Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னையில் நடந்து கொண்டிருக்கும் உண்ணாவிரதத்தை பற்றி

Featured Replies

இலங்கைக்கு மத்திய அரசு மறைமுக உதவி: ராஜா

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகஇ இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா மறைமுகமாக உதவிகள் செய்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் நடந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ராஜா இன்று காலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்இ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அறவழியில் எதிர்த்து போராடிய மாபெரும் மனிதரான மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

இந்துஇ முஸ்லிம் இடையே மதநல்லிணக்கம் நிலவ வேண்டும் என்று விரும்பிய காந்தியடிகள் கடைசிவரை போராடினார். ஆனால் இப்போது ஒரிசாஇ கர்நாடகா மாநிலங்களில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடைபெற்று வருகின்றன.

இலங்கையிலும் மதத்தின் அடிப்படையில் மதவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

புத்தமதத்தின்அன்புவழியை போதிக்க வேண்டிய பிக்குகளே பலாத்காரவாதிகளாக மாறி தமிழர்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். தமிழர்களும்இ சிங்களர்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.

இது இலங்கையின் உள் விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியாது. அங்குள்ள தமிழ் மக்கள் மீதான தாக்குதல் இந்தியாவையும் பாதிக்கக்கூடியதாகும். அங்கே தாக்கப்படும் தமிழர்கள் இங்கேதான் ஓடி வருகிறார்கள்.

எனவே இந்தியாவை பாதிக்கும் இந்த பிரச்சனையை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. இது ஒரு குறிப்பிட்ட இயக்கத் தையோஇ குறிப்பிட்ட தலைவரையோ ஆதரித்து நடக்கும் போராட்டம் அல்ல; தமிழ் மக்களுக்கு ஆதரவான போராட்டம். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை.

தமிழ் மக்களின் கண்ணீர் துடைக்கப்படவேண்டும். அவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். ராஜபக்சே அரசு கொடுங்கோல் அரசாக மாறி தமிழ் இனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இலங்கையில் தற்போது அந்நாட்டு அரசு பெற்று வருவதாக கூறப்படும் வெற்றி நிரந்தர வெற்றியாக இருக்க முடியாது. போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அரசியல் ரீதியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். தமிழ் மக்களுக்கு மருந்துகள்இ உணவு கிடைக்க மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மையில் இலங்கையின் வடக்குப் பகுதியில் 3 இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் யார்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் இந்திய தூதரகம் குண்டுவைத்து தாக்கப்பட்ட போது இது ஒரு தேசிய துக்கம் என்று கூறிய மத்திய அரசுஇ இலங்கையில் இந்தியர்கள் கொல்லப்பட்டது பற்றி மவுனம் சாதித்துள்ளதே ஏன்?

இலங்கைக்கு இந்திய அரசு அறிவிக்கப்படாத ராணுவ உதவி செய்கிறதோ என்ற கடுமையான சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. அதை இந்திய அரசு மறுக்க தயாரா? அவ்வாறு ராணுவ உதவி அளித்தால் அதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறோம். இலங்கை குறித்த இந்தியாவின் கொள்கை மாற வேண்டும். மறைமுக ராணுவ உதவி நிறுத்தப்பட வேண்டும்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்கள் இழந்த உரிமைகளை மீட்க வேண்டும். மத்திய அரசை நாங்கள் வெறும் அணுசக்தி ஒப்பந்தத்திற்காக மட்டும் எதிர்க்கவில்லை. இலங்கை பிரச்சனைக்காகவும் எதிர்த்தோம் என்று திமுக தலைவருக்கு கூறிக்கொள்கிறோம்.

தமிழ் மக்களின் உணர்வை வெளியிடும் இந்த போராட்டம் தொடர வேண்டும். அதற்காக தொடர்ந்து ஒன்றுபட்டு போராடுவோம் என்றார் ராஜா.

http://thatstamil.oneindia.in/news/2008/10...ctly-draja.html

பேரழிவை நோக்கி இலங்கைத் தமிழ் இனம்: பண்ருட்டி ராமச்சந்திரன்

சென்னை: இலங்கையில் தமிழினிம் பேரழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த சிபிஐ தலைமையிலான இலங்கைத் தமிழர்களைக் காக்க கோரி நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்இ இந்த உண்ணாவிரதத்தை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தினாலும்இ தமிழ் உணர்வுள்ள அனைவரும் இதில் கலந்து கொண்டிருக்கிறோம். இதனை தேர்தல் கண்ணோட்டத்துடன் அணுகக்கூடாது. இந்த நேரத்தில் தேர்தல்இ பதவி சுகம் பற்றியெல்லாம் பேசுவது சரியல்ல.

இலங்கையில் தமிழினம் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவத்தின் முப்படைகளும் சூழ்ந்து தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

இதனால் சுமார் 6 லட்சம் தமிழர்கள் அங்கே அகதிகளாகி உண்ண உணவின்றியும்இ வசிக்க வீடின்றியும்இ உணவுஇ மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய வசதிகள் எதுவுமின்றியும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அவர்கள் நாள்தோறும் இடம்விட்டு இடம்மாறி சாலை ஓரங்களிலும்இ பள்ளிகளிலும்இ கோயில்களிலும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். அவர்களை இலங்கை அரசு வதைத்து வருகிறது.

இலங்கையில் மனித பேரழிவு நடைபெறுவதாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவ தயார் என்று இங்கிலாந்து மக்கள் தெரிவித்தனர். ஆனால் இலங்கை அரசு தடுத்திவிட்டது.

ஐ.நா. சபை சார்பில் சில தொண்டு நிறுவனங்கள் தமிழர்களுக்கு உதவி வந்தன. அவர்களையும் இலங்கை அரசு வெளியேற்றி வருகிறது.

இத்தகைய சூழலில் இலங்கையில் தற்போது நிலவும் நிலைமையை நாம் அனுமதிக்கக் கூடாது. அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா உடடினயாக செய்ய வேண்டும்.

ஒரு காலத்தில் ஈழப் பகுதிகளில் விமானம் மூலம் இந்தியா மருந்து மற்றும் உணவுப் பொருட்களை வழங்கியதைப் போல மீண்டும் அவர்களுக்கு இந்தியா உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். அவர்களை காக்க வேண்டிய பொறுப்பும்இ கடமையும் இந்திய அரசுக்கு உண்டு.

இங்கிருந்து ரிமோட் மூலம் டெல்லியை கருணாநிதி இயக்குவதாக சொல்கிறார்கள். இங்கு வந்த சோனியாவும் மத்திய அரசுக்கு கருணாநிதிதான் வழிகாட்டி என்று தெரிவித்தார்.

இப்படிப்பட்ட உலக தமிழர்களின் தலைவரான கருணாநிதி இந்தப் பிரச்சனைக்காக மயிலை மாங்கொல்லையில் கூட்டம் நடத்தாலாமா?

நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் கருணாநிதி கூட்டம் நடத்துவது தமிழக மக்களை ஏமாற்றும்இ வஞ்சிக்கும் வேலையாகும்.

இந்த உண்ணாவிரதத்திற்கு திமுகவை அழைக்கவில்லை என்று கருணாநிதி கூறுகிறார். நீங்கள் காரியத்தை செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். நாங்கள் கேட்கும் இடத்தில் இருக்கிறோம்.

நீங்கள் செய்யத் தவறிய கடமையைஇ காரியத்தை சுட்டிக் காட்டவும்இ தட்டிக் கேட்கவும்தான் இந்த உண்ணாவிரதத்தை நடத்துகிறோம். எங்கேயாவது கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைப்பார்களா?

எனவே முதலமைச்சர் இந்த உண்ணாரவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்தியா உடனடியாக உதவிப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் தமிழர்கள் பகுதிக்கு இந்த உதவிப் பொருட்களை நேரடியாக எடுத்துச் சென்று வழங்க வேண்டும். இவற்றை இலங்கை அரசிடம் தரக்கூடாது.

இதேபோல ஐ.நா. மூலமும் உதவிப் பொருட்களை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இந்திய அரசை ஒரு போதும் தமிழகம் மன்னிக்காது என்றார் அவர்.

http://thatstamil.oneindia.in/news/2008/10...machandran.html

சிபிஐ உண்ணாவிரதம்: அதிமுக திடீர் ஆப்சென்ட்!

சென்னை: இலங்கைத் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலைக் கண்டித்தும் இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தி இன்று நடந்த சிபிஐ தலைமையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளவில்லை.

இலங்கை தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ராணுவ உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கக்கூடாது இனப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கபப்ட்டிருந்தது.

சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் திமுக நீங்கலாக அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தங்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைக்காதது குறித்து முதல்வர் கருணாநிதி அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று நடந்த உண்ணாவிரதத்தில் திடீரென அதிமுக கலந்து கொள்ளவில்லை. அதிமுக சார்பில் அதன் அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிமுக திடீரென உண்ணாவிரதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டது.

தேமுதிக மயம்

உண்ணாவிரத பந்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா மாநில செயலாளர் தா. பாண்டியன் இணை செயலாளர் சி. மகேந்திரன் தேமுதிக சார்பில் முன்னாள் அமைச்சரும் இலங்கை தமிழர் பிரச்சனையை ஐ.நா. சபையில் ஒலிக்க செய்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டபிள்யூ ஆர்.வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அவருடன் தேமுதிக தொண்டர்கள் தங்கள் கொடிகளுடன் பெருமளவில் கலந்து கொண்டார்கள். தேமுதிக இளைஞரணியினர் மஞ்சள் சீருடையில் வந்திருந்தார்கள். எங்கு பார்த்தாலும் தேமுதிகவின் கொடிகள் காட்சி அளித்தது.

அதிமுக திடீர் புறக்கணிப்பு:

உண்ணாவிரதம் துவங்கிய போது சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னணியினர் பங்கேற்றனர். முத்துசாமி இப்போது வருவார்இ சற்று நேரத்தில் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென்று அதிமுக முன்னணியினர் மற்றும் தொண்டர்கள் அங்கிருந்து நழுவ ஆரம்பித்தார்கள்.

இதேபோல மற்ற அனைத்து ஊர்களிலும் அதிமுகவினர் உண்ணாவிரதத்திற்கு வரவில்லை.

உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தா.பாண்டியனுக்கு கடிதம் எழுதியிருந்தார். முத்துச்சாமி வருவார் எனவும் கூறியிருந்தார். ஆனால் திடீரென அதிமுக பங்கேற்காமல் புறக்கணித்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதிமுகவும் வரவில்லை:

அதேபோல மதிமுகவினரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை. அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவும் வரவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு பெருமளவிலான தேமுதிகவினர் வந்திருந்ததால் கடுப்பான அதிமுகவும் மதிமுகவும் கடைசி நேரத்தில் புறக்கணித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் தொல். திருமாவளவன் பழ.நெடுமாறன் டாக்டர் கிருஷ்ணசாமி உலகத் தமிழர் பேரவை தலைவர் இரா. ஜனார்த்தனம் திண்டிவனம் ராமமூர்த்தி ஜெகவீரபாண்டியன் ஷேக்தாவூத் இசக்கிமுத்து வேட்டவலம் மணிகண்டன் சுப. இளவரசன் துரையரசன் விஜய டி. ராஜேந்தர் இயக்குனர் சீமான் கவிஞர் முத்துலிங்கம் ஓவியர் புகழேந்தி டாக்டர் ரவீந்திரநாத் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

சென்னை அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் தாலுகா தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

http://thatstamil.oneindia.in/news/2008/10...ls.html#cmntTop

Edited by THEEPAN0007

  • தொடங்கியவர்

இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு உண்ணாவிரதம்; தே.மு.தி.க. பங்கேற்பு

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் இலங்கைக்கு மத்திய அரசு ஆயுத உதவி வழங்க கூடாது இலங்கை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதம் நடத்தப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்தது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் த.பாண்டியன் தலைமை தாங்கினார். மகேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

அகில இந்திய செயலாளர் ராஜா உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் கம்யூனிஸ்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தில் தா.பாண்டியன் பேசியதாவது:-

இலங்கையில் தமிழர்கள் குண்டு வீச்சுக்கு பலியாவதை மத்திய அரசு தடுத்து இருக்க வேண்டும் பசியால் தவிக்கும் தமிழர்களுக்கு உணவு வழங்க வேண்டும் செஞ்சிலுவை சங்கம் மூலம் மருந்துகள் அனுப்ப அனுமதி பெற்றுத்தர வேண்டும்.

இந்த போராட்டம் ஒரு கட்சிக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல. மனிதாபிமான அடிப் படையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காக இதயம் உள்ளவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தோம்.

இது அரசியல் நோக்கத்திற்காக எழுப்பப்படும் குரல் அல்ல. தேர்தல் அணிக்காக நடத்தப்படும் ஒத்திகை என்று ஒரு தலைவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

24 மணி நேரமும் தேர்தல் தொகுதி வெற்றி பதவி என்று கனவு காண்பவர்களுக்கு மனித நேயம் எங்கே இருக்க போகிறது. இது தேர்தல் களம் அல்ல அதைப்பற்றி பெரிதும் சிந்திக்க வில்லை. சொந்த சகோதரர்கள் பக்கத்து நாட்டில் சாக வேண்டும் அதை கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் கோட்டை கனவுடன் இருப்பது நியாயமா?

கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் பங்கு எடுத்த நாங்கள் அமைதியாக இருந்ததாக சிலர் கூறுகிறார்கள். பாராளுமன்றத்தில் இலங்கை பிரச்சினைக்காக குரல் எழுப்பியவர்கள் நாங்கள். இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐதராபாத் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினோம். இவைகள் எல்லாம் அவர்களுக்கு எங்கே தெரிய போகிறது.

மத்தியில் 10 தமிழர்கள் மந்திரிகளாக இருக்கிறார்கள். அதிலும் முக்கிய துறை களில் இருக்கிறார்கள். இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து உடனே படுகொலையை தடுத்து நிறுத்துங்கள் என்று ஒரு வார்த்தை கண்டித்ததது உண்டா?

தமிழ் மக்கள் கொல்லப்பட்டால் நாங்கள் பதவி விலகுவதாக பற்றி பரிசீலிப்போம் என்றாவது பேசி இருக்கலாமே அதை எல்லாம் பேசாததால் தமிழ் மக்களுக்காக அவர்கள் நியாயத்திற்காக நாங்கள் போராடுகிறோம். நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தே.மு.தி.க சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் மாவட்ட செயலாளர்கள் வி.என். ராஜன் செந்தா மரைக்கண்ணன் யுவ ராஜ் நிர்வாகிகள் சுரேஷ் குமார் கூடல் ரமேஷ் பாலசுப்ரமணியம் கமாலுதீன் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட் டத்தை வாழ்த்தி தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். அவரை நூற்றுக்கணக்கான தே.மு.தி.க. தொண்டர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஏராளமான மகளிர் அணியினரும் தே.மு.தி.க. சீருடையில் கலந்து கொண்டனர். பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:-

இந்த உண்ணா விரத போராட்டத்தை கொச்சைப்படுத்துவது அழகல்ல. இலங்கை தமிழர்களின் இன்னல் தீரும் வரை தனக்கு பிறந்த நாளே வேண்டாம் என்று அறிவித்தவர் விஜயகாந்த். எங்களுடைய வற்புறுத்தலால் இப்போது வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறார். 1989-ல் முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது இலங்கை தமிழர் பிரச்சினைக்காக அவரிடம் விஜயகாந்த் மனு கொடுத்தார். தனது மகன் பெயரை கூட பிரபாகரன் என்று தான் வைத்திருக்கிறார். இந்த போராட்டத்தை நடத்தும் கம்யூனிஸ்டு கட்சியினர் சிறப்புக்குரியவர்கள்.

மக்களை பிரிப்பதற்கு மதத்தையும் மொழியையும் பயன் படுத்தியதால் இலங்கை பற்றி எரிகிறது. இதே நிலைமை இந்தியாவுக்கும் வந்து விடக்கூடாது என் பதற்காக தங்களை அர்ப்பணித்து இருப்பவர்கள் கம்ïனிஸ்டுகள். இந்த போராட்டத்தை புதிய அணி அமைக்கும் முயற்சி என்கி றார்கள்.

கூட்டணி பற்றி தேர்தல் வரும் போது முடிவு செய்யும் ஆற்றலும் திறமையும் எங்களிடம் இருக்கிறது. தமிழர் களை காக்கும் கடமை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இருக்கிறது.

முதல்-அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுக்கு வழிகாட்டியாக இருப்பதாக சோனியாவே குறிப்பிட்டு இருக்கிறார். தமிழ் இனத்தின் தலைவராக திகழும் கருணாநிதி செய்யும் இடத்தில் இருக்கிறார். அவர்கள் செய்யத் தவறியதை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இலட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் மார்க்சிஸ்டு கம்யூனி த்திய குழு உறுப்பினர் ஆர்.வரதராஜன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக்தாவூது மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் கட்சி தலைவர் துரைஅரசன் உலக தமிழர் பேரவை தலைவர் ஜனார்த்தனம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் அகில இந்திய மூவேந்தர் முன்னனி கழக பொதுச் செயலாளர் இசக்கி முத்து உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன் டைரக்டர் சீமான் சுப.இளவரசன் கவிஞர்கள் முத்துலிங்கம் அறிவுநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நன்றி தமிழ்வின்

Edited by THEEPAN0007

  • தொடங்கியவர்

சிறிலங்காஇ இந்திய அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாநிலை போராட்டம்

ஈழத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிறிலங்கா அரசைக் கண்டித்தும் சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் வழங்கும் இந்திய அரசினைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர்.

இந்த உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்த அதிமுக கட்சி பங்கேற்கவில்லை. அதிமுக கட்சி சார்பில் அதன் அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிமுக திடீரென உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது சிறிது பரபரப்பாக இருந்தது.

உண்ணாநிலை போராட்டப் பந்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜாஇ மாநில செயலாளர் தா.பாண்டியன்இ இணை செயலாளர் சி.மகேந்திரன்இ தேமுதிக சார்பில் முன்னாள் அமைச்சரும்இ ஈழத் தமிழர் பிரச்சினையை ஐ.நா. சபையில் ஒலிக்க செய்தவருமான பண்ருட்டி இராமச்சந்திரன்இ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டபிள்யூ ஆர்.வரதராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களுடன் புதிய தமிழகம் கிருஷ்ணசாமிஇ முன்னாள் காங்கிரஸ் தலவர் திண்டிவனம் இராமமூர்த்திஇ விடுதலைச் சிறுத்தைகள் தொல். திருமாவளவன்இ பழ.நெடுமாறன்இ உலகத் தமிழர் பேரவை தலைவர் இரா. ஜனார்த்தனம்இ ஜெகவீரபாண்டியன்இ சேக்தாவூத்இ விஜய டி. இராஜேந்தர்இ இயக்குனர் சீமான்இ கவிஞர் முத்துலிங்கம்இ படைப்பாளி பா.ஜெயப்பிரகாசம்இ ஓவியர் புகழேந்திஇ உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

சேப்பாக்கத்தில் சாலையின் இருமருங்கிலும் போடப்பட்டிருந்த இருக்கைகள் நிரம்பி நிற்கக்கூட இடமில்லாமல் மேலும் மேலும் கூட்டம் சேர்ந்ததால் சேப்பாக்கம் சாலையில் பேருந்து போக்குவரத்து அடியோடு நிறுத்ப்பட்டது.

உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் டி.ராஜா ஆற்றிய உரை:

இது இலங்கையின் உள்விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியாது. அங்குள்ள தமிழ் மக்கள் மீதான தாக்குதல் இந்தியாவையும் பாதிக்கக்கூடியதாகும். அங்கே தாக்கப்படும் தமிழர்கள் இங்கேதான் ஓடி வருகின்றனர்.

எனவே இந்தியாவை பாதிக்கும் இந்த பிரச்சினையை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. இது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தையோஇ குறிப்பிட்ட தலைவரையோ ஆதரித்து நடக்கும் போராட்டம் அல்ல. தமிழ் மக்களுக்கு ஆதரவான போராட்டம். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை.

தமிழ் மக்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். அவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். ராஜபக்ச அரசு கொடுங்கோல் அரசாக மாறி தமிழ் இனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

அண்மையில் இலங்கையின் வடக்குப் பகுதியில் மூன்று இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் இந்திய தூதரகம் குண்டுவைத்து தாக்கப்பட்ட போது இது ஒரு தேசிய துக்கம் என்று கூறிய மத்திய அரசுஇ இலங்கையில் இந்தியர்கள் கொல்லப்பட்டது பற்றி மெளனம் சாதித்துள்ளதே ஏன்?

சிறிலங்காவுக்கு இந்திய அரசு அறிவிக்கப்படாத இராணுவ உதவி செய்கிறதோ என்ற கடுமையான சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. அதை இந்திய அரசு மறுக்க தயாரா? அவ்வாறு இராணுவ உதவி அளித்தால் அதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறோம். சிறிலங்கா குறித்த இந்தியாவின் கொள்கை மாற வேண்டும். மறைமுக இராணுவ உதவி நிறுத்தப்பட வேண்டும்.

கச்சதீவு ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்கள் இழந்த உரிமைகளை மீட்க வேண்டும். மத்திய அரசை நாங்கள் வெறும் அணுசக்தி ஒப்பந்தத்திற்காக மட்டும் எதிர்க்கவில்லை. இலங்கை பிரச்சினைக்காகவும் எதிர்த்தோம் என்று திமுக தலைவருக்கு கூறிக்கொள்கின்றோம்.

தமிழ் மக்களின் உணர்வை வெளியிடும் இந்த போராட்டம் தொடர வேண்டும். அதற்காக தொடர்ந்து ஒன்றுபட்டு போராடுவோம் என்றார் அவர்.

உண்ணாநிலைப் போராட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு மாநிலச் செயலாளர் தாஇபாண்டியன் ஆற்றிய விளக்கவுரை:

தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த இந்த நாளில் அவர் கடைபிடித்த வழியிலேயே அண்டை நாடான இலங்கையில் அநியாயமான படுகொலைக்கு பலியாகி நிற்கக்கூடிய சகோதரர்களின் அழுகுரல் கேட்டு இதயம் துடித்த காரணத்தால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம்.

நாங்கள் இந்தியக் குடிமக்களாக இருப்பதால் இந்திய அரசின் மூலமாகவே சிறிலங்கா அரசை வற்புறுத்தக் கேட்கின்றோம். கொலை செய்வதை நிறுத்துங்கள் என்றும்இ வானூர்திகள் மூலம் குண்டுகள்போட்டும்இ தரைப்படைகள் மூலம் கொன்று குவிப்பதை நிறுத்த வேண்டும் என்றும்இ பசியால் வாடும் எங்கள் தாய்மார்களுக்கு நீங்களாவது உண்வு கொடுக்க வேண்டும் இல்லயேல் நாங்களாவது உணவு கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்றூதான் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தினை தமிழகம் முழுக்க நடத்துகிறோம்.

ஆறரை கோடி தமிழ் மக்களின் மனிதாபிமான கோரிக்கையாகத்தான் இதனை முன் வைத்துப் போராடுகின்றோம். இந்த உண்ணாநிலைப் போராட்டத்துக்கு பலர் அழைத்தோம் வந்திருக்கின்றனர். அழைக்காமலும் பலர் உணர்வால் உந்தப்பட்டு வந்திருக்கின்றனர்.

ஈழத்தமிழர்களுக்காக நாங்கள் எழுப்புகிற குரல் அரசியல் நோக்கம் கொண்டதல்ல. இந்த நெருக்கடியான நேரத்திலும் இது நெருங்கி வருகின்ற தேர்தலுக்கான கூட்டணி சேர்வதற்கான முயற்சி எனச் சிலர் எழுதுகின்றனர்.

இருபத்தி நான்கு மணிநேரமும் தேர்தல் - தொகுதி - வெற்றி அதற்குப் பிறகு பதவி என்று எப்போதும் இந்தக் கனவிலேயே மிதப்பவர்களுக்கு இரக்கமுள்ள இதயத்தோடு மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சிந்திப்பது கொஞ்சம் கடினம்தான்.

இது தேர்தல் கூட்டணிக்கான கூட்டம் அல்ல. அங்கே இலங்கையில் ஈழத்தமிழர்கள் நமது சகோதரர்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் நாம் இங்கே தேர்தலைப் பற்றி சிந்தித்க் கொண்டிருப்போமேயானால் நாம் நம்மை தமிழர்கள் என்று அழைத்துக் கொள்ளவே தகுதியற்றவர்கள்.

சொந்த சகோதரகள் சாதல் கண்டு நாம் கோட்டையை நினத்து கனவு கண்டு கொண்டிருக்க முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த போது அமைதியாக இருந்தீர்களே என்று ஒரு முதிர்ந்த அரசியல்வாதி இன்று காலை கேட்டிருக்கின்றார். அவருக்கு பத்திரிகைகள் படிக்கிற பழக்கம் இருக்கும் என நினக்கின்றேன்.

கட்சி தொடங்குவதற்கு முன்பே முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுகின்றவர்கள் பத்திரிகைகள வாசித்தல் நல்லது. கடந்த நான்காண்டுகளாக சிறிலங்பாவுக்கு அரசுக்கு இந்தியா எந்தவிதமான உதவியும் செய்யக் கூடாது என்று எங்கள் டி.ராஜா மாநிலங்களவயில் குரல் கொடுத்தார்.

இந்திய அளவில் ஹைதராபாத் மாநாட்டில் நாங்கள் குரல் கொடுத்தோம். அந்த மாநாட்டின் தீர்மானத்தை இந்திய அரசு பின்பற்ற வேண்டும் என்று பெரியவர் நெடுமாறன் வலியுறுத்தினார். அரசியல் என்பது எங்களுக்கோ ஜயா நெடுமாறன் அவர்களுக்கோ தொழில் அல்ல. எங்களின் தீர்மானத்தை படிக்காதவர்கள்தான் இன்று எங்களை கேள்வி கேட்கின்றனர். தமிழகத்தைப் பிடித்த சாபக்கேடு இதல்லாமல் வேறென்ன?

தமிழக மீனவர்கள் 420 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். கொல்லப்பட்டவ்ர்கள் குடும்பதுத்துக்கு நிதி கொடுப்பதோடு விடயம் முடிந்து விட்டது. சுட்டவனை இன்னும் இந்தியா கண்டிக்கவில்லை.

பீகார் ஒரிஸ்ஸா போன்ற மாநில மீனவர்கள் எல்லை கடந்து அண்டை நாடுகளுக்குள் சென்று விட்டால் அந்த நாடுகள் சுட்டுக்கொல்வதில்லை. ஆனால் சுண்டக்காய் சிறிலங்காக்காரன் சுடுகிறான். அதனை நீங்கள் கண்டிக்க மறுக்கிறீன்ர்கள் என்றால் மறமுகமாக நீங்கள் அதனை ஆதரிக்கின்றீர்கள் என்றுதானே பொருள்.

மியான்மர் பர்மா பாகிஸ்தான் என எந்த அரசுகளும் இந்திய மீனவரை சுட்டுக் கொல்லவில்லை. பர்மா பாகிஸ்தான் செய்யாததை சிறிலங்கா செய்கிறது. இதனை தடுத்து நிறுத்துங்கள் என்று ஒரு கண்டனக்குரல் டில்லியில் இருந்து வரும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் வரவில்லை.

இந்திய மந்திரி சபையில் தமிழகத்தைச் சார்ந்த 10 பேர் மந்திரிகளாக இருக்கின்றனர். மத்திய மந்திரி சபை தமிழர்களால் ஆதிக்கம் செய்யப்படுகின்றது என்று வட இந்தியர்களால் குற்றம் சாட்டப்படும் அளவுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் டில்லியில் செல்வாக்கு செலுத்துகின்றார்கள். எது எதற்கோ ஆதரவினை பின்வாங்குகிறோம் என்று மிரட்டுகின்றனர்.

ஆனால் நமது சொந்த சகோதரர் கொல்லப்படுவதற்கு எதிராக வாயே திறக்க மறுக்கிறார்கள். கொல்பவனுக்கு ஆயுதம் கொடுக்கின்ற இந்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் வாங்க வேண்டியதானே. வசூலித்து எம் சகோதரர்களுக்கு அனுப்பச் சென்ற நெடுமாறன் அவர்களயும் தடுத்து இழிவுபடுதினீர்களே?

ஆகஇ ஈழத்தமிழர்களின் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்இ தமிழக மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் கொடுக்கிற மத்திய அரசைக் கண்டிக்க வேண்டும் என்றார் அவர்.

உண்ணாநிலைப் போராட்டம் முடிவடையும் மாலை நேரம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.கே.சிவாஜிலி்ங்கம் மாவை சேனாதிராசா சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து உரையாற்றினர்.

இன்று நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டம் என்பது அதிமுக திமுக என்கிற இரண்டு சக்திகளையும் தவிர்த்த மூன்றாவது வலுவான சக்திகள் நடத்தியது மிக முக்கியமானது.

நன்றி புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.