Jump to content

வீழ்வதற்க்காக அல்ல வாழ்வதற்காகவே!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

மணியண்ணை: என்ன சண்முகம் கனநாளா ஆளைக்காணேல்லை எப்படி இருக்கிறாய்? என்னவிசேஷம்?

ஏதாவது கொண்டாட்டம் கிண்டாட்டமே?

சண்முகம்:இல்லை அண்ணை. இஞ்சை சாமன்கள் விக்கிற விலைக்கு சாப்பிட வழியில்லை அதுக்குள்ளை கொண்டாட்டம் எப்படி மணியண்ணை செய்ய?

பொன் விழைந்த பூமியிலை இண்டைக்கு பிணமும்,மனிதப்புதைகுழியும் தானே விழையுது

மணியண்ணை: பார்த்தடா, வேலியிலை ஓணான் கீணானுக்கு கேட்கப்போகுது.

சண்முகம்:ஏனண்ணை?

மணியண்ணை: இப்ப ஓணான் கூட காட்டிக்குடுக்கிற காலமடா, அதுசரி சண்முகம் என்ன உந்த யாழ்ப்பாணத்திலை இருக்கிற சில ஆயுதம் தாங்கிய ஒட்டுண்ணிகள் ஆமிக்காரனோடை சேர்ந்து பாவம் சனத்தை ஆயுதமுனையில் வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் செய்திச்சினமாம், வராட்டி சுட்டுப்போடுவம் எண்டவையாம்

சண்முகம்:ஓமண்ணை இவன் என்ரை மூத்தவன் கிரி கம்பஷிலை படிக்கிறவனும் சொன்னான், அங்கை படிக்கிற பொடியள் எல்லம் சொன்னவங்களாம் இப்ப இவை எல்லம் ஆடுகினம் நல்லா ஆடட்டும் எங்களுக்கு ஒரு காலம் வரும் தானே அப்ப இவங்களை பார்ப்போம் என்று.

மணியண்ணை: இது நூறுவீதம் சரியடா, பொடியள் தோக்கிறாங்கள் நாங்கள் வாலாட்டலாம் என்று உவையள் நினைக்கினம் போல உவையின்ரை நினைப்பெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் கண்டியோ, புலி பதுங்கிறது பாயுறதுக்கு எண்டு போகப் போக புரியும்.

சண்முகம்: அண்ணை இது எங்கடை சனத்துக்கு நல்லா தெரியும். கூலிக்கு மாரடிக்கிறதுகள் அவன் போட்ட எலும்புத்துண்டுக்காக வாலை ஆட்டத்தானே வேணும்

மணியண்ணை:ஆனால் பார் சண்முகம் யாழ்ப்பாணத்திலை எங்கடை சனத்தை, சாப்பாட்டுக்கு வழியில்லாமல்,வருமானமில்லாமல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சண்முகம்: அதுசரியண்ணை ஆனால் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எங்கடை சனம் தாங்கள் நினைச்சதை சாதிக்கிற வெறியோடை அந்த நாளுக்காகத் தானே காத்திருக்குதுகள். அதுக்காக அதுகள் இதென்ன வானம் இடிஞ்சு விழுந்தாலும் தாங்கிக் கொள்ளுங்கள்.

மணியண்ணை: ஓமடா சண்முகம் எத்தனை குஞ்சுகளை இந்த மண்ணுக்காக இரை குடுத்திட்டு இன்னும் தமிழன் அடிமையாக வாழவா? தமிழன் வீழ்வதற்க்காக பிறக்கவில்லை வாழ்வதற்க்காகப் பிறந்தவன் வென்று காட்டுவோம். ம்...(பெருமூச்சு)

நீ ஏன்டா சண்முகம் கண் கலங்குறாய்?

சண்முகம்: இல்லை அண்ணை களத்திலை எங்கடை பொடி,பெட்டையள் என்ன கஷ்டப்படுதுகளோ?

மணியண்ணை: நீ அழாதை, நாங்கள் கண்ணீர் விடக்கூடாது என்று தானே அதுகள் களத்திலை உயிரை விடுகுதுகள்.

ஒன்றுக்கும் யோசிக்காதை எல்லாம் நல்லாத்தான் நடக்கும். சரி சரி எனக்கும் நேரமாச்சு போட்டு வாறேன் சரி என்ன?

சண்முகம்: சரியண்ணை நானும் போட்டு வாறன் பிறகு சந்திப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.