Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

BBCயில் இருந்து விலகியது ஏன்? ஒரு தமிழ் நிரூபரின் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானொலியிலிருந்து விலகியதும் ஏன்?

நீங்கள் சொன்னபடி பத்திரிகை, ஊடகத்துறையில் நிறைய வருஷங்கள் இருந்திருக்கிறீர்கள். பிபிசி தமிழோசையில் நிறைய நாட்கள் வேலை செய்துள்ளீர்கள். தமிழோசைக்கும் உங்களுக்குமான உறவென்ன? என்ன நடந்தது? அதிலிருந்து நீங்கள் ஏன் விடுபட்டீர்கள்? இதுபற்றிச் சொல்லுங்கள்.

பிபிஸியில், தமிழோசையில் இருப்பவர்க்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல உறவிருக்குது. முதல்ல பிபிஸி உலக சேவை இங்கிலீஷ்ல செய்தி, செய்தி-விமர்சனப்பிரிவு, பிபிஸி தொலைக்காட்சி பற்றி அலாதியான அனுபவம்னு நிறையவே சொல்லலாம். இந்த இடங்களில் இருக்கற பலர், இன்று என் நெருங்கிய நண்பர்கள். பிரமாதமான நிருபர்கள், நிகழ்ச்சித்தயாரிப்பில் வல்லவர்கள். அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது எவ்வளவோ. இன்னும் படிக்க நிறைய இருக்கு. உதாரணமா, பாலஸ்தீன காஸா பகுதியில் நிருபராக இருந்து இனம்தெரியாத குழுவால் கடத்தப்பட்டு மூணு மாசம் தனிமைச்சிறையில் இருந்தவர், என்னுடன் பணியாற்றிய ஆலன் ஜான்ஸ்டன். தாலிபான் காலத்துல ஆஃகான் நாட்டுல ஹெராத் நகரத்துல பணியாற்றியவர் இவர். இப்போ பாலஸ்தீனப் போராட்டத்தின் நியாயத்தை அங்குள்ள நிலைமை மூலமா எடுத்துக்கூறிய இவருக்கு இந்த கதி. போன வருஷம் தனிமைச்சிறையில் மூணு மாசம் இருந்து இவர் விடுதலையான உடன அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புக்கு வந்து பேசினார். அப்போ குவான்டநாமோ சிறையில இருந்த ஆப்பிரிக்க நிருபரைத்தான் நினைவுகூர்ந்தார். தன்னை முன்வைக்காமல் மற்றவர்களை நினைக்கிற அந்த மாதிரி அபூர்வமானவர்.

ஆக, தனிப்பட்ட முறையில எல்லாரோட நட்பு இருந்தாலும் பிபிஸி நிறுவனத்தைப் பொறுத்தவரை வந்த புதிதில் இருந்த மரியாதை பிறகு தொடரவில்லை. வந்தபோது, இந்தியாவில் பத்திரிகைகளில், செய்தி நிறுவனத்தில் இருந்திருந்த எனக்கு, இது ஒரு உலக அளவு ஊடகம், முதன்மையான வானொலிச்செய்தி ஊடகம் என்ற அளவில் இதிலிருந்து கற்றுக்கொண்டு, என்னை நிலைநிறுத்த மூன்று நான்கு மாதம் பிடித்தது. மூன்று மாதத்துக்குள் தனியாக நிகழ்ச்சி தயாரிக்கிற நிலையை அடைந்துவிட முடிந்தது. இத்தனைக்கும் எனக்குக் குரல்வளம் பெரிதாக இல்ல. வானொலி ஊடகத்தில் நான் இயங்கியதே இல்ல. தவிர இந்தியாவில வானொலிச்செய்தியெல்லாமே அரசின் கட்டுப்பாட்டில் இருக்குது. அது எப்போதுமே விமர்சனப்பூர்வமாகவும் இருந்ததில்ல, இப்போதும் அப்படித்தான். தனியார் வானொலி எஃப் எம்ன்னு பார்த்தா அதில செய்திப்பிரிவு இப்போதும் இல்லை. ஆனா தனியார் தொலைக்காட்சியில் இருக்குது.

ஆக, பிபிஸி உலக சேவையில் பணி என்பது பல பரிமாணங்களில புது அனுபவம்தான். இங்கே மற்ற மொழிச்சேவை சக நிருபர்களிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்குது, அவர்களிடம் எனக்கு எப்பவுமே மரியாதை உண்டு... தவிர, வானொலி என்ற வடிவத்தைப் பொறுத்தவரை அதற்கென்றே அனுகூலங்கள் சில உண்டு, எல்லைகளும் உண்டு. இதையெல்லாம் உள்ளடக்கித்தான் சொல்கிறேன். ஆனா, பிபிஸி நிர்வாகத்தைப் பொறுத்தவரை அதே மரியாதை தொடரும் விதத்தில் அங்கே இயக்கமிருக்கவில்லை, அது கசந்துவிட்டதுங்கறதைச் சொல்லியாக வேண்டும்.

குறிப்பாக ஈராக் யுத்தத்தை ஒரு செய்தி நிறுவனம் என்ற முறையில் பிபிஸி நிர்வாகம் எதிர்கொண்ட விதம் என்னை மிகவும் தாக்கிவிட்டது. உலக அளவில் ஒரு பெரிய crisis வரும்போது ஊடக நிர்வாகம் எப்படி செயல்படும்ன்னு ரொம்பக்கிட்ட இருந்து பார்த்தேன். அதற்கான வாய்ப்பு எனக்கு இருந்தது. அதாவது ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் மிஞ்சியிருப்பது சந்தேகமே என்று நல்லாத்தெரிந்த நிலையில், அப்படி இருப்பதாகக் கூறிய பிரிட்டிஷ் அரசின் உளவு அறிக்கை உண்மையில்ல, அந்த அறிக்கை ஜோடிக்கப்பட்டதுன்னு பிபிஸி நிருபர் ஆண்ட்ரூ கில்லிகன் என்பவரிடம் முகமற்ற ராணுவத்தரப்பு விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். அப்போது ஈராக் ராணுவத்தாக்குதல் தொடங்கி மூன்று மாதம் ஆன நிலை. ஈராக் மீதான ராணுவத்தாக்குதலின் விளைவுகள் மோசமாகிவிட்ட நிலையில் அந்த ராணுவத்தாக்குதல், ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகமே எழுந்துநிற்கிற நிலை. இந்தச்செய்தி உண்மை என்பதால் பிரிட்டிஷ் அரசின் நில ஆட்டங்கண்டுபோச்சு. உடனே பிரிட்டிஷ் அரசு எரிச்சலைஞ்சு சீற்றமடைஞ்சு, அந்த விஞ்ஞானி டேவிட் கெல்லி என்பவர்தான் என ரொம்ப எளிதாகக் கண்டறிந்து அந்தச்செய்தியைக் கசிய வைத்து, பிரச்னையைத் திசைதிருப்பியது. உடனே தேசியவாதம் பேசற பிரிட்டிஷ் ஊடக உலகம், பிரிட்டிஷ அரசைக் கேள்விகேட்பதை நிறுத்திட்டு, ராணுவத்தரப்புல பணியாற்றுகிற டேவிட் கெல்லி எப்படி வெளியே பேசலாம்ற பிரச்னையா இத மாற்றிவிட்டது. பிபிஸி மீதும் ஏகப்பட்ட அழுத்தம் – அந்த விஞ்ஞானியின் பெயர் டேவிட் கெல்லிதான் நீ உறுதிப்படுத்து அப்படின்னு. இந்த இடத்தில் அழுத்தத்துக்குப் பிபிஸி முதல்ல கொஞ்சம் தாக்குப்பிடித்தது. ஆனால் அப்புறமா முடியல்ல. பிபிஸி இயக்குநர் பதவிவிலகினார். ஆனா அதுக்கு முன்னாடியே மற்ற ஊடகங்கள் டேவிட் கெல்லியைப் போட்டுக்கொடுத்துவிட்ட நிலையில விஞ்ஞானி டேவிட் கெல்லி அதற்காக நாடாளுமன்ற விசாரணையை எதிர்கொண்டு, அதைத்தாங்க முடியாத சூழலில் ஆக்ஸ்போர்ட் காட்டுப்பகுதிக்குப் போய்த் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஹட்டன் என்பவர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைச்சு இந்தியாவில், இலங்கையில் பல முறை நடந்திருப்பது மாதிரி அரசுமேலே தப்பில்லன்னு கண்டுபிடிப்பு வேறே.. பகிரங்கமான ஒன்றை அரசாங்கங்கள் ரகசியமாக நினைத்துக்கொள்ளும்போது அந்தச் சிதம்பர ரகசியத்துக்காக உயிர்ப்பலி நடப்பது இப்படித்தான். அமெரிக்காவுல அணுசக்தி விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹைமர் கம்யூனிஸ்ட் உளவாளின்னு சொல்லி அரசாங்கம் அவரை அந்நியப்படுத்தியது இப்படித்தான். இது, அரசாங்கத்தரப்பு விஞ்ஞானிகள் பலருக்கு நடக்கறதுதான், எல்லா அரசாங்கங்களும் செய்வதுதான்.

பிபிஸியில் இதையெல்லாம் கட்டம் கட்டமாகப் பார்த்துக்கொண்டு வந்தேன். இங்கே பிபிஸி செய்திதரும் நிலை என்பதிலிருந்து பிபிஸியே செய்தியாகிவிட்ட நிலை. இந்தக்கட்டத்தில் பிபிஸி நிர்வாகம் ஒரு பொதுநல சேவை என்ற முறையில் முதலில் தைரியமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்கொண்டு, பிறகு பின்வாங்கிப்போயிட்டதைப் பார்க்க முடிஞ்சுது. அதுக்கு முன்னாடியே, ஈராக்குக்கு முதல்ல கொஞ்சமாவது சுயாதீனமாக செய்தியாளர்களை அனுப்ப முற்பட்ட பிபிஸி நிர்வாகம் அப்புறமாக பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகளின், ராணுவத்தின் வரையறைக்கு உள்ளாகச் செயல்பட்டது. இது எனக்கு வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

ஒருவித்த்தில் இதெல்லாம் நான் எதிர்பார்த்தவைதான். இதே காலகட்டத்தில பிபிஸியிலிருந்த பலர் அதை விட்டுவிட்டு அல்-ஜஸீரா தொலைக்காட்சி, செய்தி வலைத்தளம் ஆகியவற்றில் பணியாற்றப்போனார்கள். ஆக, இவர்களில் பலருக்கும் பிபிஸி நிறுவனம் மேற்கத்தியச்சார்பு ஊடகமாக மாறிவிட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் இருந்துது. அதேபோல அல்-ஜஸீரா ஊடகத்தின் பரப்பிலும் பிரச்னைகள் இருப்பதை அங்கே லண்டனில், தோஹா கத்தாரில் பணிபுரிந்த என் நண்பர்கள் தெரிவித்துக்கொண்டே இருந்தார்கள்.

என்னைப்பொறுத்தவரை தமிழோசையில் மட்டுமில்லாமல் உலக சேவையின் இங்கிலீஷ் செய்திச்சேவையிலும் நான்காண்டுகள் இயங்கினேன். முதலில் ஆறுமாதம் பரிசோதனையாக. அப்புறம் சுமார் மூன்றரை ஆண்டுகள் ஓவ்வொரு மாதமும் குறைந்தது சில நாள். ஆங்கில சேவைப்பிரிவுகளுடன் எனக்கு நல்ல நெருக்கம் இருந்தது. தெற்காசிய மொழிகள் சேவையிலிருந்து இப்படி சிலருக்கே வாய்ப்பு கிடைச்சது. எல்லோருக்கும் கிடைச்சிருக்க வேண்டும். குறிப்பாக, ஆங்கில சேவையில் பணிபுரியும்போது அதில் ஒரு நெகிழ்ச்சித்தன்மை, பன்முகப்பார்வைக்கான சாத்தியம் இருக்குன்னு சட்டுன்னு புரிஞ்சிக்க முடியும். ஆனால் தமிழோசை.. தமிழோசை மடடுமில்ல இங்கிலீஷ் அல்லாத எல்லா மற்ற மொழிச்சேவைகளும் ஓரளவு காலனியச் சொல்லாடல்ல சிக்கியிருக்குதுன்னு நினைக்கறேன். இங்கிலீஷ்ல செயற்படும்போது, உலகில் நவ காலனிய நிலைமைகள் தொடர்வதற்கு எதிரான செய்திகளை, கண்ணோட்டங்களை எளிதாகக் கொண்டுவர முடிகிறது. தவிர, அமெரிக்க-பிரிட்டிஷ் மேலாதிக்கத்தை எதிர்க்கலாம். ஆனால் இங்கிலீஷ் அல்லாத மற்ற மொழிச்சேவைகளில் செயற்படும்போது - குறிப்பாக ஐரோப்பிய மொழிகள் அல்லாத மற்ற மொழிகளில் செயற்படும்போது – குறிப்பிட்ட ஓர் எல்லை வரை செல்லலாம். அதற்குமேல் அவ்வளவாகப் போக முடியாது. "உங்கள் உலகப்பகுதியில் நடக்கும் எதை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள், அது பிரிட்டிஷ் கண்ணோட்டத்தை விமர்சித்தால் பரவாயில்லை, ஆனால் ஆங்கிலச் செய்திப்பிரிவின் எழுதப்பெறும் கண்ணோட்டங்கள், ஆய்வுகளில் முக்கியமாக இன்னின்ன வரும், அதைப் போடுவது உங்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது" என்ற நேரடி அல்லது மறைமுக அழுத்தம் தினம் வைக்கப்படும். இன்றைக்கு என்ன செய்தி என்பதை விவாதிக்கும் இடத்தில் இது முன்வைக்கப்படும். இதற்காகவென்றே தங்கள் காரியத்தை நிறைவேற்றக்கூடிய நபர்களை, செய்திப்பிரிவு-ஆசிரியர்களை, கண்காணிப்பவர்களை, மொழிச்சேவை ஆசிரியர்களையேலாம் நிர்வாகம் ஆங்காங்கே வைத்திருக்கு... மற்றவர்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் சரி, இத்தகைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு "முன்னேறுவதும்" அங்கே வழக்கம். இதுபற்றி தமிழோசையிலென்ன, எல்லா மொழிச்சேவையில் பணிபுரியும் அத்தனை பேருக்கும் நல்லாவே தெரியும்.

இப்படிப்பட்ட விநோதமான சூழ்நிலைதான் பிபிஸி அமைப்பில் இருக்கு. அதாவது ஆங்கில சேவையில் நீங்கள் செயல்படும்போது உங்களுக்குள்ள ஒப்பீட்டளவான சுதந்திரம் ஆங்கிலமற்ற ஜரோப்பிய மொழிகள் அற்ற மற்ற மொழிகளில் செயல்படும்போது குறைந்துவிடுகிறது. இதற்கு வரலாற்றுக்காரணங்கள் இருக்குன்னு நினைக்கறேன். இப்ப பிபிஸி உலக சேவை எழுபத்தைந்து வருஷம் நிறைவைக் கொண்டாடியிருக்கு. இவற்றை விரிவாகப் பேச முடியும். அதாவது, இங்கிலீஷ் தெரிந்த நேயர்கள் கேட்கும் பிபிஸி சேவையுடைய விமர்சனப்பரப்பின் எல்லை விரிந்தது. மற்ற மொழி பிபிஸி உலக சேவையுடைய விமர்சனப்பரப்பின் எல்லையோ குறைந்தது. இது ஒரு வருத்தமான விஷயம்னு தோணுது.

தமிழோசையைப் பொறுத்தவரை அதற்கு சுவாரசியமான வரலாறு இருக்கு. ரெண்டாம் உலகப்போர்க்காலத்தில் ஒரு பிரச்சார ரீதியில் ஹிந்தி, உருது, வங்காளி தவிர தமிழில் சேவை வேண்டும் என்று தொடங்கினார்கள் பிரிட்டிஷ்காரர்கள். அதாவது பிரிட்டிஷ்-இந்திய ராணுவத்தில் தமிழ்பேசும் சிப்பாய்கள் நிறைய இருந்ததால் தொடங்கப்பெற்ற வரலாறு இதுக்கு உண்டு. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் மலாயா-சிங்கப்பூர்-பர்மாவில் இருந்த தமிழர்கள் பலர் சேர்ந்ததும் ஒரு காரணம்னு நினைக்கறேன். அதே சமயம் பாரதியின் ”தேமதுரத் தமிழோசை உலகமெலாம்...” என்ற வரிகளை முதலிலிருந்தே ஏற்றதாகத் தெரிகிறது. ஆக, காலனியத்தின் இறுதிக்காலகட்டத்தின் குழந்தையாக தமிழோசையைப் பார்க்கலாம்.

இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்லணும். இதில கவனிக்க வேண்டியது வேற தென்னக மொழிகளுக்கு, சிங்களத்துக்கு இந்தக்கவனிப்பு இல்ல, தெலுங்குல எப்பவோ பரீட்சார்த்தமாகச் செய்திருக்கிறாங்கன்னு பிறகு எனக்குத்தெரிஞ்சது. சிந்தனைரீதியில் பார்த்தால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேர்ந்து ஆசியப்பரப்பு மொழிகளின் செவ்வியலின் ஒருதுருவமாக சமஸ்கிருதம்ங்கற வடமொழி, அதற்கு இணையாக மேற்கில உருது, அதற்கும் மேற்கில பாரசீக மொழி, வடமொழிக்குத் தெற்கில தமிழ்ன்னு வலியுறுத்தியிருக்கிறது, மேற்கத்திய மொழி-வரலாற்றுச் சிந்தனை (philology). எல்லீசர், ஜி யு போப், கால்டுவெல் பிறகு இங்கே லண்டன் பல்கலைக்கழகத்துல கீழைநாடுகள் ஆப்பிரிக்க தேசங்கள் ஆய்வுப்பள்ளியில் தமிழுக்கு இடம் என்பதாக இந்த வரலாற்றைப் பார்க்கலாம். அதாவது மொழிகளை, அவற்றின் தோற்றம், கிளைத்தல் என்பதான கருதுகோள்களை வைத்து ஆராய்ந்து வகைப்படுத்தும் போக்கு இது. பத்தொன்பதாம்-இருபதாம் நூற்றாண்டில தமிழ் ஆராய்ச்சியை மிகவும் தாக்கிய ஒருவித ஆய்வுமுறைன்னு இதச் சொல்லலாம்.

தமிழைப் பொறுத்தவரைக்கும் இத ஏன் சொல்றேன்னு ஒரு முக்கியக் காரணம் இருக்கு. இந்திய, இலங்கை வானொலிகளிலிருந்து குரல்வளமிக்க பலர் வந்து இங்கே செயல்பட்டிருக்கிறாங்க. தமிழுக்குப் பேச்சுவழக்கு-எழுத்துவழக்குன்னு பெரிய இடைவெளி எப்பவுமே உண்டு. தமிழுக்கென்ன, ஏன் தெற்காசியாவில எல்லா மொழிகளுக்கும் இந்த இடைவெளி இருக்குது. தமிழில இந்த இடைவெளி மிக அதிகம்ங்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரபலமான இந்த ஆய்வுமுறையில இதுக்கு முக்கியத்துவ்மில்ல. தமிழோட செவ்வியல் வடிவத்தை அதாவது செந்தமிழை மாத்திரம் முக்கியமா கவனிப்பது இந்த ஆய்வுமுறை. ஆனா இந்த ஆய்வுமுறையை இவர்கள் எல்லாருமே ஆழ்மனநிலையில ஏற்றவர்கள்ங்கறதால தமிழின் செவ்வியல் வடிவம் உயர்ந்ததுன்னு ஓர் எண்ணம், அதில மாத்திரம் ஒலிபரப்பினாப் போதும்ங்கற ஒர் எண்ணம் தொடர்ந்து வந்திருக்கு. இது எனக்கு ரொம்ப விநோதமாப்பட்டுது, இன்னிக்கும் படுது. அதாவது இயல்பா அவரவர் வட்டாரக் கொடுந்தமிழ் பேசற இந்திய, இலங்கை நேயர்களும் இதுக்கே பழக்கப்பட்டு இதையே கேட்கணும்னு எதிர்பார்த்தாங்க. அதாவது தூய செந்ததமிழில பேசணும், ஆனா எழுதற மாதிரி பேசணும், மற்றதெல்லாம் கொச்சைத்தமிழ், கொடுந்தமிழ். நாம இப்போ பேசிட்டிருக்கற மாதிரி தமிழ்ல தமிழோசையில பேச முடியாம இருந்தது. என்ன ஓர் ஆச்சரியம் இது பாத்தீங்களா... தமிழோட அடிப்படை இரட்டைவழக்கை, ஜாதி-வட்டார வித்தியாசங்களை, வடமொழியோடவும் மற்ற மொழிகளோடவும் இருக்கற தொடர்பை, பன்முகச்செயல்பாட்டை அங்கீகரிக்காத நிலையில் பல காலமா செயல்பட்டது தமிழின் வானொலி. இதில இந்திய-இலங்கை வானொலியும் தமிழோசையும் அடக்கம், இதான் பல வருஷப் பாரம்பரியம். இதுபத்தி யாராவது தனியா ஆய்வு செய்யலாம். இதனால யாரோடயாவது பேட்டி எடுக்கப்போனா இயல்பா பேசிக்கிட்டு இருக்கிறவர், டக்குன்னு அதை நிறுத்திட்டு சட்டென்னு செந்தமிழில லெக்சர் அடிக்க, உரை நடத்த, ஆரம்பிச்சிடுவார். கேட்க ரொம்பத் தமாஷா இருக்கும். தவிர, செந்தமிழ்ல தொடர்ந்து பேச முடியாதவங்க பேட்டி தரவே தயங்குவாங்க, இதையெல்லாம் உடைக்கவே தமிழோசை நிகழ்ச்சிக்கு ரொம்பக்காலமாகிவிட்டது. இப்ப பத்துப்பதினைஞ்சு வருஷமாத்தான் கொஞ்சம் உடைஞ்சிபோயிருக்குது. இந்தத் தமாஷான, விநோதமான நிலையிலதான் என்னைப்போன்றவர்கள் செயல்பட வேண்டிவந்தது. நான் இதில சேரும்போது என்னைப் பரிசோதித்த தமிழோசை ஆசிரியர் பொறுப்பில இருந்தவர், கடைசியில, யாப்பருங்கலக்காரிகை படிச்சிருக்கீங்களான்னு கேட்டார். பொறியியல், விஞ்ஞான மாணவனா இருந்த நான் தமிழை மறக்காம செந்தமிழ் இலக்கணம் படிச்சிருந்ததால தப்பிச்சேன். இல்லன்னா என்னையும் கழட்டிவிட்டிருப்பாங்கன்னு நினைக்கறேன்... தமிழோசையில் செய்திகள் வாசிப்பது தவிர செந்தமிழ்ல இருந்த பலதையும் நாங்க மாற்றினோம். கேட்க நல்லாத்தான் இருக்கும் செந்தமிழ். ஆனா அது மொழியின் ஒரு துருவம்தான். நிறையப்பேர் கேக்கணும்னா, நிகழ்ச்சில மனதார பங்கேற்கணும்னா அவங்கவங்க வழக்கை அங்கீகரிச்சுத்தானே ஆகணும்... ஆனா செந்தமிழ் நிலைமை நான் விலகற வரைக்கும் கூட முழுமையா மாறிடுச்சுன்னு சொல்ல முடியாது.

நாடகங்கள், சினிமாப்பாடல்லதான் முதல்ல செந்தமிழ் கொடுந்தமிழுக்கு இடம்கொடுத்தது. வானொலில மாற முக்கால் நூற்றாண்டு ஆகியிருக்குது. இன்னிக்கி இந்தியாவிலேர்ந்து இயங்கற எஃப் எம் வானொலி இளைஞர்களால தங்கிலீஷ் பேசித்தான் இத உடைக்க முடிஞ்சிருக்குன்னு சொல்லலாம். அவங்கள்ல நிறையப்பேரால சாதாரண இயல்பான தமிழ்ல பேச முடியல. அந்த அளவு தங்கிலீஷ் வந்தாச்சு. கொடுந்தமிழ்ல இயல்பா பேசின வரலாறு இருந்தா ஒருவேளை தங்கிலீஷ் குறைஞ்சிருக்கலாம். ஆனா இங்க ஐரோப்பாவில தமிழ் ஒலிபரப்புங்கறது பொதுவா செந்தமிழ், எப்பவாவது நடுவுல கொடுந்தமிழ்ன்னு பயந்துபோய்த்தானிருக்கு. இதுக்கு தமிழோசைதான் தொடக்கம்போட்டுக் குடுத்தது. தமிழுக்கான அடையாளம்னு செந்தமிழ்-கொடுந்தமிழ் ரெண்டையும் நினைக்காம செந்தமிழை மாத்திரம் நினைக்கற விநோதம் இது. தமிழோசையிலிருந்து விலகும்போது அப்பாடா, இனிமேல இயல்பா இரண்டையும் கலந்து பேசலாமேனு நினைச்சிக்கிட்டேன்.

தமிழோசைல பணியாற்றின சமயம் பொருள்மிக்க சில நிகழ்ச்சிகளைக் கொடுக்க முடிஞ்சது. அறிவியல் நிகழ்ச்சிகளை நிறைய மாற்றியதில் எனக்கு நிறைய பங்கு இருந்தது. தமிழ்நாட்டில் தங்கிலீஷ் பற்றி ஒரு தொடர், தென்னாட்டு இசையில் மேற்கத்திய கருவிகள் பற்றிய தொடர், தொல்பொருள் ஆய்வில் புதிய கண்டுபிடிப்புகள் பற்றியெல்லாம் நிறைய என்னால் செய்ய முடிஞ்சுது.

இதெல்லாம் ஒருபக்கம். அதிமுக்கியமானது உங்கள் பிரச்னை – ஈழத்தமிழருடைய போராட்டம் மிக ஆழமான கட்டத்தில் வந்த நிலைமை அது. அதிலும் நிறைய உதாரணங்கள் சொல்லலாம். ஆனா அதைப் பொறுத்தவரை சில விஷயங்களில் எனக்குப் பெரும் வருத்தம் உண்டு.

முதலாவதாக, நான் சேர்ந்த முதல் வருஷம் பெரிய செய்தின்னு பார்த்தீங்கன்னா முதல்ல ஆனைஇறவு முகாம் தகர்ப்பு. பிந்துனுவெவ படுகொலைகல் நடந்தன. பிறகு தேர்தல். அப்புறம் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. பிற்பாடு பேச்சுவார்த்தைகள் நடந்தன. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வன்னியில் நிருபர்களைச் சந்தித்தார். அந்த சமயத்தில் தாய்லாந்தில், ஓஸ்லோவில், பெர்லினில் எனப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. சமாதான ஒப்பந்தம் செயல்பாட்டில் வந்து படிப்படியாக மீறப்பட்டது. சுனாமி என்கிற ஆழிப்பேரலை தாக்கிப் பேரழிவு ஏற்பட்டது. தென்னிந்தியா, ஈழம், சிங்களப்பகுதி எல்லாமே இந்த அழிவைச் சந்தித்தன. இந்தக் காலகட்டத்தில் நான் தமிழோசையில் இயங்கினேன். ஸ்விஸ்ஸில் பேச்சுவார்த்தை நடந்தன. இந்தக் காலகட்டத்தில் இலங்கைக்கு என்னையோ, இங்கே லண்டனில் உள்ள பிற தயாரிப்பாளர்களையோ அனுப்பக்கூடிய வாய்ப்புகள் இருந்தன. ஆனால் பிபிஸி நிர்வாகமும் தமிழோசை நிர்வாகமும் யாரையும் அங்கே அனுப்பவில்லை. ஆசிரியராக இருப்பவர் மாத்திரம் சிலமுறை போய்விட்டு வருவார். இதற்கெல்லாம் என்ன காரணம்ன்னு அவர்கள்தான் சொல்லணும். அதற்குக் காரணம் என்னன்னு நான் நினைப்பதை உடன் சொல்ல விரும்பவில்லை. அவர்கள்தான் பொறுப்பு என்பதால் முதலில் அவர்கள் சொல்லட்டும்.

அதேசமயம் இரண்டு சுற்றுப்பேச்சுவார்த்தைகளுக

பல விடயங்கள் தெளிவாகியுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.