Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆடை ஏற்றுமதி வரிச்சலுகையும் அரசாங்கத்தின் சுய கௌரவமும் – இதயச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடை ஏற்றுமதி வரிச்சலுகையும் அரசாங்கத்தின் சுய கௌரவமும் – இதயச்சந்திரன்

வவுனியா முகாம்களுக்குள் 3 இலட்சம் தமிழ் மக்களை முடக்கி வன்னியில் 30 சத வீதமான சிங்கள மக்களை குடியேற்ற அரசாங்கம் திட்டமிடுவதாக யாழ். மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

தமிழர்கள் தனித்து வாழக் கூடிய சூழ்நிலை உருவாகாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் சிந்தனையிலேயே அரசாங்கம் செயற்படுகிறதெனவும் இதன் மூலம் எதிர்காலத்தில் தமிழர் தாயகக் கோட்பாடு எழாமல் போகலாமென்று அரசாங்கம் எண்ணுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

5 மாதங்களாகியும் இம்மக்கள் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் பின்னணியை மிகத் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

“”கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றுவதற்கு அனைத்து லக அமைப்புகள் அரசைக் கேட்ட போதிலும் அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை.

அதேவேளை 150 ஏக்கர் நிலத்தில் பாரிய படைத் தளமொன்று கிளிநொச்சியில் நிறுவப்படுகிறது. ஆனாலும் 40 ஆயிரம் மக்கள் மீள் குடியேற்றப்பட்டதாக அரசு சொல்கிறது. இதன் பின்புலத்தில் ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகையைப் பெறுவது என்கிற நோக்கம் மறைந்திருக்கிறது” என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கின்றார்.

அரசு தற்போது எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை, இந்த ஜீ.எஸ்.பீ. பிளஸ் விவகாரமென்பது, வெளிப்படையாகத் தெரிகிறது. கொழும்புக் கடற் பரப்பில் இந்தியக் கடற்படையோடு இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டால் வாக்கு வங்கி நிரம்பக் கூடிய சாத்தியப்பாடுகள் உண்டு.

போர் வெற்றியை தேர்தல்வரை தொடர்ந்து தக்க வைக்க கடற் சாகசங்களும் கண்காட்சிகளும் அரசிற்குத் தேவை.

ஆனாலும் பொருளாதார ஸ்திர நிலைமை ஆட்டங் காணுமானால் கண்காட்சிகள் வழங்கும் மாயத் திரைகள் விலகத் தொடங்கிவிடும்.

ஏற்கனவே தவணை முறையில் நிதி வழங்கும் சர்வதேச நாணய சபை (ஐMஊ) கொழும்பில் காரியாலயத்தை திறந்து கணக்குப் பார்க்கத் தொடங்கி விட்டது.

வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் கணக்கு வாக்கெடுப்பு என் கிற புதிய பாதையை தேர்ந்தெடுத்து, சர்வதேச நாணய சபையையும் மக்களையும் இலகுவில் ஏமாற்றலாமென்று அரசு காய்களை நகர்த்துகிறது.

நிதிப் பற்றாக்குறையை 5 சத வீதமாக்க வேண்டுமென நாணயச் சபை விடுத்த நிபந்த னையை அரசால் நடைமுறைப்படுத்த முடி யாது. ஆனாலும் இவ்வருட இறுதியில் இது 9 சத வீதமாக அதிகரிக்குமென்று பொருளியல் நிபுணர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றார்கள்.

இந்நிலையில் வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் முன் வைத்தால் அதன் குறை நிரப்பு வீதம் என்னவாக இருக்குமென்பது அம்பலமாகும். அந்தக் கணக்கு, சர்வதேச நாணய சபைக்கு, மகிழ்ச்சி தரக்கூடிய விடயமாக நிச்சயம் இருக்காது.

அரசாங்கம் மீதான வாய்வழி விமர்சனங்களை முன்வைத்தாலும் பன்னாட்டு நிதிச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கவே உலக வங்கி, நாணயசபை போன்ற கடன் வழங்கும் நிறுவனங்கள், இலங்கை போன்ற மிகச் சிறிய நாடுகளுக்கு திட்டியபடியாவது கடனுதவி செய்கின்றன.

அத்தோடு பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன்களை, திருப்பிச் செலுத்துவதற்கும் இச் சபைகள் நிதியுதவி செய்கின்றன.

ஜீ 20 கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரஷ்யாவும் உலக வங்கியிடமிருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளது.

ஐரோப்பாவிற்கு எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் ரஷ்யாவிற்கே இந்தக் கதியென்றால் ஆடையிலும் தேயிலையிலும் அந்நியச் செலõ வணியை எதிர்பார்க்கும் இலங்கையின் நிலை குறித்து அதிக விளக்கங்கள் தேவையில்லை.

சுனாமி அனர்த்தத்தின்பின் 2005 ஆம்

ஆண்டு ஆடை ஏற்றுமதிக்கான வரிச் சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது.

ஆனால், அதை வழங்குவதற்கு பற்பல நிபந்தனைகள், ஏற்றுமதி வரியை முற்றாக நீக்குவதால், மேற்குலக நாடுகள் பாதிப்படைகின்றன என தவறாக எடை போடக்கூடாது. இது பிச்øசயும் அல்ல.

இலங்கையில் இயங்கும் இந்த ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் யாவும் அனேகமாக மேற்குலகின் தனியார் வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒப்பீட்டளவில் சிறிய முதலீட்டோடு குறைவõன கூலியில் உழைப்புச் சுரண்டல் பிரயோகிக்கப்பட்டு பன்மடங்கு விலையில் இத் தைத்த ஆøடகள் ஐரோப்பாவில் விற்பனையாகின்றன.

முதலீடு செய்யும் ஐரோப்பிய கம்பனிகளுக்கு இலாபம்தான் அதிகமாகிறது. வரிச் சலுகையால் இழந்ததை விட, விற்பனை வரி மூலம் அதிக பணத்தை ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் பெற்றுக் கொள்கின்றன.

ஆனாலும் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், தமது ஊதிய உயர்விற்காக இன்னமும போராடிக் கொண்டுதõனிருக்கிறார்கள்.21 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையின் மொத்த தேசிய வருமானம் (எஈக) 42 பில்லியன் அமெரிக்க டொலர்களென மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 2008 ஆம் ஆண்டிற்கான ஆடை ஏற்றுமதியில் 3.3 பில்லியன் டொலர்கள் ஈட்டப்படுகின்றன. ஏறத்தாழ மொத்த தேசிய வருமானத்தில் 10 சதவீதமிது.

270 தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்களுமாக ஒரு மில்லியன் மக்கள் இத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இத் தொழிற்றுறையானது நாட்டின் இரண்டாவது பெரிய அந்நியச் செலவாணியை ஈட்டும் சக்தியாகும்.

சர்வதேச அளவில் இதன் பாரிய சந்தைகளாக ஐரோப்பிய ஒன்றியத்தையும் அமெரிக்காவையும் குறிப்பிடலாம். 1.6 பில்லியன் டொலர்களைப் பெற்றுத் தரும் ஐரோப்பிய ஒன்றியம், மொத்த வருமானத்தில் 48 சத வீதத்தையும் 1.5 பில்லியனை வழங்கும் அமெரிக்கா 45 சத வீதத்தையும் உள்ளடக்குகிறது.

இலங்கையில் 2002 இல் ஸ்தாபிக்கப்பட்ட “ஜாப்’ எனப்படும் பேரவை (ஒணிடிணt அணீணீச்ணூஞுடூ அண்ண்ணிஞிடிச்tடிணிண ஊணிணூதட்) 2010 ஆம் ஆண்டிற்கான தைத்த ஆடை ஏற்றுமதியால் பெறப்படும் வருமானம் 5 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டுமென எதிர்வு கூறியுள்ளது.

இத் தொகையைப் பெறுவதற்கு பன்னாட்டுக் கம்பனிகளான, விக்டோரியாஸ் சீக்ரட் (ஙடிஞிtணிணூடிச்’ண் குஞுஞிணூஞுt), கப் (எச்ணீ), மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் (Mச்ணூடுண் குணீஞுணஞிஞுணூ), நைக் (Nடிடுஞு), ரொமி ஹில்பிகர் (கூணிட்ட்தூ ஏடிடூஞூடிஞ்ஞுணூ), ரையம்ப் (கூணூடிதட்ணீட), ஆன் ரெயிலர் (அணண கூச்தூடூணிணூ) போன்றவை தொடர்ந்தும் ஆதரவளிக்குமென்று “ஜாப்’ (ஒச்ச்ஞூ) பேரவை நம்புகிறது.

அதேவேளை இதில் “”ரைஸ்டார் ஆடை ஏற்றுமதி நிறுவனம்” (கூணூடிண்tச்ணூ அணீணீச்ணூஞுடூ உதுணீணிணூt) எனும் நிறுவனமும் இப்பன்னாட்டு கம்பனிகளோடு போட்டி போடுவதை அவதானிக்கலாம்.

இதன் நிறுவனர் குமார் தேவபுர, சிறுவர்களுக்கான அரை மில்லியன் ஆடைகளை, பிரித்தõனியாவிலுள்ள “டெபனம்ஸ்’ (ஈஞுஞஞுணடச்ட்ண்) நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான முதல் கேள்விப் பத்திரமொன்றைப் பெற்றுள்ளார்.

இந் நிறுவனமானது 50,000 சதுர அடி நிலப் பரப்பில் பாரிய தொழிற்சாலை ஒன்றினை திருமலையில் நிறுவிட 50 மில்லியன் ரூபாக்களை, அரச முதலீட்டுச் சபை மற்றும் (ஆணிச்ணூஞீ ணிஞூ ஐணதிஞுண்tட்ஞுணt) “”முதலீட்டு ஊக்குவிப்பு முகவர்” அமைப்பு (ஐணதிஞுண்tட்ஞுணt கணூணிட்ணிtடிணிண அஞ்ஞுணஞிதூ)

களிடமிருந்து ஏற்கனவே பெற்றுள்ளது.

அதற்கான நிலம், அரசால் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இத் தொழிற்சாலை நிர்மாணிப்பிற்கான மொத்தச் செலவு 75 மில்லியன் ரூபாக்களாகும். இதற்கான இயந்திர உபகரணங்களுக்கு மட்டும் ஏறத்தாழ 100 மில்லியன் ரூபாக்களை இந் நிறுவனம் செலவிட்டுள்ளது.

இவை தவிர அண்மைக் காலமாக பன்னாட்டு கம்பனிகள் செலுத்திவரும் முதலீட்டு ஆதிக்க நகர்வுகளையும் அவதானிக்க வேண்டும்.

“”மாஸ் ஹோல்டிங்” (Mச்ண் ஏணிடூஞீடிணஞ்) என்கிற பல்தேசிய நிறுவனம் “நைக்’ (Nடிடுஞு) எனப்படும் நிறுவனத்தோடு இணைந்து ஆடை உற்பத்தியில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்துவதற்கான பயிற்சி நிலையங்களை துல்கிரியவில் அமைக்க திட்டமிடுகிறது.

காலணி தயாரிப்பில் புதுமைகளைச் செய்ய வியட்னாமில் பயிற்சி நிலையமொன்றை இக்கூட்டணியினர் நிறுவி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

அதேவேளை அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களைக் கொண்ட பன்னாட்டுக் கம்பனியான “”பேர்ஸ்ராவ் ஹோல்டிங்” (கஞுணூண்tச்ஞூஞூ ஏணிடூஞீடிணஞ்) உள்நாட்டு முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து, “ஏற்றுமதி வர்த்தக இல்லம்’ (உதுணீணிணூt கூணூச்ஞீடிணஞ் ஏணிதண்ஞு) ஒன்றினை நிறுவப் போகிறது.

அதற்கான கூட்டு முதலீட்டில் ஈடுபடும் 5 இலங்கைக் கம்பனிகளுக்கு 11.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இலங்கை முதலீட்டுச் சபை இணங்கியுள்ளது.

ஆரம்ப கட்டமாக 215,000 டொலர்களை முதலீடாகப் போடும் இக் கம்பனிகள் மின் உபகரணங்கள் மற்றும் ஆடை உற்பத்திகளை சர்வதேச சந்தையில் விற்கத் திட்டமிட்டுள்ளன.

இவை தவிர ஜேர்மனி, ஹொங்கொங் முதலீட்டாளர்கள் நடத்தும் ஜே.சீ.ஆர். (ஒ.இ.கீ.) நிறுவனத்தோடு, இலங்கை முதலீட்டுச் சபை, ஒப்பந்தமொன்றில் அண்மையில் கைச்சாத்திட்டிருந்தது.

265,000 அமெரிக்க டொலர் முதலீட்டில் தமது உற்பத்தியை ஆரம்பிக்கும் இந் நிறுவனம் தைத்த ஆடைகளை மத்திய ஐரோப்பா, சுவிற்சர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

“”ஜே.சி.ஆர். காமண்ட்” பணிப்பாளர் ஜோகனாஸ் ஹில், இம் முதலீடு குறித்து தெரிவிக்கும் செய்தி தான் மிக முக்கியமானது.

அதாவது சர்வதேச சந்தைகளை நோக்கி இலகுவாக நகர்வதற்கு ஸ்ரீ லங்காவின் கேந்திர முக்கியத்துவம்மிக்க மையத் தரிப்பிடம், சாதகமாக இருப்பதாக அவர் கூறுகின்றார்.

கடந்த வருட ஏற்றுமதி வருமான புள்ளி விபரங்களின் அடிப்படையில் 8.1 பில்லியன் மொத்த வருமானத்தில் தீர்வையற்ற 7200 உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி வருமானமானது 36 சதவீதமாக இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

இவ்வரிச்சலுகையை இழந்தால் இதே தொழில் துறையில் போட்டியிடும் சீனா, இந்தியா, வியட்நாமுடன் மோத வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்படும்.

ஆடை உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய விரும்பும் சீனாவும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நிறுத்தப்பட்டால் இலங்கையின் பக்கம் தனது பார்வையைத் திருப்பாது.

நாட்டின் சுய கௌரவம், இறைமை பற்றி, சர்வதேச வர்த்தக மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக்கான அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பேசுகின்றார். பில் கிளின்டன் மொனிகா லிவி ன்ஸ்கி விவகாரத்தை நினைவூட்டி, அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டனுடன் மோதுகின்றார் பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க.

தனி மனிதர் மீதான தாக்குதல்கள், சர்வதேச இராஜதந்திர நகர்வுகளில் பாரிய சிக்கல்களையே தோற்றுவிக்கும்.

அச்சுறுத்தி அடி பணிய வைக்கும் இராஜதந்திரங்கள், யானை தன் தலைமீது மண் அள்ளி வீசிய கதையாகவே முடியும்.

ஆகவே வவுனியா “மெனிக்பாம்’ முகாமிற்கு விஜயம் செய்த பிரித்தானிய சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மைக் பொஸ்டர் வெளிப் டுத்திய கருத்துக்களை, ஐரோப்பிய ஒன்றியம் கருத்தில் கொள்ளுமாöவன்பதை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் தெரிந்து கொள் ளலாம்.

பருவ மழை ஆரம்பிக்கும் முன்பாக முகாம் மக்கள் வெளி÷யற்றப்பட வேண்டுமென வலியுறுத்தும் அமைச்சர், டிசம்பர் மாதம்வரை அதற்கான காலக் கெடுவினையும் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்.

சுய கௌரவச் சிக்கலில் வீழ்ந்துள்ள அரசாங்கம், இக் கூற்றின் கனதியைப் புரிந்து கொள்ளுமாவென்று தெரியவில்லை.தெளிவினைத் தொலைத்து விட்டு தீர்வி னைத் தேட முடியாது.

நன்றி – வீரகேசரி வார வெளியீடு

http://www.meenagam.org/?p=13123

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஆடை ஏற்றுமதி வரிச்சலுகையும் அரசாங்கத்தின் சுய கௌரவமும்" - இதயச்சந்திரன்

அவங்களுக்கு மாத்திரமே!

எங்களுக்கு சுய கௌரவம் இல்லயே

இல்லாட்டில் இந்தத்தலைப்பு இங்க ஏன் வருது?

:icon_mrgreen:

Edited by Mathivathanang

அவங்களுக்கு மாத்திரமே!

எங்களுக்கு சுய கௌரவம் இல்லயே

இல்லாட்டில் இந்தத்தலைப்பு இங்க ஏன் வருது?

:icon_mrgreen:

என்ன் சொல்ல வாரயல் உங்களுக்கு என்ன களண்டிடோ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.