Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்கள் உடனடி உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன - யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் அவலநிலை!!

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

நோயாளிகளிற்கு மருத்துவர்கள் வைத்தியம் செய்வார்கள். ஆனால்.. மருத்துவர்களாக வளர்ந்து எதிர்காலத்தில் சமூகத்திற்கு சேவைகள் செய்யவேண்டியவர்களே.. நோயாளிகளாக - நோய்களினால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களாக இருந்தால் நிலமை எப்படி இருக்கும்?

இந்த அவலத்தை வேறு எவரும் அல்ல... யாழ் மருத்துவபீட மாணவர்கள் சந்திக்கவேண்டி இருக்கின்றது. உணவு, உடை, உறையுள், கல்விச்செலவுகள் என்று தமது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய வளங்கள் கிடைக்காதநிலையில் மாணவர்கள் தற்போது திக்குமுக்காடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

  • தாய், தகப்பன், கூடிப்பிறந்தவர்களை பிரிந்த நிலையில்... அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாதநிலையில் மருத்துவபீடத்தில் கல்வியை தொடரும் பல மாணவர்கள்..
  • குடும்ப உறவினர்களை இழந்தநிலையில்... மனதில் துயரைச்சுமந்துகொண்டு தமது கல்வியைத்தொடரவேண்டிய இக்கட்டான நிலையில் பல மாணவர்கள்..
  • உண்ண உணவு இன்றி, இருப்பதற்கு இடம் இன்றி தவித்துக்கொண்டு - இதேவேளையில் கல்விச்செலவுகளை சமாளிக்க முடியாத நிலையில் வேதனைப்பட்டுக்கொண்டு இருக்கும் பல மாணவர்கள்... (நான்கு மாணவர்கள் ஒரு இறாத்தல் பாணை பகிர்ந்து உண்டு பசியை போக்கவேண்டிய அவலத்தில் இருக்கின்றார்கள்..)
  • சில மாணவர்கள் அரசாங்கம் வழங்கும் மகாபொல போன்ற உதவிப்பணத்தை பெறுகின்றார்கள். ஆனால்.. இவைகூட அவர்களது தேவையை மிகச்சொற்ப அளவிலேயே பூர்த்தி செய்ய உதவுகின்றது. யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாக கொள்ளாத தாயகத்தின் இதரபாகங்களை வதிவிடமாகக்கொண்ட மாணவர்களின் நிலை இன்னும் கேவலம்.
  • ஏற்கனவே சிறீ லங்கா அரசின் பொருளாதாரத்தடைகள், ஒருதலைப்பட்டசமான புறக்கணிப்புக்கள் மூலமும், இன அழிப்பின் மூலமும் சின்னாபின்னம் ஆக்கப்பட்டுள்ள மாணவர்களது வாழ்க்கை நிலமை.. தற்போது இன்னும் மோசமைடைந்து உள்ளது.

அல்லல்படும் யாழ் மருத்துவபீட மாணவர்களிற்கு உதவுவதற்காக International Medical Health Organization (IMHO) எனப்படும் மனித நலன்புரி அமைப்பு பலவிதமான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. தாயக மக்களிற்கு உதவும் பல்வேறு திட்டங்களை இந்த அமைப்பு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி இருக்கின்றது. இதில் குறிப்பிட்டு கூறத்தக்க ஓர் திட்டம் தாயகத்தில் இருக்கும் நலிவடைந்த கற்பிணி தாய்மார்களிற்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம். இதன் மூலம் தாயகத்தில் உள்ள சுமார் 1400 கற்பிணித்தாய்மார்கள் மிகுந்த பயன்பெற்று இருந்தார்கள்.

IMHO அமைப்பு யாழ் மருத்துவபீட மாணவர்களிற்கு நிதி சேகரிப்பதற்காக இன்று கனடா டொரண்டோவில் ஓர் நிகழ்ச்சியை நாடத்துகின்றது. இந்த அமைப்பின் பின்னால் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் முன்பு கல்விகற்று பட்டதாரிகளாகி தற்போது வெளிநாடுகளில் மருத்துவ தொழில் செய்கின்ற மாணவர்கள் முதன்மையாக செயற்படுகின்றார்கள் என்று அறியக்கூடியதாக உள்ளது. எனினும், தாயக மக்களின் துயரைத்துடைப்பதில் மிகுந்த ஆர்வம் உடைய நம்மவர்களான இளையோரும் இந்த அமைப்பிற்காக பலவித சேவைகள் செய்து வருகின்றார்கள்.

விடயம்: IMHO Canada Youth Culture Show (திறமையுள்ள நம் கலைஞர்களால் மாணவர்களிற்காக இலவசமாக செய்யப்படுகின்றது)

எப்போது: இன்று வெள்ளிக்கிழமை January 23, 2009 மாலை 6.30

எங்கு: Armenian Youth Centre of Toronto - Willowdale

50 Hallcrown Place, North York, ON M2J 1P7

(416) 499-4781

அன்பளிப்பு: $20.00 (சேகரிக்கப்படும் அன்பளிப்புக்கள் முழுவதும் யாழ் மருத்துவபீட மாணவர்களின் நலன்களிற்கு பயன்படுத்தப்படும்)

விரிவான தகவல்: IMHO Canada Youth Culture Show

யாழ் மருத்துவபீடம் இதுவரை 24 தொகுதி - Batches - மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்கியுள்ளது. தற்போது சுமார் 400 மாணவர்கள் கல்விகற்று வருவதாக அறியப்படுகின்றது. 1978ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் வித்தியானந்தன் அவர்களால் மருத்துவபீடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 1979ம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணம் திருநெல்வேலி / கொக்குவில் பகுதியில் மருத்துவபீடம் இயங்கி வருகின்றது. தாயகத்து மக்களின் அடிப்படை மருத்துவத்தேவை இங்கு மருத்துவர்களாக உருவாகும் மாணவர்களின் கைகளிலேயே - சேவைகளிலேயே தங்கியுள்ளது.

தகவல் மூலம்: Cross Roads: கனடா தமிழ்விசன் தொலைக்காட்சி

பி/கு: குறிப்பிட்ட நிகழ்ச்சியை நான் நேற்றுத்தான் கனட தமிழ்விசன் தொலைக்காட்சியில் தற்செயலாக பார்த்து இருந்தேன். இதனால் உடனடியாகவும், விரிவாகவும் தகவலை பகிர்ந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன். இன்று நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்ல வசதி இல்லாதவர்கள் வலைத்தளம் மூலமும் மாணவர்களிற்கு நேரடியாகவும் அன்பளிப்பு செய்யமுடியும்: http://theimho.org/donate/donate-online நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.