Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீழ்வது விதையாகும் - உருகுவது ஒளியாகும்- இதயச்சந்திரன்

Featured Replies

அக்கினி குஞ்சாக மாறினான் பார்த்தீபன். அதை நல்லூரில் வைத்து போரட்டத்தீ வளர்த்தான். பொந்தில் வைத்தால், காடுகளே வெந்து தணியும். ஆனாலும், இன்னமும் தணியவில்லை அவன் மூட்டிய பெருநெருப்பு.

இந்திய வல்லாதிக்கத்தின் வஞ்சக நகர்விற்கு எதிராக, போராட்ட வடிவத்தை மாற்றிய தியாகி திலீபன், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, உயிர் துறக்கும் வரையான உன்ணாநிலைப் போரினை முன்னேடுத்தான். ரூபாய் நோட்டில் காந்தியை வாழவைக்கு இந்திதேசம், விடுதலைப் புலிகளிள் அறவழிப் போராட்டத்தை கண்டு சினமடைந்தது.எமது போராட்ட வடிவங்கள் மாறினாலும், இந்தியாவின் இலக்கு மட்டும் மாறவில்லை. சொந்த நலனைக் காப்பாற்ற, தமிழ் மக்களின் எத்தகைய போராட்ட வடிவங்களையும், இந்திய வல்லாதிக்கம் ஏற்றுக் கொள்ளாது என்பதற்கு, தியாகி திலீபனின் வீரச்சாவு மிகப் பெரிய சான்றாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

இந்தியாவின் காந்திய முகமூடி கிழித்தெறியப்பட்டது நல்லுரில்தான். அணு ஆயுதம் தாங்கிய காந்திதேசம், இன விடுதலையின் அறவழிப் போராட்டத்தை, குழி தோண்டிப் புதைத்ததும் நல்லுரில்தான். அவனது இறுதிமூச்சு, தாயகக் காற்றில் கரைந்து, இன்னமும் உயிர்ப்புடன் வாழ்வதை, இந்தி தேசம் உணர்வதாகத் தெரியவில்லை. துறைமுகங்களில், அனல் மின் நிலையங்களில், மன்னார் கடற்பரப்பில் பிணைக்க ப்பட்டுள்ள இந்திய நலன்கள், திலீபனின் தியாகத்திற்கு பதில் கூறியே தீரவேண்டும்.

சிங்களத்தின் போலி வாக்குறுதிகளால், காந்தியை மறந்து பாரத தேசம். பன்னிரு வேங்கைகளும் துடித்து மடிந்ததை கை கட்டி வேடிக்கை பார்த்தது. முள்ளிவாய்க்காலிலும், பேரினவாதத்தின் முதுகுதடவல்கள் தொடர்ந்தன. இந்தியாவின் சட்டிலைட் கண்கள், வன்னியை அளந்து, சிங்களத்திடம் உளவு சொன்னது. நீட்டிய நேசக் கரங்களை வெட்டி வீழ்த்தப்பட்ட போதும், சிங்களத்தின் வாக்குறிதிகளால் மயங்கிக் கிடந்து இந்தியா.

இன்னமும் மயங்குகிறது. மயங்கிச் சரியும் போது, சிங்களத் தீவினில் சீனக் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருக்கும்.

அன்று திலீபன் சொன்ன செய்தியை, இன்றுவரை இந்திய அதிகாரவர்க்கம் உணர்ந்து கொள்ளவுமில்லை, உணரப் போவதுமில்லை.அகிம்சைப் போரில் கரும்புலியானவனே தியாகி திலீபன். அவர் வெடித்துச் சிதறவில்லை. உயிர் பூவை உதிர்த்து, மக்கள் மன உணர்வில் பெரும் வெடிப்பதிர்வுகளை உருவாக்கியவன்.சகல சமூக ஒடுக்குமுறைகளையும், பூர்சுவா சிந்தனைகளையும் அறுத்தெறிந்து, மானுட விடுதலையின் ஒரு பரிமாணமான தேசிய இன விடுதலையை வென்றெடுக்கும் ‘மக்கள் புரட்சி’ குறித்தே அவன் பேசினான். ஒரே இன குழுமத்தினுள். சாதீய, மத ஒடுக்குமுறையைக் காவித் திரிந்தவாறு, மக்கள் புரட்சியை நிகழ்த்த முடியாது. ஒடுக்குமுறைகள் பல வடிவங்களில் வியாபித்திருந்தலும், அவையாவும் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல.

ஆகவே மக்களை அணிதிரட்டும் போது, அகநிலை முரண்பாடுகனையும் கருத்தில் கொள்ளல் வேண்டும் அப்போதுதான் திலீபன் தரிசிக்க விரும்பும் மக்கள் புரட்சியின் பூரண வடிவம் முழுமை பெறும். யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல் என்றால், சகல அயுதப் போராட்டங்களும் அரசியல் போராட்டத்தின் வடிவங்களே. அவை கையாளும் அரசியல் கோட்பாடுகளை பொறுத்தே, அவற்றினை ‘மக்கள் யுத்தம்’ என்றும் ‘ஆயுதக் கிளர்ச்சி’ என்றும் பிரித்துப் பார்க்கப்படுகிறது. ஆனாலும் தேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், திலீபனின் மக்கள் புரட்சிக்கான அறைகூவல் உயிர்ப்புடன் இயங்குகிறது.

ஒடுக்குமுறை வடிவங்கள் வியாபித்தவண்ணமுள்ளது. வவுனியா வதைமுகாம், வடக்கு - கிழக்கெங்கும் கிளைபரப்பி விரிகின்றது. இயல்பு வாழ்வினை மீட்டெடுக்கும் போராட்டமா?, அல்லது தீர்வுத் திட்டங்களை அரங்கேற்ற, மேடைகள் தேடும் நகர்வுகளா?

அல்லது இந்திய நலன் எதுவென்று ஆய்வு செய்யும் போக்குகளா?, அல்லது இவை மூன்றும் இணைந்த புதிய தளமா? இவற்றில் தடம் பதிக்க முன், திலீபனின் ‘மக்கள் புரட்சி’ குறித்தும், அதை முன்னெடுக்கும் வழிமுறை பற்றியும் சிந்திக்க வேண்டிய காலமிது.

ஆழ ஊடுருவிய சிங்களத்தின் மாயக்கரங்களால், கேணல் சங்கரும் இந்நாளில் வீழ்த்தப்பட்டார். ஆயுதப் போராட்ட பரிமாணத்தை, வானளாவ உயர்த்திய, உறுதிமிக்க விடுதலைப் போராளி அவர். வீழ்ந்த சங்கரும் விதையானார். உயிரை உருக்கிய திலீபனும் ஒளியானான். அர்ப்பணிப்புக்கள் வீண்போகாது. வீழ்த்தப்பட்ட விதைகள் மறுபடியும் முளைக்கும். அதேவேளை, சிங்களத்துடன் இந்தியா செய்துகொண்ட உடன்படிக்கையே, தமிழ் மக்களிற்கான தற்காலிகத் தீர்வினைக் கொண்டுவருமென்கிற வகையில், பழைய விதைகளும் விதைக்கப்படுகின்றன.

அதாவது, இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாக்கிய, தற்காலிக வட-கிழக்கு இணைப்பு மாகாண சபையானது, சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்தி விடுமாம்.

ஆகவே, இந்தியா இல்லாமல், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்க்க முடியாதென்பதால், சிறீலங்காவின் இறையாண்மை பாதிக்காதவாறு, இந்தியா வரைந்த மாகாண சபையை ஏற்று, குடியேற்றங்களைத் தடுக்க வேண்டுமாம். வேடிக்கையான விவகாரமிது. இந்தியப்படை சூழ, திருமலையில் நடைபெற்ற மாகாண சபை விவாதங்களில், காணி உரிமைக்கும், காவல்துறை நிர்மாணிப்பிற்கும், சுயாதீன நிதிக் கையாள்கைக்கும், முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் சிங்கள ஆட்சியாளர்களுடன் நிகழ்த்திய சூடான விவாதங்களையும், மோதல்களையும் பலர் மறந்து விட்டார்கள்.

மாகாண சபைக்கு, உரிமைகளை வழங்க மறுத்த சிங்களத்துடன் விடாக்கண்டன் போக்கினால், ஈழப் பிரகடனம் செய்ய வேண்டிய நிலைக்கு வரதராஜப்பெருமாள் தள்ளப்பட்டார். இவை தவிர, நிகழ்கால அனுபவங்களைப் பார்த்தால், பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கும் இந்த உரிமைகளை வழங்க சிங்களம் மறுக்கின்றது. ஆயுதக்குழுத் தலைவர் முதலமைச்சர் பிள்ளையான், அரசோடு இணைந்திருந்தும் இவ்வுரிமைகளைப் பெறமுடியவில்லை.

ஆகவே சில தமிழக தலைவர்கள் உட்பட, எல்லோரிற்கும், கனவு காணும் உரிமையுண்டு.

ஆனால் வரலாற்றில் பதிவான நிஜங்கள் மறுதலித்தவாறு, மீண்டும் ஒரு விசப் பரீட்சையில் குதிக்கும்படி அறிவுரை வழங்குவது, இக்காலகட்டத்தில் பொருத்தப்பாடான விடயமாகத் தோன்றவில்லை.13வது திருத்தச் சட்டத்திலும், அரச பிரதிநிதியான கவர்னரை (அதிபர்) மீறி காணி, நிதி விவகாரங்களைக் கையாளும் பூரண சுதந்திரத்தினை தமிழர்கள் அனுபவிக்க முடியாது. ஆனாலும் சிங்களம் வழங்க விரும்புவது கிராமசபை அல்லது அதற்கு ஒருபடி மேலுள்ள பிரதேச சபை மட்டுமே.மாகாண சபையில் பங்கெடுத்தாலும், சிங்களக் குடியேற்றங்களை நிறுத்த முடியாது. அதற்கு எதிராக இந்தியா அழுத்தம் கொடுக்க முனைந்தால், சில இந்தியக் கொம்பனிகளுக்குஅனல் மின் நிலையம் அமைக்க, தமிழர் நிலங்கனைள பகிந்தளிர்த்து, அவர்களின் வாயையும் அடைத்துவிடும் சிங்களம். அவைதான் இப்போது நடைபெறுகிறது. வன்னி நிலங்களை விவசாய ஆராட்சிக்கு வழங்கினால். இந்திய ஆளும் வர்க்கம் எம்மை திரும்பிக் கூடப் பார்க்காது.

இந்தியா அதிகம் வெருட்டினால், இருக்கவே இருக்கிறது பலம்மிக்க சீன தேசம். ஆகவே இந்திய பாதுகாப்பிற்காகவும், பொருளாதார நலனிற்காகவும் இன்னமும் பல விட்டுக் கொடுப்புக்களை செய்யுமாறு சிலர் வலியுறுத்துகிறார்கள். திலீபனை இழந்தது போதும். இத்தனை இலட்சம் மக்களையும் இழந்தது போதும். பரஸ்பர நலன் என்பது ஒருவழிப் பாதையல்ல என்பது இந்திய மத்திய அரசுக்கு, தமிழ்நாடுதான் எடுத்துக் காட்ட வேண்டும்.

சிங்களக் குடியேற்றத்தை விட, இந்தியா அபகரிக்கும், அபகரிக்க போகும் தமிழர் நிலங்களும், கடற் பிரதேசங்களும் அதிகமென்பதை இவர்கள் உணர்வார்களா? சீனா உள்நுழையாமல் இருப்பதற்கு, இன்னமும் பல விட்டுக் கொடுப்புக்கள் செய்யும்படி இந்தியா எதிர்பார்கின்றதா?

இழந்தது போதும்.

மாகாண சபைக்கு, உரிமைகளை வழங்க மறுத்த சிங்களத்துடன் விடாக்கண்டன் போக்கினால், ஈழப் பிரகடனம் செய்ய வேண்டிய நிலைக்கு வரதராஜப்பெருமாள் தள்ளப்பட்டார். இவை தவிர, நிகழ்கால அனுபவங்களைப் பார்த்தால், பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கும் இந்த உரிமைகளை வழங்க சிங்களம் மறுக்கின்றது. ஆயுதக்குழுத் தலைவர் முதலமைச்சர் பிள்ளையான், அரசோடு இணைந்திருந்தும் இவ்வுரிமைகளைப் பெறமுடியவில்லை.

வரதராஜபெருமாள் வாழ்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாகாண சபைக்கு, உரிமைகளை வழங்க மறுத்த சிங்களத்துடன் விடாக்கண்டன் போக்கினால், ஈழப் பிரகடனம் செய்ய வேண்டிய நிலைக்கு வரதராஜப்பெருமாள் தள்ளப்பட்டார்.

தேசியத்தலைவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தோட நிண்ட காலமெல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தோட நிண்ட காலமெல்லோ?

உங்களுடன் கூட்டுச் சேர்ந்து இயங்கிய காலம் என்று சொன்னால் பொருத்தமாகவும் இருக்கும், உங்களுக்குப் பெருமையாகவும் இருக்கும்.

  • தொடங்கியவர்

தேசியத்தலைவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தோட நிண்ட காலமெல்லோ?

இந்தியனை வெளியேற்ற பிரேமதாசா உதவியதுதான் உண்மை. யப்பானுடன் போராட சியாங்கை செக்குடன் மாவோ கூட்டுச்செரவில்லையா? மதி அண்ணே , கருணாவின் தேனீயில் வேகன்சி இருக்குதாம். தேசம் நெட்டிலும் இருக்குதாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியனை வெளியேற்ற பிரேமதாசா உதவியதுதான் உண்மை. யப்பானுடன் போராட சியாங்கை செக்குடன் மாவோ கூட்டுச்செரவில்லையா? மதி அண்ணே , கருணாவின் தேனீயில் வேகன்சி இருக்குதாம். தேசம் நெட்டிலும் இருக்குதாம்

ஓ........ இந்தியனை வெளியேற்ற பிரேமதாசாவோட கூட்டு சேர்ந்தோமா?

அப்ப ஏன் முள்ளிவாய்காலில போய் நிண்டுகொண்டு (துரோகிப்பட்டம்கட்டின)

அம்மாவிக்குப் போடுங்கோ,

அம்மா வெல்லுவா,

இந்தியா வரும்,

போரை நிப்பாட்டும்,

எங்கள காப்பாத்தும்,

தமிழீழம் தரும்

எண்டெல்லாம் பிரச்சாரம் செய்தோம்? :)

Edited by Mathivathanang

ஓ........ இந்தியனை வெளியேற்ற பிரேமதாசாவோட கூட்டு சேர்ந்தோமா?

அப்ப ஏன் முள்ளிவாய்காலில போய் நிண்டுகொண்டு (துரோகிப்பட்டம்கட்டின)

அம்மாவிக்குப் போடுங்கோ,

அம்மா வெல்லுவா,

இந்தியா வரும்,

போரை நிப்பாட்டும்,

எங்கள காப்பாத்தும்,

தமிழீழம் தரும்

எண்டெல்லாம் பிரச்சாரம் செய்தோம்? :lol:

உங்களப் போல காக்கை வன்னியன் வம்சாவளியை இனம் காணத்தானுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.