Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனரல் பொன்சேகாவின் விலகல் கடிதம் ஏற்படுத்தியுள்ள கவலையும் சிக்கலும்

Featured Replies

நேற்று(15.11.2009) அன்று "சண்டே ரைம்ஸ்'"எழுதியிருந்த அரசியல் நோக்கிலிருந்து சில பகுதிகள் இவை.

கடந்தவாரம் வியாழக்கிழமை பாது காப்புப் படை அதிகாரிகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதியுடன் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளமாட்டார். அதன்மூலம் எதிர்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடவிருப்பதைத் தவிர்த்து விடுவார் என்று சில வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவ்வாறான பதவி விலகல் கடிதம் ஒன்று வருமானால் அரைமணி நேரத்துக்குள் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு விடும் என்று ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்த வகையில் வெள்ளிக் கிழமையன்றே அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்டுவிட்டதாக அறி வித்துத் தமது வார்த்தையை உண்மை யாக்கிவிட்டார் ஜனாதிபதி.

ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் ஒரு இணைப்புக்குறிப்பில், இராணு வத்தில் மிக உயர்ந்த தராதரங்களைத் தம்மால் அறிமுகப்படுத்த முடிந்திருந்த தாக பொன்சேகா தெரிவித்திருந்தார். இவ்வாறு உயர் தராதரங்களைப் பேணியமை குறித்த குறிப்புகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்ததற்கு மாறாக அமெரிக்கா விலிருந்து திரும்பிய அடுத்தநாளே அவர் எதிர்க்கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்தியிருக்கிறார். வெள்ளிக்கிழமை இரவு அவர் இரகசியமான ஓர் இடத்தில் ஐக்கிய தேசியக் முன்னணியின் முக்கிய பிரமுகர்கள் மூவருடன் ஆலோசனை கள் நடத்தியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் (M பிரிவு) தலைவர் மங்கள சமரவீர தேசிய ஜனநாயக முன்னணித் தலைவர் மனோ கணேசன் ஆகியவர்களே அம்மூவரும்.

தாம் பதவி விலகுவதற்கான காரணங்கள் அவரது இணைப்புக் கடிதத்தில் விளக்கப்பட்டிருந்தன.

ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத் தில் தெரிவிக்கவேண்டியவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த விடயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டமை தெரிய வந்திருப்பதாக இப்பொழுது கவலைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. பொன் சேகா தமது விருப்பத்துக்குச் சிலவற்றை நீக்கியும் சிலவற்றைச் சேர்த்துமிருக் கிறார் என்று கருதப்பட்டது.

தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுவிட்டால் இது நன்றாய் இருக்காது என்பதாக பொன்சேகா கருதியிருக்கலாம் என்று பெயர் குறிக்க விரும்பாத அவர்களில் ஒருவர் தெரிவித்தார். ஆனால் இது மிகப் பிந்திப்போய் விட்டது. எதிர்க்கட்சிகள் அதனை ஏற்கனவே பகிரங்கப்படுத்திவிட்டார்கள். எதிர்க்கட்சியினரின் தரப்பிலான விவரம் பெரும்பாலான பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அவை ஜனாதிபதிக்கு ஜெனரல் பொன்சேகா அனுப்பி யிருந்த கடிதமன்று

ஜனாதிபதியின் செயலாளர் வீரதுங்கா விடம் ஜெனரல் பொன்சேகா கையளித்த கடிதத்திற்கும், எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசித்துத் தயாரித்த கடிதத்திற்கும் பென்னம்பெரிய வித்தியாசங்கள் உள்ளன. அவைகளில் பல கேள்விகளை எழுப்புபவையாகவும் உள்ளன. பதவி விலகல் கடிதத்திலும் அதனுடன் இணைக்கப்பட்ட பகுதியிலும் மாற்றங்களை ஜெனரல் பொன்சேகா செய்துள்ளார். இந்த ஆவணங்களில் மாற்றங்களைச் செய்வது அவருடைய சொந்தவிருப்பத்தைப் பொறுத்தவிடயம். எதுவானாலும் அது அவரது சொந்தப் பதவி விலகல் தொடர்பான ஆவணம். ஆனால் இது அவருடைய அரசியல் நட்பு தரப்புகள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது. தாம் தமக்கே உரிய மனிதர் என்ற நிலைப்பாட்டை இது வெளிப்படுத்தும் செய்தியாக அமைந்துள்ளது.

நாட்டில் நிலவும் ஊழல்கள் பற்றி ஜெனரல் பொன்சேகா வெளிப்படையாகப் பேசியுள்ளார் என்றாலும் ஊடக சுதந்திரம் தொடர்பாக தொடர்ச்சியாகவே மௌனம் சாதித்து வந்துள்ளார். ஜெனரல் பொன்சேகா, ஊடகங்கள் மீதான தாக்குதல்கள், ஊடகப் பிரமுகர்கள் துரோகிகள் என்று வர்ணிக்கப்பட்டமை, அல்லது புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு பணியாற்றுபவர்கள் என்று குற்றஞ்சாட்டப் பட்டமை போன்ற நிலைமைகள் தொடர்பாக பாராமுகமாகவே இருந்து வந்துள்ளார் என்று உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் குற்றஞ்சாட்டி வந்துள்ளமை இரகசியமான விடயமன்று. சில ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற முயன்றால் அவர்களைத் தடுக்கும்படி கொழும்பில் விமான நிலைய அதிகாரிகள் கேட்கப்பட்டிருந்தார்கள் என்று ஜெனரல் பொன்சேகா ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் தெரிவித்திருந்தார். ஆனால் அது நடைபெறவில்லை. இது வெள்ளை வான்களில் வந்து சில நபர்கள் பத்திரிகையாளர்களைக் கடத்துகிறார்கள், தாக்குகிறார்கள், பயமுறுத்துகிறார்கள் என்பன போன்ற சம்பவங்கள் தொடர்புபட்ட விடயமாகும். இந்த வெள்ளைவான் கடத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் கொலைகள் தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசிடம் முறையிடப்பட்டது. இதனால் கவலையடைந்திருந்த ஜனாதிபதி ஒருசமயம் பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டமொன்றில் "இவை என்னை அடித்த மாதிரி'' ஆகும் என்று கூறி இருந்தார். இவைகள் தொடர்பாகத் தம்மைக் குற்றஞ்சுமத்தக்கூடாது என்ற செய்தியையே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருந்தார். ஜனநாயகம் தொடர்பான போராட்டக்காரர்கள் தொடர்பாகவும் இவ்வாறே நடந்தது.

அதனால்தான் அரசு நடத்தும் ஒளிபரப்பு அமைப்புகள் ஊடாக இவ்வாறான விடயங்கள் வெளிவராமல் இருக்க, இராணுவப்படைத் தளபதிகள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்குமுன் அனுமதி பெற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சினால் உத்தரவிடப்பட்டிருந்தது. ஒக்ரோபர் 21ஆம் திகதி மாத்தளை அலுவிகார விளையாட்டரங்கில் புலிகளை வெற்றிகொண்டமைக்காக இராணுவத்தினரைப் பாராட்டுவதற்காக நடை பெற்ற விழாவில் பேசிய ஜனாதிபதி ராஜபக்ஷ பின்வருமாறு கூறினார்:

"இராணுவத் தளபதிக்கு பதவி நீடிப்பு வழங்கப்படவிருந்தபோது எதிர்ப்புகள் கிளம்பியது எனக்கு நினைவுக்கு வருகின்றது. இதில் சில ஊடகங்களும் சம்பந்தப்பட்டிருந்தன. கொழும்பில் ஒரு எதிர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. இரட்சண்ய சேனையைக் கொண்டு நடத்தவும் கூட தளபதி பொருத்தமுடையவராய் இல்லை என்று சிலர் கூறினார்கள். ஒரு பத்திரிகையாளர் தாக்கப்பட்டால் அல்லது கடத்தலுக்கு வெள்ளை வான் பாவிக்கப்பட்டால் இராணுவமே குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் இராணு த்தைக் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் என்னைத் தாக்கவில்லை. நான் கூறினேன் நாட்டை விடுவிப்பதற்கு வழி விடுங்கள் என்று'' பொன்சேகாவின் கடிதத்தில் ஊடக சுதந்திரப் பாதுகாப்பு விடயம் தவிர்க்கப் பட்டிருப்பதானது புதிதாக நிறுவப்பட் டுள்ள ஐக்கிய தேசிய முன்னணியில் குமுறல்களை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகின்றது.

ஏனென்றால் தொலைந்துபோன பல ஜனநாயக சுதந்திரங்களை மீளவும் நிலைநாட்டுவது தொடர்பாக இந்த முன்னணி அதிக அக்கறை செலுத்தி வருகின்றது. இவைகளில் ஊடக சுதந்திரமும் முக்கியம் பெறுகின்றது. கடந்த செவ்வாயன்று தளபதிகளின் கூட்டத்திற்கு தலைமை வகித்ததன் பின்னர் ஜெனரல் பொன்சேகா தேசிய பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ சபைக்குத் தலைமை வகித்தார்.

வழமையாக இடம்பெறும் பகல் போசனத்தின் பின்னர் ஜெனரல் பொன் சேகா ஜனாதிபதி மற்றும் அவரது செயலாளர் வீரதுங்கவுடன் நடைபெற விருந்த கூட்டமொன்றுக்காகநிற்கும் படி கேட்கப்பட்டிருந்தார். அங்கு விவாதிக்கப்பட்டவைகளின் முழுவிவரம் கிடைக்கவில்லை. ஆனால் அவர் அரசியலில் இறங்கப்போவது உண்மையா என்பது பற்றி ஜனாதிபதி விவாதித்தது தெரியவந்துள்ளது. அப்படியான யோசனை ஏதுமிருக்குமானால் பதவியை விட்டு விலகிக்கொள்ளும்படியும் அவர் தெரிவித்துள்ளார். பொன்சேகாவை பொதுவேட்பாளராக நியமிப்பதென ஐக்கியதேசிய முன்னணிக் கட்சிகளுக்கிடையில் உடன் பாடு ஏற்பட்டிருப்பது தெரிந்தவிடயமே.

பொன்சேகாவின் முறைப்பாடு

ஜனாதிபதியின் செயலகத்தில் வைத்து, தமக்கு இராணுவத் தளபதி பதவியிலிருந்து கூட்டுப்படை அதிகாரிகளின் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு 48 மணித்தியாலமே அவகாசம் வழங்கப்பட்டிருந்தது என்று ஜனாதிபதியிடம் பொன்சேகா முறையிட்டிருக்கின்றார். அந்தப் பதவியிலிருந்த முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷாந்தா கொட்டகொடவுக்கு இரண்டு மணி நேரமே வழங்கப்பட்டது. அந்தப் பதவியை உங்களுக்குத் தருவதற்காக. அவர் தமது மகளின் திருமணத்திற்காக ஒரு வாரம் உத்தியோகபூர்வ வாசஸ் தலத்தில் தங்கியிருக்க தமக்குக் கால அவகாசம் தரும்படி கேட்டிருந்தார். மறந்துவிடாதீர்கள். அதை நீங்கள் எதிர்த்ததால் அவர் போகவேண்டியேற்பட்டது என்று ஜனாதிபதி பதிலளித்தார்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் உரையாடியபோது ஜனாதிபதி தமக்குப் பிரதமமந்திரிப் பதவியை அல்லது பாதுகாப்பு அமைச்சு செயலாளர் பதவியை வழங்க முன்வந்ததாகவும் தாம் அதை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார். எனது சகோதரன் போல உம்மை நேசிக்கிறேன் என்று கூறி தொடர்ந்தும் அரசுக்கும் நாட்டுக்கும் சேவை புரியும்படியும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார். அடுத்து வந்த வியாழக்கிழமை இலங்கைக்கு மியான்மார் சிரேஷ்ட ஜெனரல்தான் ஷ்வே வருகைதரும் போது அவரை வரவேற்க விமான நிலையத்துக்கு வருமாறு ஜெனரல் பொன்சேகாவை ஜனாதிபதி கோரியிருந்தார். அந்தவகையில் அவர் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்பாளர்கள் வரிசையில் நின்றபோது அவரது பரம எதிரியான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வுநிலை) வசந்தகரண கொட அவருக்கு முந்திய வரிசைக் கிரமத்தில் நிற்கக் காணப்பட்டார். உயர்மட்ட வரிசைக் கிரமத்தில் ஒரு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு கூட்டுப்படை அதிகாரிகளின் தலை வரைவிட உயர்வானவர். நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் என்ற வகையில் இப்பொழுது கரணகொட, பொன்சேகாவுக்கு உயர்நிலையில் உள்ளார்.

வரவேற்பு நிகழ்வுகள் முடிவுற்ற நிலையில் ஜெனரல் பொன்சேகா அமைதியாக இருந்தார், அவ்வேளை அங்கு வந்த அமைச்சரவை அந்தஸ்து இல்லாத தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா, "குப்பை வாளியில் இறங்க வேண்டாம் நாங்கள் தாக்குவோம்'' என்று கூறியுள்ளார்.

அன்று மாலை களனி ரஜ மகாவிகா ரைக்குச் சீருடை இல்லாமல் வணக்கம் செலுத்தச் சென்றபோது அங்கு மேர்வின் சில்வாவின் ஆள்கள் என்று கருதப் படும் சுமார் 60 பேர் அங்கு கூடி நின்றார்கள். விகாரையில் வணக்கம் செலுத்தி விட்டு அவர் வந்தபோது அங்கு குழுமியிருந்த கூட்டத்தினர் ஊளைச் சத்த மிட்டு கிண்டல் செய்தார்கள். வெளிநாட்டு சதித்திட்டங்களுக்கு நாட்டைக் கூட்டிக் கொடுக்க நாங்கள் விடப் போவதில்லை என்று கூச்சல் போட்டார்கள்.

நன்றி http://www.uthayan.com/Welcome/afull.php?id=178&L=T&1258378211

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.