Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடந்த 75 நாட்களில் அம்பாறையில் 65 படையினர் பலி- 98 பேர் படுகாயம்: விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை

Featured Replies

கடந்த 75 நாட்களில் அம்பாறையில் 65 படையினர் பலி- 98 பேர் படுகாயம்: விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை

[சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2008, 01:36 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

கடந்த 75 நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படையினர் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 98 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் இன்று சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

விடுதலைப்போருக்கு தோள் கொடுங்கள்

உரிமைக்குரல் - 2

24.10.2008

அன்பார்ந்த அம்பாறை மாவட்ட வாழ் முஸ்லிம் - தமிழ் உறவுகளே!

சிங்கள குழந்தை ஒன்றுக்கு கருவறையில் தொடங்கி, ஊட்டி வளர்க்கு தாய்ப்பால் தொட்டு, அவன் சாகும் வரையிலும் - கற்கும் கல்வி தொட்டு போதிக்கும் இறைபோதனை வரை - சிங்கள பேரினவாதிகளால் தம்பதீப கோட்பாட்டின் அடிப்படையில் மகாவம்ச கற்பனை கதாபாத்திரத்தை, இந்த இலங்கை தீவில் திணித்துவிடும் ஒரே பேரவாவில் ஊட்டி வளர்க்கும் சிங்கள இனத்தவரிடமிருந்து -

இத்தீவில் வசிக்கும் வேறு எந்த இனத்தவருக்கோ மதத்தினருக்கோ நீதியான உரிமையோ பாதுகாப்போ அளிக்கப்படமாட்டாது என்பதை காலத்திற்கு காலம் இத்தீவை மாறி மாறி ஆட்சிசெய்யும் சிங்கள தலைவர்கள் ஒருவரை ஒருவர் விஞ்சியவர்களாக - புதிய புதிய தமது அரசியல் சாஸ்திரங்களை ஏவிவிட்டும் படைகளை ஏவிவிட்டும் இனவன்முறைகளை தூண்டிவிட்டும் தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளை குழி தோண்டி புதைத்து தமது தாயக மண்ணிலயே அடிமைப்பட்டவர்களாக இரத்தவெள்ளத்தில் தமிழ்மக்களை மிதக்கவைத்து - தமது பேரினவாத சுயரூபத்தை காட்டியவாறு உள்ளனர்.

இதன் ஓர் அங்கமாகவே கடந்த 15 மாதங்களாக தென் தமிழீழத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து மீட்டு ஏதோ ஜனநாயகத்தை பெற்றுக்கொடுத்துவிட்டதாக மாய விம்பத்தை ஏற்படுத்தி -

இக்காலப்பகுதியில் தென் தமிழீழ மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட 350 க்கும் மேற்பட்ட படையினரின் உயிரிழப்புக்களையும் காயமடைந்த 400 க்கும் மேற்பட்ட படையினரின் இழப்புக்களையும் மூடிமறைத்து -

ஒரு காலத்தில் விடுதலை புலிகளுக்காக போராடி தனது சுயநலத்துக்காக சிங்கள இனவாத அரசின் கால்களில் விழுந்து சோரம் போன தேச துரோகிகளான கருணா, பிள்ளையான் போன்றோரை, ஆயுத பலாத்காரத்தால் தமிழ்மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஒரு தேர்தலை திணித்து தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு மூல காரணமான காணி, பாதுகாப்ப பிரிவுகளின் அதிகாரங்களை அரசு தம்பக்கம் வைத்துக்கொண்டு ஒரு பொம்மை அரசியல் நாற்காலியில் அமரவைத்து -

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போல தென் தமிழீழ மண்ணில் சிங்களம் தனது நீணடகால பேரினவாத கனவான த்மபதீப கோட்பாட்டை படிப்படியாக நிறைவேற்றிவருகிறது.

ராஜபக்ச குடும்ப அரசியல் நிறுவனத்தின் சூழ்ச்சி

இதற்கு தற்போதைய ராஜபக்ச குடும்ப அரசியல் நிறுவனத்தில் மகிந்த ராஜபக்ச முதன்மை பாத்திரத்தை வகித்தவாறு தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுவதைப்போல அரசியல் நாடகம் ஒன்றை அரங்கேற்றிக்கொண்டுள்ளார்.

இதில் மகிந்த ராஜபக்ச தன்னை நீதியானவராக காட்டி உலகையும் மக்களையும் சோரம்போன அரசியல் தலைவர்களையும் ஏமாற்றிக்கொண்டு தொட்டிலை ஆட்டும் பணியை கையேற்றுள்ளதுடன் -

பிள்ளையை கிள்ளிவிடும் பணிக்கு தனது இரு சகோதரர்களையும் ஏவிவிட்டுள்ளார்.

இதில் போர் அரக்கனை ஏவிவிட்டும் தனது புலனாய்வுத்துறை பரிவாரங்களை ஏவிவிட்டும் வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி ராஜபக்ச குடும்ப அரசியல் நிறுவனம் போடும் தாளத்துக்கு தன்மானமிழந்து ஆடாத எந்த ஒரு தமிழின உணர்வாளனையும் விட்டுவைக்காமல் அழிப்பதற்கு கோதாபாய ராஜபக்சவையும் -

தமிழ்மக்கள் ஒரு பகுதியில்கூட ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதற்காக, தமது சுயநலத்துக்காக சிங்கள பேரினவாதிகளிடம் சோரம் போன தேசத்துரோகிகளான கருணா, பிள்ளையான், ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றோரைக்கூட தனது அரசியல் சூழச்சியால் பிரித்து வெவ்வேறு தளத்தில் தமது தாளத்துக்கு ஆடக்கூடிய இடத்தில் பிரித்துவைத்து ஆட்டுவதற்கு பசில் ராஜபக்சவையும் நியமித்துள்ளார்.

இந்த பிரித்தாளும் சிங்கள பேரினவாத அரசியல் சூழ்ச்சிப்பொறிக்குள் முஸ்லிம்களின் ஒரு சில அரசியல் தலைமைத்துவங்களும் வீழத்தவறவில்லை என்பதும் கண்கூடான உண்மையாகும்.

பேரினவாதிகளால் சிங்களமயமாக்கப்படும் தென் தமிழீழம்

மனிதாபிமான நடவடிக்கை என்ற போர்வையில் படிப்படியாக தென்தமிழீழத்தை ஆக்கிரமித்த சிங்கள பேரினவாதிகள், அம்பாறை கஞ்சிகுடிச்சாறை ஆக்கிரமித்துவிட்டு தீகவாபி என்று பெயர் மாற்றியதையும் -

மட்டு. - செங்கலடி - பதுளை வீதிக்கு ராஜபத்திரன என்று சிங்களப்பெயர் சூட்டியதையும் -

திருமலை - சம்பூரை ஆக்கிரமித்துவிட்டு உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை காணி, வீடு, வாசல் அற்றவர்களாக ஏதிலிகள் ஆக்கியதையும் -

திருமலை கந்தளாயில் முஸ்லிம்களின் காணிகளை சிங்களவர்கள் அபகரித்துக்கொண்டதையும் -

தமிழர்களின் பூர்வீக நிலமான பன்குளத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதையும் -

மட்டக்களப்பு தொப்பிகல பிரதேசத்தை ஆக்கிரமித்து அதில் பிரம்மாண்டமான புத்தர் சிலையை நிறுவியதோடல்லாமல் பொலநறுவையிலிருந்து அதற்கு புதிய வீதியும் அமைத்து மட்டக்களப்பு மாவட்டத்தை இரு கூறுகளாக பிரிப்பதற்கு சிங்கள குடியேற்றங்களை விஸ்தரிப்பதற்கு திட்டம் தீட்டுவதையும் -

மட்டு. உன்னிச்சை பகுதி காணிகளை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிப்பதையும் -

அம்பாறையில் தீகவாபியை புனித பூமி எனக்கூறி இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான வீடுகளில் அவர்களை குடியேற விடாமல் நீதிமன்றம் ஊடாக தடைஉத்தரவு போட்டு வைத்திருப்பதையும் -

பொத்துவில் பிரதேச செயலர் பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த லகுகலை, பாணம ஆகிய சிங்கள குடியேற்ற கிராமங்களை இருவேறு தனித்தனி சிங்கள பிரதேச செயலர் பிரிவுகளாக்கி, சிங்கள அதிகாரிகளை நியமித்து, முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் சொந்தமான காணிகளை சூறையாடி, விசேட நிதி ஒதுக்கீடுகளை செய்து, துரித கதியில் சிங்கள குடியேற்றங்களை விஸ்தரிப்பதுடன் -

தென் தமிழீழத்தில் தமிழர்களால் போற்றி பூசிக்கப்படும் தம் இனத்துக்கான இன்னுயிர் நீத்த ஆயிரக்கணக்கான மாவீரர்கள் துயிலும் இல்லங்களை துட்டகாமினி வழிவந்தவர்களே என்ற வழி மறந்து கனரக இயந்திரங்களை கொண்டு உழுது தரைமட்டம் ஆக்கியதுவும் -

தென் தமிழீழத்தில் சந்திக்கு சந்தி புத்தர் சிலைகளை நிறுவி பெளத்த மயப்படுத்துவதும் -

சிங்கள பெளத்த பேரினவாத மனோநிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

அன்பார்ந்த முஸ்லிம் - தமிழ் உறவுகளே!

அன்றும் சரி இன்றும் சரி என்றும் சரி சிங்கள இராணுவ, அரச பேரினவாதிகளால் இலங்கை தீவில் வசிக்கும் எந்த ஒரு சிறுபான்மை இனத்தினருக்கும் மானிடத்தினருக்கே உரித்தான நீதியான சுதந்திரமும் கெளரவமும் பாதுகாப்பும் அளிக்கப்படமாட்டாது என்பதை அண்மையில் சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறிய இனவாதக்கூற்றிலிருந்தே புரிந்து கொள்ளமுடியும்.

இன்றைய வரலாற்று புறநிலையில் ஈழத்தமிழரின் உரிமைக்காக உலகத்தமிழினமே சகல வேறுபாடுகளையும் மறந்து ஒன்று சேர்ந்து உரிமைக்காக குரல் எழுப்பும் இவ்வேளையில் தென் தமிழீழ வாழ் முஸ்லிம் - தமிழ் உறவுகளும் ஓரணியில் ஒன்று சேர்ந்து தமிழீழ விடுதலை போருக்கு தோள் கொடுங்கள்.

கடந்த 12.10.2008 அன்று மாலை 3.25 மணியளவில் அம்பாறை வம்மியடி படைமுகாமுக்கும் வட்டமடு பகுதிக்கும் இடையில் ரோந்து சென்ற சிறிலங்கா சிறப்பு அதிரடி படையினர் எமது கண்ணிவெடித்தாக்குதலுக்கு இலக்காகி அதில் சிறிப்பு அதிரடிப்படையினர் மூவர் கொல்லப்பட்டதுடன் நான்கு படையினர் படுகாயமடைந்த சம்பவத்துக்கு பழி தீர்க்கும் முகமாக சிறப்பு அதிரடிப்படையினரின் புலனாய்வாளர்களால் 16.10.2008 அன்று வட்டமடு பகுதிக்குவயல் வேலைக்கு வந்த இரண்டு முஸ்லிம்கள் உட்பட நான்கு அப்பாவி தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவமானது, மீண்டுமொரு தடவை சிங்கள அரச பயங்கரவாத படைகளின் சுயரூபத்தை சுட்டிக்காட்டி நிற்கிறது.

இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட நான்கு அப்பாவி தமிழ் உறவுகளுக்கும் அவர்களின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

10.08.2008 அன்று எமது முதலாவது பிரசுரம் வந்த நாள் தொட்டு 24.10.2008 இன்று வரை நாம் வேண்டிக்கொண்டதற்கிணங்க தாங்கள் தந்த ஒத்துழைப்பு காரணமாக சிறிலங்கா அரச பயங்கரவாத படையினருக்கு எதிராக நாம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் -

கடந்த 75 நாட்களில், தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட படையணி வீரர்கள் வம்மியடிக்குளம், பள்ளமடு, கோயிற்குளம், கஞ்சிகுடிச்சாறுக்குளம், உடும்பன்குளம், வக்குமுட்டியாவ உட்பட மற்றும் சில இடங்களிலும் நடத்திய வீரம் செறிந்த அதிரடித்தாக்குதல்களிலும் பொறிவெடித்தாக்குதல்களிலும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.