Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போன பேனாக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போன பேனாக்கள் - GTN - ஆசிரியர் தலையங்கம்

இலங்கையின் அரசியல் வரலாற்றி;ல் அதாவது இலங்கை சுதந்திரம் அடைந்த 6 தசாப்த காலத்தில் ஊடகத்துறை என்றுமே எதிர்நோக்காத இடர்களை எதிர்நோக்கியிருக்கின்றது.

1978 இல் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக மாற்றுவதை விட தன்னால் எதுவும் செய்ய முடியும் என்று கூறிய ஜே. ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் கூட ஊடகத்துறை சில நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்த போதிலும், தணிக்கைகள் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த போதிலும் இவ்வாறானதொரு நெருக்கடியைச் சந்தித்திருக்கவில்லை.

வடமராட்சியின் ஒப்பரேசன் லிபரேசன் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வெளி வந்த ஆங்கிலப் பத்திரிகையான சற்றடே றிவியூ பத்திரிகை மீது நெருக்குதல்கள் கொடுக்கப்பட்ட போதும்; அப்பொழுதும் கூட சற்று மூச்சு விடக் கூடியதாக இருந்தது.

1988இன் பின் 89 - 90 காலப்பகுதிகளில் ஜேவிபிக்கெதிரான அடக்குமுறைகளின் போதும் விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தத்தின் போதும் அன்றைய கொடுங்கோலராக கருதப்பட்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, றிச்சாட் டி சொய்சா குகமூர்த்தி ஆகியோரின் கொலைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். இன்றைய ஆட்சியில் சண்டே லீடர் உதயன் பத்திரிகைகள் எதிர்நோக்கிய அதே அளவான பிரச்சினைகளை யுக்திய பத்திரிகையும் சரிநிகர் பத்திரிகையும் எதிர் கொண்டது. ஆனால் அன்றும் பல சவால்களுக்கு மத்தியில் ஊடகத்துறையின் மூச்சு நின்று விடவில்லை.

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க ஆட்சியிலும் கூட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் சட்டனப் பத்திரிகையின் ஆசிரியர் ரோகண குமார தமி;ழ்நெற் ஆசிரியர்; தராக்கி எனப்படும் தர்மரட்னம் சிவராம் ஆகியோர் கொல்லப்பட்டனர். புலிகளுக்கெதிரான கடுமையான யுத்தங்கள் இந்தக் காலப் பகுதியில் இடம்பெற்ற போதும் ஊடகத் தணிக்கைகள் இடையிட்டு நடைமுறையில் இருந்த போதும் இன்றைய கொடூரத்தை ஊடகத்துறை அனுபவித்திருக்கவில்லை.

ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்த 2005 இன் பிற்பகுதி 2006 முற்பகுதியிலிருந்து இன்று வரை ஊடகத்துறை எதிர்கொள்ளும் அனர்த்தம் வார்த்தைகளில் அடங்காது.

இவரது ஆட்சிக்காலத்தில் 16 வரையிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றார்கள். ஒரு சில ஊடகவிலாளர்கள் இன்று வரை காணாமல் போன பட்டியலிலேயே இருக்கின்றார்கள். இன மத மொழி வேறுபாடின்றி 30க்கும் மேற்பட்ட ஊடகவிலாளர்கள் நாட்டிலிருந்து துரத்தப்பட்டார்கள். அல்லது நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

ஏற்கனவே விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்பு தமிழ் ஊடகத்துறைக்கெதிராக மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறை அவர்களைக் கடத்துகின்ற துன்பறுத்துகின்ற உயிர்களைக் காவு கொள்கின்ற நிலமைக்கு இட்டுச் சென்றது.

லங்காடிசன்ற இணையத்தளம் நிறுத்தப்பட்ட போது அதன் ஆசிரியர் எழுதிய ஆசிரியர் தலையங்கம் நினைவுக்கு வருகின்றது. ' தமிழ் ஊடகத்துறைக்கெதராக கொடும் கரங்கள் நீட்டப்பட்ட போது ஏனோ தானோ என மௌனித்திருந்த சிங்கள ஊடகத்துறை இன்று அந்தக் கரங்கள் தமது குரல்வளைகளை நெரிக்கின்ற போது நிர்க்கதியாகி நிற்கின்றது. 'முகமூடி மனிதர்களால் தாக்கப்பட்டும் காயங்களுக்கு உட்படுத்தப்பட்டும் மிரட்டப்பட்டும் உயிர்ப்பலி எடுக்கப்பட்டும், அலுவலகங்கள் அடித்து நொருக்கப்பட்டு, தீயிடப்பட்டும் அல்லலுற்ற சிங்கள ஊடகத்துறை லசந்த விக்கிரதுங்கவின் பலியெடுப்புடன் தனது இறுதி மூச்சையும் நிறுத்திக் கொண்டது. இன்று 10 க்கும் மேற்பட்ட சிங்கள ஊடக செயற்பாட்டாளர்கள் இந்தியாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் தமது இருப்பை மாற்றியுள்ளனர்.

இத்துடன் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் திருப்தி கொள்ளவில்லை. எஞ்சியிருக்கின்ற ஊடகங்கள் மீதும் ஊடக செயற்பாட்டாளர்கள் மீதும் அழுத்தங்களைப் பிரயோகித்த வண்ணமே இருக்கின்றன. கையில் பிரம்பும் கையுமாக மாதம் ஒருமுறை அல்லது இரு முறை ஊடகவிலாளர்களுக்கு பாடம் கற்பிக்கின்றார் ஜனாதிபதி. கடந்த சில நாட்களுக்கு முன்பாகக் கூட ஊடகவிலாளர்கள் அலரி மாளிகையில் உள்ள வகுப்பறைக்கு அழைக்கப்பட்டனர். கோம் வேர்க் (hழஅந றழசம) செய்யாத மாணவர்கள் பயந்தடித்து வகுப்பறைக்குச் சென்றது போல் ஊடகவிலாளர்களும் சென்றிருந்தார்கள்.

அங்கே ஆசிரியராக வீற்றிருந்த ஜனாதிபதி எப்படியெல்லாம் பேனாக்கள் எழுத முடியும் எனப் பாடம் கற்பித்துள்ளார். அரசாங்கத்திற்கெதிராக ஆளும் தரப்பனருக் கெதிராக படையினருக்கெதிராக போர்க்களத்திற்கெதிராக எழுதினால் அது தேசத் துரோகமாகி விடும். அதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கும் என எச்சரி;த்திருக்கின்றார்.

குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைள், ஆட்சியாளர்களுக்கு அணிகலனாக இருக்கும் தமிழ் பேசும் சிலரால் பக்கம் பக்கமாக மொழி பெயர்க்கப்பட்டு மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுகின்றது.

இலங்கைத் தமிழர்களுக்கு சார்பாக தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூட ஊடகங்கள் வெளியிட்டால் அது தமிழ் சிங்கள குரோதத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதி எச்சரித்துள்ளார். ஏற்கனவே இந்தியச் செய்திகளை வெளியிட்டு வந்த இலத்திரனியல் ஊடகங்கள் சிலவற்றுக்கு ஆளுந் தரப்பினர் கட்டை இறுக்கிவிட்டார்கள். பின்னர் ஆங்காங்கே தமிழகச் செய்திகளை வெளியிட்டு வந்த பத்திரிகைகளுக்கும் கடந்த வார வகுப்பறையில் ஜனாதிபதி ஆப்பு வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கிலே குறிப்பாக வன்னியிலே இடம்பெறுகின்ற தாக்குதல்கள் குறித்து அதில் பொது மக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகள் குறித்து தமிழ் ஊடகத்துறை வாய்திறக்க முடியாது. ஒருவர் கூறினார் 'நாங்கள் முன்பு யுத்தத்திலே இரண்டு மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்தியாக வெளியிட்டு விடுவோம். ஆனால் டசின் கணக்காக எறிகணை வீச்சிலும் விமானத் தாக்குதலிலும் பொதுமக்கள் கொல்லப்படுகின்றார்கள். அந்தச் செய்தியை 12ம் 15ம் பக்கத்தில் கூட சிறிய எழுத்தில் போட முடியாமல் தவிக்கின்றோம். அல்லது அருகில் உள்ள வன்னியில் நடப்பவற்றை செய்தியாக வெளியிடும் அமெரிக்க அல்லது பிரித்தானிய அல்லது பிரான்ஸ் ஊடகங்களை கோடிட்டு செய்திகளை வெளியிட வேண்டியவர்களாக உள்ளோம்'

அது மட்டுமா அன்று காலை வெளிவருகின்ற பத்திரிகையை புரட்டி எடுக்கும் ஆளுந்தரப்பினர் அதில் சிக்கலான விடயங்கள் வெளி வந்தால் மறு நாளே ஊடக மகாநாட்டைக் கூட்டி இந்த ஊடக நிறுவனத்தை அல்லது அந்த ஊடகவியலாளர்களை மிரட்டுகின்றனர் என மனம் வெதும்பினார்.

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்புக் கூட ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. யுத்தம் தொடர்பான மனிதப் பேரவலம் தொடர்பான மக்களின் இன்னல்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டும் என அந்த அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. யுத்தம் நடைபெறுகின்ற பிரதேசங்களுக்கு குறிப்பாக வடக்கிற்கு உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக சென்று வர இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என அந்த அமைப்புக் கோரியுள்ளது.

இவ்வாறான சூழலில் உலகில் உள்ள அனைத்து ஊடக அமைப்புக்களும் இலங்கையில் உள்ள ஊடக அமைப்புக்களும் சர்வதேச சமூகமும் இலங்கையின் ஊடக சுதந்திரம் பற்றி எத்தனையோ முறை ஆட்சியாளர்களிடம் பேசி விட்டார்கள். ஆனால் அவை ஜனாதிபதி மாளிகைக்கு கேட்கவில்லை. அவை யாவும் எருமை மாட்டில் மழை பெய்தது போல அல்லது செவிடன் காதில் ஊதிய சங்கு போல தொடர்கிறது.

இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பை ஏற்படுத்திய ஜே.ஆர் அதில் ஊடக சுதந்திரம் கருத்துச் சொல்லும் சுதந்திரம் நீதித்துறைச் சுதந்திரம் என்பனபற்றி எல்லாம் குறிப்பிட்டு இருந்தார். தனது நிறைவேற்று அதிகாரத்தையும் குறைந்தபட்சம் அரசியல் அமைப்பின் ஊடாக செயற்படுத்தி வந்தார்.

அவர் பின்வந்தவர்கள் கூட நாட்டின் அரசியல் அமைப்பிற்கு ஓரளவிற்காகவாவது மதிப்பளித்தார்கள். ஆனால் இப்போ அரசியல் அமைப்பின் பக்கங்களும் ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போயின. ஐநா உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான சட்டங்களில் இருந்து, ஜனநாயக மரபுகளும், ஊயர் நீதிமன்றத் தீர்ப்புக்களும், கூடவே மனிதமும் அந்த மாளிகையின் புதைகுழிகளில் புதையுண்டு போயின.

இன்று இங்கு நடப்பது நாட்டாட்சி அல்ல காட்டாட்சி. அதனால் தொலைந்து போன பேனாக்களையும் புதைந்து போன மனிதத்தையும் மீட்டெடுப்போமா?

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=5327&cat=12

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போன பேனாக்கள்

நாட்டுக்கு தலைவன்ர இடமெண்டபடியா பெரிசாயிருக்கும்...... பேனாக்கள் துலைஞ்சிருக்கும்.

எடுத்து தருவாங்கள். அல்லாட்டில் புதுசெண்டாலும் தரமாட்டாங்களே?

கேட்டுப்பாருங்கோ.....

Edited by Mathivathanang

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்கு தலைவன்ர இடமெண்டபடியா பெரிசாயிருக்கும்...... பேனாக்கள் துலைஞ்சிருக்கும்.

எடுத்து தருவாங்கள். அல்லாட்டில் புதுசெண்டாலும் தரமாட்டாங்களே?

கேட்டுப்பாருங்கோ.....

சா, இப்படி ஒரு விளக்கம் தெரிந்த ஆள் யாழ் களத்தில் இருப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். :D:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.