Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11,000 முன்னாள் புலிப் போராளிகள் வெளித் தொடர்புகள் ஏதுமின்றி "இரகசிய முகாம்"களில் அடைப்பு (வீடியோ படங்கள் இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து அனைத்து மக்களும் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் என சிறிலங்கா அரசு இந்த வாரம் அறிவித்திருந்த போதும், 11,000க்கும் மேலான முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் சட்டபூர்வ ஒழுங்குகள் ஏதுமற்ற நிலையில் - கடும் பாதுகாப்புடன் - இரகசிய நலன்புரி நிலையங்களில்� அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் தி டைம்ஸ் [The Times] வார ஏட்டில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

11000_ICRC_1.jpg

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்கத்தினர் [ International Committee of the Red Cross - ICRC ] இந்த முகாம்களுக்குச் செல்லுவதற்குத் தடை விதிக்கப்பட்ட கடந்த யூலை மாதத்திற்குப் பின்னர் - அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உண்மையான எண்ணிக்கை வெளிவரவில்லை.

மேலும், அடைத்து வைக்கப்பட்டுள்ளோர்தமிழ்ப் புலிகள் என்று சொல்லப்படுவதன் சரியான வரையறை என்ன என்பதும் தெளிவாக இல்லை.

நீண்ட காலப் புலி உறுப்பினர்களைத் தவிர்த்து - புலி உறுப்பினர்களின் குடும்பத்தினர், அவர்களிடம் சம்பளத்திற்கு வேலை செய்த பொதுப் பணியாளர்கள், கடைசியாகத் தமது வீழ்ச்சிக் காலத்தில் புலிகளால் பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் ஆகியோரே இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள்.

ஊடகங்களில் வெளியாகும் தகவல்களின் படி, புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோர் இப்போது கொழும்பில் உள்ள, மிக மோசமானது எனப் பெயரெடுத்த - 4ஆவது மாடி�யில் (பயங்கரவாத தடுப்புப் பிரிவு) தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது; தமது மகனின் "பயங்கரவாத" நடவடிக்கைகளில் இருந்து அவர்கள் நீண்ட காலமாக விலகியே இருந்தனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்காப் படையினர் தமது கடைசி நடவடிக்கையை மேற்கொண்ட போது 300,000-ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சண்டையின் இடையில் அகப்பட்டுக் கொண்டார்கள்.

அவர்களில் - 280,000 மக்கள் சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

இறுதியாக - அந்த மக்களில் 130,000 பேர் இந்த வாரத்தில் (கடந்த வாரம்) விடுவிக்கப்பட்டார்கள்; ஆனால், தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் அந்த 11,000 தமிழர்கள் (முன்னாள் போராளிகள்) தொடர்பிலே இப்போது கவலை எழுந்துள்ளது.

விசாரணைகள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்படுவது சிறிலங்காவில் உள்ள பல கைதிகளுக்குப் பழக்கமானதுதான்.

"அவசரகால நிலை" மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பவற்றின் கீழ் தெரிவிக்கப்படும் காரணங்களால் அவர்கள் அனைவரும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் உள்ள 12 "புனர்வாழ்வு" நிலையங்களுக்கு [ "Rehabilitation" camps ] யூலை மாதம் வரையிலும் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினால் சென்றுவர முடிந்தது என குழுவின் முன்னாள் அதிகாரி ஒருவர் இந்த வாரம் தெரிவித்தார்.

இந்த முகாம்களில் இப்போது குறைந்த எண்ணிக்கையிலானோரே உள்ளனர். அதேசமயம், புலிகள் இயக்க உறுப்பினர்கள் குற்றவியல் விசாரணைப் பிரிவினரின் (CID) காவலில் வைக்கப்பட்ட பின்னர் நேரடியாக காலி அருகே உள்ள பூசா சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஆனால், படையினரிடம் சரணடைந்த சிறுவர் - போராளிகள் "புனர்வாழ்வு" முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். அதேசமயம், அனைத்துலக செஞ்சிலுவைக் குழு அந்த முகாம்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய வெற்றிடம் இன்னும் நிரப்பப்படவில்லை என அவர் மேலும் கூறினார்.

கடந்த வாரங்களில் விடுவிக்கப்பட இருந்த தமிழ் மக்கள் மத்தியில் கூட மீண்டும் ஒரு சுற்றுக் கைதுகளை மேற்கொள்வதற்கு படையினருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக - அண்மையில் வெளியான அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தடுப்பு முகாம்களில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட 30 முதல் 40 வரையான குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் கடைசித் தருணத்தில் கைது செய்யப்பட்டு நலன்புரி நிலையங்கள் என அழைக்கப்படும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என அருட் தந்தை வி.யோகேஸ்வரன் கூறினார்.

திருகோணமலையில் உள்ள மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு நிலையத்தின் [ Centre for the Promotion and Protection of Human Rights ] இயக்குநர் அவர்.

அந்த நலன்புரி நிலையங்கள் இரகசிய தடுப்பு முகாம்களா...? நிச்சயமாக அப்படித் தான் இருக்கும் என்று நான் சொல்லவில்லை; ஆனால், அப்படி இருக்கலாம் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. சில ஆண்கள் எந்தக் கணக்கு வழக்குகளும் இன்றியே பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் என்றார் அருட்தந்தை.

பொதுமக்கள் முகாம்களுக்குள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் மறைந்து இருக்கலாம் என்ற சிறிலங்கா அரசின் சந்தேகம் நியாயமானது தான்.

பொதுமக்கள் முகாம்களில் இருந்து கடந்த ஒக்டோபரில் விடுவிக்கப்பட்ட, பதின்ம வயது புலிகள் உறுப்பினர்கள் இருவரை �தி டைம்ஸ் சந்திக்க நேர்ந்தது - அவர்கள் தமது அடையாளங்களை மறைத்துக் கொண்டார்கள்.

மே மாதத்தில் இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் - அவர்கள் இருவரும், தமது சீருடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, ஆயுதங்களை உதறிவிட்டு, கழுத்தில் இருந்த சயனைக் குப்பியையும் அறுத்து எறிந்துவிட்டு, துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியல் ஓடிக்கொண்டிருந்த மக்களோடு மக்களாகக் கலந்து கொண்டார்கள்.

பக்கத்தில் நான் பார்த்த குடும்பம் ஒன்றில் ஒருவரின் கைகளை நான் இறுகப் பிடித்துக் கொண்டேன் என்றார் தன்னை சயூ எனக் கூறிக் கொண்டவர்.

நாங்கள் சிறிலங்கா படையினரை அடைந்த போது நானும் அந்தக் குடும்பத்தில் ஒருவன் என அவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.

அதன் பின்னர் - நான்கு தடவைகள் இடம்பெற்ற விசாரணைகளின் போது அந்த இருவரும் தாம் மாணவர்கள் என்ற நிலையைத் தக்க வைத்துக் கொண்டார்கள்.

இறுதியில், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் மத்தியில் அவர்கள் விட்டுவிடப்பட்டனர். ஒருவர் ("மெனிக்" முகாமின்) 6ஆவது வலயத்திலும் மற்றொருவர் 2ஆவது வலயத்திலும் இருந்தனர்.

11000_ICRC_2.jpg

நான் வலயம்-6-இல் இருந்த காலத்தில், எனது முன்னைய சக போராளி ஒருவரைப் பார்க்க முடிந்தது; அவரும் கூட இப்போது அங்கிருந்து வெளியேறி விட்டார். நாங்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதில்லை; சும்மா ஒரு பார்வை மட்டும் பார்த்துக் கொள்வோம். பின்னர் விலகி நடந்து சென்று விடுவோம்.

நாங்கள் யார் என்பது தெரிந்திருந்த பொதுமக்கள் கூட அங்கே இருந்தார்கள்; ஆனால், அவர்களில் யாரும் எம்மைக் காட்டிக் கொடுத்து விடவில்லை" என்றார் சயூ.

http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1260227447&archive=&start_from=&ucat=1&

Edited by ஜீவா

போரின் இறுதிக்கால கட்டத்தில் சுமார் ஆயிரம் தொடக்கம் இரண்டாயிரம் புலிகளே எஞ்சி இருக்கின்றார்கள் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் புண்சேகா சொல்லி இருந்தார். இது எப்படி 11,000 ஆகிச்சிது? மிச்சம் எங்கடை ஊடக வித்துவான்களின் கூட்டல் கணக்கோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.