும்னா ரஜினி, கவிதாலயாவிற்கு படம் பண்ணினால்தான் முடியும் என்று நினைத்தேன். என் பிரச்னை பற்றி அவருக்கும் தெரியும். `முத்து'வுக்குப் பிறகு பண்ணவில்லை என்பதால் நான்தான் எனக்கு ஒரு படம் பண்ணிக்கொடுங்கள் என்று கேட்டேன். அதனால்தான் `குசேலன்' எனக்கு பண்ணுவதாக அவர் அறிவித்தார். அந்த வகையில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.''

`பில்லா', `நான் அவன் இல்லை' போன்ற பழைய படங்கள் மீண்டும் ரீமேக் ஆவதற்கு இப்போதுள்ள இயக்குநர்களின் கற்பனை வறட்சிதான் காரணமா?

``கற்பனை வறட்சின்னு சொல்ல முடியாது. கமல் என்னைப் பார்க்கும்போதெல்லாம் `அவர்கள்' படத்தை மறுபடியும் எடுங்க. இந்தக் காலத்துக்கு சரியாக இருக்கும். நிச்சயம் ரசிப்பாங்க' என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அப்படி நான் எடுத்தால் உங்க மாதிரி மீடியாகாரங்க கே.பி.க்கு கற்பனை வறண்டு சரக்கு தீர்ந்து போச்சுன்னு சொல்வீங்க. எனக்கு எதற்கு வம்பு சார்'' (சிரிக்கிறார்).

கே.எஸ். கோபாலகிருஷ்ணன், பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர், ஸ்ரீதர் போன்றவர்களுடன் ஓடினீர்கள். பிறகு மணிரத்னம், பாரதிராஜா, ஷங்கர் என்று இவர்களுக்கும் சரிசமமாய் ஓடினீர்கள். ஆனால் இப்போதுள்ள இளம் இயக்குநர்கள் லிங்குசாமி, ஏ.ஆர். முருகதாஸ், அமீர் போன்றவர்களோடு ஈடுகொடுத்து ஓட முடியவில்லையா?

``நான் ஒதுங்கி நிற்கிறேன், அதுதான் காரணம். இவர்கள் எல்லோரையும் பார்த்து வியந்து போயிருக்கிறேன். இவர்கள் அளவுக்கு செய்ய முடியு மான்னு தயக்கமா இருக்கு. நாலு பேரு ரோட்டில் பேசிக்கிட்டு போற ஷாட்டுக்கு குறுக்கும் நெடுக்குமா ஆயிரம் பேரை நடக்கவிடுறாங்க. கேட்டால் அப்பத்தான் பிரமாண்டமா இருக்கும்கறாங்க. காதலர்கள் பேசிக்கிட்டு போகும்போதும் ஷாட் அவங்களுக்கு மட்டும் இருந்தால்தான் இயல்பாய் இருக்கும். ஆனால் ஒரு நூறு பேரை அவங்களைச் சுற்றி நிற்க வைச்சு சீன் பண்றாங்க. இத்தனை பேர் முன்னாடி காதலர்கள் எப்படி தனிமையை அனுபவிக்க முடியும். சுற்றி நிக்கிறவங்களுக்கெல்லாம் காதுகளெல்லாம் டமார செவுடா? காதலர்கள் ஆடும் போது கூட ஒரு நூறு பேரை ஆடவிடுகிறோம். சரி பாட்டுக்குத்தான் விதிவிலக்குன்னு ஆயிடுச்சு. சீனுக்குமா விதிவிலக்கு? யதார்த்தம், யதார்த்தம் என்று சொல்லிக்கிட்டு அதை மீறித்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம்.''

நூறு படங்களுக்குமேலே இயக்கி விட்டீர்கள்? இத்தனை வருடங்களில் நீங்கள் விரும்பி சாதிக்க நினைத்த விஷயங்கள் ஏதாவது நடக்காமல் போனதுண்டா?

``இருக்கு. பாரதியார் வாழ்க்கையை படமா எடுக்க நினைச்சு அது முடியாம போனதால் வருத்தம் உண்டு. ஏதோ சில காரணங்கள், தடங் கலாகவே போச்சு! அதனால்தான் என் படங்களில் அவரை ஒரு கேரக்டரா காட்டியிருப்பேன்.''

சம்பாதிக்காமல் விட்டுவிட்டோமே என்கிற வருத்தத்தைவிட சில விஷயங்களை சாதிக்காமல் விட்டுவிட்டோமே என்கிற வருத்தம்தான் சராசரி இயக்குநர்களுக்கு மத்தியில் பாலசந்தரை இன்றுவரை சிகரத்தில் நிற்கவைத்துள்ளது!.

குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.