Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போலீசு வக்கீல் மோதலல்ல ! ஈழத்துக்கு எதிரான பார்ப்பன பாசிச பேயாட்டம் !!

Featured Replies

சு.சுவாமி எனும் பார்ப்பன வெறியனுக்காக நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மண்டை உடைப்பு ! போலீஸ் வெறியாட்டம் !!

சுப்பிரமணிய சுவாமி எனும் பார்ப்பன பாசிஸ்ட்டை பலரும் ஒரு ஜோக்கரான கோமாளி என்றே மதிப்பிடுகின்றனர். ஆனால் நேற்று உயர்நீதிமன்றத்தில் சுமார் 4 மணிநேரம் போலீஸ் நடத்திய வெறியாட்டத்தைப் பார்த்த பிறகாவது சு.சுவாமியின் பலமும் அவருக்காக இந்த அரசும், போலீசும், ஊடகங்களும் எந்த அளவுக்கு வெறி கொண்ட முறையில் சாமியாடும் என்ற உண்மையை நாம் அங்கீகரித்தாக வேண்டும்.

சிதம்பரம் கோவில் எனும் மக்கள் சொத்தை திமிருடன் சுரண்டியும் விற்றும் வாழும் தீட்சிதர்கள் எனும் பார்ப்பன கிரிமினல்களுக்காக வாதாட வந்த சு.சுவாமியின் மீது வீசப்பட்ட முட்டை என்பது வழக்கறிஞர்களின் தன்னிச்சையான திட்டமிடப்படாத எழுச்சி. கடந்த இரு வாரங்களாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஈழப்பிரச்சினைக்காக நீதிமன்ற புறக்கணிப்பு செய்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் சாலை மறியல், இராணுவ அலுவலகம் முற்றுகை, ரயில் மறியல் என தினமொன்றாய் நடத்தி வந்தார்கள். அன்றாடம் போராட்டமும், கைதுமாய் இந்த நிகழ்வு நடந்து வந்தது.

ஈழத்தில் தமிழ் மக்கள் வன்னியிலும், முல்லைத் தீவிலும் கொத்துக்கொத்தாய் கொல்லப்படும் செய்திகளைக் கேட்டு கடந்த இருமாதங்களாக தமிழகமே கொதித்து எழும் போது வழக்கறிஞர்களும் அந்த எழுச்சியில் கலந்து கொள்வது என்பது நியாயமானது, அவர்களது ஜனநாயக உரிமையும் கூட. இந்த சூழ்நிலையில் ஈழத்தில் கொல்லப்படும் மக்களெல்லாம் புலிகள்தான், தீவிரவாதிகள்தான் என்று பாசிச ஓநாயைப் போல ஊளையிட்டுக் கொண்டிருந்த சு.சுவாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது என்று தெரிந்தும் அதை கேலிசெய்யும் விதமாக தில்லை தீட்சிதர்களுக்காக வாதாட வந்தார்.

எல்லாரும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யும் போது இந்த கொழுப்பெடுத்த பார்ப்பான் மட்டும் திமிராக வருகிறானே அதுவும் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்திவிட்டு அதற்கு எதிராக போராடும் வழக்கறிஞர்களையெல்லாம் தீவிரவாதிகள், ரவுடிகள் என்று சித்திரிக்கின்றானே என்று நியாயமான கோபத்தின் வெளிப்பாடுதான் சு.சுவாமிக்கு கிடைத்த முட்டையடி.

ஆனால் இந்த தற்செயலான நியாயமான நிகழ்ச்சியை வைத்து எல்லா ஊடகங்களும் சு.சுவாமயின் பின்னால் அணிவகுத்து வழக்குரைஞர்களை காறித்துப்பின். இதில் தினமணி போன்ற தமிழ் வகையறாக்களும், இந்து போன்ற ஆங்கில மேதாவிகளும் வழக்கறிஞர்களை ரவுடிகளென்றும், அவர்களது செயல் பொறுக்கித்தனம் என்றும் வசைபாடின. அந்த வசை தந்த வலியில் ஏற்கனவே முதுகுவலியால் மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் தமிழனத் தலைவர் கருணாநிதி மாபெரும் அதிர்ச்சி அடைந்ததாக நிதியமைச்சர் அன்பழகன் அறிக்கை விட்டார். முக்கியமாக யாரும் ஈழத்துக்காக தும்மினாலும், துவண்டாலும் தனது ஆட்சியை கவிழ்க்க சதி என்று அழுது புலம்பும் அந்தத் தாத்தா முட்டை வீச்சை வைத்து பார்ப்பன கும்பலும் அவாளின் ஆதிக்கத்தில் இருக்கும் ஊடகங்களும் என்ன ஆட்சி இது என துள்ளிக் குதித்த்தும் கடும் கோபம் கொண்டார்.

இந்த நாட்டின் அரசியல், மக்களின் வாழ்வு, என எல்லா நிகழ்ச்சி நிரல்களையும் தீர்மானிக்கும் சக்தி கொண்ட பார்ப்பனியக் கும்பலிடம் நல்லபேர் எடுப்பதற்கு உறுதி பூண்ட கருணாநிதி வழக்கறிஞர்களை கைது செய்வதற்கும் மண்டையை உடைப்பதற்கும் இன்னும் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என போலீசுக்கு அனுமதி தந்தார். இதற்கு மேல் உத்தரவு போட்டது பார்ப்பன ஊடகங்கள்.

ஈழப்பிரச்சினையை கொச்சைப்படுத்தும் விதமாகவும் சம்பந்தம் இல்லாத வழக்கிற்கு ஆஜராகியும், போராடிக்கொண்டிருந்த வழக்கறிஞர்களை ரவுடிகளை என்றும் விடுதலைப் புலிகள் என்றும் தகுதியில்லாத பொறுக்கிக் கூட்டம் என்று ஆத்திரத்தை தூண்டும் விதமாக பேசிய சு.சுவாமி மீது நடவடிக்கையும், வழக்கும் எடுக்கப்படவேண்டும் என்பது வழக்கறிஞர்களின் சங்கம் எடுத்தமுடிவு. அதன் பிறகே முட்டை வீச்சுக்காக எல்லாரும் கைதாகலாம் என சங்கத்தில் பேசி முடிவு செய்தார்கள்.

ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதிகளும், உச்ச நீதிமன்றமும், மாநில அரசும், போலீசும் சு.சுவாமியின் முட்டைக் கறையை துடைப்பதற்கான நடவடிக்களைத்தான் எடுத்து வந்தார்கள். முட்டை வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர்கள் இருபது பேரை கைது செய்வதற்கு எட்டு போலீசு படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வைட்டை நடந்து ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மற்றவர்களும் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. அவர்கள் அத்தனைபேரும் உயர்நீதிமன்றத்தில்தான் இருந்தார்கள். அவர்கள் கோரிக்கை சு.சுவாமி மீதும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதுதான். அதை பேருக்கு செய்வதாக நாடகமாடிய போலீசு வழக்கறிஞர்களை கைது செய்வதற்கு துடித்தது. இப்படித்தான் இருதரப்பினருக்கும் மோதல் என்பது தற்செயலாக உருவானது. ஏற்கனவே நீதிமன்றத்தில் வந்து வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் அறவித்திருந்தனர். கருணாநிதி அரசும் அதையே செய்யப் போவதாக உறுதி அளித்திருநந்தது.

தள்ளுமுள்ளு ஏற்பட்ட அரைமணிநேரத்தில் உத்திரவு பெறவேண்டியவர்களிடம் அனுமதி பெற்ற போலீசு முக்கியமாக அதிரடிப்படையினர் வழக்கறிஞர்களை கண் மண் தெரியாமல் கொடுரமாகத் தாக்கத் துவங்கினர். நீதிமன்றப் பணியாளர்கள், பொதுமக்கள், நீதிமன்றத்தின் வெளிவளாகத்தில் இருந்த மக்கள் அனைவரும் நொறுக்கப்பட்டனர். கறிக்காக பாய்ந்து வரும் வெறிநாயைப் போல போலீசு குதறியது.

நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த எல்லாக் கார்களும் போலீசால் நொறுக்கப்பட்டன. இரு சக்கர வண்டிகளும் உடைக்கப்பட்டன. வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், நீதிமன்ற கட்டிடங்களின் கண்ணாடிகள் அத்தனையும் பாக்கியில்லாமல் உடைக்கப்பட்டன. நீதிமன்றத்தில் போலீசு என்ன செய்யும் என நினைத்துக் கொண்டிருந்த சீனியர் வக்கீல்களும் அடிபட்டனர். இதுதாண்டா போலீசு என்பதை மக்கள் அறிந்திருக்கும் யதார்த்தத்தை பல வழக்கறிஞர்கள் பட்டுத் தெரிந்து கொண்டனர்.

இந்தக் கொடுமையை நிறுத்துமாறு நீதிபதிகளிடம் காரசாரமாக விவாதித்த வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று கையில் செங்கோலுடன் ( தாங்கள் வழக்கறிஞர்கள் அல்ல நீதபதிகள் என்று காட்டி எங்களை அடிக்க கூடாது என்பதற்காக ) வந்த மூன்று நீதிபதிகள் போலீசால் தாக்கப்பட்டனர். இந்தக் கொடுமையை கண்ட பிறகுதான் கையில் கிடைத்த கற்களை வைத்து சில வழக்கறிஞர்களும் போலீசைத் தாக்கத் துவங்கினர். ஆனாலும் போலீசின் வெறியாட்டத்தின் முன்னால் இந்த கல்லடி ஒன்றும் செய்ய முடியவில்லை.

நீதிமன்றத்தில் ஓடி ஒளிந்தவர்கள், அறைகளில் முடங்கியவர்கள் எல்லாரும் அடிபட்டார்கள். பல வழக்குகளுக்கு தண்டனை அளித்து தாங்கள்தான் நீதிபரிபாலனத்தின் கடவுள்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் நீதிபதிகள் கூட அன்று போலீசு என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள்.

ஆனால் இத்தனை நடந்தாலும் ஊடகங்கள் எதுவும் போலீசைக் கண்டிக்கவில்லை. வழக்கறிஞர்களை பொறுக்கிகள் என எழுதிய தினமணி போலீசை பொறுக்கிகள் என இன்று எழுதவில்லை. வழக்கறிஞர்களில் இடது தீவிர இயக்கத்தினரும், தமிழின வெறியர்களும், விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாதிகளை ஆதரிக்கும் வன்முறைக் கூட்டம்தான் இந்தப் பிரச்சினைகளுக்கு காரணம் என இந்து பத்திரிக்கை சு.சுவாமிக்காக வரிந்து கட்டிக் கொண்டு தலையங்கம் எழுதுகிறது.

நீதிபதிகளே தாக்கப்பட்டாலும் ஈழத்துக்கு குரல் கொடுத்த வழக்கறிஞர்கள் கொடுரமாக தண்டிக்கப் படவேண்டும் என்பதுதான் பார்ப்பன ஊடகங்களின் நிலை. கருணாநிதியின் குடும்ப ஊடகங்களும் அதையே வாந்தி எடுக்கின்றன. மொத்தத்தில் கருணாநிதி சரியான நடவடிக்கை எடுத்து விட்டார் என அவர்கள் சான்றிதழ் கொடுத்து விட்டார்கள். இனி கருணாநிதி நிம்மதியாக முதுகுவலி சிகிச்சையை தொடரலாம்.

நேற்று மாலை வழக்கறிஞர்கள் போலிசால் அடிபட்டு மண்டையில் இரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையில் சி.என்.என்.ஐ.பி.என் சேனலுக்கு பேட்டி கொடுத்த சு.சுவாமி இந்த வழக்கறிஞர்களின் மீதான நடவடிக்கை மிகவும் சரியானது என்றும் இந்த வழக்கறிஞர் கூட்டம் என்பது தரம்தாழ்ந்த மாமாப் பயல்களின் கூட்டமென்றும் நிதானம் கலந்த திமிருடன் பேசுகிறார்.

இப்போது சொல்லுங்கள் சு.சுவாமி எனும் அந்த பார்ப்பன பாசிஸ்ட்டை வெறும் கோமாளி என்று கூற முடியுமா?

மண்டை உடைப்பட்ட பல வழக்கறிஞர்கள் இன்று மருத்துவமனையில் இருக்க தமிழமெங்கும் வழக்கறிஞர்கள் இந்தக் கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்துகிறார்கள். சு.சுவாமி மீதும், போலீசு மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஆனாலும் மத்திய, மாநில அரசுகளும், போலீசும், ஊடகங்களும், உச்சநீதிமன்றமும், சு.சுவாமியின் மீது வீசப்பட்ட முட்டைக் கறையை துடைப்பதற்கு வழக்கறிஞர்களின் இரத்தம் தேவை என்கிறார்கள்.

ஈழத்து மக்களின் இரத்தம் சிங்கள இனவெறி அரசுக்குத் தேவைப்படுகிறது. ஈழத்து அவலத்துக்காக குரல் கொடுக்கும் சுயமரியாதை உள்ள தமிழ் மக்களின் இரத்தம் இந்திய அரசிற்கு தேவைப்படுகிறது. அதற்கு கருணாநிதி வெண்சாமரம் வீசுகிறார்.

இரத்தத்தை சுவை பார்த்திருக்கும் கழுகுகளும், ஒநாய்களும் வட்டமிட்டுக் கொண்டுதான் இருக்கும். அவற்றிற்கு நாம் பலியாகப் போகிறோமா, இல்லை வேட்டையாடப் போகிறோமா?

கருத்துப்படத்தை காண http://vinavu.wordpress.com/2009/02/20/sswamy4/

இதன் மறுமொழிகள்: http://vinavu.wordpress.com/2009/02/20/sswamy4/#respond

தொடர்புடைய பதிவுகள்:

சுப்பிரமணியசாமி மீது வழக்கு! போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்!!

ஈழம்: சுப்ரமணிய சுவாமிக்கு ஹை கோர்டில் முட்டையடி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஈழத்து மக்களின் இரத்தம் சிங்கள இனவெறி அரசுக்குத் தேவைப்படுகிறது. ஈழத்து அவலத்துக்காக குரல் கொடுக்கும் சுயமரியாதை உள்ள தமிழ் மக்களின் இரத்தம் இந்திய அரசிற்கு தேவைப்படுகிறது. அதற்கு கருணாநிதி வெண்சாமரம் வீசுகிறார்.

பார்ப்பனர்களுக்காக கருணாநிதி நிகழ்த்திய நரவேட்டை

பொன்னிலா

‘‘எதிர்பாராத சம்பவம் நடைபெற்று விட்டது. இந்த சம்பவம் பற்றி உங்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறுவதற்கு தலைமைச் செயலாளர்இ உள்துறைச் செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி ஆகியோரை அனுப்பியுள்ளேன். இந்தப் பிரச்சனையில் வக்கீல்கள் மீது தவறு உள்ளதாஇ போலீசார் மீது தவறு உள்ளதா என்பதை கண்டறிவதற்கும் இந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை உறுதி செய்வதற்கும் உங்களது ஒத்துழைப்பு அவசியம். இந்தப் பிரச்சனையில் நீதி நிலை நாட்டப்படவும் அமைதி ஏற்படவும் தங்களது மதிப்பு மிக்க கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நான் மருத்துவமனையில் இருந்தாலும் தாங்கள் என்னைப் பார்க்க விரும்பினால் ஆம்புலன்சில் வந்து உங்களை சந்திப்பேன்’’ என்று தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாயவுக்கு கடிதம் எழுதி விட்டுக் காத்திருக்கிறார் தமிழக காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் மு.கருணாநிதி.

இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக ரத்த வேட்டையை நடத்தி முடித்து விட்டு பிரச்சனையின் மூல வேரைத் தேடுவது இருக்கட்டும். உயர்நீதிமன்றத்துக்குள் காவல்துறையை அனுமதித்தது யார்? தமிழக முதல்வர் கருணாநிதியின் உத்தரவில்லாமல் காவல்துறை தன்னிச்சையாக முடிவெடுத்து உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்ததா? அல்லது சென்னை மாநகர கமிஷனர் சொன்னது போல சமரசத்திற்கு அழைத்ததனால் உள்ளே போனோம் என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நூற்றுக்கணக்கான அதிரடிப்படையோடு உள்ளே நுழைவதுதான் கமிஷனர் ராதாகிருஷ்ணன் சமாதானத்துக்குப் போகிற லட்சணமா?

உயர்நீதிமன்றத்துக்குள் என்னதான் நடந்தது? சுப்ரமணியசுவாமி மீது முட்டைகளை வீசி அடித்து உதைத்ததாக 20 வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்ய கோர்ட் வளாகத்துக்குள் சென்றது போலீஸ். வழக்கறிஞர்களோ ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ்இ எங்களை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய சு.சுவாமியை முதலில் கைது செய்யுங்கள்இ அதன்பின் நாங்களாகவே வந்து கைதாகிறோம்’ என்று சொல்லஇ போலீசாரோ சு.சாமியின் வழக்கில் தொடர்புடைய இருபது பேரை வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்ற வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதே நேரம் நீதிமன்றத்திற்கு வெளியே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரேபிட் போர்ஸ் என்றழைக்கப்படும் அதிரடிப்படையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து போலீஸ் வேனைச் சுற்றி நின்ற வழக்கறிஞர்களைத் தாக்கத் தொடங்கினர். அப்போதுதான் போலீஸ் அந்த நரவேட்டையைத் தொடங்கியது.

உயர்நீதிமன்றத்தின் எல்லா கட்டிடங்களுக்குள்ளும் நுழைந்த போலீஸ் கண்ணில் பட்டவர்களை எல்லாம் மிருகத்தனமாக அடித்துக் காயப்படுத்தியது. இதில் நீதிபதிகள்இ பெண் வழக்கறிஞர்கள்இ பத்திரிகையாளர்கள் என யாரும் தப்ப முடியவில்லை. காவல்துறை அதிகாரி ராமசுப்ரமணியே அதிரடிப்படையை தாக்கச் சொல்லி உத்தரவிட்டதாகவும்இ அதை ஒட்டியே காவல் படைகள் அத்துமீறி மிகக் கோரமான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. சு.சாமி மீது வழக்குப் பதிவு செய்யப் போன வழக்கறிஞர்களையே அந்த வழக்கில் கைது செய்ய போலீஸ் முயற்சித்தபோதுஇ ஒரு பக்கம் தாக்குதல் இன்னொரு பக்கம் கைதுகள் என கடுப்பாகிப் போன வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த காவல் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் அதே சமயம் காவல் நிலையத்துக்கு வெளியில் நின்ற வக்கீல்களின் வாகனங்களுக்கு தீவைத்தது போலீஸ்காரர்கள்தான். அது மட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற அலுவலகங்களை சூறையாடியதும் அங்கு நின்றிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களை அடித்து நொறுக்கி நரவேட்டையாடியதும் காவல்துறையினர். இந்தக் கலவரத்திற்கு முழு காரணமும் காவல்துறைதான்.

ஆனால் இதில் மிக மோசமான பாதிப்பையும் சந்தித்துஇ கருணாநிதியின் ஆதரவு ஊடகங்களால் தவறாக சித்தரிக்கப்படுபவர்களும் வழக்கறிஞர்களே! சன்இ கலைஞர்இ ராஜ் போன்ற காட்சி ஊடகங்கள் ஏதோ வழக்கறிஞர்கள் - போலீஸ் மோதல் என்று சித்தரிக்கஇ மக்கள் தொலைக்காட்சியும் தமிழன் தொலைக்காட்சியும் மட்டுமே ஓரளவுக்கு உண்மையை வெளியில் கொண்டு வந்தன. அங்கு இருந்த சில பத்திரிகையாளர்கள் மட்டும்தான் போலீசின் அராஜகத்தை வெளிக்கொண்டு வந்தார்கள். கருணாநிதியின் குடும்ப நிறுவனங்களில் வேலை பார்க்கும் நிருபர்களோ எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். ‘‘சார் நாங்க எடுத்தாலும் போட மாட்டாங்க சார்’’ என்று புலம்பினர். அத்தோடு வழக்கறிஞர்களின் பேட்டிக்காக இந்தத் தொலைக்காட்சிகள் சென்றபோது அவர்கள் கையெடுத்துக் கும்பிட்டனர். ‘‘போங்கப்பா உங்க தொலைக்காட்சியில் என்ன வர வேண்டும் என முடிவு ஏற்கனவே ராமச்சந்திரா மருத்துவமனையில் எடுத்தாயிற்று அதனால் உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறோம் தயவு செய்து போங்கள்’’ என்று சொன்னபோது அந்த வழக்கறிஞர்களின் நியாத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

பொதுவாக வழக்கறிஞர்களுக்கும் போலீசுக்குமான மோதல் என்பது தொழில் ரீதியானது. காக்கிச் சட்டைகளையும் கருப்பு அங்கிகளையும் எதிர் எதிராக நிறுத்தி பின்னப்படுவதே ஒரு வழக்கின் யதார்த்தம். ஆனால் வழக்கறிஞர்களுக்கு இருக்கிற போர்க்குணமோ சுயமரியாதையோ போலீசுக்கு நிச்சயம் இருக்கப் போவதில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் வீசுகிற எலும்புத்துண்டுகளுக்கு வாலாட்டும் நன்றியுள்ள கூட்டமாக இதை மாற்றி எத்தனையோ ஆண்டுகள் ஆகிப் போய்விட்டது.

இன்றைக்கும் பொதுப் பிரச்சனையாக இருந்தாலும் நீதிக்கான போராட்டமாக இருந்தாலும் சரி வீதிக்கு வந்து போராடுகிறவர்கள் வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் மட்டுமே. பெருமளவு கிராமப்புறங்களில் இருந்து வரும் இவர்களிடம் மட்டுமே இன்று சமூக பொறுப்புகள் கொஞ்சமேனும் மிஞ்சி இருக்கின்றன. இந்நிலையில்தான் ஈழத் தமிழர்கள் மீதான இனவெறிப் போரை நிறுத்தக் கோரி முத்துக்குமார் தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொண்டார். ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்திய அந்த இளைஞன் தன் மரணசாசனத்தில் கூட கல்லூரி மாணவர்களையும் வழக்கறிஞர்களையுமே போராடத் தூண்டி குறிப்பிட்டு எழுத மாணவர்களும் வழக்கறிஞர்களும் முத்துக்குமாரின் உடலின் பொறுப்பை ஏற்று தங்களின் போராட்டத்தை தீவீரப்படுத்தினார்கள். கடந்த பல நாட்களாக நீதிமன்றத்தைப் புறக்கணித்து வீதிக்கு வந்து பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர் வழக்கறிஞர்கள்.

பல நேரங்களில் இந்தப் போராட்டங்கள் தமிழக அரசுக்கு தலைவலியாக மாறியது. காங்கிரஸ்காரர்கள் வழக்கறிஞர்களை கைது செய்யச் சொல்லி போராடத் துவங்கினர். அதே சமயம் இந்தப் போராட்டத்தைக் குழப்ப வழக்கறிஞர்கள் மூலமாகவே திமுக எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் வக்கீல்களை அடக்க தமிழக அரசுக்கு ஒரு வாய்ப்பாக வந்து கிடைத்தவன்தான் இந்த சு.சாமி. ‘‘முட்டையை பைல்ஸ்சில் வீசுனாங்கோ. கொட்டையில் வீசினாங்கோ’’ என்றுதான் சு.சாமி சொன்னானே தவிற என மூஞ்சியில் வீசினாங்க குமட்டுலயே குத்துனாங்க என்று சு.சாமி கடைசி வரை சொல்லவே இல்லை. யாரும் புகார் பதிவு செய்யவும் இல்லை. அப்படி இருக்கும்போது வழக்கறிஞர்களை எந்த முகாந்திரத்தில் கைது செய்யக் கிளம்பியது காவல்துறை? அப்படியே கைது செய்ய வேண்டும் என்றாலும் நீதிமன்றத்திற்கு வெளியேதான் அந்தக் கைதுகளை நிகழ்த்தியிருக்க வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் நீதிபதிகள் உதவியை போலீஸ் நாடி இருபது பேரை சரணடையச் சொல்லி இருக்கலாம்.

ஆனால் உண்மையில் கைது செய்வது ஒரு நோக்கம் என்றால் இனிமேல் வழக்கறிஞர்கள் எவனும் போராட்டம் கீராட்டம் என ஒன்று சேரக் கூடாது என்கிற திட்டத்தோடுஇ யாரோ ஒரு பெரிய தலையின் அறிவுறுத்தலில் தமிழக போலீஸ் செயல்பட்டிருப்பது தெரியவருகிறது. உண்மையில் போலீஸ் நீதிமன்றத்திற்குள் நுழைந்தது கருணாநிதிக்குத் தெரியுமாஇ தெரியாதா என்கிற கேள்விதான் இங்கே முக்கியம்.

வழக்கறிஞர் போலீஸ் மோதல்இ அல்லது சு.சாமி வழக்கறிஞர் மோதல்இ அல்லது நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மோதல் என்று எத்தனை கோணத்தில் பார்த்தாலும் இந்தப் பிரச்சனையில் அடிநாதத்தில் இருப்பது பார்ப்பனர்களுக்கும் சூத்திரர்களுக்குமான மோதலே! அரசும் போலீசும் இங்கே பார்ப்பானுக்காக நிற்கிறது. சூத்திரர்களுக்காக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து நின்று சு.சாமிஇ சோ.சாமிஇ ஹிந்துஇ தினமணிஇ இந்தியன் எக்ஸ்பிரஸ்இ தினமலர் என பார்ப்பனர்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். நடந்து கொண்டிருக்கும் கலவரங்களின் மூல வேரை ஈழ விடுதலைக்கான போரோடு தொடர்புப்படுத்திப் பார்ப்பது எவ்வளவு நியாயமானதோ அது போல திராவிட ஆரியர்களுக்கான மோதலாகவும் இதைப் பார்த்தே ஆகவேண்டும். ஏனென்றால் இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலை வரலாறும் திராவிட ஆரிய இனத்தின் நீண்ட காலப் போரின் இறுகிய வடிவமே! அதன் மிச்சப்பட்ட மேம்போக்கான வடிவங்கள்தான் கலகங்களாகவும் கலவரங்களாகவும் தமிழகத்தில் வெடிக்கின்றன. அதுதான் உண்மை.

இதை மார்க்சிஸ்டுகள் உட்பட பார்ப்பன ஜெயலலிதாவோஇ காங்கிரஸோஇ பிஜேபியோஇ நிறம் மாறிப் போன கருணாநிதியோ ஏற்றுக் கொள்ள முடியாது. தத்துவ ரீதியிலான சம நீதிக்கான சம வாய்ப்புக்கான போராட்டங்களையும் அதை ஒட்டி எழும் இம்மாதிரி கலகங்களையும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக பார்ப்பதுதான் கருணாநிதியின் சந்தர்ப்பவாதம். அதே சமயம் பிரச்சனையின் மூல வேர் என்பதின் துவக்கத்தை நான் முத்துக்குமாரின் மரணத்திலிருந்து பார்க்கிறேன். கருணாநிதியோ வக்கீல்களைக் கைது செய்ய விடாமல் தடுத்த நிகழ்விலிருந்து பார்க்கிறார்.

கடைசியாய் ஒன்று..

சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடந்த மோதலின்போது கைகட்டி வேடிக்கை பார்த்த போலீஸை நாம் திட்டினோம். ‘இப்போது அப்படி எதுவும் நிகழ்ந்து விடக் கூடாது என நீதிமன்றத்திற்குள் நுழைந்து லத்திசார்ஜ் பண்ணினால் அதற்கும் திட்டுகிறீர்களே!’ என புத்திசாலிகள் சிலர் கேள்வி கேட்கிறார்கள். சட்டக் கல்லூரியில் நடந்த மோதலில் மாணவர்கள் இரு பிரிவாக நின்று மோதிக் கொண்டார்கள். அங்கே தமிழக காவல்துறை வேடிக்கை பார்த்தது எவ்வளவு மோசமான முன்னுதாரணமோஇ அதுபோல ஒற்றுமையாக சு.சாமிக்கு எதிராகவும்இ ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் போராடிக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை அத்துமீறித் தாக்கி வஞ்சம் தீர்த்துக் கொண்டது மன்னிக்கவே முடியாத குற்றம்.

வழக்கறிஞர்களை தாக்கிச் சிதைத்தது இனிமேல் அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக போராடக் கூடாது என்பதற்காகத்தான். இதில் இலங்கை அரசின் துணைத்தூதராக சென்னையில் இருக்கும் அம்சாஇ இந்திய உளவு நிறுவனமான ராஇ பார்ப்பனக் கும்பல்இ அவர்களுக்கு காவடி தூக்கும் கருணாநிதிஇ ஜெயலலிதா போன்ற துரோகச் சக்திகளின் விருப்பங்களும் ஆசைகளும் அடங்கியிருக்கிறது. அவர்கள் நினைத்ததை அவர்கள் நடத்தி முடித்து விட்டார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?

தமிழக அரசே!

அத்துமீறி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்து!

சாதிப்பெயரைச் சொல்லி வழக்கறிஞர்களை இழிவாகப் பேசிய சுப்ரமணியசுவாமியை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!

வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு!

என்பதுதான் இன்று நாம் முன்வைக்கும் கோரிக்கைகள். ஆனால் வழக்கறிஞர்களோடு இணைந்து மாணவர்களும் பொதுமக்களும் சகலதுறையினரும் அவர்களுக்காகப் போராடுவதோடு ஈழத் தமிழர் மீதான இனவெறிப் போரை முன்னெடுக்கும் இலங்கை அரசுக்கு எதிராகவும்இ அதை முட்டுக் கொடுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்துவதில்தான் வழக்கறிஞர்கள் மீதான் ஒடுக்குமுறையை நாம் ஒடுக்க முடியும்.

நண்பர்களே! வழக்கறிஞர்களுக்கு உங்களின் ஆதரவினைத் தெரிவியுங்கள்! அவர்களின் தீரமிக்க போராட்டத்தில் சுயமரியாதை உள்ள தமிழர்களாக நீங்களும் ஒன்றிணையுங்கள்.

நன்றி : www.keetru.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரும் தமிழக வழக்கறிஞர்களை திசை திருப்ப சதி..

(படங்கள் இணைப்பு) இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்களே அதிக அளவிலான போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களின் கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டு சதி செய்யப்பட்டிருக்கிறது என்று தமிழக அரசியல் தலைவர்கள் புகார் கூறியுள்ளனர்.

நேற்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் உயர்நீதிமன்றத்தில் பணியில் இருந்த வழக்கறிஞர்களிடம் விசாரணை என்ற பெயரில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சுப்பிரமணிய சுவாமி என்ற தனி நபர் மீது முட்டை வீச்சு பிரச்னைக்காக அங்கு சில மணித்துளிகளில் 5000-க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிறு வாக்கு வாதத்தோடு தீர்க்கப்பட வேண்டிய அப்பிரச்னை வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்தி, பெரிய கலவரமாக வெடித்தது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் காவலர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதற்கு சாட்சிகள் இல்லாமல் இருப்பதற்காக புகைப்படம் எடுத்தவர்களையும், அங்கிருந்த பத்திரிக்கையாளர்களையும் காவலர்கள் தாக்கியுள்ளனர்.

இந்த வன்முறை சம்பவத்திற்கான எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பெரிய சதி இருப்பதாக அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பா.ம.க தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஈழத்தமிழர் ஆதரவு போராட்டத்தினை தொய்வின்றி நடத்தி வரும் வழக்காறிஞர்களை களங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் காவல் துறையினர் இந்த காட்டுதர்பாரை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கலவரத்திற்கான விசாரணை நேற்று இரவு 7 மணியளவில் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கு 3 தனிக்குழு அமைக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் உள்ள சேதங்களை ஒளிப்பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சி.பி.ஐ விசாரணையும் நடைபெற உள்ளது.

நன்றி http://www.4tamilmedia.com

படங்கள் இணைப்பு

Edited by forlov

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.