Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களை இனச்சுத்திகரிப்பு முகாம்களுக்குத் திரட்டுவதற்கான அரிதாரமே பாதுகாப்பான வெளியேற்றம் ‐ சு.ஞாலவன் ‐ ஈழநாதம்:

Featured Replies

மக்களை இனச்சுத்திகரிப்பு முகாம்களுக்குத் திரட்டுவதற்கான அரிதாரமே பாதுகாப்பான வெளியேற்றம்

‐ சு.ஞாலவன் ‐

ஈழநாதம்:

குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பைத் தமது பாரம்பரிய தாயகமாகக் கொண்டிருக்கும ஒரு மக்கள் சமூகத்தை பாதுகாப்பான வெளியேற்றம் என்ற அரிதாரம் பூசி இனச்சுத்திகரிப்பு முகாம்களுக்குத் திரட்டுவது குறித்து பன்னாட்டுப் பிரமுகர்கள் சிலர் வாய்கூசாது ஒலித்து வருவதைக் காண்கிறோம். இங்கு நடப்பது ஒன்றும் இயற்கை அனர்த்தமல்ல. தாம் உரிமை கோரும் ஒரு வாழ்வினைச் சகமனிதனுக்கு அனுமதிக்க மறுக்கும் பேரினவாதச்சிந்தனையில் ஊறி நாளும் சிங்களத்தின் நுணுக்கமாகத் திட்டமிட்ட தமிழினப்படுகொலையே இது.

பயங்கரவாத்திற்கெதிரான யுத்தம் எனச் சிங்களத்தில் குறிப்பிடப்படும் இந்த இனப்படுகொலையின் உண்மை முகம் பகிரங்கமாக வெளிப்பட்டு விட்ட பின்னரும் சில பிரமுகர்கள் இன்னமும் பாதுகாப்பான வெளியறறம் குறித்துப் பேசி வருவது தமிழ் மக்களிடையே சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

உலகில் போர் நடந்த எந்தவொரு பகுதியிலும் முன்மொழியப்படாத இத்தகைய கூட்டிக் கொடுத்தல் ஹிட்லரின் நாசி அரசின் கீழ் அயல்நாடுகளால் யூதர்கள் திரட்டப்பட்டு நாசிக்களின் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்ட கையோடு மனிதாபிமானமற்றதும் அநாகரிகமானதும் அசிங்கமானதுமான யெயிலாகக் கருதப்பட்டுக் கைவிடப்பட்டது.

அப்படியிருக்க ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநியாயங்களைத் தட்டிக் கேட்க விளையாது ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோம்ஸ் உட்படச் சிலர் மலிவாகச் செயற்படுவது ஈனத்தனமானது.

வட அயர்லாந்திலே ஐஆர்ஏயின் தாக்குதல்களும் அதற்கெதிரான பிரித்தானியப் படைகளின் தாக்குதல் நடவடிக்கைகளும் தீவிரமடைந்த காலப்பகுதியிலே லண்டனோ அல்லது வெறெந்தத் தரப்போ ஆயினும் சரி பொதுமக்களின் மீதான தங்களது அதிகபட்சக் கரிசனையாக பாதுகாப்பான வெளியேற்றத்தை முன்மொழிந்திருக்குமா? அவ்வாறு கருத்துத் தெரிவிப்பதற்குத் தானும் முயன்றிருக்குமா என்றால் இல்லை. ஏனென்றால் நாசிகளின் இனச்சுத்திரிகரிப்பை நன்றாகவே நினைவில் வைத்திருக்கும் மேற்கு இவையிரண்டும் கொண்டுள்ள ஒற்றுமைகளை நன்றாகவே அறியும். இருந்தும் ஈழத்தமிழினம் குறித்து மட்டும் ஏனிந்த இரண்டகம்?

சரி பாதுகாப்பான வெளியேற்றம் பற்றிப் பேசும் தரப்புக்கள் அவ்வெளியேற்றத்திற்குப் பின்னரான தமிழ் மக்களின் பாதுகாப்பான வாழ்வு மற்றும் இருப்புக் குறித்து எந்தளவிற்கு உத்தரவாதம் அளிக்கக் கூடியவர்களாக உள்ளனர்.

பழைய காலங்களை விட்டுவிட்டுப் பார்ப்போமாயினும் மூதூரில் அக்சன் பெய்ம் பணியாளர்கள் 17 பேர் உட்பட ஆறு வயதுச் சிறுமி வக்கிர வெறியாட்டத்தறகு; பலி கொள்ளப்பட்டது வரை நீதியான எந்த நடைமுறைகளும் இன்றிச் செயற்படும் ஆட்சியாளர்களை எப்படி நம்புவது? 1948.லிருந்து நம்பிக்கெட்டதால் பட்டுப் பெற்ற அறிவுதானே நம்மைப் போராட வைத்தது.

அரசின் பொது மக்கள் மீதான கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தாமல் தன்னுடைய முழுமையான படைத்தளபாட, ஆலோசனை ஆசீர்வாதத்;தை வழங்கி வரும் இந்திய காங்கிரஸ் அரசு இல்லாத தனது மனிதாபிமானத்தை அலங்கரித்துக் கொள்வதற்காக புல்மோட்டையில் மருத்துவ முகாம் ஒன்றை அமைத்து எம்மிடம் தினமும் 500 பேர் வரை காயப்பட்ட மக்கள் சிகிச்சை பெறுகிறார்கள். இத்தொகை மேலும் அதிகரிக்கும் என்பதால் தினமும் மேலும் பலநூறு மக்களைக் கையாளக் கூடியதாக முகாமை விரிவு படுத்த உள்ளோம் என்று விளம்பரப்படுத்தி வருகின்றது.

காயப்படுத்தியும் படுகொலை செய்துமே இனச்சுத்திகரிப்புச் செய்யும் சிங்களப் பேரினவாதிகளை அதிலிருந்து தடுத்து நிறுத்தாமல் ஆசீர்வதித்து ஆலோசனை வழங்குபவர்கள் கட்டுப் போடுவதாகக் காட்டித் தங்ளைக் கௌரவப்படு;த்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

இதைப் போலவே சற்று வேறுபட்டது பன்னாட்டு முகாம். தமிழ் மக்களின் மனிதாபிமான விடயங்கள் தொடர்பிலான எங்கள் முயற்சி சிறிது முன்னெற்றம் கண்டுள்ளது. என்கிறார் ஐநா பேச்சாளர். அந்த முன்னேற்றம் என்ன என்று சொல்ல ஏதாவது இருக்க வேண்டுமே? தமிழினத்தின் போராட்ட நியாயங்களைக் கருத்திலெடுக்காது சிங்கள அரசினதும் அதன் ஒட்டு நாடுகளினதும் இராஜதந்திரங்களுக்கு மட்டுமே செவிசாய்த்து பன்னாட்டுத் தப்புக்கள் கடந்த காலங்களில் கடைப்பிடித்து வந்த அலட்சிய அதர்மப் போக்கே சிங்களப் பேரினவாதத்தை மேலும் தீவிரமடையச் செய்தது.

நிலைமை இப்படியிருக்க தங்களின் தவறை உணர்ந்து மாற்றுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதை தவிர்த்து இங்கே பகிரங்கமான இனப்படுகொலை நிகழ்வதைத் தடுத்து திட்டமிட்ட நுணுக்கமான வெளித்தெரியாத இனச்சுத்திகரிப்பிற்குத் தமிழ் மக்களைப் பலிகொடுப்பதற்கானதே தற்போதைய பாதுகாப்பான வெளியேற்றம் குறித்த அழுத்தங்கள்.

இந்நிலையில் முழு உலகமும் ஏன் நமக்ககெதிராகச் செயற்படுகிறது என்கிற மன ஆதங்கம் எழுவது இயல்பே. உண்மையைச் சொல்லப் போனால் இந்திய காங்கிரஸ் தவிர்ந்த நீங்கலாக வேறு எந்த நாடுமே நம்மை எதிரிகளாகக் கருதவில்லை.

சிங்களம் தன்னைப் பலம் வாய்ந்ததாக வெளியுலகில் வெளிப்படுத்துவதற்கு ஏதுவான புறந்சூழல் காணப்படுகிறது. இப்டியிருக்க பலவீனமாக உள்ளதாகத் தாம் கருதும் ஈழத் தமிழினத்துடன் நட்புப் பாராட்ட முன்னணி நாடுகள் பெரிதும் விரும்பாமல் ஏதோ தங்களுடைய முன்னணி நிலைக்கு அகௌரவம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காகப் பகிரங்கமான இனப்படுகொலையை மட்டும் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. அதற்காகவே பாதுகாப்பான வெளியேற்றம் இவ்வெளியேற்றத்துக்குப் பின்னரான பலியெடுப்புக்கள் உரிமை மீறல்கள் எல்லாம் சர்வதேச மனச்சாட்சியை எட்டாமல் சிறிலங்காவின் ஊடக ஒடுக்குமுறையும் புலனாய்வுத்துறையும் பார்த்துக் கொள்ளும்.

இவ்வாறான சூழலில் எமது பலத்தை ஒன்று திரட்டி உச்சபட்சமாக வெளிப்படுத்தி பேரினவாதப் படைகளை வெற்றி கொள்வதினூடாக தாயகப் பகுதிகள் மீட்டெடுக்கப்படுவது மட்டுமன்றி பன்னாட்டு ஆதரவினையும பெற்றுக் கொள்ளலாம்

ஏககாலத்தில் புலத்தில் வாழும் எம்மவர்களின் அயராத உறுதிமிக்க போராட்டமும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். அதாவது புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் தற்போதைய தமிழ் மக்களுக்கான கவனயீர்ப்புப் போராட்டங்கள் என்பன அந்தந்த நாட்டு மக்களை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு தமிழ் மக்களுக்கான ஐரோப்பிய அமெரிக்க மக்களின் போராட்டங்களாகப் பரிணமித்து அரசியல் சக்தியாக எழ வேண்டும். அதாவது கலந்து கொள்ளும் ஒவ்வொரு தமிழரும் பத்திற்கும் குறையாத அந்நாட்டவர்களும் என்ற ரீதியில் மாபெரும் சக்தியாகத் திகழ வேண்டும். இதற்காகச் சகல ஆதரவு சக்திகளும் உறவு கொள்ளப்பட வேண்டும்.

கூடவே ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழும் நம்மவர்களுக்கு வேறொரு வாய்ப்பும் உள்ளது. அங்கே ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு இன சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் நம் தமிழுறவுகளின சகமாணவர்களாக தொழிலாளர்களாக, அயலவர்களாக நண்பர்களாகவும் உள்ளனர். ரஸ்யா, இஸ்ரேல், ஈரான், துருக்கி, வியட்நாம் உட்படப் பல சமூகங்களைச் சேர்ந்தவர்களின் அமைப்புக்களுடனும் நட்புறவினை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வசதி வாய்ப்பினைப் பெற்றவர்களாகவும் இவர்கள் உள்ளனர்.

இப்பல்லின நட்பு சக்திகளுக்கு எங்களின் பிரச்சினைகளைத் தெளிவு படுத்தி அவர்களுடாக அந்தந்த நாடுகளின் சிங்கள ஆதரவுப் போக்கிலே மாற்றஙகளைக் கொண்டு வர முடியும்.

ஆகவே சகல வாய்ப்பு வசதிகளையும் பயன்படுத்தி தமிழினத்தின் உரிமைகளுடன் கூடிய கௌரவமான வாழ்வு நிலை பெறுவதற்காக அனைவரும உழைப்போம்

http://www.globaltamilnews.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.