Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்கள் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் பின்னால் உலகத் தமிழனம் துணையிருக்கும்: ஜெயலலிதாவுக்கு நோர்வே தமிழர்கள் ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை இந்திரா காந்தி படையெடுத்து வங்காளதேசம் உருவாக்கியது போல், தங்கள் முயற்சியால், மனிதப் பேரவலத்தின் உச்சத்தில் அழிவுறும் தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதும் நீதியானதுமான தீர்வாக தமிழீழத் தாயகம் மலர தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் பின்னால் துணை நிற்பார்கள் என நோர்வே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது தொடர்பாக நோர்வே தமிழ்ச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

உலகத் தமிழரின் ஏகோபித்த உணர்வாம் தமிழீழ தாயக கோட்பாட்டை தாங்கள் ஏற்று அதற்கான நடவடிக்கை எடுப்பேன் என கூறியதன் மூலம், இதுவரை காலமும் தன்னைத் தானே தமிழின தலைவர் என கூறிக்கொண்டு தாய்த்தமிழக மக்களையும் உலகத்தமிழரையும் ஏமாற்றிய தமிழின துரோகிகளுக்கு தாங்கள் நல்லதோர் சாட்டை அடி கொடுத்துள்ளீர்கள் என்பதை அறிந்து இவ்வளவு பேரிழப்புக்களுக்கு மத்தியிலும் உலகத் தமிழினம் பேருவகை கொள்கின்றது.

தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு புரட்சி தலைவர் வழங்கிய பங்களிப்பும் பேராதரவும் தாங்கள் அறியாதது அல்ல. புரட்சி தலைவர் வழிவந்த தாங்கள் தொடர்ந்தும் தனித் தமிழீழம் உருவாக தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு எம் மக்களின் அவலம் தீர தமிழீழம் மலர தொடர்ந்தும் பாடுபட வேண்டும் என நோர்வே வாழ் தமிழ் மக்களின் சார்பாக நோர்வே தமிழ் சங்கம் வேண்டி கொள்கின்றது.

மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வாழ்த்துகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

http://www.puthinam.com/full.php?2aeXB8mgb...I5fbd0e0Wj2cCde

இதயக் கதவுகள் திறந்து 'தனி ஈழம்' அமைப்பேன் என்ற நீங்களே எம் நம்பிக்கை ஒளி: இத்தாலிய தமிழர்கள் ஜெயலலிதாவுக்கு நன்றி

சாவின் விளிம்பில் நின்று இனவாத சிறிலங்கா அரசின் கொடிய குண்டுமழையில் குளித்தும் எறிகணையில் எரிந்தும் கொத்தணிக் குண்டிலும் நச்சுவாயுவிலும் கொல்லப்படும் ஈழத் தமிழர்களின் துயர்கண்டு உங்கள் இதயத்தின் கதவுகளைத் திறந்து ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை அமைத்துக்கொடுப்பேன் என்று உணர்வுடன் விடுத்த உணர்வின் வரிகளும் உரிமைக்குரலும் எங்கள் நெஞ்சத்தை நெருட வைத்துள்ளது என்று இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தாய்த் தமிழகத்திலும் ஈழத்திலும் உள்ள எட்டுக் கோடி தமிழர்களோடு புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் உங்கள் உறுதியான பேச்சு நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளது.

ஈழத்தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழீழத்தை அமைத்துத் தருவேன் என்ற உங்களின் நம்பிக்கை எம்மக்கள் மீதுள்ள தமிழ்ப்பற்றையும் பாசத்தையும் காட்டி நிற்கின்றது.

தமிழக அரசியல் வரலாற்றில் செய்வதை சொல்லும் புரட்சித் தலைவரின் வழிவந்த புரட்சித் தலைவியாக நீங்கள் ஒருவர் மட்டுமே திகழ்கின்றீர்கள்.

அன்று காலத்தின் கோலத்தோடு சில காட்டமான வார்த்தைகளைப் பகிர்ந்தாலும் இன்றைய ஈழத் தமிழர்களின் கோலத்தையும் அவலத்தையும் கண்டு உங்கள் உள்ளம் இரங்கி ஒரு புதிய ஒளிக்கீற்றை உருவாக்கியிருக்கின்றது.

ஈழத் தமிழர்களை பகடைக்காய்களாக்கி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளும் நாடகம் ஆடும் அரசியல் கலைஞர்களும் வாழும் தமிழ்நாட்டில் சொல்லிலும் செயலிலும் நேர்மையை நிலை நிறுத்தியவர் நீங்கள்.

தலைமுறை தலைமுறையாக எம்மக்கள் பட்ட சொல்லொணாத் துன்பங்களுக்கும் உறவுகளை இழந்து வாழும் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் தாங்கள் தந்த வாக்கு விடியலைத் தரும் தெய்வ வாக்காக ஒலிக்கின்றது.

வருகின்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டி தமிழர்களின் தலைவியாக வலம் வந்து ஈழத் தமிழ் மக்களின் கனவுகளை நனவாக்கி உலகத்தால் காக்க முடியாத லட்சக்கணக்கான மக்களை இன அழிப்பில் இருந்து காப்பற்றிய தாய்மையின் வடிவமாய் தமிழர் வரலாற்றில் தாங்கள் என்றென்றும் வாழ்வீர்கள்.

காலத்தால் செய்தற்கரிய பேருதவியை செய்யும் தங்களை தமிழ் உலகம் என்றென்றும் நன்றி கூறி கரம் பற்றி நிற்கும்.

உங்கள் அன்பிற்கும் பண்பிற்கும் தளராத உறுதிக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தமிழீழ விடுதலையை ஜெயலலிதாவின் பாசப் பிணைப்பு விரைவுபடுத்தும்: சுவிஸ் தமிழர் பேரவை

தமிழீழ விடுதலையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் பாசப் பிணைப்பு விரைவுபடுத்தும் என்று சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை செல்வி. ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதத்தின் விபரம் வருமாறு:

ஈழத் தமிழினம் அனைத்தையும் இழந்து அலைகடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் தங்களின் வாயில் இருந்து வெளிவந்துள்ள வார்த்தைகள் நம்பிக்கை நட்சத்திரமாய் எம்மைப் புளகாங்கிதம் அடையச் செய்துள்ளன.

தந்தையர் நாடு என நினைத்து நம்பிக்கையோடு, நீதியை எதிர்பார்த்து இருந்த எமக்கு உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் பாரத தேசம் செய்த - தொடர்ந்தும் செய்து வருகின்ற - துரோகம் தாங்கொணாத் துயரைத் தருகின்றது.

அந்த வேளையிலே "ஈழத் தமிழினத்தின் துயர்துடைக்க தமிழீழம் அமைவது தான் ஒரே தீர்வு எனில் அதனைப் பெற்றுத் தரத் தயார்" என நீங்கள் விடுத்துள்ள அறிவிப்பு, பாரத தேசம் எமக்கு எதிரி அல்ல மாறாக அங்குள்ள தற்போதைய ஆளும் குழுமமே எமக்கு எதிரி என்ற புரிதலை ஏற்படுத்தியுள்ளது.

இடர்மிகுந்த ஒரு சூழ்நிலையிலே மிகுந்த அவமானங்களைச் சந்தித்து அரசியலில் முன்னணிக்கு வந்தவர் நீங்கள். அதனால், சொந்த மண்ணிலே தமிழ் மக்கள் அவமானப்படுத்தப்பட்ட போது, பாரபட்சங்களுக்கு இலக்கான போது, கொடுமைப்படுத்தப்பட்ட போது எத்தகைய உணர்வோடு இருந்திருப்பார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

ஈழத் தமிழரின் நலவாழ்வுக்காக, அவர்களின் சுதந்திரத்துக்காக தனது சக்திக்கும் அதிகமாகப் பங்களிப்பு வழங்கிய அமரர் பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டி வளர்க்கப்பட்ட கட்சியின் பொறுப்பாளராகப் பதவி வகிப்பவர் நீங்கள். அவர் வழங்கிய ஆதரவைப் போன்று நீங்களும் எமக்கு, எமது மக்களின் சுதந்திர வாழ்வுக்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என நாம் உரிமையுடன் எதிர்பார்க்கின்றோம்.

கடந்த காலங்களில் எமது போராட்டம் தொடர்பிலும் அதன் செல்நெறி தொடர்பிலும் நீங்கள் முன்வைத்த ஒரு சில விமர்சனங்கள் எமக்கு மனக்கசப்பைத் தந்திருந்தமையை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஒரு பிள்ளையின் செயற்பாடுகளை ஒரு தாய் விமர்சிப்பதற்கு ஒப்பானதாக அவற்றைக் கருதி மறந்துவிடச் சித்தமாக இருக்கின்றோம்.

ஆபத்தில் இருக்கும் போது நேசக்கரம் நீட்டுவதே ஆழமான நட்பின் அடையாளம் என்பதற்கு அமைய இன்று நீங்கள் நீட்டியுள்ள நேசக்கரத்தை வாஞ்சையுடன் நாம் பற்றிக் கொள்கின்றோம்.

தாய்மையுள்ளம் கொண்ட நீங்கள், கொண்ட கொள்கையில் இருந்து கிஞ்சித்தும் விலகாத உறுதியான குணம் உடையவர் என அறியப்பட்டவர். நீங்கள் கூறிய வார்த்தைகள் தங்கள் உதட்டில் இருந்து அல்லாமல் அடிமனதில் இருந்து வந்தவை என நாங்கள் முழுமனதாக நம்புகின்றோம்.

தங்களின் வார்த்தைகள் மூலம் எங்களுக்கு கிட்டியுள்ள ஆன்ம பலம். முன்னரை விட எமது போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுக்க உதவும் என நம்புகின்றோம். அதற்காக தங்களுக்கு சுவிஸ் நாட்டில் வாழும் ஈழத் தமிழர்களின் சார்பாகவும் தமிழர் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் தமிழ் அமைப்புக்களின் சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்கள் மத்தியிலே உருவாகியுள்ள இந்தப் பாசப் பிணைப்பு ஈழத் தமிழினம் விடுதலை பெற்ற பின்பும் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் கைவிட்ட மக்களை ஈழம் அமைத்து நீங்கள் காப்பாற்றுங்கள்: ஜெயலலிதாவிடம் கனடிய தமிழ் பட்டதாரிகள் வேண்டுகோள்

அன்னை இந்திரா காந்தி படையெடுத்து வங்காளதேசம் உருவாக்கியது போல், தங்கள் முயற்சியால், மனிதப் பேரவலத்தின் உச்சத்தில் அழிவுறும் தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதும் நீதியானதுமான தீர்வாக தமிழீழத் தாயகம் மலர தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் பின்னால் துணை நிற்பார்கள் என நோர்வே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது தொடர்பாக நோர்வே தமிழ்ச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

உலகத் தமிழரின் ஏகோபித்த உணர்வாம் தமிழீழ தாயக கோட்பாட்டை தாங்கள் ஏற்று அதற்கான நடவடிக்கை எடுப்பேன் என கூறியதன் மூலம், இதுவரை காலமும் தன்னைத் தானே தமிழின தலைவர் என கூறிக்கொண்டு தாய்த்தமிழக மக்களையும் உலகத்தமிழரையும் ஏமாற்றிய தமிழின துரோகிகளுக்கு தாங்கள் நல்லதோர் சாட்டை அடி கொடுத்துள்ளீர்கள் என்பதை அறிந்து இவ்வளவு பேரிழப்புக்களுக்கு மத்தியிலும் உலகத் தமிழினம் பேருவகை கொள்கின்றது.

தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு புரட்சி தலைவர் வழங்கிய பங்களிப்பும் பேராதரவும் தாங்கள் அறியாதது அல்ல. புரட்சி தலைவர் வழிவந்த தாங்கள் தொடர்ந்தும் தனித் தமிழீழம் உருவாக தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு எம் மக்களின் அவலம் தீர தமிழீழம் மலர தொடர்ந்தும் பாடுபட வேண்டும் என நோர்வே வாழ் தமிழ் மக்களின் சார்பாக நோர்வே தமிழ் சங்கம் வேண்டி கொள்கின்றது.

மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வாழ்த்துகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்களே எங்கள் நம்பிக்கை; புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் நீங்கள் வாழுங்கள்!: ஜெயலலிதாவுக்கு அவுஸ்திரேலிய தமிழர்கள் வாழ்த்து

இந்திய மத்திய அரசு தான் இன்று சிங்கள அரசுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. இந்த சமயத்தில் தங்களின் குரல் எமக்கு நம்பிக்கையை அளிக்கின்றது. ஈழத் தமிழர்களின் விடிவிற்கு ஒரே வழி சுதந்திர தமிழீமே. இதனை வலியுறுத்தி உங்கள் குரல் ஒலிக்க வேணடும் என உரிமையோடு வேண்டுகின்றோம் என்று தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பாக தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு சகோதரி செல்வி ஜெயலலிதா அவர்கட்கு வணக்கம் பல,

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களின் சங்கங்களை உள்ளடக்கிய சம்மேளனமே தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனமாகும். இதன் ஆரம்ப காலத் தலைவர் கேம்பிறிஜ் பல்கலைகழகத்தில் தன் பெயரைப் பதித்த புகழ்பெற்ற விஞ்ஞானி பேராசிரியர் மாமனிதர் எலியேசர் ஆவர்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் வாழ்வா சாவா என்று இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளது. இதன் நீண்ட இரத்தம் தோய்ந்த அதே சமயம் அடிபணிய மறுக்கும் ஒரு தேசத்தின் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை அறிந்த ஒரு புரட்சித் தலைவரின் வழியில் வந்த திராவிட சிசு நீங்கள். அதனால் அவைபற்றி எதுவுமே நாம் கூறத்தேவையில்லை.

அண்மையில் தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் அவலநிலை கண்டு துடிக்கும் எம் உடன்பிறப்புக்களின் எழுச்சியைக் கண்டபோது தாங்க முடியாத வலியில் தவிக்கும் நாம், நாங்கள் யாரும் அற்ற அனாதைகள் அல்ல என ஆறுதல் அடைகின்றோம்.

இதற்கெல்லாம் சிகரமாக இந்திய மத்திய அரசு தமிழின அழிப்புக்கு துணைபோவதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டிய தங்களின் அறிக்கை அமைந்தது.

இதற்காக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து வாழ் ஈழத் தமிழர்களின் அன்பையும் நன்றிகளையும் தங்களுக்கும் அ.தி.மு.க. கட்சிக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்திய மத்திய அரசின் கொள்கைதான் இன்று சிங்கள இனவெறி அரசிற்கு தமிழின அழிப்பிற்கான ஊக்கத்தை அளித்துள்ளது.

பாரம்பரிய கலாசாரத்தையும் உன்னதமான வரலாற்றையும் கொண்ட பாரதத்தின் இன்றைய அரசாங்கம் அன்னிய சக்திகளின் அடிவருடியாக சோரம் போவதன் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்றா என எண்ண வைக்கிறது.

இந்த சமயத்தில் தங்களின் குரல் எமக்கு நம்பிக்கையை அளிக்கின்றது. ஈழத் தமிழர்களின் விடிவிற்கு ஒரே வழி சுதந்திர தமிழீழமே.

இதனை வலியுறுத்த தமிழகத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என உரிமையோடு வேண்டுகின்றோம்.

இவை சம்பந்தமாக தமிழக சட்ட சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்பதே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

இவற்றை செய்திட விரையுங்கள். புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் வாழுங்கள்.

சிற்றம்பலம் இராகவன்

Dr S Ragavan (Raga)

தலைவர் - தென்துருவ தமிழ்ச் சங்க சம்மேளனம்

ஈழத் தமிழர் ஆதரவுக் கோட்டை வெல்லட்டும்!" - ஜெயலலிதாவுக்கு அமெரிக்க தமிழர்கள் வாழ்த்து!

"தெளிவான - உறுதியான - தளம்பலற்ற வார்த்தைகளால் - இலங்கை வாழ் தமிழர்களுக்குத் 'தனி ஈழம்' அமைப்பது தான் சரியான ஒரே தீர்வு என்று தாங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு கண்டு உலகத் தமிழினத்தோடு சேர்ந்து அமெரிக்கத் தமிழர்களும் புளகாங்கிதம் அடைந்து போய் உள்ளோம்" என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் தெரிவித்திருக்கின்றது.

இலங்கை தமிழ்ச் சங்கத்தின் தலைவரால் கையெழுத்திடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

"'தனி ஈழம்' தான் ஒரே தீர்வு என்று வெறுமனே ஒற்றை வரியில் சொல்லி விட்டுப் போகாமல், அந்தத் தீர்வு ஏன் சரியானது என்றும், ஏன் தேவையானது என்றும் ஆணித்தரமான நீண்ட வாதங்களையும் நீங்கள் முன்வைத்திருப்பதானது - ஈழத் தமிழினத்தின் எதிர்காலம் பற்றி உங்களுக்கு இருக்கும் அசைவற்ற தெளிவைக் காட்டுகின்றது.

முன்பொரு காலத்தில் - ஈழத் தமிழர்களது விடுதலைக்காகப் போராடுகின்றோம் என்று கூறிக் கொண்டு பல இயக்கங்கள் தோன்றியிருந்தன. எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக்கொண்டு காலத்தை வீணடிக்காமல் - அவற்றிற்குள் உண்மையான போராளி இயக்கம் எது என்பதைத் தெளிவாகக் கண்டறிந்து, அந்த இயக்கத்தின் நிபந்தனையற்ற காவலனாகத் தனது கடைசி நாள் வரை துணையிருந்து, அந்த இயக்கத்தைத் தனது பிள்ளை போல வளர்த்தெடுத்தார் காவியத் தலைவன் எம்.ஜி.ஆர் அவர்கள். மிகத் தெளிவாக அன்று அவர் எடுத்த அந்த முடிவு எவ்வளவு சரியானது என்பதை வரலாறு எமக்கு நிரூபித்துக் காட்டிவிட்டது.

அந்த மாபெரும் தலைவனின் செயலில் அன்று இருந்த அந்தத் தெளிவு - அவரது மறு வடிவமாக இன்று திகழும் உங்கள் வாத்தைகளில், அதை விடவும் துல்லியமாக இருப்பது கண்டு ஈழத் தமிழினம் மெய்சிலிர்த்துப் போயுள்ளது.

இந்தியாவின் மிகச் சக்தி மிக்க ஓர் அரசியல் தலைவர் நீங்கள். காலமெடுத்து - நிதானமாகச் சிந்தித்து - முடிவெடுத்த பின்பு - பலதும் பேசி விலகிப் போகாமல் - எடுத்த முடிவோடு ஒட்டியே இருப்பவர் என்ற பெருமை உங்களுக்கு உண்டு. இலங்கைத் தமிழ் மக்களுக்கு "தனி ஈழம் தான் ஒரே தீர்வு" என்ற முடிவிலும், "அவர்களுக்கு நான் தனி ஈழம் அமைப்பேன்" என்ற உறுதியிலும் வழுவாது இருந்து - இருளில் இருக்கும் எமது மக்களுக்கு ஒளி காட்டி, அவர்களுக்கு நிரந்தர விடுதலையை நீங்கள் பெற்றுத் தருவீர்கள் என நாம் நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.

நடைபெறுகின்ற இந்திய சட்டமன்றத் தேர்தலில் - ஈழத் தமிழர்களது ஆதரவுக் கோட்டையாகத் திகழும் உங்களது அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி அமோக வெற்றியீட்ட தமிழீழ மக்கள் அனைவருடைய சார்பிலும் அமெரிக்க இலங்கைத் தமிழ் சங்கம் மனமார வாழ்த்துகின்றது."

ஜெயலலிதாவுக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவிப்பு

தனித் தமிழீழம் அமைப்பதுதான் ஈழத் தமிழர்களுக்கான ஒரே அரசியல் தீர்வு என தெரிவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு தனது மகிழ்ச்சியினை தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பாக நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மறைந்த முதல்வர் அமரர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள், தனது வாழ்நாளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உண்மையாக முன்னெடுத்துவரும் போராட்ட அமைப்பையும் அதன் தலைமையையும் அடையாளம் கண்டு தனது முழு ஆதரவினையும் உயர்ந்த பங்களிப்பையும் வழங்கி ஈழத் தமிழ்மக்கள் இழந்த அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்காக தன்னை அர்ப்பணித்தவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்திய பெருமைக்கு உரியவர். மானத்தோடு வாழ்கின்ற உலகத் தமிழ்மக்களின் நெஞ்சங்களில் குடியிருந்த கோயிலாக இன்றும் வாழ்பவர்.

புரட்சித்தலைவர் வழியில் அரசியல் வாரிசாக வந்த நீங்கள், இன்று தெரிவித்திருக்கும் இக்கருத்தானது வார்த்தைகளில் எடுத்துச் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் எமது மக்களிற்கு பெரும் ஆறுதலைக் கொடுத்திருக்கின்றது.

நீங்கள் பற்றிக்கொண்ட இந்த இலட்சியத்தை அடையும் வரை எத்தனை இடர்கள், தடைகள், சதிகள் ஏற்படினும் அத்தனையையும் உடைத்தெறிந்து தனித் தமிழீழம் அமைத்து ஈழத் தமிழ்மக்களின் இன்னல் தீரும் வரை உறுதியாக நின்று செயற்படுவீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களை வாழ்த்துகின்றோம். எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றோம்.

உங்களின் பலமான ஆதரவுக்கரத்தினை இறுகப் பற்றிக்கொள்கின்றோம். நீங்கள் எதிர்வரும் தேர்தலில் வெற்றிவாகை சூடுவதற்கு எங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றிகளும் வாழ்த்துக்களும் உங்களிற்கு உரித்தாகட்டும்!.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் "தனி ஈழ" நிலைப்பாடு: கனடிய தமிழர்கள் மகிழ்வு; வரவேற்பு!

இலங்கைத் தமிழர்களுக்கு நீதியும் சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி தனித் தமிழீழம் அமைப்பதுதான் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்திருப்பதனை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கனடிய தமிழ் அமைப்பு ஒன்று தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை கனடிய தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இலங்கைத் தமிழர்களுக்கு நீதியும் சமவுரிமையும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி தனித் தமிழீழம் அமைப்பதுதான்" என அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா நேற்று முன்நாள் (சனிக்கிழமை) பேசியிருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

அண்மையில் இலங்கை சென்று வந்த வாழும் கலை அமைப்பு அறக்கட்டளையின் நிறுவனர் சிறீ ரவிசங்கர் குருஜி, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளார். அங்கு போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களின் நிலை குறித்து காணொலிக் காட்சிகளை என்னிடம் காண்பித்தார். இந்த காணொலிக் காட்சிகளைப் பார்த்த பிறகுதான் இலங்கைத் தமிழர்கள் அங்கே கைதிகளைப் போல், அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. அக்காட்சிகளைப் பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

தமிழர்களைப் பிச்சைக்காரர்களாக்கி தமிழினத்தை முற்றிலும் அழித்துவிட சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கையில் தமிழினத்தைப் பாதுகாக்கவும் தமிழ் மக்கள் தன்மானத்துடன் வாழவும் தனித் தமிழீழம் அமைக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களின் துன்பங்கள் தீர ஒரே வழி, இலங்கையை இரண்டாகப் பிரித்து தமிழர்களுக்கென தனி ஈழத்தை உருவாக்குவதே.

இலங்கை இனவாத அரசு ஒருபோதும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப் போவதில்லை. அவர்கள் தமிழர்களை அடிமைகளாக நடத்தவே விரும்புகின்றனர்.

ஜேர்மனியில் யூதர்களை அழித்த ஹிட்லர் ஆட்சிதான் நினைவுக்கு வருகிறது. அதுபோன்ற ஆட்சியைத்தான் தற்போது இலங்கையில் ராஜபக்ச நடத்தி வருகிறார். வீடுகளை இழந்து, மாற்றுத்துணிக்கு கூட வழியில்லாமல் அரசு முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர் என்று செல்வி ஜெயலலிதா தெரிவித்திருக்கின்றார்.

அண்மையில் திமுக நடத்திய வேலை நிறுத்தம் காரணமாக இலங்கைக்கு இந்தியாவின் சிறப்புத் தூதுவர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கருணாநிதி பெருமைப்பட்டுக் கொள்கிறார். தூதுவர்கள் இலங்கைக்குச் சென்றதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

இராணுவம் நடத்தும் தாக்குதலில் அங்குள்ள அப்பாவித் தமிழர்கள் நாளும் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். இதனைத் தடுக்க கருணாநிதி எந்தவித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் தனித் தமிழீழம் அமைக்கப்படும்.

ஜெயலலிதா முன்னர் வி.புலிகள் பற்றியும் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியும் தெரிவித்த எதிர்க் கருத்துக்களை வைத்து அவரது மனமாற்றம் தேர்தல் அரசியலை மையமாகக் கொண்டதாகச் சிலர் குறை சொல்லக்கூடும். எங்களைப் பொறுத்தளவில் அப்படி ஒரு உள்நோக்கம் கற்பிப்பது தேவையற்றி திருப்பணி என நினைக்கிறோம்.

கருணாநிதி தனது இயலாமையையும் கையாலாகாத்தன்மையையும் மறைக்க "தமிழ் ஈழம் மலருமானால் மகிழ்ச்சி அடைவேன். இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்குமானால் திமுக மூன்றாவது முறையாகக் கூட பதவி இழக்கத் தயார். உயிரையும் விடத்தயார்" என கீறு விழுந்த தட்டுப்போல் பாடிக் கொண்டே இருக்கிறார்.

அமைச்சர் சிதம்பரம் தனது பங்குக்கு "இலங்கையில் இயல்பு நிலை திரும்பவும் போரை நிறுத்தவும் வலியுறுத்தி வலிமையான கருத்தை நேற்று இந்தியா வைத்துள்ளது. அதில் நல்ல முடிவு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். இன்னும் 24 அல்லது 48 மணி நேரம் வரை என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்" என திருவாய் மலர்ந்துள்ளார்.

மேலும் "இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர். இதை நான் ஒத்துக் கொள்ளவில்லை. இலங்கையில் போரை நிறுத்துவதற்கும் தமிழர்களை பாதுகாப்பதற்கும் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இலங்கை ஒரு தனிநாடு எனவே நாம் அதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றும் சிதம்பரம் பேசியிருக்கிறார். சிதம்பரம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.

சிங்கள இராணுவம் இன்று காலை வான், கடல், தரை வழியாகப் பாதுகாப்பு வலயத்தின் மீது இறுதிப் போரைத் தொடங்கியுள்ளது. வானில் இருந்து குண்டு மழை பொழிகிறது. குறைந்தது ஆண், பெண், குழந்தைகள் எனப் பத்தாயிரம் மக்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என அஞ்சப்படுகின்றது.

யார் எதைச் சொன்னாலும் இந்த நேரம்வரை இந்தியா போர் நிறுத்தம் செய்யுமாறு சிங்கள அரசைக் கேட்கவில்லை. கேட்கவும் முடியாது. காரணம் இந்தியாவே அதிநவீன கதூவீகள், இராணுவ தளவாடங்கள், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், இராணுவ வல்லுநர்களை வழங்கியும் பணமும் கொடுத்து இந்தப் போரை நடத்துகிறது.

எனவே தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு ஏற்பட வேண்டும் என்றால் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி எதிர்வரும் தேர்தலில் முற்றாகத் தோற்கடிக்கப் படவேண்டும்.

தமிழ் உறவுகள், தமிழின உணர்வாளர்கள், திரையுலகக் கலைஞர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், சான்றோர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மீனவர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், உழவர்கள் ஒன்று திரண்டு தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு செம பாடம் படிப்பிக்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றோம்.

Edited by kuddipaiyan26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.