Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிச்சமர் பற்றி எண்ணிப்பாரடா தமிழா! (தமிழ் இன உணர்வுள்ள ஒரு தமிழக தமிழனின் தாகம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்” - என்று சொல்லி பெருமைப்பட்டோம். தமிழ் செம்மொழியாக்கப்பட்டது என்று மார்தட்டிக் கொண்டோம். ‘தைப்பிறந்தால் வழி பிறக்கும்’ தை மாதத்தை புத்தாண்டாக அறிவித்ததில் அளவில்லா மகிழ்வடைந்தோம். ஆனால் நம் உதிரத்தின் உறவுகளின் வாழ்வில் ‘வலி’ மட்டுமே பிறந்ததைக் கண்டு வழியறியாது உள்ளோம்.

நம் தலைவர்கள் எல்லாம் “தமிழ் வாழ்க” “தமிழ் வெல்க”, “வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்றெல்லாம் உணர்ச்சி பொங்க பேசியவர்கள். இவற்றையெல்லாம் ஏன் எதற்காக பேசினார்கள் பேசுகிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்! ஒரு புறம் ஈழத்தில் நம் உறவுகள் காட்டு விலங்குகளைப் போல நம் கண்ணெதிரே நாளுக்கு நாள் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருப்பதும் மறுபுறம் தாய்வீடான தமிழகத்தில் அரசியல் பட்டிமன்றமும் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகும் வெற்று அறிக்கைகளும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகின்றன. “எரிகின்ற வீட்டில் பரிக்கின்ற மட்டும் இலாபம்” என எண்ணித்திரிகிறார்கள். நம் வயிறு பற்றி எரியும் போதும அதில் குளிர் காயப் பார்க்கிறார்கள். எந்த உணர்வுள்ள தன்மானமுள்ள இனமும் ஏன் பறவைகளும் மிருகங்களும் கூட தன் இனம் அழியும் போது ஆதாயம் தேடாமல் கூடி குரலெழுப்பும். நம் தலைவர்கள் மட்டும் நாகரீகமடைந்த 21 ஆம் நூற்றாண்டில் வன்னியில் நடக்கும் வரலாறு காணாத இன மனித அழிவை அவலத்தை மிக மிக வன்மையாக ஓரணியில் நின்று முடிவுக்குக் கொண்டு வராமல் அரசியலாக்கி ஆதாயம் தேடித் திரிவதைக் கண்டு நெஞ்சமெல்லாம் பற்றி எரிகின்றது. தமிழர்களை எப்போதும் மாற்றான் தாய் பிள்ளையாகவே நடத்தி வரும் இந்திய ஏகாதிபத்தியம் தன் படைக்கருவிகளையும் போர் யுக்திகளையும் 21ம் நூற்றாண்டின் ஹிட்லர் ராசபக்செவுக்கு கொடுத்து எரியும் தமிழர்களின் உணர்வுகளில் எண்ணெய் வார்க்கிறது. இந்தியாவே! ஆறரைக்கோடி இந்தியர்களின் உணர்வுகளையும் எதிர்ப்பையும் சட்டை செய்யாமல் கொச்சைப்படுத்தி விட்டு அப்படி என்ன இலங்கையின் இறையாண்மையைக் காக்கத் துணை போகிறாய்?

தமிழ் தமிழ் என்று வாய்கிழிய பேசும் எம் தமிழகத்தலைவர்களே! தமிழ் என்னும் மொழி எங்கு வாழ்கிறது? காற்றிலா கடலிலா அல்லது கல்லரைகளிலா? வாழும் மனிதர்களில் அல்லவா வாழ்கிறது. அந்த மொழி பேசும் மனிதர்கள் மடிந்து விட்டால் அவர்களின் மயானத்திலா மொழி வாழும்? வளரும?. இப்போது புரிந்து கொண்டாயா? தமிழ் மொழிக்காக இவர்கள் போட்டதெல்லாம் வெறும் வேடமே: தன் வழித் தோன்றல்கள் வாழவே என்பதை. தமிழ் மொழியை இன்றும் தாயினும் மேலாகக் கருதி தரணி முழுவதும் அறியச் செய்தது யார்? உலகம் முழுவதற்கும் ‘தமிழர்’ என்றொரு இனம் உண்டு என எடுத்துரைத்தவர்கள் யார்? தன்மானமுள்ள நம் தாய் உறவுகளான ஈழத்தமிழர்கள் தானே! இன்று அவர்கள் பிச்சைக் காரர்களைப்போல் பசித்த வயிரோடு ஆதரவற்றவர்களைப் போல வதை முகாம்களில் அடைபட்டு. படிப்படியாக செத்துக் கொண்டிருக்கிறார்களே? சொந்த மண்ணில் அடிமைகளைப் போல் ஓடுஙகி கிடக்கிறார்களே? தன் மணையாளை ஓரக் கண்ணில் ஒருவன் பார்த்தாலே ஓங்கிய கரத்தோடு சீறும் செந்தமிழா நம் குலப் பெண்கள் ஈழத்தில் வல்லுறவுகளுக்கு ஆளாகி சொல்லொன்னாத்துயரம் அனுபவிக்கிறார்களே! ஏன் சீராமல் முடங்கிக் கிடக்கிறாய்?

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அவர்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே – அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணெங்கள் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே.

என்று பாடி கூடி வாழ்ந்த தமிழினத்தை விருப்பம் போல சுட்டு வீழ்த்துகிறானே சிங்களவன். ‘வன்னியில் வாழும் நம் தங்கைகளும் மங்கைகளும் படையினருக்கு விருந்தாகட்டும் - நம் வழி மறவர்களின் குருதியால் வங்கக் கடல் சிவக்கட்டும’ என்று சிங்கள இராணுவ அமைச்சர் என்னும் நாயினும் இழிந்த பிறவியான பேதை கூறியிருப்பதைக் கேட்டு நம் குருதி கொதிக்கவில்லையா?

மங்கள குங்குமத்தோடு மழலையரின் பூஞ்சிரிப்பைக் கண்டு மகிழ்ந்திருக்க வேண்டிய இளம் உள்ளங்கள் கண்ணுரக்கமின்றி தன் மக்களைக் காக்க காடுகளிலும் பதுங்குழிகளிலும் வாடுகிறார்களே? இந்த தன்மானத் தமிழனமெல்லாம் மடிந்தபின்பு ஒரு வாக்கியமாவது ஆங்கில மொழி கலக்காமல் பேச முடியாத நம்மாளா தழிழ் வாழப்போகிறது?

‘அவருக்கு நிகர் அவரே’ என்று கவிபாடிய தமிழ் புலவர்களே! நீங்களாவது சொல்லக் கூடாதா? ‘பதவ’p - அது தான் மட்டுமல்லா. தன் சந்ததியே அதைப் பற்றிக் கொள்ள வேண்டுமென்று எண்ணி எம் எண்ணமெல்லாம் தமிழரைக் காப்பார் என்ற எதிர்பார்ப்பிலெல்லாம் மண்ணை அள்ளி போட்டுவிட்ட அவரிடம். நீங்கள் நடத்தும் பேரணிகள் யாரிடம் முறையிடுவதற்காக? ராசபக்சேவிடமா? அவனிடம் இருக்கும் இன உணர்வில் துளியாவது உங்களிடம் இருந்தால் எங்களுக்காக் எம் இனத்திற்காக எழுந்திருப்பீர்களே? உலகமெல்லாம் சொன்னாலும் கேட்காமல் தன் இனத்திற்காக வரலாறு காணாத வன் முறையை எம் இனத்தின் மீது ஏவிவிட்டிருக்கிறானே? நீங்கள் கூலிக்கு மாறடிப்பவர்கள் தானே? எங்கள் வாக்குகள் தானே உங்களுக்குத் தேவை. அதையும் உங்கள் பணபலத்தால் விலைக்கு வாங்கி விடுகிறீர்கள். எங்கள் வறுமையைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள்.. எங்கள் வாழக்கையைப் பற்றி உங்களுக்கு அக்கரையில்லை. உங்களது வாரிசுகள் ஆண்டால் போதும். அதுதானே உண்மை? “தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும” என்பார்களே. பட்டி தொட்டி பாமரர் படித்தவர் என்று மிகப் பெரும்பான்மையோர் “ஐயோ… ஈழத்தில் நம் இனம் சாகிறதே” என பதறியபோது “போரின் போது மக்கள் மடிவது இயல்பே”.. என்று எந்த மக்களின் தலைவியாக இருக்கிறோம் எந்த மக்களின் நடுவில் வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் சொல்லியவர் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். அதுவும் கலகல உண்ணாவிரதம். அதுவும் நம்மை ஏமாற்றுவதற்காகத் தானே! நம் ஓட்டுகளுக்காகத் தானே? சோகமும் ஆத்திரமும் பொங்கி நெஞ்சை அடைக்கும் இந்த நேரத்திலும் இப்படி ஒரு இழிச் செயலா? ஏமாற்று வேலையா? நம் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தன்மானமிழந்து அம்மையாரின் காலில் நெடுசச்hன்கிடையாக விழுகிறார்களே. இவர்களா நம்மானத்தைக் காக்கப் போகிறார்கள்?

நாளை நம் மானம் காக்கும் ஆடையையும் நம்மிடமிருந்து பறித்து கொடியாக பறக்கவிட்டு தமிழா பார்.. உன் மானத்தை உயர பறக்கவிட்டிருக்கிறேன் என்று சொன்னாலும் கூட பார்த்து கொடி வணக்கம் செய்தாலும் செய்வோம்.

அம்மாவும் ஐயாவும் யாருக்காக யாருக்கு தலைவர்களாக இருக்கிறார்கள்? அம்மா கர்நாடகத்திற்கும் ஐயா தெலுங்கானவுக்குமா? அல்லது தமிழனுக்கா? அப்படியென்றால் ஈழத்தமிழரின் இந்த கொடுநதுயர்கண்டு தமிழகமே கண்ணீர் மல்கி நெருப்பாய் கணன்று கொண்டிருக்கும் போது கூடவா நீங்கள் ஒன்றாய் இணைந்து நின்று போராடக்கூடாது? பதினாறு தியாக தீபங்கள் தங்களையே எரித்துக் கொண்ட பின்புமா உங்கள் மரமண்டையில் இன்னும் உரைக்கவில்லை. அனைத்து தமிழக கட்சிகளும் ஒரே அணியில் நின்று குரலெழுப்பியிருந்தால் ஆடிப்போயிருக்காதா பாரதம்?

“உங்களுக்காகத் தானே நானிருக்கிறேன” என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்லிய கரிமேட்டு ஐயா எந்தப் புதருக்குள் பதுங்கியிருக்கிறார். தன் கல்யாண மண்டபத்தையும். கருப்புப் பணத்தையும் காப்பாற்றிக் கொள்ளத்தானே கட்சி தொடங்கினார். அவற்கை காக்க கேடயமமாக தானே நம்மை வைத்துக் கொள்ள விரும்புகிறார். எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று நினைத்துத் தானே தம் தொழிலை பார்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். மக்கள் மனநிலை எப்படி திரும்பும். அதில் எப்படி குளிர் காயலாம் எனக் காத்திருக்கும் ஓநாயே .. உனக்குமா எங்களை ஆள ஆசை?

எந்த வித கொள்கைத் தெளிவும் இல்லாமல் ஆடி காற்றில் ஏற்றி வைத்த தீபம் போல ஆற்றோர நானல் போல் வளைந்து நெழியும் மருத்துவர் ஐயாவாவது .. தமிழ் மக்களைக் காப்பர்ரர்?

அக்கினிப் பிளம்பாக எழும் வைகோ ஐயா ஏன் முரன்பட்ட களத்திலிருந்து காய் நகட்டுகிறார்.

தமிழ் கொலைஞரோடு கைகோர்த்து எச்சில் இலைக்கு ஆசைப்பட்டு எம் உணர்வெல்லாம் கொச்சைப்படுத்தி விட்டீரே திரு(டா)மா வளவனே!

இவர்கள் எல்லோரையும் விட பச்சை தமிழன துரோகிகள் தமிழன அழிவுக்கு முழுக்க முழுக்க காரணமான மாபாதகர்கள் தமிழனம் என்றும் மன்னிக்க முடியாத மாபாதகம் செய்தது பெண்ணுருவில் அலையும் தமிழர் இரத்த வெறி பிடித்த இத்தாலிய பேய் சோனியா தான். அவரின் அடிவருடிகள் இழி குலத்தைச் சேர்ந்த தமிழக காங்கிரசு கட்சியினர்கள் தான்.

சிவகங்கை சீமான் ஐயாவே.. நீவீர் தமிழனத்தில் பிறந்ததற்காக எங்கள் இனமே வெட்கப்படுகிறது. ஏம் தங்கையரின் மானமெல்லாம் பறிபோக எம் உயிர் உறவுகள் எல்லாம் கொத்துக் கொத்தாய் செத்து மடிய காரணமாக இருந்த சிங்கள வெறியர்களுகு ஆயுத உதவி செய்த அரக்கியின் ஆலோசகரே நம் இன அழிவிற்கெதிராக துணிந்து குரல் கொடுக்காத கோழையே வடக்கே இருந்து கொள். அங்கே இருந்து தேர்தலில் போட்டியிடு. இந்தப்பக்கம் வராதே! உன் துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.

தன் கணவன் இறந்ததற்குப் பழி எடுக்கிறார் அரக்கி சோனியா என்தெல்லாம் கபட நாடகம். அப்படியென்றால் தன் மாமியாரைக் கொன்றதற்காக பஞ்சாபியை பழி வாங்குவாரா? பாக்கிஸ்தானியர்ககளிடம் ஆயுதம் கொடுத்து சீக்கியர்களைச் சிதைக்கச் சொல்வாரா? இந்தியன் ஒருவன் தேசத்தந்தை மகாத்மாவைக் கொன்தற்காக இத்தேசத்தையே அழிக்கலாமா? (எவனோ ஒருவன் செய்த தவற்றிற்காக ஏன் நம் இனத்தையே அழிக்கத் துணைபோகிறார்?) இலங்கைக்கு உதவக் காரணம் காசு.. மக்களோ நாடோ நாட்டு நலனோ இப்போதைய காங்கிரசு தற்குறிகளுக்கு முக்கிய மல்ல. கட்சி நடத்த காசு கொடுக்கும் பணக்காரர்களின் கைப்பாவை தான் காங்கிரசு. இந்த இந்தியப் பணக்காரர்களின் வியாபாரம் இலங்கையிலும் உள்ளது. அது செழிக்க வேண்டுமென்றால் ராஜபக்சே என்னும் கொள்ளைக்காரனின் ஆதரவு வேண்டும். அவன் ஆதரவு வேண்டுமென்றால் அவன் ஆட்சியில் அதிகாரத்தில் இருக்க வேண்டும். அதனை தக்க வைக்க அவன் அரங்கெற்றியிருக்கும் அகோர தாண்டவம் தான் தமிழனத்தின் மீது அவன் தொடுத்த போர். அதற்கு கை கொடுத்து உகாதவுகிறது காங்கிரசும் கையர்லாகாத மண் மோகன் சிங்கும். இரு கொள்ளைக் காரர்களும் இணைந்து ஆடுகிறார்கள். அதில் இழப்பதும் இறப்பதும் தமிழன். ஏனென்றால் இவனை எவன் வேண்டுமானாலும் கொல்லலாம். குற்றுயிராக்கலாம். ஏனென்றால் இன்றைய தமிழக அரசியல் தலைவர்களுக்கு சில கோடிகளையும் பதவிகளையும் கொடுத்தால் போதும். இவர்கள் எவரையும் காட்டி கொடுப்பார்கள். எவர் காலையும் நக்குவார்கள். கழுதையின் காலையும் தொட்டு கும்பிடுவார்கள். தமிழ் மக்களைப் பற்றிய அக்கரை இவர்களுக்கு இல்லை. தம் மக்களைப் பற்றிய அக்கரையே அதிகம் உண்டு என்பதை புரிந்து வைத்திருக்கிறான் காங்கிரசுகாரன். நமது மக்களுக்குத் தான் இன்னும் புரியவில்லை.

தன் இன மக்களுக்காக பேசினால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை வைத்து வாயடைக்க வைக்கும் வக்கிரப்புத்தி கொண்ட கொலைஞரே! நீவீர் 1975ல் இந்திரா அவசர கால சட்டத்தை அமலாக்கிய போது “இம் என்றால் சிறைவாசகம் ஏன் என்றால் வனவாசகம” என்று கோசமிட்டு போராடவில்லையா?

இறையாண்மை பேசும் இந்திய நாடே? உலகமே உன்னைத் திருப்பிப் பார்க்கும் படி செய்தது என்குலத் தமிழர்களல்லாவா?

அக்கினி ஏவுகனையை ஆக்கிக் கொடுத்தது ஒரு தமிழரல்லவா? உலகத்தில் 2 வது பெரிய சனநாயக நாடான உன்னை 2004 – மக்களவைத் தேர்தலுக்குப் பின் வெள்ளைக்கார வம்சாவழியில் வந்த சோனியா தலைமை ஏற்று ஆழத்துடித்த போது “அம்மையாரே.. என்ன இருந்தாலும் இப்பழம் பெரும் பாரதநாட்டை ஒரு பூர்வீக இந்தியன் ஆழ்வது தான் சாலச் சிறந்தது” எனச் சொல்லி இந்தியாவின் மானம் காத்தது ஒரு தமிழர் தானே? அந்த அதிகார மோகம் பதவிவெறியாசை ஒருதமிழரால் பறிபோனதாலும் தானே இன்று தமிழினத்தையே பழிவாங்குகிறாய்?

சந்திரனுக்கு சந்திராயனை அனுப்பி வெற்றி கண்டதும் ஒரு தமிழரின் தலைமையில் தானே!

ஆஸ்கார் விருது வாங்கி பாரதத்திற்கு பெருமை சேர்த்தவரும் ஒரு தமிழர் தானே…

உன் மானம் காத்த எங்கள் இனம் துடிதுடித்து சாகும் போது கூடி குரல் எழுப்பக் கூடாதென்கிறாயே… எம் உயிர் உறவுகளை கருவறுக்க துணைபோகிறாயா? கேவலமாக இல்லையா உனக்கு? இதுதான் உன் தர்மமா? உன் இறையாண்மையா?

என் இனிய தமிழ் இனமே! வந்தவரையெல்லாம் வாழ வைத்து விட்டு இன்று நீ மட்டும் வீழ்ந்து கிடக்கிறாயே? உலக அரங்கில் உனக்காக குரல் கொடுக்க உன் இனத்தை தவிர யாரும் இல்லை என்பதை உணராயா? உயிர் துடிக்க வில்லையா? வீறுகொண்டு எழடா தமிழா. உன் உதிர உறவுகள் வாழ்விழந்து தவிக்கிறதே! கால்நடைகளைப் போல கூண்டில் அடைக்கப்பட்டு கிடக்கிறதே! உன் குருதி கொதிக்கவில்லையா? நெஞ்சம் பற்றி எறியவில்லையா? காக்கை குருவி கூட தன் இனம் அழிந்தால் சீருமேடா? அவைகளை விட நீ உணர்விழந்து போய்விட்டாயா? இப்படியெல்லாம் ஒரு நிலை வரும் என்றறிந்தோ அன்றே சிங்களத்தீவினிற்கு ஒரு பாலம் கட்டச் சொன்னான் பாரதி! என் இனமக்கள் நடந்தே வந்து தாய் உறவுகளோடு சேர்ந்திருக்குமே. சாலை ஓரங்களிலும் காடுகளிலும் நாதியற்றவர்களாய் செத்து மடியாதே.

நீ ஒன்றுகூடும்போதெல்லாம் ஊரைச்சொல்லி சாதியைச் சொல்லி இன்னும் எதையெல்லாமோ சொல்லி உன்னை துண்டாடச் செய்கின்றனரே! நீயும் சிந்திக்காமல் சில்லரைக் காசுபோல சிதறிப் போகிறாயே! சாதியமே நமக்கு சொந்தமானதல்லவே! அதுவும் நம்மைப் பிரிக்க நம்மேலே திணிக்கப்பட்ட ஒன்று என்பதை ஏன் மறந்து போகிறாய்?

விழித்திரு வீரமாயிரு போராடு என்ற முத்தான மூன்று கொள்கைகளைத்தானோ நம் மூவேந்தர்கள் மீன் புலி வில் என்று தம் சின்னங்களில் பொதிந்து வைத்தார்களோ! அதை இன்றும் கடை பிடிப்பவர்கள் நம் இனம் காக்க போராடும் புலிகளல்லவா!

“கட்டி உயர்ந்த கோபுரமாய் இருக்க வேண்டிய தமிழினம் கொட்டிக்கிடக்கிற செங்கல் போல் சிதைந்து கிடக்கிறது.” என்று அண்ணா அன்றே சொன்னாரே! நீ கோபுரமாக தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதை நினைவூட்டத்தானோ நம் முன்னோர்கள் தஞ்சையிலும் மதுரையிலும் திருவில்லிப்புத்தூரிலும் வான் உயர்ந்த கோபுரங்களை கட்டி வைத்தார்களோ?

நீ மட்டும் ஒன்று பட்டு வாழ்ந்திருந்தால் இன்று உலகமே உன்னை வணங்குமே என் தமிழா? ஆனால் இன்று உன் இனம் காக்க உலகமெல்லாம் கண்ணீர் மல்க கையேந்தி நிற்கிறாயே தமிழா? ஐயகோ இந்நிலை கண்டுமா இன்னும் நீ திசைக்கு எட்டுப்பிரிவாய் பிரித்து நிற்கிறாய்?

வஞச்க “கருணா”க்களின் நெஞ்சம் பிளந்த துரோக நிகழ்வுகள் எத்தனை! பதவிக்காக பகைவனிடம் தஞ்சம் புகுந்து நம் தாயக கனவினை மிதித்தவர்கள் எத்தனை பேர்! தான் அழிந்தாலும் தன் இனமாவது சுதந்திரக் காற்றை சுவாசிக்கட்டும் என்று எதிரியோடு மோதி உயிர் தியாகம் செய்யும் புலிகளல்லவா நம் காவலர்கள் தியாக தீபங்கள்! மடிந்த மாவீரர்களா இனி விடியவிருக்கும் தமிழீழ தாயகத்தில் வந்து வாழப்போகிறார்கள்? வாழும் நீங்களலல்லவா? புலம் பெயர்ந்து வாழும் என் தமிழ் உறவுகளே! இந்த மிகப்பெரிய கொடிய அவலத்திற்குப் பின்னும் பிரிந்து வாழாதீர்கள்! உண்மையான உயிர் தந்து உங்களை காக்கக்கூடிய நம் புலித் தலைவனின் தலைமையில் ஒன்றுபடுங்கள் வழி தொடருங்கள்!

என் தமிழக சொந்தங்களே! ஈழத் தமிழன்தானே சாகிறான். எனக்கென்ன என்று எண்ணாதீர்கள். ஏற்கனவே இராமேஸ்வரத்தில் மீனவர்கள் மேல் கைவைத்துப் பார்த்து விட்டான். அடுத்து இராமநாதபுரத்திற்கும் வருவான். அதையும் தாண்டி மதுரைக்கும் வருவான். நீ இப்போது ஒன்று பட்டு எழாவிட்டால் நாளை உன் கோட்டையிலும் குடியிருக்க வருவான். ஜெர்மனி நாட்டு தத்துவயியலார் மார்டின் நீமொல்லர் சொன்னார். “முதலில் அவர்கள் ய10தர்களிடம் வந்தார்கள். நான் அவர்களுக்கு எதிராக பேசவில்லை ஏனென்றால் நான் ய10தனல்ல் பிறகு அவர்கள் பொதுவுடமைவாதிகளிடம் வந்தார்கள் அப்போதும் நான் அவர்களுக்கு எதிராக பேசவில்லை ஏனென்றால் நான் பொதுவுடமைவாதியல்ல் இறுதியில் அவர்கள் என்னிடம் வந்தார்கள் அப்போது அவர்களுக்கு எதிராகபேச யாருமே இல்லை”. அதுபோலவே பக்கத்து வீடுதானே எறிகிறது என்று கைகட்டிப் பார்த்து இருந்தால் நாளை நம்வீடு எறியும் போது உதவ யாரும் இருக்கமாட்டார்கள். எனவே என் இனிய தமிழ் மக்களே புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளே அன்றைக்கு நம் தமிழ்த்தாய் ஒருத்தி தன்மகன் போரில் புறமுதுகிட்டு ஓடினான் என்று கேட்டவுடன் அது உண்மையானால் அத்தகைய மகனுக்கு பால் கொடுத்த தன் மார்பகங்களை அறுத்தெறிவேன் என்று சொல்லி போர்க்களம் சென்று தன் மகன் மார்பில் அம்பெய்தப்பட்டு வீரமரணம் அடைந்ததைக் கண்டு ஆறுதல் அடைந்தாள். மற்றொரு தாய் முதல் நாள் போரில் தமையனை இழந்து இரண்டாம் நாள் போரில் கணவனை இழந்து மூன்றாம் நான் போருக்கு அனுப்புவதற்கு ஆள் இல்லையே என்று தன் 10 வயது மகனிடம் வாள் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தாள் என்று சிறு பருவத்திலே கற்றாயே? எங்கே போனது அந்த வீரமும் தியாக உணர்வும்?

என் இனிய தமிழ்த்தாய்மார்களே! உங்கள் பிள்ளைகளை களமுனைக்கு அனுப்பாவிட்டாலும் தெருமுனைக்காவது அனுப்புங்கள். நம் இன அழிவை எதிர்த்து குரல் எழுப்பட்டும். ஊணும் உயிரும் கொடுத்த அன்னையரே எங்களுக்கு பால் ஊட்டி வளர்த்த போது தாய் தமிழயும் தானே ஊட்டி வளர்த்தீர்கள். அந்தத் தமிழ் இனம் துடிதுடிக்கும் போது அடங்கியிருப்பது சரியா? உங்கள் கணவருக்கும் புதல்வருக்கும் சொல்லுங்கள் நம் இனமானம் காக்க தமிழீழம் விடியும் வரை விடாது முடிந்த வழிகளெல்லாம் செயல்படச்சொல்லுங்கள் குரல் எழுப்பச் சொல்லுங்கள். எந்த தமிழ் பெண்ணும் கோழையை விரும்ப மாட்டாள். நம் இனம் துடிதுடித்துச் சாக நம் மழலைகள் பிஞ்சிலே கருக குண்டடி பட்டுச் சாக வாழவேண்டிய இளம் உள்ளங்கள். கள முனையிலே மடிய துணை போன காங்கிரஸ் கருநாகத்தை துரத்தி அடிக்க வேண்டும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலையே புறக்கணித்து எங்கள் மக்கள் மடிவதற்கு துணை போவதை நிறுத்தி விட்டு வர் பின்பு தேர்தலை சந்திக்கலாம் என்றால் நாமெல்லாம் தன்மானம் உள்ள சுய கௌரவம் உள்ள சூடு சுரணை உள்ள மரத்தமிழர்கள் எனச் சொல்லலாம். அந்த வீரமும் ஒற்றுமையும் தன்மானமும் இல்லையென்றால் தமிழரின் இரத்தம் குடிக்க வெறி பிடித்தர்டும் வெள்ளைக் கார இராட்சசி நம் குலப் பெண்களின் கற்பை சூரையாடும் கயவர்களுக்குத் துணைபோகும் கல்நெஞ்சக்காரி அவரின் அடி வருடி பதவி வெறி பிடித்த தமிழன உணர்வையே கொச்சைபடுத்திய தமிழுணர்வை தம் சுயநலத்திற்கு மட்டுமே பயன்படுத்திய தமிழக கருணாவையும் காரி உமிழுங்கள்! உங்களில் எவரேனும் இவர்களுக்கு வாக்களித்தால் உங்களைப் பழிப்பதற்கு என் தாய் தமிழ் மொழியில் இனி புதிய வார்த்தைகளைத் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆயிரம் ரூபாய்க்கும் ஆட்டுக்கறி பிரியாணிக்கும் உங்கள் மானத்தை இனத்தை அடகு வைத்து விடாதீர்கள்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழினமே இனியாவது புலித்தலைவனின் வழிநின்று புதிய தேசம் காண விடாது ஒன்று பட்டு உழைக்க சபதம் எடுங்கள்! அடங்கி முடங்கி விடாதீர்கள். எங்களோடு சேர்ந்து நீங்கள் எடுக்கும் போரட்டங்கள் புலிகளுக்கு புதுத் தெம்பூட்டும்! வலுவூட்டும்! இன்னும் உரக்க குரல் கொடுப்போம். உலகமெல்லாம் இருக்கும் தமிழர் உங்களோடு இருக்கிறோம் என்ற நன்றிக்கடனை களமுனையிலிருக்கும் நம் இனம் காக்கும் தியாகப்புலிகளுக்கு காட்ட வேண்டிய காலத்தின் கட்டாயத்திலும் கடமை உணர்விலும் உள்ளோம். புலிகளுக்கு அதுவே மிகப்பெரிய மன வலிமையை மலையையும் தகர்தெறியக்கூடிய சக்தியை ஆற்றலைத்தரும். தமிழர் அனைவரும் கரம் கோர்த்து தோழ் சேர்த்து மீண்டும் மீண்டும் எழுவோம். - நாம் புதிய வரலாறு படைப்போம் எத்தனை இன்னல்கள் எத்தனை இடர்கள் நம்மீது வந்து மோதிய போதும் ….. மீண்டும் மீண்டும் எழுவோம். தழிழீழ தாயக விடுதலை காண்போம்.

எண்ணிப்பாரடா தமிழா இணைந்து நில்லுடா தமிழா

மண்ணில் உன்னை வெல்ல யாருடா…. மரத் தமிழன் நீயடா…

உன்னைப் பிளவு படுத்தும் வீணணை வீழ்த்தடா… தமிழ்

அன்னையின் புதல்வர்கள் நாமெனச் சொல்லடா…

ஆறரைக்கோடி தமிழினமே நீ கிளர்ந்தெழுந்தால்

ஆழ் கடலும் வழி விடுமே அறியவில்லையோ?

எக்கணமும் புகழ் மணக்க இருந்தவரே.. நீவீர்

அக்கினியாய் கிளம்பாமல் அடங்கி இருப்பதேனோ?

பச்சிளம் பிஞ்சுகள் சருகாய் சாய்கிறதே

பால் மனம் மாறா பிள்ளைகள் பாடைகளில் போகிறதே

கோரத் தாண்டவமாடும் சிங்களன் வெறியாட்டத்தில்

வீர புலிக்குட்டிகள் விழுப்புண் தாங்கி மடிகிறதே!

கொதித்து எழடா தமிழா - உன் குருதி குடித்தவனை

மிதித்து வீழ்த்தடா தமிழா….

செத்து செத்து வாழ்வதை விட - தமிழீழம் மலர

வித்தாகி மடிவோம் வாடா தோழா!

தோழ்தருவோம் நம் புலிக்கூட்டம் தினவெடுக்க

வாழ் எடுப்போம் பகைவனின் கதை முடிக்க

நாள் குறிப்போம் தாயக விடியலுக்காக -

நம்பிப் போராடப் புறப்படடா என் தமிழா

http://tamil.eelaman.net/vanni-samar-kaddurai.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.