Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்சாவின் கைக் கூலி – குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்சாவின் கைக் கூலி – குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய்

தமிழ் நிலத்தை ஆண்ட இனம் மாண்டு கிடக்க….மிச்சமுள்ளோர் அடிமை வாழ்க்கையை கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அறிவிலும், புத்திக் கூர்மையிலும் சிறந்த தமிழர் மரபு, குற்ற பரம்பரையாய், நாடு கடத்தப்பட்ட மொக்கு சிங்களனிடம் வீழ்ந்து கிடக்கிறது.

அறநெறி பிறழாத, நல்ல தலைவனாய் -பிரபாகரன் -தமிழினத்திற்கு!

புத்த நெறியையே பிறழச்செய்த கொடுங்கோலனாய் -மகிந்த- சிங்கள இனத்திற்கு!!

இனத்துரோகிகளோடு கை கோர்த்து,சர்வதேசமே சாட்சியாய் நிற்க, மனித பேரவலத்தை நடத்திக் காட்டிவிட்டான் மகிந்த.

தமிழர் தாயகத்தில் மகிந்த சகோதர்களின் பிணந்தின்னும் வெறிக்கு தமிழினமே அழிந்து கொண்டிருந்த போது தான்….

தாய் தமிழகமும்,புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழினமும் தாமதமாக விழித்துக் கொண்டது.

தாய் தமிழத்தின் போராட்டம் ஒரு வீச்சை எட்டியிருக்குமானால்,மகிந்த சகோதரர்களால் நரவேட்டையை தொடர்ந்திருக்க முடியாது.

தங்கு,தடையின்றி தமிழினத்தை கருவறுக்க…..எழுச்சிக்கொண்ட தாய் தமிழகத்தின் போராட்ட உணர்வை முனைமழுங்க செய்ய மகிந்தாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் தான் அம்சா.

சிறிலங்காவின் துணைத்தூதர் என்றப் பெயரில், தமிழ்நாட்டின் தலைநகரிலேயே, மகிந்த வின் மறு உருவாக செயல்பட்டவன் தான் இந்த அம்சா.

2007- நவம்பர் 2 ந்தேதி, புலிகள் இயக்கத்தின் அரசியற்துறை தலைவர்.பிரிகேடியர்.சு.ப.தமிழ்

செல்வன் சிங்கள விமானப் படை குண்டுவீச்சில் கொடூரமாக கொல்லபட, அடுத்த சில நாட்களிலே பாழாய் போன தீபாவளியும் வந்து தொலைக்க,

தீபாவளி கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழ்செல்வனின் மரணத்தை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடிய தமிழினத்தின் மீது வன்மம் கொண்ட கயவன் தான் இந்த அம்சா.

வீபிஷணன் தொடங்கி, இன்றைய கருணாக்கள் வரையில் துரோக குரோமோசோம்களை தன்னுள்ளே மறைத்து, தமிழனாக பாசாங்கு செய்யும் வேடதாரிகளை இனம் காண்பதில் அம்சாவுக்கு நிகர் அம்சா மட்டுமே.

ஜீனியர் விகடன் இதழின் விகேஷ் மட்டுமே கையும் களவுமாக மாட்டிக் கொண்டவன் அல்லது மாட்டிவிட்டதாக கணக்கு காண்பிக்கபட்டவன்.

கவர் அமொண்டுக்கும், கிப்ட பேக்கிற்கும்,எச்சில் சாராயத்திற்கும் ஈழத்தமிழனின் பிணத்தை அடகு வைத்தவன் பத்திரிக்கைகாரன் மட்டுமல்ல….தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல்வாதிகளும் தான்.

தமிழ்நாட்டில்,அம்சாவின் காட்டிக்கொடுக்கும் வேலைக்கும்,கழுத்தறுப்பு வேலைக்கும் துணைநின்றவன் சிங்களரத்னா.ராம்

மகிந்தவினால் கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக முடித்ததனால், தமிழ்நாட்டிலிருந்து பதவி உயர்வு பெற்று பிரித்தானியா வந்திருக்கிறான் அம்சா.

இது அம்சாவிற்கான பதவி உயர்வு மட்டுமல்ல, மே-18 க்கு பிறகும் வெடித்து கிளம்பும் தமிழர்களின் ஆவேசத்தை அடக்கிட மகிந்தவின் அடுத்தக் கட்ட காய் நகர்த்தலே.

1.புலம்பெயர்தமிழர்களின் “தலைவரின் இருப்பு” குறித்த உறுதிப்பாடு,

2.நாடுகடந்த தமிழீழ அரசுக்கான முன்னெடுப்பு,

3.கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதைபோல, முள்வேலிமுகாம் வாழ் தமிழர்கள் மற்றும்

மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேசத்தின் பார்வை,

4.அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் போர்குற்றம்(War Crime) தொடர்பான விசாரணைகளும்,

5.GSP+ பொருளாதார சலுகையை மறுத்து அய்ரோப்பிய ஒன்றியத்தின் கேள்விக்கணைகள்

மேற்கண்ட விடயங்கள், முள்ளிவாய்க்காலிலே, புலிகளுக்கும்,தமிழினத்திற்கும் முடிவுரை எழுதிவிட்டதாக மனப்பால் குடித்த மகிந்தவின் தலையில் இடியை இறக்கி உள்ளது.

மே-18 இழப்பிற்கு பின்பும்,அழுகையும்,ஆவேசமுமாய் இனவிடுதலைக்கு குரல் எழுப்பும் புலம்பெயர் தமிழர்களின் வதிப்பிட நாடுகளில், முன் நிற்பது பிரித்தானியாவே!

மீண்டும் சர்வதேசத்தின் கண்ணில் மண்ணைத்தூவி,

தமிழினத்தை காலம்,காலமாக அடிமைபடுத்த,

எழுச்சிகொண்டிருக்கும் பிரித்தானியத் தமிழர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய….

மகிந்தவின் சூழ்ச்சிவலையின் முதல்கண்ணி தான் அம்சாவின் இலண்டன் ஆக்ரமிப்பு.

பணத்தைக் காட்டியோ,மதுவை ஊற்றியோ இன்ன பிற தந்திரோபயத்திற்கும் சிங்களம் என்றுமே தயங்கியதில்லை.

எல்லாவித காரியங்களுக்கும் அணியமாக,தமிழர் ஒற்றுமையை உடைத்துக் காட்டவே அம்சாவிற்கான பிரித்தானியா பதவி.

பிரித்தானியா வாழ் தமிழர்களை விலை பேச முயற்சிக்கிறது சிங்களப் பேரினவாதம்.நம் தமிழுறவுகளை, இரத்தச் சேறாக அழித்துக்காட்டிய சிங்களத்தின் கைக்கூலிக்கு தமிழன் ஆசைப்படலாமா?

அப்படி ஆசைப்படுவன் தமிழன் தானா?

மானமுள்ள தமிழனுக்கு,அம்சாவின் கைக் கூலியை நினைக்கும் போதே, குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெய் தான் நினைவுக்கு வரும்.

பிரித்தானியத் தமிழர்களின் மனவலிமையை சிங்களம் உரசிபார்க்க எத்தனிக்கிறது. தங்களின் இதயத்தில் தலைவனை ஒருபுறமும்,தலைவன் தந்த விடுதலைநெருப்பை மறுபுறமும் சுமக்கும் சூடு,சொரணையுள்ள தமிழர்களின் கூட்டம் சிங்களத்தின் சூழ்ச்சி வலையில் ஒருபோது சிக்காது என்பது திண்ணம்.

——-

பிரித்தானியாவிலிருந்து கரிகாலன்

http://www.meenagam.org/?p=16688

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே சிக்கு பட்டவர்கள்

நடராசா

பற்குணன்

தம்பிமுத்து

கண்ணபிரான்

சுகந்தன்

அரவிந்தன்

மேலும் பலர் உண்டு

பிரபாகரன் செய்த மகாதப்பு தமிழர்களிற்குள் வந்து பிறந்ததுதான், சிங்கள இனத்தில் பிறந்திருந்தால் இப்போ அவர்...............

பிரபாகரன் செய்த மகாதப்பு தமிழர்களிற்குள் வந்து பிறந்ததுதான், சிங்கள இனத்தில் பிறந்திருந்தால் இப்போ அவர்...............

சிங்களவர் சிறுபான்மையாக இருந்து தமிழர்கள் அரசில இருந்து ,சிங்களவருக்கு அநியாயம் செய்திருந்தால் நிச்சயமாக அதை தட்டி கேட்க தலைவர் அவதரித்திருப்பார் என்ன பெயர் மட்டும் வித்தியாசமாக இருந்து இருக்கும்..வேலுநாயக்கே பிரபா கமகே என்று இருந்திருக்கும்

அநியாயத்தை தட்டி கேட்பவன் பிறப்பதில்லை அவதரிக்கிறான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.