Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வைர விழாக் காணும் பறித்தல்களைத் தட்டிப்பறிக்கும் தற்கொடைப்படை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைர விழாக் காணும் பறித்தல்களைத் தட்டிப்பறிக்கும் தற்கொடைப்படை

புனிதன் - 5-7-08

இலங்கைத் தீவுக்கு பிரித்தானியர்கள் சுதந்திரம் கொடுத்து 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அன்றே, தமிழர் தாயகத்தைச் சிங்கள நாட்டுடன் இணைத்துச் சுதந்திரம் கொடுத்ததனால் தமிழ்த் தேசியமும், தமிழர் தாயகமும் பிரித்தானியர்களால் பறிக்கப் பட்டது. எனவே முதல் பறித்தல்கள் இவ்வாண்டு வைரவிழாக் காண்கின்றன.

இலங்கைத் தீவின் சுதந்திரத்துக்காக பிரித்தானியா சென்றவர்கள் இரு தமிழ்ச் சகோதரர்கள். அவர்களைக் குதிரை வண்டியில் ஏற்றி சிங்களவர் இழுத்தது சரித்திரம். காலிமுக மைதானத்தில் உள்ள பாராளுமன்றத்தின் இரு புறமும் அவர்களின் சிலைகள் இருப்பது இலங்கைத் தீவின் சுதந்திரத்துக்கான தமிழனின் முக்கியத்துவம். மாவீரர் துயிலும் இல்லங்களைத் துவம்சம் செய்தவர்கள், செய்பவர்கள் இன்னும் அந்த இரு சிலைகளையும் விட்டு வைத்திருப்பது புதுமை. ஆச்சரியமும் கூட. அந்த இருவருக்கும் தமிழ்த் தேசியமும், தமிழர் தாயகக் கோட்பாடும் பறிக்கப் படுவது ஏன் புரியாமல் போனது? பக்கத்து வீட்டு ஜின்னா செய்தது கூட முன் உதாரணம் கொடுக்கவில்வையா? ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற நம்பிக்கையில் ஊறித் திளைத்தாரோ!

ஒரு நாட்டில், இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்தால், அவர்கள் அந்நாட்டின் குடிமக்கள் ஆவதற்குத் தகுதி பெறுகின்றனர் என்ற சட்டங்கள் உண்டு. மேலை நாடுகளில் வாழும் பலர் இத்தகுதியுடன் தாம் வாழும் நாட்டின் குடிமக்கள் ஆகின்றனர். அந்நாட்டின் அனைத்து மக்களினது உரிமைகளையும் அவர்கள் பெறுகிறார்கள். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியர்களால் காடுகளை அழித்து, தேயிலை, ரப்பர் தோட்டங்களாக்கி வாக்களிக்கும் உரிமையுடன் வாழ்ந்த இந்திய வம்சாவழித் தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் சுதந்திரம் கிடைத்த முதலாவது நாடாளுமன்றத்தால் பறிக்கப் பட்டது. இத்துடன் நாடாளுமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் உறுப்பினர்கள் நீக்கப்பட்டு சிங்கள உறுப்பினர்களால் அவர்களின் இடங்கள் நிரப்பப்பட்டன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் அவர்கள் சேர்க்கப் படுவதில்லை. (பிற் குறிப்பைப் பார்க்கவும்)

இந்திய வம்சாவழித் தமிழர்கள் சிங்கள – புத்த மக்களின் நடுவிலே வாழ்ந்தாலும் அவர்கள் தமிழ் - சைவர்களாக வாழ்கிறார்கள். இத் தமிழர்கள் இலங்கைத் தீவுக்குக் கொண்டு வரப்பட்ட அதே காலகட்டத்தில் தென் ஆபிரிக்க நாடுகளுக்கும், மேற்கு இந்தியத் தீவுகளுக்கும், பிஜி போன்ற ஊர்களுக்கும் கொண்டு செல்லப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தமிழ் மொழியைத் தெரியாதவர்களாக வாழ்வது கண்கூடு. இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு இலங்கைத்தீவில் விளைக்கப் பட்ட, விளைக்கப் படுகின்ற அநீதிகளுக்கும் நடுவில் அவர்கள் சிங்கள – புத்தர்களாக மாறவில்லை. இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களின் தொகைக்குள் இருந்து இந்திய வம்சாவழித் தமிழர்களின் தொகை கூடப் பறிக்கப் பட்டுவிட்டது.

'தமிழ்த் தேசியமும், தமிழர் தாயகக் கோட்பாடும் பறிக்கப் பட்ட பின்னர், எம் இனம் தனக்கே உரித்தான பண்புகளையும், கலாச்சாரத்தையும் தோற்றம் தெரியாமலே சிறிது சிறிதாகப் பறிகொடுத்து விடும்', என்ற எண்ணத்தில் ஊறிய சிங்களப் பேரினவாதம், ஒரு அடிமை உணர்வைத் தமிழர்களிடம் தோற்றுவித்து, அந்த உணர்வை வளர்க்க என்றே இலங்கைத் தீவின் அரசியல் சாசனங்களைப் பலதடவை மாற்றி, நாடாளுமன்றத்தில் சட்டங்களைத் தீட்டி, அவசரகாலச் சட்டத்தை ஆண்டுக் கணக்கில் மாதாமாதம் புதுப்பித்து வருகிறது. அவசரகாலச் சட்டத்தை மாதாமாதம் புதுப்பிக்கும் நாடாளுமன்ற விவாதங்கள் ஒவ்வொரு மாதமும் விடுதலை இயக்கத்துக்குப் பயங்கரவாதச் சாயம் பூசும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களால் நிரம்பும். இலங்கைத் தீவின் சிங்கள, ஆங்கில, அரசு சார்ந்த தமிழ், பத்திரிகைப் பக்கங்களை நிரப்பும். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் கூச்சல் கூக்குரல்களால் நிற்கும். பத்திரிகை அலுவலங்களின் குப்பைக் கூடுகளையும் நிரப்பும். இலங்கைத் தீவின் நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் பேச்சுச் சுதந்திரமும், விடுதலை இயக்கத்தைப் பற்றிய எதையும் தாமாகவே பிரசுரிக்காத போது எழுத்துச் சுதந்திரமும், பறிமுதல் செய்யப் பட்டு விட்டன என்பது தானே தர்க்க ரீதியான முடிவு.

'தமிழ்த் தேசியமும், தமிழர் தாயகக் கோட்பாடும் பறிக்கப் பட்ட பின்னர், எம் இனம் தனக்கே உரித்தான பண்புகளையும், கலாச்சாரத்தையும் தோற்றம் தெரியாமலே சிறிது சிறிதாகப் பறிகொடுத்து விடும்' என்ற சிங்களப் பேரினவாதத்தின் எண்ணத்தை தமிழீழ விடுதலை நோக்கிய ஆயுதப் போராட்டம் தகர்த்தெறியும் என்று உலகமே எதிர்பார்க்கவில்லை. சமாதானப் பேச்சுக்களின்போது முதல் நிபந்தனையாக, 'இலங்கைத் தீவினுள் தமிழ் மக்களுக்குச் சுய நிர்ணய உரிமை (Internal self determination) வேண்டும்', என்ற கோரிக்கையை தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் முன் வைத்தார். எங்கேயும், எப்போதும், எந்த ஒரு இனத்தின் பாதுகாப்புக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சுய நிர்ணய உரிமை பற்றிய வரைபு ஒன்று உண்டு. அந்த வரைபு ஒரு இனத்தின் சுய நிர்ணய உரிமை அந்த இனம் வாழும் நாட்டின் உள்ளேயோ அன்றி வெளியேயோ என்று பாகுபாடு காட்டவில்லை. இலங்கைத் தீவினுள் சுய நிர்ணய உரிமை வேண்டும் என்று தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் முன் வைத்தபோது தான் இலங்கைத் தீவினுள்ளேயும் வெளியேயும் (Both internal and external self determination) ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமை எமக்கே தெரியாமல் பறிபோயிருந்தது எமக்கும், சர்வதேசத்துக்கும் தெரிய வந்தது. சுய நிர்ணய உரிமை வரைபுக்கே இந்நிலை என்றால், ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு தலைப்பட்ட சுதந்திர அறிவித்தல் (Unilateral Declaration of Independence) வரைபின் நிலையும் பரிதாபத்துக்குரியதே.

இதுவரை ஈழத் தமிழர் பறிகொடுத்த தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், பிறப்புரிமைகள், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், மனித உரிமைகள், சுய நிர்ணய உரிமை அனைத்தையும் அர்ச்சனைத் தட்டில் வைத்து அபிஷேகம் செய்து இலங்கைத் தீவின் அரசோ அன்றி சர்வதேசமோ தரப் போவதில்லை. ஏனெனில் ஈழத் தமிழர் பறிகொடுத்த அனைத்துமே ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசால் அந்நாட்டின் அரசியல் யாப்பின் படி பறிக்கப் பட்டவை. இந்த நிலையைச் சர்வதேசம் கட்டிப் பிடிக்கும்.

பறிகொடுத்த அனைத்தும் தட்டித்தான் பறிக்கப்படல் வேண்டும். அந்த முயற்சி தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்துடன் ஆரம்பித்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நிறைந்து விட்டன. சுதந்திரத் தமிழீழத்தில் தான் நாம் பறிகொடுத்த அனைத்தையும் மீளப் பெறமுடியும். அவற்றை அனுபவிக்க முடியும். இதுவரை நாம் மீட்ட மண் தமிழீழ விடுதலைப் புலிகளின் சாதனை. தமிழீழ விடுதலைப் புலிகளின் சாதனையில் மிக முக்கிய பங்காற்றியது 21 ஆண்டுகளின் முன் தோன்றிய தற்கொடைப் படை என்றால் மிகையாகாது. அப்படி ஒரு படைக் கட்டுமானம் எந்த ஒரு நாட்டின் இராணுவத்திலும் இருந்ததும் இல்லை. இருக்கப்போவதும் இல்லை. அப்படி ஒன்றை உருவாக்குதல் எந்த நாட்டாலும் முடியாத ஒன்று. அதனாலே தான் எம் தேசியத் தலைவர் தனித்தவர். சாவுக்குப் பயந்தவர்கள் நிறைந்த உலகில் ஒரு படையே எம்மிடம் உண்டு. அப் படையில் இணைந்தவர், தம் உயிரை ஆயுதமாக்கி இதுவரை ஈந்தவர், அவர்கள் ஒவ்வொருவரும் சுதந்திரத் தமிழீழ இலட்சியத்தில் அபார நம்பிக்கை வைத்தவர்கள். இதுவரை நடந்த தற்கொடைகளினாலும், இனி நடக்க இருக்கும் தற்கொடைகளினாலும், நன்மை அடையப்போவது நாமும் எம் சந்ததியினருமே.

புலத்தில் வாழும் ஈழத்தமிழ்ச் சகோதரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இதுவரை சுதந்திரத் தமிழீழத்திற்கு ஆதரவு நல்காவிட்டால் ஆதரவை நல்குங்கள். இன்னும் இலங்கைத் தீவினுள் சிங்களவருடன் சமாதானமாக வாழலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தால் தூக்கத்தால் விழித்தெழுங்கள். இந்தக் கரும்புலி நாளில், ‘சுதந்திரத் தமிழீழம் விடிந்து கொண்டிருக்கிறது’, என்பதில் முழு நம்பிக்கை வையுங்கள். சிறு இழப்புக்களைக் கண்டு துவளவேண்டாம். அந்த இழப்புக்களே சுதந்திரத் தமிழீழத்திற்கு உரம். இந்த வேண்டுகோளை நிறைவு செய்வதே மறைந்த ஒவ்வொரு தற்கொடைப் படை வீரனின் ஆத்ம ஈடேற்றத்துக்கு நாம் செய்யும் பிரார்த்தனை.

நாளை நமதே.

பிற் குறிப்பு:

1. இதுவரை காலமும் தமிழீழத் தாயகம் எம் பாரம்பரிய பூமி என்று உலக ஊடக இயலாளர்கள் அறிந்திருந்தனர். அண்மையில் Euan Ferguson எழுதி UK Guardian இணையத்தில் வெளிவந்த கட்டுரை உலக ஊடக இயலாளர்களின் அறிவையும் பறித்து விட்டது. இணையத் தொடர்பு: http://www.guardian.co.uk/world/2008/jun/29/srilanka. இக்கட்டுரையில்,

“Historically, Tamils were mainly brought over from India by, of course, Britain, to help run the plantations in what was then Ceylon: they were schooled in governance, bookkeeping, administration, better than the locals.”

என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

2. ' Knowledge books mistreat Tamil history ' என்ற தலைப்பில் வெளிவந்த தமிழ்நெற் இணையத்தளக் கட்டுரை கருத்தில் கொள்ளப் பட வேண்டியது. இணையத் தொடர்பு: http://www.tamilnet.com/art.html?catid=99&artid=26230

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.