Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா மீதான பொருளாதர தடையை, புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் உடன் நடைமுறைப்படுத்துவது அவசியம்

Featured Replies

'அதிகாரம் மிகவும் அசௌக்கியமான காரியங்களை எவ்வித கணக்கு வழக்குகளும் இன்றி செய்ய முனைகிறது", 'தண்டணையற்ற அதிகார துஸ்பிரயோகம், வனத்தின் சட்டமாகும்", 'ஆக்கிரமிப்பு யுத்தமே பிரதான சர்வதேச குற்றமாகும்".

-- ராம்சி கிளாக், (முன்னாள் அமெரிக்கா சட்ட மா அதிபர்) பாரிஸ் - 23 செப்டம்பர் 2005

சட்டங்கள் சமூதயத்தை காப்பாற்றவும், சமத்துவம் நீதியின் தாயாகவும் உள்ளது. அதிகாரம் ஒரு போதும் சட்டத்திற்கு மேலாக இருக்க முடியாது. இவை ஜனநாயத்திற்கும் நீதிக்குமான சில முக்கிய விதிகள். இவ் விதிகள் சிறிலங்காவை பொறுத்த வரையில் எவ்வித நிலையில் உள்ளன? நாம் சிறிலங்காவினுடைய மனித உரிமைக்கான புள்ளி விபரங்களையும், பல விதப்பட்ட அறிக்கைகளையும் ஆராய்வோமானால் - ஐக்கிய நாடுகள் சபையின் வேறு பிரிவுகளின் மனித உரிமை அறிக்கைகள், சர்வதேச நிறுவனங்களின் அறிக்கைகள், ஐரோப்பிய நாடுகளின் பாரளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகள், சிறிலங்கா அரசினால் இலங்கை தீவின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழிழ மக்களின் மனித உரிமைகளை மிக மோசமான முறையில் மீறப்படுவதையும் அது பற்றி தாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளதாகவும் கூறிவருகின்றனர்.

ஆனால் சிறிலங்கா அரசினுடைய அரச பயங்கரவாதத்திற்கு சர்வதேச சமூதாயம் இது வரையில் எதையும் உருப்படியாக செய்ததே கிடையாது. ஐ. நா. மனித உரிமை பிரிவின் புள்ளி விபரங்களின் அடிப்படையில், 1998ம் ஆண்டு உலகில் காணமல் போவோர் பட்டியலில், சிறிலங்கா ஈராக்குக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இருந்ததை சர்வதேச சமூதாயம் மிக நன்றாக அறிந்திருத்தது. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக, சிறிலங்காவில் மீக நீண்ட யுத்தம் நடைபெறுவதையும்; அங்கு தமிழ் மக்கள் திட்டமிட்டு கொலைசெய்யப்படுவதையும் சர்வதேச சமூதாயம் நன்றாக தெரிந்திருந்தது. கடந்த கால யுத்தத்தினால் மட்டும் வடக்கு கிழக்கில் 79,000 தமிழர் படுகொலை செய்யப்பட்டும், 25,300 பேர் காணமல் போயும், 12,000 க்கு மேல்; பெண்கள் பலியல் வன்முறைக்காக்கப்பட்டும் உள்ளனர். இவ்வளவு நடைபெற்றும், சர்வதேச சமூதயமும், உலகமைப்புக்களும் இன்னும் மௌனமாகவுள்ளனர்? நாம் பல தரப்பட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளையும், ராஜாதந்திரிகளையும் சந்திக்கும் வேளைகளில் தெளிவாகும் உண்மை என்னவெனில், சிறிலங்கா அரசினுடைய தூதுவராலாயங்களுக்குடான பொய்ப் பிரச்சாரங்கள் பெரிதளவில் மேற்கு நாடுகளில் நடைபெறுவது இவர்களது மெனத்திற்கு முக்கிய காரணமாகவுள்ளது.

இப்படியாக நீதிக்கு அப்பாற்பட்ட காரணங்களினால், உலகமைப்புக்கள்; சிறிலங்கா மீது எவ்வித கண்டனங்களையோ, தண்டனைகளையோ மேற்கொள்ள தவறி வருகின்றன. இந்த ரீதியில் சிறிலங்காவின் சிங்கள பௌத்த அரசுகள் உலகமைப்புக்களின் மன்னிப்புடன், தமிழிழ மக்கள் மீதான தமது அரச பயங்கரவாதத்தை தொடர வாய்ப்களிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச சமூதயத்தின் இரட்டை வேடங்களை வெளிப்படையாக காட்டுகிறது. இதே வேளை ஓரு சாகப்தத்திற்கு மேலாக தமிழிழ மக்கள் மீது திணிக்கப்பட்ட சிறிலங்கா அரசின் பொருளாதார தடை. வடக்கு கிழக்கில் வாழும் தமிழிழ மக்களும் தமது குடிமக்களென வெளி உலகிற்கு கபட நாடாகம் ஆடும் சிறிலங்கா அரசு, அதே மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொருளாதார தடையினால் தமிழிழ மக்கள், விசேடமாக முதியோரும் சிறார்களும் பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்கியதை யாரும் மறக்கமாட்டார்கள். இதே போன்ற பொருளாதார தடையை, வடக்கு கிழக்கில் மீண்டும் அண்மை காலங்களில் அமுல் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறிலங்கா அரசினால் மீண்டும் ஒரு யுத்தம் தமிழிழ மக்கள் மீது பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச சமூதயமும், உலகமைப்புக்களும் இவற்றை கண்டும் காணதவர் போல் பாசாங்கு செய்கின்றனர்.

இவ் வேளையிலே மேற்குலகில் வாழும் புலம் பெயர் வாழ் தமிழார்கள், தமது பலத்தை சிறிலங்கா அரசிற்கு காண்பிக்க வேண்டிய ஓர் வராலாற்றுக் கடமை உண்டு. இதன் மூலமே, சர்வதேச சமூதயத்தின் இரட்டை வேடங்களிலிருந்து விடுபட்டு, வெற்றிகரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் தமிழிழ விடுதலை போரட்டத்திற்கு உறுதுணையாகவும் புலம் பெயர் வாழ் தமிழிழ மக்கள் உள்ளார்கள் என்பதை சர்வதேச சமூதயத்திற்கு காண்பிக்க முடியும். இதற்கு நாம் அண்மை காலங்களில் சர்வதேச சமூதயத்தின் இரட்டை வேடங்களிலிருந்து விடுபட்டு, தமது விடுதலை போராட்டத்தில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கவின் போராட்டத்தை கவனத்தில் கொள்ளலாம். இப் போரட்டத்திற்கு புலம் பெயர் வாழ் தென் ஆபிரிக்கரின் பங்களிப்பை பெரியளவில் காணக்கூடியதாகவள்ளது. ஆகையால் புலம் பெயர் வாழ் தமிழிழ மக்கள் எவற்றை விடுதலை போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக செய்யலாம் என்பதை நாம் யோசிக்குமிடத்தில், அது நிட்சயமாக நீண்ட காலமாக தமிழிழ மக்களின் மனதுகளில் தூங்கிக் கொண்டிருந்த சிறிலங்கா அரசு மீதான பொருளாதார தடையாகவே இருக்கும்.

இறந்த காலங்களிலே இதை சில புலம் பெயர் வாழ் தமிழிழ மக்கள் - சிறிலங்காவிற்கு ஆயதம் வழங்க வேண்டமென்றும், உலக வங்கியை சிறிலங்காவிற்கு நிதி உதவி செய்ய வேண்டமென்று மனுக்கள் அனுப்பியதுடன், சிறிலங்காவிற்கான உல்லாசப் பயணிகள் விவகாரத்திலும் தனிப்பட்ட ரீதியாகவும், சங்கங்கள் ரீதியாகவும் சிறியளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை நாம் நன்கு அறிவோம். ஆனால் இவை சரியான ஓருங்கிணைப்புக்களின்றி நடைபெற்ற காரணத்தினால் நல்ல பலனை கொடுக்கவில்லை. உண்மையை பேசுவோமானால்; பல புலம் பெயர் வாழ் தமிழார்கள் உட்பட, தமிழிழ மக்களின் ஒத்துமொத்தமான விருப்பம் என்னவெனில், சர்வதேச சமூதயமும், உலகமைப்புக்களும், தமிழிழ மக்களின் மனித உரிமைகளை காட்டுமிராண்டிதனமாக மீறும் சிறிலங்கா அரசு மீது ஓர் பொருளாதார தடையை கொண்டுவரவேண்டுமென்பதே. ஆனல் இவ் விடயம் நடைமுறைக்கு எவ்வளவு சாத்வீகமானது என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. முன்பு கூறியது போல் உலகமைப்புக்கள்; சிறிலங்கா மீது எவ்வித கண்டனங்களையோ, தண்டனைகளையோ நடைமுறைப்படுத்த உலகமைப்புக்கள் தவறி வருகின்றன.

இந்த ரீதியில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட, மற்றைய அரச பிராந்திய அமைப்புக்கள், தாம் ஓர் அரசு மீது பொருளாதார தடையை கொண்டுவருவதற்கு பல நியதிகள், வரயறைகளுடனான சில கோட்பாடுகளை கொண்டுள்ளானர். இந்த அடிப்படையில் உலகமைப்புக்களினால் சிறிலங்கா மீது பொருளாதார தடையை உடன் கொண்டுவருவதற்கு எவ்வித சாத்வீகமும் இல்லையென்பதே நடைமுறை உண்மை. ஆனால் இப்படியான நியதிகள், வரயறைகளுடனான கோட்பாடுகளை நிவர்த்தி செய்ய தமிழிழ மக்களாகிய நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமென்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. அத்துடன் விசேடமாக, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் மீது பொருளாதார தடையை கொண்டுவருவதை, இறந்த கால கசப்பான அனுபவங்களினால், பல நாடுகள் விரும்புவதில்லையென்பது இன்னுமொரு விடயம். மீண்டும் சிறிலங்கா அரசினால் தமிழிழ மக்கள் மீது யுத்தம் பிரகடனம் செய்யப்;பட்டு, அப்பாவித் தமிழிழ மக்கள் மீது - கடல், தரை, ஆகாய மார்க்கமாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை ஸ்தம்பிக்க செய்வதற்கு புலம் பெயர் வாழ் தமிழிழ மக்களால் நிட்சயம் முடியும். காரணம் எம்மில் பெரும்பான்மையானேர் உணர்ந்தோ உணராமல் சிறிலங்கா அரசினால் தமிழிழ மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அக்கிரமிப்பு யத்தத்திற்கு தினமும் நிதி உதவி செய்த வண்ணம் உள்ளனர்.

ஆகையால் மேற்கு உலகில் வாழும் தமிழிழ மக்கள், தமது நாளாந்த தேள்வைக்கு கொள்வனவு செய்யும் பலசரக்கு பொருட்களை, சிறிலங்காவில் உற்பத்தி செய்யப்பட்டவற்றை தவிர்பதன் மூலமும்; தமது உடன் பிறப்புகளுக்கு சிறிலங்காவின் வங்கிகள் மூலமாக பணம் அனுப்புவதை நிறுத்துவதன் மூலமும், சிறிலங்கா அரசு பெற்றுக் கொள்ளும் கோடிக்கணக்கான வெளிநாட்டு செலவணியை எம்மால் தவிர்க்க முடியும். இதுவரை காலமும் வெளிநாடுகளிலிருந்து புலம் பெயர் வாழ் தமிழிழ மக்களால் கொள்வனவு செய்யப்பட்ட சிறிலங்காவில் உற்பத்தியான உணவுககைகளும், குடிவகைகளும், குளீர்பானங்களும் அத்துடன் மற்றைய பொருட்களும் சிறிலங்கா அரசிற்கு கோடிக்கணக்கான வெளிநாட்டு செலவணியை பெற்றுக்கொடுத்தது என்பதையும், இவை யாவும் சிங்கள அரசு தமது இராணுவத்தை கட்டி எழுப்புவதற்காகவும், தமிழித்தில் வாழும் எமது உடன் பிறப்புக்களை கொன்று குவிப்பதற்காக பாவிக்கிறது என்பதை எம்மில் பலர் சரியாக உணர்ந்திருக்கவில்லை. அத்துடன் அண்மை காலங்களில், தமது தாயாக பூமியை சென்று பார்வையிட, புலம் பெயர் வாழ் தமிழிழ மக்களில் பெரும் தொகையானேர் சிறிலங்காவின் தேசிய ஆகாயப் போக்குவரத்தான 'சிறிலங்கா விமான சேவை" மூலமாகவே சென்றிருந்தார்களென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இச் தேசிய ஆகாயப் போக்குவரத்தை நாம் பாவிப்பதன் மூலமும், சிறிலங்காவிற்கு பல கோடிக்கணக்கான வெளிநாட்டு செலவாணியை புலம் பெயர் வாழ் தமிழிழ மக்களாகிய நாம் பெற்று கொடுத்துள்ளோம். இதுவும் சிறிலங்காவினால் எமது உடன் பிறப்புக்களை இவிரக்கமின்றி கொன்று குவிப்பதற்கும் பாவிக்கப்படுகிறது என்பது இங்கு கூறிப்பிடத்தக்கது. இதே வேளை சிறிலங்கா அரசு, நாம் வாழும் மேற்கு நாடுகளில் உள்ள மேற்கு நாட்டு மக்களுக்கு, பல விதப்பட்ட பொய்களை கூறி, சிறிலங்காவுக்கு உல்லாசப் பயணிகளாக அழைத்துச் சென்று, தமக்கு தேவையான பெரும் தொகை வெளிநாட்டு செலவணியை கபடமாக பெற்றுக் கொள்வதுடன், அதே உல்லாசப் பயணிகளிடையே தமது நசுக்கான அரசியல் பிரச்சாரத்தையம் நடத்துகின்றனர். ஆகையால் புலம் பெயர் வாழ் தமிழார்கள் ஆகிய நாம், இவ் ஐரோப்பிய மக்களுக்கு சிறிலங்காவின் உல்லாச வர்த்தாகத்தின் கபட நோங்கங்களை எடுத்து கூற கடமைப்பட்டுள்ளோம். இப்படியான ஓர் பொருளாதார தடையை நாம் யாவரும் வெற்றிகரமாக சிறிலங்கா அரசு மீது மேற்கொளவதன் மூலம், சிறிலங்காவின் இராணு நிறுவனங்கள் கட்டி எழுப்பப்படுவதை தடுப்பது மட்டுமல்லாது, சிங்கள பௌத்த அரசுகள் போரை நிறுத்தி பேச்சு வார்ததை மூலம் தமிழிழ மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண முன்வரச் செய்ய முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

ஆர் செய்தால் இங்குள்ளவர்களுக்கென்ன வாய்க்கு ருசியாக சாப்பிட்டால் சரி. தமிழகமே ஒன்று திரண்டு ஈழத்தவர்களுக்காக போராடும்போது

புலம்பெயர் தமிழர்களுக்கு சுவை தேவைப்படுகின்றது. அதில் வெளிநாடுகள் அரசாங்கத்துக்கு உதவி செய்வதாக வேறு பும்புகின்றனர்.

தமிழகத் தமிழர்களுக்கு உள்ள உணர்வு இவர்களுக்கு இல்லை :):rolleyes::huh::wub:

மக்களே புறக்கணியுங்கள்........ எங்கள் உறவுகளுக்காக...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.