Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையை உணரமறுக்கும் மகிந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையை உணரமறுக்கும் மகிந்த..அரசியல் ஆய்வு:

mahinda_bikku_2009.jpg

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்புகள் தவறவிடப்படும் அவலம்

மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கம் தமிழ்த் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகப் போராடியதனால் மக்களிடையே அவை குறித்து கருத்து வேறுபாடுகள், ஏற்பட்ட அதேநேரத்தில் இலங்கையில் நிலவிய முரண்பாடுகளை நீக்குவதற்கும் குணப்படுத்துவதற்குமான வழி சமைக்கப்படும் என்றும் அதனால் விரைவான பொருளாதார முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் ஒரு நியாயமான எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக நாடு மேலும் கூடியளவுக்கு கருத்து ரீதியாகப் பிளவுற்றதுடன், முன்னர் எப்போதையும்விடக் கூடிய முனைவாக்கம் பெற்றதாகிவிட்டது. முன்னர் இன ரீதியான வழியில் வேறுபாடுகள் காணப்பட்டன. இப்போதோ அவ்வேறுபாடுகள் அரசியல் ரீதியான வேறுபாடுகளாகியதுடன், அரசியலில் முரண்பாடுகளும் அதிகரித்துவிட்டன. 1980 களையும் 1990 களையும் கொண்ட தசாப்தங்களில் நிலவிய நிலைவரங்களை நினைவுபடுத்திப் பார்க்கும் வகையிலான ஒரு சூழல் உருவாகியுள்ளதுடன், அவை மீண்டும் தோன்றி விடுமோ என அச்சுறுத்துவதாகவும் உள்ளது. இந் நெருக்கடி எந்தவொரு நிறுவனத்தினையும் காயப்படுத்தாது விடப் போவதில்லை. பௌத்த பிக்குமார்களும் கூட இதில் விட்டு வைக்கப்படமாட்டார்களோ என அஞ்ச வேண்டியதாயுள்ளது.

எந்தவொரு சமூகத்திலும் முரண்பாடுகள் தவிர்க்கப்பட முடியாதவை என்பது உண்மையாகும். ஏனெனில் மக்கள் வேறுபட்ட ஆர்வங்களையும் தேவைகளையும் கொண்டவர்களாகவும் இருப்பதனாலாகும். அதனால் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கின்றனர். ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் ஒரு நாட்டில் தேர்தல் என்பது முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான முக்கியமான ஒரு வழிமுறையாகும். நன்கு நிறுவப்பட்டதான ஜனநாயக நாடுகளான ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அங்கு அரசியல் காரணமாக ஏற்படும் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் தேர்தல் பிரசாரத்தினால் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்திக் கொள்ளவும் அவற்றிற்கே உரியதான சம்பிரதாயங்களைக் கொண்டுள்ளன. பொதுவாகத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரிவினரிடையே தொடர்ந்தும் அவர்களது கருத்துகள் நீடித்திருக்கும். தோல்வியுற்றவர்கள் மக்களது தீர்ப்பை ஏற்றுக்கொள்வர். ஐக்கிய அமெரிக்காவின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் கசப்புணர்வுடனான வேறுபாடுகளை ஏற்படுத்திய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வெற்றியாகும். வெற்றிவாகை சூடியவரது வெற்றிச் சொற்பொழிவும் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட செனட்டர் ஜோன் மெக்கெய்னின் விட்டுக்கொடுப்பு மனப்பான்மையுடனான சொற்பொழிவும் தேர்தல் பிரசாரங்களால் ஏற்பட்ட காயங்களைக் குணமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.

ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதியாக மீளத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது 1865 ஆம் ஆண்டு அவர் ஆற்றிய இரண்டாவது தொடக்க விழாப் பேருரை முரண்பாடுகளை நீக்குவதற்கும் (காயங்களை) குணப்படுத்துவதற்குமான சிறப்பு வாய்ந்த உரையாகப் போற்றப்படுகின்றது. வரலாற்றுப் போக்கில் எப்போதும் இதுபோன்ற பெரும் முயற்சிகளே உலகில் வாழும் மக்களுக்கு அது ஒரு வாழச் சிறந்த இடமாக அமையக் காரணமாகியதோடு, ஆட்சியினையும் பெருமளவிற்கு மனிதாபிமானத்துடன் செயற்பட பங்களித்துள்ளன. ஆப்ரகாம் லிங்கன் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சொற்பொழிவினை ஆற்றியபோது அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடியும் தருணத்தினை அடைந்திருந்தது மாத்திரமன்றி, அரசாங்கம் வெற்றியடையும் நிலையிலும் காணப்பட்டது. ஆனால், யுத்தம் முடிவடைவதற்கு முன்னரேயே ஜனாதிபதி யுத்தத்தின் பின் காணப்படும் நிலைமைகளைப் பற்றிச் சிந்தித்தார். அவர் வெற்றியடைந்த வட பகுதி மாநிலங்களில் தோல்வியடைந்தவர்கள் மீது மனிதாபிமானதும் இரக்க உணர்வுடனுமான மனப்பான்மையினைத் தூண்டுவிப்பதன் தேவையினையும் தோல்வியுற்ற தென் மாநிலத்தவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையினை ஏற்படுத்தும் மனப்பான்மையினை வளர்ப்பதன் தேவை பற்றியும் சிந்திக்கத் தலைப்பட்டிருந்தார். வரலாற்றியலாளர்கள் லிங்கன் அப்போது மகிழ்ச்சி பற்றிப் பேசவில்லை எனக் கூறியிருந்தனர். மாறாக அவர் கவலையடைந்த மனநிலையுடன் தோல்வியடைந்த தென் மாநிலத்தவர்களை நெருக்கடிகளுக்கு உட்படுத்துவதனைத் தவிர்க்குமாறு கோரினார்.

வெற்றியடைந்த தலைவர்கள் தமது போட்டியாளர்களைப் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்றும் காட்டிக்கொடுக்கும் இனப் பகைவன் என்றும் விபரிக்க விரும்புகையில் லிங்கனின் சொற்பொழிவோ அவற்றிற்கு மாறாக இருந்தது. எவரோடும் பகைமை எண்ணம் கொள்ளாதீர்கள். அனைவருடனும் தாராள மனப்பான்மையுடன் சரியானவற்றில் உறுதியுடன் இறைவன் எம்மைச் சரியானவற்றைக் காணத் தந்துள்ள வகையில் நாம் மேற்கொண்ட வேலையினை முடிவுக்குக் கொண்டு வந்து தேசத்தின் காயங்களை ஆற்றி போரில் வீழ்ந்தவர் மீது அக்கறை கொண்டு அவருடைய விதவை, அநாதைகளுக்கும் பாதுகாப்பளித்து எமக்குள்ளும் தேசத்தின் அனைவருக்கும் மத்தியில் நீடித்து நிற்கக்கூடிய சமாதானத்தினை எய்தத் தேவையான அனைத்தையும் செய்வோம் எனக் கூறினார்.

ஜனாதிபதி லிங்கன் நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் துயரங்கள் மீதும் தனது கவனத்தைச் செலுத்தினார். அவர்கள் அவருடைய பக்கம் சார்ந்தவர்களா அல்லது எதிராகப் போரிட்டவர்களா என்பதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. அவர் தனது மேடையைத் தெற்கே புனர்நிர்மாணத்திற்காக அர்ப்பணித்திருந்தார். அவரது கொலையும் கூட அதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

காந்தியின் உதாரணம்

அண்மையில் கடந்த வாரம் (Mணிணூச்டூகீஞுஅணூட்ச்ட்ஞுணt) மீள்போர் ஏற்பாடுகளுக்கான ஒழுக்கத்தத்துவம் என்னும் நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் அழைப்பின் பேரில் இலங்கை வந்திருந்த மகாத்மா காந்தியின் பேரனான ராஜ்மோகன் காந்தி அவர்கள் ஆபிரகாம் லிங்கனின் சொற்பொழிவை மேற்கோள்காட்டி உரையாற்றினார். மீள் போர் ஏற்பாடுகளுக்கான ஒழுக்கத்தத்துவம் என்னும் நிறுவனத்தின் இப்போது "மாற்றங்களுக்கான நற்றொடக்கம்%27 (ஐணடிtடிச்tடிதிஞுண் ணிஞூ இடச்ணஞ்ஞுஎன பெயரிட்டுள்ளனர். இது சமாதானம், முரண்பாடு நீக்கம் என்பவற்றிற்கான சர்வதேச மட்டத்தில் பிரபலமான ஒரு நிறுவனமாகும். இதன் தலைமையகம் சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ளது. 1919 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர இயக்கத்தின் பிரகடனத்தினையும் பேராசிரியர் காந்தி எடுத்துக் காட்டினார். அந்த இயக்கத்தினை சிலகாலத்தின் பின்னர் இவரது தாத்தா மகாத்மா காந்தி முறையாகத் தலைமை தாங்கினார்.

ஜாலியன் வாலா பார்க்கில் பெண்களும் குழந்தைகளும் உட்பட 400 க்கும் 1000 த்திற்கும் உட்பட்ட இந்தியர்கள் சுதந்திரம் கோரி அமைதியான முறையில் கூடியிருந்த பொதுக்கூட்டத்தில் பிரித்தானிய இராணுவம் அவர்களைச் சுட்டுக்கொன்றதன் காரணமாகப் பேராசிரியர் குறிப்பிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் பிரகடனம் ஒன்றினை வெளியிட்டிருந்தது.

இப்படுகொலையின் பின்னர் இந்தியத் தேசிய காங்கிரஸ் ஒரு பிரகடனத்தைப்பற்றி விவாதித்து அதில் 1000 பேரளவிலான இந்தியர்களை பிரித்தானிய அரசு கொலை செய்தமையைக் கண்டித்தது. அப்பிரகடனத்தில் அப்பகுதி பொறுத்து கருத்து வேறுபாடுகள் ஏதும் இல்லை. ஆனால், அப்பிரகடனத்தின் இரண்டாவது பகுதிபற்றிக் கருத்து முரண்பாடு தோற்றமுற்றது. இரண்டாவது பகுதியில் ஜாலியன் வாலா பார்க் படுகொலைக்குச் சிலநாட்களுக்கு முன்னர் சுதந்திரத்திற்கு ஆதரவான கலகக்கும்பல் ஒன்று 5 பிரித்தானிய மக்களை கொன்று விட்டதனைக் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரித்தானியர் 1000 பேரைக் கொலை செய்திருந்ததால் பிரித்தானியர் மீது கடுங்கோபம் கொண்டு குறித்த கூட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் பிரகடனத்தின் இரண்டாம் பகுதியில் ஐந்து பேர் கொல்லப்பட்டதனைக் குறித்திருந்தமையினை நீக்கும்படி கேட்டுக்கொண்டனர். அக்கூட்டத்தில் ஒரு பேச்சாளர் தீவிரமான கருத்துடன் "இந்தியத் தாயின் மகன் ஒருவன் இந்தப் பிரகடனத்தில் இந்தியர்கள் (பிரித் தானிய மக்கள்) ஐவரைக் கொன்ற குற்றத்தை இணைக்கமாட்டான்%27 என அபிப்பிராயம் கூறியிருந்தார். இறுதியில் 5 பிரித்தானியர்களைக் கொன்ற குறிப்பினை நீக்கிவிட்டே பிரகடனம் அங்கீகரிக்கப்பட்டது.

1919 ஆம் ஆண்டளவில் இந்திய சுதந்திர இயக்கத்தில் மகாத்மா காந்தி ஒரு பிரபல்யமான தலைவராக வளர்ந்திருக்கவில்லை. அப்போது இருந்த பேராற்றல் வாய்ந்த பல தலைவர்களில் ஒருவராக மாத்திரமே இருந்தார். இருந்த போதிலும் மறுநாள் கூட்டம் கூடியபோது மகாத்மா தனது கருத்து வேறுபாட்டில் உறுதியுடன் இருந்தார். பிரகடனம் மீள பரிசீலிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்தியத் தாயொருவரின் மகன் 5 பிரித்தானிய மக்களைக் கொன்றமைக்குக் கவலை தெரிவிக்கும் பிரகடனத்தை தயாரித்திருக்கமாட்டார் என்ற கூற்றினைப் பற்றித்தான் ஆழமாகச் சிந்தித்ததாகக் கூறி அக்கூற்றினை ஏற்க முடியாது எனக்கூறியதோடு ஒரு இந்தியத் தாயின் மகன் ஒருவனால்தான் அவ்வாறான பிரகடனத்தைத் தயார் செய்ய முடியும் எனத் தான் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டார். அப்பிரகடனத்தைத் தான் தான் தயாரித்ததாகவும் கூறினார். அவருடைய விவாதங்களைச் செவிமடுத்த இந்தியத் தேசிய காங்கிரஸின் பெரும்பான்மையினர் அவரது சுயவிமர்சனம், போராடியவர்களை விடக் கூடிய ஒழுக்கத்தத்துவம் கொண்ட கருத்துகள் என்பன காரணமாகத் தமது கருத்துகளை மாற்றிக் கொண்டனர். எனவே, அப்பிரகடனம் முதன்முதலில் தயாரிக்கப்பட்டிருந்தவாறே அதாவது பிச்டத்தானியர் ஐவரைக் கொன்றமைக்கு கவலை தெரிவிப்பதாகக் கூறிய இரண்டாவது சரத்தையும் உள்ளடக்கியே காங்கிரஸினால் பிரகடனம் அங்கீகரிக்கப்பட்டது.

ராஜ்மோகன் காந்தி இலங்கையில் இருந்த ஒரு சிறு காலப்பகுதியில் தெரிவித்த செய்தி மிக முக்கியமானது. அச்செய்தியின்படி பிளவுபட்ட சமூகங்களை இணைக்கவேண்டுமானால் அதற்கு சுயவிமர்சனமும் தனது பிரச்சினைகளைப் பார்க்கும் போது ஏனையோரது பிரச்சினையும் இணைத்தே பார்க்கும் வல்லமை மிக்க மனப்பான்மைகளால்தான் முடியும் என்ற தத்துவமே முக்கியமானதாகும். முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான செய்முறையில் அனைத்து சாராரும் தாம்விட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் மூலமே கடந்தகாலப் பிளவுகளைக் கடந்து அனைவரதும் ஐக்கியத்திற்கான பாலத்தைக் கட்டி எழுப்பமுடியும். மகாத்மா காந்தி பின்பற்றிய வாழ்க்கையின் தத்துவத்தை அவர் வற்புறுத்திக் கூறியதன் மூலம் மற்றொருவரது ஆளுமையிற் புகுந்து கற்பனையாக மற்றொருவரது அனுபவத்தை உணருவதன் மூலமே இனம், வர்க்கம், சாதி ஆகியவற்றின் எல்லைகளைத் தாண்டி சமூக, அரசியல் நிறுவனங்களில் புரட்சிகரமான சிந்தனைகளைக்கொண்டுவர முடியும்.

அதி உன்னதத் தலைவர்களாக இன்று உலகம் போற்றும் தலைவர்கள் மிகக் கடினமான தீர்மானங்களைச் செய்வதற்கு ஒழுக்கமிக்க உணர்வுககளைப் பேணி அவற்றின் வாயிலாகப் பொது மனதாபிமானக் குவியக் கண்ணாடி மூலம் அவதானித்து அதில் அவர்கள் சரியென நம்பிய வகையிலேயே செயல்பட்டிருக்கின்றார்கள்.

வளர்ந்து செல்லும் நெருக்கடி

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசியல் நெருக்கடி தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றதே ஒழிய அது தணிவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இது பெரிதும் துரதிர்ஷ்டமானது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட எதிரணித் தலைவரான ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை சட்டரீதியாக எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனுத் தாக்கல் செய்திருக்கின்றார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 58 வீதமான கவர்ச்சிகரமான பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இருந்த போதிலும் அவரோ அல்லது அவரது அரசாங்கமோ தோல்வியுற்ற எதிரணியிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதாகத் தெரியவில்லை. இதற்கு நடைபெற்ற தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை எனக் குற்றம் சாட்டும் எதிரணிக் கட்சியினரது தேர்தல் பற்றிய நம்பிக்கையின்மையினை ஏற்படுத்தும் பிரசாரம் காரணமாக இருக்கலாம். தவிரவும் எந்தவொரு தேர்தல் கண்காணிப்புக் குழுவினரும் தேர்தல் சுதந்திரமானதும் நியாயபூர்வமானதாகவும் நடைபெற்றதாக கூறவில்லை. ஒருவருடைய வெற்றியின் மீது ஏனையோருக்கும் பெருமிதமனப்பாங்கு தேவைப்படுகின்றது.

தேசிய மட்டத்தில் அரசியலில் விறுவிறுப்பாக செயற்படுபவர்கள் மாத்திரம்தான் அரசியல் சூழலில் மறைந்து காணப்படும் வன்முறைகளினால் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர் என்றும் கூறுவதற்கில்லை. தொடர்ந்தும் தனி அறையில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகா மீது தனது அணுகுமுறைகளை அரசாங்கம் தளர்த்த தயாராக இல்லை. அது ஏனைய எதிர்ப்பாளர்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. அவ்வாறான எதிர்ப்பாளர்களை மாத்திரமன்றி தேசிய மட்டத்தில் சமூகத்தின் அடிமட்டத்து அங்கத்தினர்களையும் கூட அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். உயர்மட்டத்திலான பௌத்த மத மற்றும் மத குருமார்கள் உட்பட்ட சமயத் தலைவர்களது கண்டனங்களையும் கூட அரசாங்கம் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. அவர்களுடைய கண்டனங்களை பொருட்படுத்தியாவது ஓய்வுபெற்ற ஜெனரல் மீதான குற்றச்சாட்டில் தனது கடுமையைத் தளர்த்திக் கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை. பிக்குகளை கூட்டி கலந்தாலோசிக்க பௌத்த சமயத் தலைவர்கள் ஏற்பாடு செய்த கூட்டம் பாதுகாப்பு காரணம் காட்டி ஒத்தி வைக்கப்பட்டமை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளின் வளர்ச்சிக்கு ஒரு அடையாளமாகும்.

இலங்கையில் இனம் மற்றும் கட்சி அரசியல் முரண்பாடுகளால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பமும் கைநழுவிப் போய்விட்டது. இன்றைக்கு எட்டு மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை யுத்தத்தில் (மே 2009 இல்) வென்ற போது கிடைத்த முதல் சந்தர்ப்பம் கைநழுவி விடப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் விரைந்து செயற்பட்டு இதுவரை தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைத்து யுத்தப் பிரதேசங்களில் மோசமான பாதிப்புகளுக்குள்ளானவர்கள் மீது தமது அக்கறையினையும் கரிசனத்தினையும் காட்டியிருக்கலாம். ஆனால் நடந்தது என்னவோ மாறானதாகும். அரசினது நலன்புரி மையங்களில் சிறைப்பட்டிருந்த மூன்று இலட்சம் இடம்பெயர்ந்த மக்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. சிறைப்பட்டிருந்தவர்களது குடும்பங்கள் சிதறுண்டு அங்கத்தவர்களை பிரிந்து விட்டனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு முகாம்களில் பிரிந்து வாழ்ந்தனர். அவர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் தகவல் ஏதுமின்றி இருந்தனர். இதனால் ஏற்பட்ட தமிழ் மக்களது கசப்புணர்வினை ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் எடுத்துக் காட்டியுள்ளமையினை அறிந்து கொள்ளக் கூடியதாயிருந்தது.

சரத் பொன்சேகாவின் புதல்வியினது மாமியாரை அரசாங்கம் கைது செய்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் பொலிஸ் திடீர் சோதனை செய்துள்ளனர். இவையாவும் அரசாங்கம் தனது அரசியல் கட்சி எதிரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர கொண்டுள்ள உறுதியான தீர்மானத்தினைக் காட்டுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் பரந்தளவான சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சதித்திட்ட குற்றச்சாட்டு இப்போது மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. உறவினர்களுக்கு (பதவிகளில்) தனி ஆதரவு காட்டியதாகவும் ஊழல்கள் புரிந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான மக்களை தனக்கு வாக்களிக்கச் செய்வதற்காக அது எதிரணியினர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை நம்ப வைக்கச்செய்ய முடியலாம். ஆனால் நாட்டை பிளவுபடுத்தியுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதும் போகலாம். அரசாங்கத்தைப் பற்றிய கருத்து வேறுபாடு கொண்ட மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி மறைமுகமான விமர்சனங்களும் அவநம்பிக்கையும் காணப்பட்டாலும் அவை இப்போது சட்டங்களை விட உயர்வானவர்கள் மீதுள்ள அச்சம் காரணமாக ஒலிக்காது போகலாம். ஆனாலும் அவர்கள் மத்தியில் அவை தொடர்ந்தும் வளர்ந்து கொண்டே செல்லும். அரசாங்கம் ஒருவேளை மாறான முயற்சியில் இறங்கி மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க எண்ணுமேயானால் அப்போது அரசாங்கத்திற்கு தேவையான மக்கள் மத்தியிலான உயர்வான நடத்தை தொடர்பான நம்பிக்கை இவற்றால் தொடர்ந்தும் தாழ்ந்து விடலாம்.

கொழும்பிலிருந்து ஆதவன்

http://www.infotamil.ch/ta/view.php?2b44OS84a4aTd4O34b3EEQM2e22A0AKecd2YcoCce0de0MqEce0dcYJv2cd0CgmA20

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.