Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கரும்புலிப் போர் வடிவம் ஒரு போரியல்த் தேவை (சு.ரவி)

Featured Replies

கரும்புலிப் போர் வடிவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. வீரத்தினதும் - உயிர் ஈகத்தினதும் - மனவுறுதியினதும் அதியுயர் வடிவமாக கரும்புலிப் போர் முறை உள்ளது.

தன்னோடு எதிரி இலக்கையும் சேர்த்தழிக்கும் ஓர்மம் நிறைந்த போர்முறையாக அது அமைந்துள்ளது.

அதனால்த் தான் உயிராயுதம் என்ற பொருள் பொதிந்த பெயர் சூட்டலுடன் கரும்புலிப் போர் வடிவம் இனங்காணப்பட்டுள்ளது.

கடலிலும் - தரையிலும் இந்தப் போர்முறையை புலிகள் இயக்கம் பல்வேறு உத்திகள் வாயிலாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

தமிழரது வீரமரபின் மகுடமாக கரும்புலிகள் திகழ்கின்றனர்.

கரும்புலிப் போர்முறையின் தேவை என்ன?

கரும்புலிகள் எவ்வாறு உருவாகின்றனர்?

கரும்புலிப் போர்முறையை சர்வதேசம் எவ்வாறு நோக்குகின்றது? இனக்கொலை புரியும் சிங்களப் படைமீது இந்தப் போர்முறை ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

தமிழரது தேசிய அரசியலில் கரும்புலிகள் ஏற்படுத்திவரும் தாக்கம் என்ன? என்பன போன்ற வினாக்களுக்காக இந்தக் கட்டுரை விடையளிக்க முயல்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான புறநிலை உண்மைகளை கருத்திற் கொண்டுஇ போரியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் கரும்புலிப் போர்முறை உருவாக்கப்பட்டது.

தமிழீழப் போர் அரங்கில் இந்தப் புதிய வகைப்போர்முறை அறிமுகப்படுத்தப்பட்டு 21வருடங்கள் நிறைவடைந்து விட்டன.

1987ஆம் ஆண்டு 'விடுதலை நடவடிக்கை' என்ற பெயரில் யாழ்குடாநாட்டில் வடமராட்சிப் பகுதியை ஆக்கிரமிக்க சிங்களப் படைகள் படையெடுத்தன. நெல்லியடியில்இ பாடசாலை வளாகத்தில் முகாமிட்டிருந்த சிங்களப் படைகள் மீது முதலாவது கரும்புலித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

வெடிமருந்து நிரப்பிய பாரவூர்தி ஒன்றை அந்தப் படைமுகாமிற்குள்ளே ஓட்டிச் சென்று தடைகள் பல கடந்துஇ தாக்குதல் புரிந்த கரும்புலி வீரன் மில்லரால் இந்தப் போர் வடிவம் தொடக்கி வைக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரைஇ 21வருடத்தில் 329 கரும்புலி வீரர்கள் இந்தப் போர் முறையில் பங்கெடுத்துக் காவியமானார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கரும்புலிப் போர்முறைக்கான தேவை என்ன என்ற கேள்வி முக்கியமானது

சிங்களப்படையுடனான போரில் வெற்றிபெறத் தேவையான சில முக்கிய இராணுவத் தேவைகளை ஈடுசெய்யும் நோக்கிலேயே இந்தப் புதிய போர் முறையை தலைவர் பிரபாகரன் உருவாக்கியிருந்தார்.

குறைந்த உயிரிழப்பை விலையாகக் கொடுத்து எதிரிப் படைக்கு நிறைந்த சேதத்தை உண்டு பண்ணுவது இப்போர் முறை நோக்கங்களில் ஒன்றாகும்.

தமிழினத்தின் பரம விரோதியாக சிங்கள ? பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை தனது அரசியல் இலட்சியமாகக் கொண்ட சிறிலங்கா அரசு உள்ளது. தமிழினத்தை இனஅழிப்புச் செய்து சிங்களத்தீவு முழுவதையும் சிங்கள ? பௌத்த பூமியாக்குவதே பேரினவாதிகளின் அரசியல் இலட்சியமாகும்.

சிங்கள மக்களிடம் இருந்து உருவாக்கபட்ட சிறிலங்காவின் முப்படைகளையும் - தமிழினத்தை இனக்கொலை செய்து அழிக்கும் - ஒரு கருவியாக சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது.

எண்ணிக்கையில் தமிழர்களை விட அதிகூடிய சனத்தொகையை சிங்கள மக்கள் கொண்டிருப்பதால் சிங்களப் படைகளின் ஆள் எண்ணிக்கையும் மிக அதிகமானதாகும்.

எண்ணிக்கையில் அதிகூடிய சிங்களப்படையை வெற்றி வாகை சூடுவதன் மூலமே தமிழரின் விடுதலையைப் பெற முடியும் . என்ற இராணுவ யதார்த்தம் உள்ளது.

எனவே தான் புலிவீரர்களது களப்பலி என்பது புலிகள் இயக்கம் அதிக கரிசனை காட்டும் ஒரு விடயமாகவுள்ளது.

தமிழர் தரப்பு உயிரிழப்பைக் குறைத்து எதிரிக்கு அதிக சேதத்தை உண்டு பண்ண வேண்டுமாயின் புலிகளின் தரப்பிலிருந்து ஒப்பீட்டளவில் அதிகளவு களவீரம் வெளிப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது

வீரமும் - உயிர் அர்பணிப்பும் புலிகள் இயக்கத்தின் தனிமுத்திரையாக உள்ளன. இந்த வீரத்தினதும் - உயிர் அர்பணிப்பினதும் அதிஉயர் வடிவமாக கரும்புலிப் போர்முறை காணப்படுகின்றது.

கரும்புலிப் போர்முறையில் ஒரு திகைப்பூட்டும் இராணுவ அம்சமும் உள்ளது. எதிரிப்படையை நிலை குலைய வைக்க இந்தத் திகைப்பூட்டல் அவசியமானது இதனால் சிங்களப் படைமுகாம்கங்கள் மீதான தாக்குதல்களின் போது ஆரம்ப கட்டமே புலிகளுக்கு சாதகமான வகையிலேயே ஆரம்பமாகி ? புலிகளின் கைமேல் ஓங்கி தாக்குதல் வெற்றியில் முடியவேண்டும்.

இதே சமயம்இ இரு தரப்பினரும் ஆயுத பலத்தை பொறுத்தளவிலும் பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

ஒரு அரசு என்ற அங்கீகாரத்தை சிறிலங்கா அரசு தனக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நாடுகளுடன் இருந்தும் நவீன ஆயுதங்களைஇ பெருந்தொகையில்இ கொள்வனவு செய்து தமிழருடன் போரிடுகின்றது.

மக்கள் மீதும் - தமிழரின் விடுதலைச் சேனை மீதும் சிங்களப் படையினர் பயன்படுத்தும் நவீனப் போராயுதங்களுக்கு இணையான பதிலாயுதங்களைப் பெறும் வழிகள் புலிகள் இயக்கத்திற்கு அடைக்கப்பட்டே இருக்கின்றன.

போராயுதங்கள் தொடர்பிலான இத்தகைய பாதக அம்சங்களை சீர் செய்து ? சிங்களப் படைகளுக்கு நிகராகப் போர் புரியும் இராணுவத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு போரில் புதிய வழிகளைக் கொள்ள புலிகள் இயக்கம் நிற்பந்திக்கப் படுகின்றது.

கரும்புலிப் போர்முறை மூலம் இந்த இராணுவத் தேவையை ஈடுசெய்ய புலிகள் இயக்கம் முயற்சிக்கின்றது.

சிங்களப் படைகளிடம் அதிநவீனப் போர் விமானங்கள் உண்டு. நீண்ட தூர வீச்செல்லை உடைய ஆட்லறிகள் உண்டு. டாங்கிகள் - கவசவாகனங்கள் உண்டு. மிதமிஞ்சிய வெடிபொருள் சக்தியும் அதனிடம் உண்டு.

அதிகளவு ஆற்றல் சக்தி கொண்ட எதிரியின் இந்தப் போராயுதங்கள் அழிக்கப்படாமல் அல்லது முடக்கப்படாமல் மரபுப் போரில் புலிகள் இயக்கத்தால் எததையும் சாதிக்க முடியாது போய்விடும் இதனால் இனஅழிப்பு என்ற சிங்கள அரசின் நோக்கத்தையும் அது இலகுவில் அடைந்துவிடும்.

எனவேதான்இ சிங்களப் படையின் போராயுதங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் உயிராயுதமாக கரும்புலிப் போர்முறையை புலிகள் இயக்கம் பயன்படுத்தி வருகின்றது.

இந்தக் கரும்புலிப் போர் முறைமூலம் எதிரியின் வான்தளங்கள் - ஆட்லறித் தளங்கள் - கட்டளைப் பீடங்கள் என்பன அழிக்கப்பட்டு சிங்கள அரசின் இராணுவத்திமிர் உடைக்கப்படுகின்றது. தமிழரின் இனப்பிணக்கை இராணுவ வழியில் ஒருபோதுமே தீர்க்க முடியாத என்ற போரியல்ப் பாடத்தைஇ புலிகள் இயக்கம்இ இந்தக் கரும்புலிப் போர்முறை மூலம் சிங்கள அரசுக்கு உணர்த்தி வருகின்றது.

சிங்களப் படையுடனான போரில் இராணுவ மேலாண்மைகளை அடைய கரும்புலிப் போர்முறை பெரிதும் உதவி வருகின்றது. என்பது எவராலும் மறக்க முடியாத உண்மையாகும்.

தரைப் போரில் மட்டுமல்ல கடற்சண்டைகளிலும் இதே இராணுவத் தேவைகளுக்காக கரும்புலித் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

சிங்களக் கடற்போர்க் களங்களுக்கு இணையாக கடற்கலங்ளை பயன்படத்தி போர்புரியும் வசதிகளும் - வாய்ப்புகளும் புலிகள் இயக்கத்திற்கு தற்போது இல்லை.

புலிகளிடமுள்ள சிறியரக சண்டைப் படகுகளும்இ சிங்களப் கடற்படையிடம் உள்ள சக்தி வாய்ந்த கடற்கலங்களும் சண்டையிடுவதென்பது டேவிட்டும் - கோலியாத்தும் சண்டையிடுவது போன்றது. டேவிட் பயன்படுத்தியது போல புதிய வழிகளையும் தந்திரங்களையும் பயன்படுத்தியே கோலியாத் என்ற கடற்படை அரக்கனை வீழ்த்த முடியும் இந்தப் புதிய வழியும் - தந்திரமும் கரும்புலிப் போர்முறைமூலம் செயற்படுத்தப்படுகின்றன.

கரும்புலிப் படகுகள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் சிங்களத்தின் கடற்கலங்களை அழித்தொழிக்கும் நாசகாரிக் கப்பல்கள் போல் அவை செயற்படுகின்றன.

கரும்புலிப் போர்முறை மூலம் எதிரியின் போர்த் தளபாடங்கள் பலவற்றை கடற்கலங்கள் - வான்கலங்கள் உட்பட புலிகள் இயக்கம் அழித்திருக்கின்றது.

போர்க்களத்திற்கு வெளியே இருந்தபடி இனக்கொலைப் போருக்கான கட்டளைப் பீடங்களைச் செய்படும் சிங்களத்தின் போர்த் தலைமைகளை அழித்து ? எதிரிப்படையை நிலைகுலைய வைக்கும் போரியற் செயற்பாடுகளையும் கரும்புலி வீரர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக போரில் இராணுவ பலச்சமநிலையைப் போணுவதில் புலிகள் இயக்கம்வெற்றி கொண்டு வருகின்றது.

அபரிதமான ஆயுத வளத்தையும் - அதிகூடிய ஆள்வளத்தையும் மூலதனமாகக் கொண்டு தமிழருக்கு எதிரான இனப் போர் தொடுத்துள்ள சிங்களப் படைக்கு அச்சுறுத்தலாக கரும்புலிப் போர்முறை உள்ளது.

தம்மிடம் இல்லாத போர் ஆயுதம் ஒன்றை புலிகள் வைத்துப் பயன்படுத்துகின்றனர். என்ற அச்சம் சிங்களப் படையிடம் உள்ளது.

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை எல்லாம் கடந்து சிங்கள அரசின் இராணுவ இலக்குகளை தாக்கியழிக்கும் கரும்புலிகளின் திறன்கண்டு சிங்களப் படைத் தலைமையையும் போருக்குத் தலைமை கொடுக்கும் அதன் அரசியற் தலைமைகளும் அஞ்சுகின்றன.

இதனாற்தான் கரும்புலிப் போர் வடிவத்தை புலிகள் இயக்கத்திடமிருந்து களைவதற்கு சிங்கள அரசு முயற்சிக்கின்றது.

இந்நிலையில் கரும்புலிப் போர்முறையை சர்வதேசம் எவ்வாறு நோக்குகின்றது! என்ற கேள்வியும் முக்கியமானது.

கரும்புலிப் போர்முறை தொடர்பான ஒரு தவறான புரிதலை உலகம் வைத்திருக்கின்றது.

தற்கொலைத் தாக்குதல்கள் என்று உலகம் இழிவாக நினைக்கும் சர்வதேச பயங்கரவாதத்துடன் கரும்புலிப் போர் முறையையோஇ கரும்புலி இயக்கத்தையோ ஒப்பிட்டுக் கருத்துக் கூற முனைவது தவறானது.

தமிழ் - சிங்கள இனப்போரில்இ தமிழர் பக்கம் இருக்கின்ற ஒரு போரியல்த் தேவையை ஈடுசெய்ய முனையும் ஒரு தாக்குதல் வடிவத்தை உலகம் சரிவர புரிந்து கொள்ள வேண்டும்.

'தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்' என்றொரு புகழ்பூத்த விஞ்ஞான வாக்கியம் உண்டு.

தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குள்ள ஆளணிப் பற்றாக்குறை ? ஆயுத வளப்பற்றாக்குறை என்ற பலவீனமானமான இராணுவ அம்சங்களை ஏதோஒரு வகையில் பதிவீடு செய்து விடுதலைப் போரை வழிநடாத்த வேண்டிய கட்டாய தேவை புலிகள் இயக்கத்திற்கு உண்டு. இந்தப் பேரியல்த் தேவையே கரும்புலிப் போர் முறை என்ற புதிய கண்டுபிடிப்பிற்கு காரணமாக அமைகின்றது.

எனவே கரும்புலிப் போர்முறை என்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட ஒரு விஞ்ஞான பூர்வமான போராட்ட வடிவமாகும்.

தன்னை அழித்த படி எதிரியின் இராணுவ இலக்குகளை அழிக்க முயலும் இப்போர் வடிவத்தை வெறுமனே தற்கொலைத் தாக்குதல் என்று சிறுமைப்புடுத்த முடியாது.

தற்கொலை என்பது வாழ்வியல் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க முடியாத கையாலாகாத் தனத்தாலும் - வாழ்க்கை மீதான வெறுப்பினாலும் - விரக்தியினாலும் மனநலன் முறிவுகழின் வெளிப்பாடு தான் தற்கொலை.

ஆனால்இ கரும்புலிகளின் உயிர்ஈகம் என்பது ஒருபோர்க்களத்தியாகம் ஆகும். விடுதலை உணர்வால் உந்தப்பட்ட புலிவீரர்களின் அதிஉயர் அற்பணிப்பு இது. எமது மக்களின் அழிவைத் தடுக்கவும் போர்க்கள வெற்றிகளை உறுத்திப்படுத்தவுமென திட்டமிட்டுச் செயற்படும் ஒரு போர் வடிவத்திற்கான உயிர் விலை அது.

தமிழரின் நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்தபடி ? தமிழ் மக்களை இனக்கொலை செய்யும் சிங்களப் போர் இயந்திரத்தையே கரும்புலிப்போர் முறை குறிவைக்கின்றது. எனவே போரியல் ரீதியில் இதுநியாயமானது.

சிங்கள வான்படையின் 'கிபீர்' வகை மற்றும் 'மிக்' வகைப் போர் விமானங்கள் தமிழரின் வான்பரப்பில் அச்சத்தை ஊட்டியபடி பறந்து ? 500 கி.கி 1000 கி.கி நிறையுடைய அழிக்கர குண்டுகளை தமிழரின் குடிமனைக்குள் போட்டு அவலங்களை விதைக்கும் போது அந்தப் போர் விமானங்களை புலிகள் எப்படித் தவிர்ப்பது! அல்லது

எப்படி அழிப்பது! இங்கே உயிராயுதத்தில் தவிர்க்க முடியாத இராணுவத் தேவையை உணர முடியும்.

சிங்களத்திற்கு வான்கலங்களை கரும்புலிப் போர்முறை மூலம் புலிகள் அழித்தொழிக்கும் போது தமிழ் மக்கள் மகிழ்ச்சி கொண்டாடுவது எதற்காக! சிங்களப் படைகளின் ஆட்லறிகள் - பீரங்கிப் படகுகளை கரும்புலி வீரர்கள் தம்முடன் சேர்த்துப் தகர்த்தெறியும் போது தமிழ் மக்கள் வெற்றி கொண்டாடுவது எதற்காக!

எதிரி வைத்திருக்கும் பலம் பெருந்திய இத்தகைய கொலை ஆயுதங்கள் கரும்புலி வீPரர்களால் அழிக்கப்படுவதென்பது தமிழ் மக்கள் பாதுகாப்பப் படுவதற்கு ஒப்பானது. அதனால்த் தான் அவை அழிக்கப்படும் போது தமிழ் மக்கள் மகிழ்ச்சி கொண்டாடுகின்றனர்.

இதேசமயம்இ தமது போர்விமானங்கள் - போர்க் கப்பல்கள் கரும்புலித் தாக்குதலிகளில் அழிக்கப்படும் போது அவற்றை பயங்கரவாதத் தாக்குதல் என்று உலகிற்குக் கூற சிங்கள அரசு முயல்கின்றது. ஆனால் தனது போர் விமானங்கள் ஆட்லறிகள்இ பல்குழல் எறிகணைச் செலுத்திகள் தமிழ் மக்கள் குடிமனைக்குள் நடாத்தும் குண்டுத் தாக்குதல்களை போர் நடவடிக்கை என்று நியாயப்படுத்த முனைகின்றது.

கரும்புலிகள் என்றால் யார்! இவர்கள் எவ்வாறு உருவாகின்றார்கள். என்ற கேள்விக்கான விடை புதிரானதல்ல.

தமிழீழ விடுதலையை இலட்சியமாக வரித்துக் கொண்டு புலிகள் அமைப்பில் இணைந்த போராளிகள்இ நீண்ட நாள் கள அனுபவங்களுக்குப் பின்னர் கரும்புலிகள் அணியில் இணைய விரும்பி தலைமைப் பீடத்திற்கு கடிதம் வரைகின்றனர்.

நீண்ட காத்திருப்பிற்குப் பின்னர் அவர்கள் கரும்புலிகள் அணியில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்;.

விடுதலையை விரைவாக்க வேண்டும் - ஒரு போர் வீரன் அல்லது வீராங்கனை என்ற வகையில் அதிகம் சாதித்து போராட்டத்திற்கு பலம் சேர்க்க வேண்டும் என்ற விருப்பு இவர்களை கரும்புலிகளாக மாற்றிவிடுகின்றது.

விடுதலை உணர்வும் - தேசய பக்தியும் - தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கையும் விசுவாசமும் கரும்புலிகளுக்கு செயல்வீரத்தை ஊட்டி விடுகின்றன.

மனித மனச்சாட்சிகள் உலுக்கம் அந்த அதிஉன்னத வீரத்தியாகத்தைப் புரியும் கரும்புலிகளின் அரசியல் இலக்கு தமிழரின் விடுதலை தான்..........

அதனால்த் தான் கரும்புலித்தாக்குதல் நிகழும் போதெல்லம் அதைகேள்வியுற்று தமிழ் மக்கள்இ ஓர்மம் இ பெறுகின்றனர். இலட்சிய உறுதி பெறுகின்றனர். எதிரியின் எண்ணிக்கைப் பலம் கண்டே அவனது ஆயுத பலம் கண்டோ அஞ்சாமல் விடுதலைக்காக போராட வேண்டும் என்ற வீர உணர்வை மக்கள் பெறுகின்றனர் இந்தவகையில் தமிழரின் தேசிய அரசியலில் கரும்புலிகள் ஏற்படுத்திவரும் சிந்தனை தாக்கம் ஆழமானது.

நன்றி சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனைப்புக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.