Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை பேராசிரியர் கா.சிவதம்பி புறக்கணிக்க வேண்டும் ‐ சிவதம்பிக்கு ஒரு உலகத் தமிழனின் கடிதம். நிட்சயமாகக் கலந்து கொள்ள மாட்டேன் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு உடன் பதிலளித்துள்ளார் பேராசிரியர்

Featured Replies

அன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு,

முதுமை காரணமாக ஏற்படும் உடல் சோர்வோடு இலங்கையில் நீங்கள் வசித்து வருவதாக அறிந்தேன். மகிழ்ச்சி எல்லாம் இல்லை. ஆனால் மனித வளத்தை இழந்து விட்ட ஈழத் தமிழினத்திற்கு ஆக்க பூர்வமான உங்கள் பணிகள் எமது எதிர்காலக் குழந்தைகளுக்குத் தேவை. ஆமாம் அறிவாயுத்தத்தை எமது அடுத்த சந்ததி ஏந்த வேண்டும் என்ற அலாதி ப்ரியத்தோடு எங்களுக்கான வழிகாட்டியாக திகழ வேண்டிய உங்களுக்கு இம்மடல் எழுத நேர்ந்த சூழல் துரதிருஷ்டவசமானது.

வருகிற ஜூன் மாதம் தமிழகத்தின் கோவையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கத் தலைவராக நீங்கள் கலந்து கொள்ளப் போவதாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கும் சூழலிலேயே இக்கடிதத்தை எழுத நேர்ந்தது.

எனது மனதுக்குப் பட்டத்தை ஒளிவு மறைவில்லாமல் சரி என்று பட்டால் பெரியவரான் நீங்கள் இக்கடிதத்தை பரிசீலிப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லை இதை ஒரு பொருட்டாக நீங்கள் நினைக்கவில்லை என்றால் தாரளமாக நீங்கள் ஈழ மக்களின் பிரநிதியாக உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்குச் சென்று வரலாம். நான் உங்களுக்கு எழுத நினைத்ததை எழுதி விடுகிறேன்.

ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு. மூன்று லட்சம் வன்னி மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு போர்க் கைதிகளாக சித்திரவதை செய்யப்படுகிறார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக வன்னி மக்கள் மீது பேரினவாத இலங்கை அரசு ஈவிரக்கமற்ற முறையில் முன்னெடுத்த போரும் அதன் விளைவாக நடந்து முடிந்த மாபெரும் மனிதப் பேரவலமும், முகாம்களில் நடந்த எண்ணிலடங்கா கொலைகளும், பாலியல் வன்முறைகளும், காணாமல் போதலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் ம்ககளை பெரும் அச்சத்திலும், ஆழ்ந்த கவலையிலும் ஆழ்த்தியிருக்கிறது.

கடந்த முப்பதாண்டுகாலமாக ஆயுதப் போராட்டத்தை ஏக போக உரிமையோடு தங்கள் கையில் எடுத்துக் கொண்ட விடுதலைப் புலிகளின் தீர்க்கதரிசனமற்ற அணுகுமுறையும் இந்தப் பேரவலங்களுக்கு ஒரு காரணம் என்பதில் நமக்கோ, ஜனநாயகத்தை நேசிக்கும் சக்திகளுக்கோ மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் ஆயுதப் போராட்டமே எமது மக்களுக்கு விடிவு தரும் என்று நம்பி புலிகள் அமைபில் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குடும்பங்களோடு இறுதிப் போரின் போது ஈவிரக்கமற்ற முறையில் பேரினவாத பாசிச இலங்கை அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் புலிகளின் போராட்டம் மீதும், அவர்களின் ஜனநாயகப் படுகொலை மீதும் விமர்சனம் வைக்கும் பலரும், இலங்கை அரச பயங்கரவாதிகளோடு சேர்ந்தியங்கும் சூழல் இன்று புலம்பெயர் நாடுகளில் நடந்து வருகிற நிலையில், புலிகளை விமர்சிக்கும் பலரும் இலங்கை அரசு குறித்து மௌனம் சாதிக்கிறார்கள்.

இதை எல்லாம் நீங்கள் கவனிக்காமல் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். போருக்குப் பின்னர் இலங்கையில் தமிழர்களின் பாரம்பரீய தாயகப் பிரதேசங்களை பூகோள ரீதியாக மாற்றியமைக்கும் பணியினை இலங்கை அரசு முழு வீச்சுடன் செய்து வருகிறது.

வடக்கு, கிழக்கின் எல்லையோர கிராமங்கள் நகரங்களோடு இணைக்கப்பட்டு அங்கு பெருமளவிலான சிங்களக் குடியேற்றங்களை நிறுவி, அதனுள் இராணுவ முகாம்களை அமைத்து அதற்கு மத்தியில் தமிழ் மக்களை குடியேற்றவும்., ஒரு இடத்திலுள்ள மக்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு தொடர்பில்லாத இன்னொரு இடத்தில் குடியமர்த்துவதும், வேரோடு பிடுங்கி புதிய நிலங்களில் அவர்களை தள்ளுவதும் இலங்கையில் நடந்து வருவதாகத் தெரிகிறது.

முகாம்களில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் உண்மையான எண்ணிக்கையை இதுவரை வெளியிடாத இலங்கை அரசு மிக மோசமான படுகொலைகளை முகாம்களுக்குள் இன்று வரை நடத்திவருவதாகத் தெரிகிறது. கேட்க நாதியற்ற ஒரு கூட்டமாக ஈழத் தமிழர்கள் இன்று நிர்கதியாய் விடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் தமிழகத்தைச் சார்ந்த திமுக, காங்கிரஸ் ஆதரவு எம்பிக்கள் குழு ஒன்று முகாம்களை பார்வையிட்டு முகாம்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளதாக இலங்கை அரசே அறிவித்திருக்கிறது.

கொடூரமான போர் நடந்து கொண்டிருந்த மே மாதத்தில் உண்ணாவிரத நாடகம் ஒன்றை நடத்திய கருணாநிதி போர் முடிவுக்கு வந்து விட்டதாக உண்ணாவிரத்திலிருந்து மூன்று மணி நேரத்தில் எழுந்து சென்றதும் அதையொட்டி போர் நடப்பதாக எந்த ஒரு இடத்திலும் கருணாநிதியும் அவரது ஆதரவு ஊடகங்களும் பேசாமால் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டிருந்ததும். நாம் வரலாற்றில் காண்ட மாபெரும் துரோங்களாகும்.

போருக்குப் பின்னர் கூட மக்கள் படுகொலை குறித்தோ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனைகள் குறித்தோ, கருணாநிதி வாயே திறந்ததில்லை.

இனப்படுகொலை ஆவணம் ஒன்று வெளியானபோது கூட அது குறித்து சந்தேகத்தை வெளியிட்டவர் கருணாநிதி. ஈழத் தமிழர் மீதான போரின் வேதனை உலகத் தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாக வலித்துக் கொண்டிருந்த காலத்தில், புலிகளின் சகோதரப்படுகொலை குறித்து மீண்டும் மீண்டும் பேசிய கருணாநிதி இலங்கை அரசின் படுகொலைகள் குறித்து இன்றுவரை வாயே திறக்கவில்லை.

நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கேள்விகளற்ற முறையில் கொல்லப்பட்ட மே மாதத்தில் டில்லிக்குச் சென்று இந்திய மத்திய அரசிடம் பதவி பெறுவதிலேயே குறியாக இருந்த கருணாநிதி ஒரு முறைகூட ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசை நேரடியாக அணுகியதில்லை.

ஈழத் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக கிண்டலும் கேலியுமாக மத்திய அரசுக்கு கடிதங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார். இப்படி ஏராளமான மனவருத்தங்கள் கருணாநிதி மீது நமக்கு உண்டு.

சமீபத்தில் இலங்கைக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணமாக சென்ற எம்பிக்கள் குழு சென்று வந்த பின்பு முகாம்களுக்குள் உள்ள மக்களை இலங்கை அரசு இருபத்தைந்தாயிரம் ரூபாய் கையில் கொடுத்து அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வருவதாக முழுமையான பொய்யை சொல்லியிருக்கிறார்.

உலக நாடுகள் இலங்கை மீதான இனப்படுகொலைக்கு விசாரணை வேண்டும் என்று குரல் கொடுக்கத் துவங்கியிருக்கும் நிலையில் கருணாநிதியோ போரின் போதும் சரி, போர் முடிந்த பிறகும் சரி பேரினவாத இலங்கை அரசை பாதுகாக்கிறார்.

அதற்காக எத்தகைய பொய்களையும் கூசாமல் தனது ஆதரவு ஊடகங்கள் மூலம் பரப்பி வருகிறார். உலகத் தமிழர்களின் தலைவ்ர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் கருணாநிதி மீது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கடும் வெறுப்புற்றனர்.

இந்த வெறுப்பை மறைக்கவும் உலகத் தமிழர்களின் நன் மதிப்பு தனக்கு மட்டுமே உண்டு என்பதை நிரூபிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டத்தில் இன்று கருணாநிதி வந்து சேர்ந்திருக்கிறார். அதனுடைய வெளிப்பாடுதான் உலகத் தமிழ் மாநாடு.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இம்மாநாட்டிற்கு முறையான அனுமதி கூட வழங்காத நிலையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற ஒன்றை தனது விருப்பத்திற்கு அறிவித்திருக்கிறார். இவருடைய விருப்பத்தை அனைத்து தரப்பினரும் ஏற்று நடக்க வேண்டும் என்றும் நிர்பந்திக்கிறார்.

தமிழகத்தில், வைரமுத்து, குழந்தைசாமி, மு.மேத்தா, அப்துல்ரகுமான், தமிழண்ணல், நன்னன், பொற்கோ போன்ற தனது தமிழறிஞர் விசுவாசிகளைக் கொண்டு நடத்தப்படும் இம்மாநாடு தமிழகத்தில் உள்ள தமிழர்களாலும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களாலும் வெறுக்கப்படுகிறது. காரணம் ஈழப் படுகொலைகள். தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது தமிழை மட்டும் வாழவைக்கப் போவதாக கருணாநிதி சொல்வது மிகவும் அபத்தமானது.

தவிரவும் தமிழ் மொழி பேசும் மக்கள் இலங்கையில் படுகொலையான போது அதற்கு உதவாத கருணாநிதி, அவர்கள் பேசும் மொழிக்கு மட்டும் உதவுவது இழவு வீட்டில் கொளுத்தப்படும் வாண வேடிக்கை போன்றது.

இந்த மாநாடு இப்போது அவசியம் இல்லை. அரசியல் ரீதியாக தன்னை புனரமைப்பு செய்து சிவில் உரிமைகளை வென்றெடுத்து இயல்பாக தமிழ் மக்கள் வாழ முடியாத மன வேதனையில் ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் இருக்கிறார்கள். போர்க்குற்றவாளிகளாக இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸ, சரத்பொன்சேகா, பசில், கோத்தபய, போன்றோரை கூண்டிலேற்றும் வரை இந்த மன வேதனை தொடரும் என்னும் நிலையில், இது குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் உலகத் தமிழர்கள் சகஜமாக தன்னை வாழ்த்திக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே இம்மாநட்டை கருணாநிதி நடத்துகிறார்.

இம்மாநாட்டில் ஆய்வரங்கக் குழுவுக்கு ஈழத்து அறிஞரும் உலகத் தமிழர்களின் நன் மதிப்பைப் பெற்றவருமான நீங்கள் நியமிக்கப்பட்டிருபப்தாகத் தெரிகிறது. உண்மையில் ஈழத் தமிழர் படுகொலையாலேயே இம்மாநாடு தொடர்பான அதிருப்தி உருவாகும் சூழலில் ஈழத் தமிழ் அறிஞர் ஒருவரையே இதில் தலைவராக நியமிப்பதன் மூலம் ஈழத் தமிழ் அறிஞர் சிவத்தம்பியே இந்த மாநாடில் கலந்து கொண்டார் இதை விட வேறு எவருடைய அங்கீகாரமும் எனக்குத் தேவையில்லை என்று கருணாநிதி நாளை கணக்குக் காட்டக் கூடும். இப்படியான ஒரு காலச் சூழலுக்குள் கருணாநிதியின் சூதாட்டத்திற்கு நீங்கள் துணை போகப்போகிறீர்களா?

தமிழறிஞர்கள் எனப்படுவோர் குறித்து,

பொதுவாக மன்னர் காலத்தில் மன்னர்களைப் புகழ்ந்து பாடி பொற்கிழிகளும், பரிசில்களும் வாங்கிச் செல்வதுதான் தமிழறிஞர்களின் பணியாக இருந்து வந்துள்ளது. இவர்கள் எக்காலத்திலும் மக்களைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. மன்னர்கள் உழைக்கும் மக்களின் நிலங்களை கோவில் பூசாரிகளுக்கும் பெரும் பண்ணைகளுக்கும் இம்மாதிரியான அறிஞர்களுக்குமே அள்ளிக் கொடுத்து வந்தனர்.

ஆனால் இன்று மன்னராட்சி இல்லை மக்களாட்சி என்று சொல்லப்படுகிறது. நவீன மன்னனாக உருவாகியிருக்கும் கருணாநிதியை புகழ்ந்து பேசி பரிசுகளும், அரசு சலுகைகளும். ஆட்சியாளர்களின் சன்மானங்களும் பெறுகிறவர்கள்தான் கவிஞர் வைரமுத்துவும், அப்துல்ரகுமானும், தமிழண்ணலும், சிலம்பொலி செல்லப்பனும், பொற்கோவும், இன்னபிற கவிஞர்களும். பெருந்தொகையான மக்கள் படுகொலையான போது இந்தக் கவிஞர்களின் பேனாக்கள் அம்மக்களுக்காக ஒரு வரியாவது எழுதியது உண்டா?

ஆனால் கருணாநிதியை புகழ வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் அதை தவறாமல் பயன்படுத்திக் கொண்ட இந்த தமிழ் கவிஞர்களுக்கு மத்தியில்தான் மக்கள் கவிஞர் இன்குலாப் மாதிரியான தமிழறிஞர்களும் இம்மாநாட்டை புறக்கணித்திருப்பதோடு தமிழறிஞர்கள் இதை புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரி வருகிறார்கள்.

தவிரவும் கருணாநிதியை துதிபாடும் இந்த தமிழறிஞர்களுக்கு இன்று என்னதான் மரியாதை? ஈழ மக்களின் மன அவலத்தை புரிந்து கொள்ளாமல் எல்லாம் சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது என்கிற தொனியில் பேசும் கருணாநிதியும் சரி ஈழ மக்கள் படுகொலையை வைத்து அரசியல் சூதாட்டம் நடத்திய தமிழக அரசியல் வாதிகளும் சரி இன்று உலக அளவில் அவமானப்பட்டு அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

இம்மாதிரியான சூழலில், கடந்த காலங்களில் அரசதிகாரங்களுக்கு துதி பாடாமல் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவித்து வந்த நீங்கள் தமிழின் நவீன வடிவ நுண்மை வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பு காத்திரமானது என நம்புகிறோம்.

திராவிட இயக்க அரசியல் போக்கு, தமிழ் மொழி என ஏராளமான உபயோகமான அய்வுகளைச் செய்தவர் நீங்கள். அந்த மரியாதை உங்கள் மீது எமக்கு உண்டு. ஆனால் இந்த மாநாட்டில் நீங்கள் கலந்து கொள்ள இசைந்துள்ளது எமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

நீங்கள் ஈழத் தமிழர்களின் பெயரால் மாநாட்டிற்குச் செல்வீர்கள் என்றால் அது ஈழச் சமூகத்திற்கு பெரும் பாதகமாக அமைப்பும் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மக்களைப் பற்றிக் கவலைப் படாத அரசனைப் புகழ்ந்து பாடும் தமிழறிஞராக நீங்கள் இருக்கப் போகிறாரா? அல்லது தமிழனைப் பற்றிக் கவலைப் படாது தமிழ் மொழியைப் பற்றி கவலைப்படும் தமிழறிஞராக இருக்கப் போகிறீர்களா? நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் இன்னப்படுகொலையினால் ஈழத் தமிழினம் துன்புற்றிருக்கும் நிலையில் இம்மாநாட்டை நீங்கள் மக்களுக்காக புறக்கணிக்க வேண்டும். நீங்கள் மட்டுமல்ல ஈழத்தின் கலை, இலக்கியம், நாடகம், என்னும் எத்துறை அறிஞர்கள் என்றாலும் அவர்களும் பொறுப்புணர்ந்து இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்பதே நமது ஆசை. மற்றபடி நீங்கள் இம்மாநாட்டிற்குச் செல்வீர்கள் என்றால் சிவதம்பியே செல்கிறார் நான் செல்லக் கூடாதா? என்று பலரும் இம்மாநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. உங்களின் பதிலை எதிர்பாத்து வேதனையுடன் காத்திருக்கும்.,

உங்கள் மீது அன்பும் பாசமும் கொண்ட,

ஒரு உலகத் தமிழன்.

இலங்கைத் தமிழர் நிலை குறித்து கலைஞர் கருணாநிதி தனது உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்காமை குறித்து இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ப்தி தொடர்கிறது. இந்தக் கருத்தில் தனக்கும் உடன்பாடு இருப்பதனால் இந்த மகாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என பேராசிரியர் சிவத்தம்பி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

நன்றி உலக தமிழ் செய்திகள் http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16354&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.