Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

FAQ : தமிழ்

Featured Replies

Q1: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தேக்கத்தை ஒரு பின்னடைவை இன்னும் சொல்லப்போனால் ஒரு தோல்வியைச் சந்தித்திருக்கும் ஒரு நிலையில் நாடுகடந்த அரசின் முக்கியத்துவம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதன் சாத்தியப்பாடு எதாக இருக்கப்போகிறது?

இந்த நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் முன்னெடுப்பை எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் இருந்து பார்க்க வேண்டும்.

1976 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டைத் தீர்மானமும் அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றியும் அங்குள்ள தமிழினம் தங்களுடைய அரசின் சுயநிர்ணய உரிமைக்காண முழுமையான செயலுருவம் கொடுப்பதற்காகவும் தமது இறைமையை பிரயோகிப்பதற்கு கொடுக்கப்பட்ட ஒரு அரசியல் ஆணையாக கருதப்பட்டது. அன்றைய அரசியல் தலமை அந்த அரசியல் ஆணையை சாத்வீகமான முறையில் நிறைவேற்றுவதற்கு முற்பட்டார்கள். ஆனால் அங்கு அந்த அரசியல் வெளி Political space மட்டுப்படுத்தப்பட்டு இருந்த காரணத்தினால் குறிப்பாக பேரினவாதத்தினாலும் இராணுவ மிலேட்சத்தனங்களினாலும் பின்னர் 6ஆவது அம்சச் சட்டத்தினாலும் அங்கு தமிழ் மக்களுக்கான அரசியல் வெளி மட்டுப்படுத்தப்பட்டு இருந்த காரணத்தினாலும் அங்கு தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையோ அல்லது தங்களுடைய இறைமையையோ பிரயோகிக்கக் கூடிய சூழல் அங்கு ஏற்பட்டு இருக்கவில்லை.

தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டம் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழ் ஆயதப் போராட்டமாகப் பரிணமித்தது. அந்த ஆயுதப் போராட்டமும் அந்த நிகழ்வின் நிகழ்வுபூர்வமான அரசும் அரசியல் வெளியை ஏற்படுத்தித் தந்தது. Political space ஐ ஏற்படுத்தித் தந்தது.

ஆனால் கடந்த வருடம் எங்களுக்குத் தெரியும் பல நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக சிங்களப் பேரினவாதத்திற்கு துணைபோய் அந்த நிகழ்வுபூர்வமான அரசையும் அழித்து இராணுவ பலத்தையும் பலவீனமாக்கியதனால் அங்குள்ள அரசியல் வெளி அற்றுப் போய்விட்டது.

தாயகத்தில் அரசியல் வெளி அற்றுப் போன காரணத்தினால் அந்த அரசியல் வெளியை புலத்திலதான் நாங்கள் நிறுவுவது காலத்தின் கட்டாயம். இது எங்களுடைய முக்கியமான நேரத்தில் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான கட்டம். இந்த அரசியல் வெளியை புலத்திலதான் நிறுவவேண்டும். அதுதான் நாடுகடந்த அரசாங்கத்தின் முக்கியத்துவம்.

Q2 ‐ இன்றைய நிலையில் நாடு கடந்த அரசு எவ்வாறு சாத்தியப்படப் போகிறது?

நடந்து முடிந்த பேரழிவு எமது சமூகத்தில் ஒரு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இது தவிர்க்க முடியாத ஒன்று. பெரும் அழிவு ஒன்று ஏற்படும் பொழுது தொடர்ந்து இப்படியான அதிர்வுகள் ஏற்படுவது வழமை. எனவே இதன் காரணமாக மாறுபட்ட கருத்துக்களும் நம்பிக்கையின்மையும் சமூகத்தில் வருவது இயல்பானது.

முன்பு Authentic representative ‐ ஒரு உண்மையான பிரதிநிதிகள், சர்வதேச சட்டத்தை எடுத்தால் என்ன சர்வதேச உறவுகளை எடுத்தாலும் இங்கு எடுத்த பொழுது ஐக்கிய நாடுகள் சபையிலே வந்து ஏஎன்சி (ANC) பேச்சுவார்த்தையை எடுத்தால் என்ன பிஎலஓவின் (PLO) பேச்சுவார்த்தைகளை எடுத்தால் என்ன ஐக்கிய நாடுகள் சபையே சில தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றது.

மே 18க்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த Authentic representative ஆக இருந்தார்கள். மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருந்தார்கள். அப்ப அந்த உண்மையான பிரதிநிதிகள் அப்படி ஒரு அமைப்பு ,நிகழ்வு பூர்வமான அமைப்பு இருப்பது சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. எனவே அன்றை சூழ்நிலையில் அந்த ராணுவ போராட்டத்தில் இருந்த சூழ்நிலையில் அப்படி இருந்தால்தான் நாங்கள் எங்கள் அடுத்தகட்ட ஒரு பேச்சுவார்த்தையை , அரசியல்தீர்வைக் காணக் கூடியதாக இருக்கும். ஆனால் தற்பொழுது நாங்கள் ஜனநாயக ரீதியில் போராட்ட வடிவம் மாறியிருக்கின்றது. தலைவர் சுதுமலைக்கூட்டத்தல் கூறியது போன்று போராட்ட வடிவங்கள் மாறுபடலாம். தற்பொழுது போராட்ட வடிவம் ஜனநாயக வடிவில் மாறியிருக்கின்றது. ஜனநாயக வடிவில் இந்த போராட்ட வடிவத்தை மாற்றுகின்ற பொழுது இந்த பன்மைத்துவமாக கொண்டு போவதுதான் ஆராக்கியமானதாக இருக்கும்.

Q3: இலங்கையை மையமாக வைத்துக்கொண்டு இந்த நாடு கடந்த அரசு எவ்வாறு சாத்தியப்படும் ?

தற்பொழுது நாங்கள் செய்வது என்னவென்றால் இங்கு நாங்கள் self organised democracy ஐ நாங்கள் செய்கின்றோம். இதில வந்து நாங்களே இந்த ஜனநாயகத்தை உருவாக்கிக் கொண்டு போகின்றோம். நாங்கள் உருவாக்கிக் கொண்டு போகும் போது liberal democracy அதாவது தாராண்மைவாத மக்களாட்சியை அகலித்தும் அதனை ஆழமாக்கியும் கொண்டு போகின்றோம்.

இதில வந்து மக்களுடைய பங்களிப்பு மிகவும் இருக்கின்றது. எனவே இப்படி இதனைக் கொண்டு போகும் பொழுது இது எமக்கு அரசியல் ராஜதந்திர உறவுகளையும் சர்வதேச அளவில் அதனை ஏற்படுத்துவதற்கும் உதவும்.

அப்படியொரு விடுதலைப் போராட்டம் பெற்ற அந்த ஒரு தீர்மானத்தை சர்வதேச சமுதாயம் தட்டிக் கழித்து விட்டது. அவர்கள் கூறிய அந்த ஜனநாயகம் என்ற சாட்டு. இன்றைக்கு நாங்கள் அந்த மக்கள் ஆட்சியில் ஜனநாயகம் மூலமாக இந்த மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் தமிழீழம்தான் எங்களுடைய அரசியல் தீர்ப்பு என்று கூறும் பொழுது இந்த சர்வதேச சமுதாயம் அந்தச் சாட்டைக் கூற முடியாது. அவர்கள் வேறு பல காரணங்களைக் கூறக் கூடும். ஆனால் ஜனநாயகம் என்ற அந்த சாட்டைக் கொண்டு எங்கள் போராட்டத்தை அவர்கள் மழுங்கடிக்கேலாது. எனவே அந்த விதத்தில் பார்க்கும் பொழுது இது எங்களது போரட்டத்தை தற்போதைய சூழ்நிலையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வஉதவும். அதிலே கனக்க values உம் இதற்குள் வருகின்றது. அது cosmopolitan, பொது நோக்கங்கள் global citizenship அந்த பல values ஐ நாம் இதற்குள் கொண்டு போகும் பொழுது இது எங்களது இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகின்றது.

இந்த முயற்சி இப்பொழுது Nation state என்ற முக்கியத்தையும் குறைக்குது. இப்ப நாங்கள் Trans national ஆகப் போகின்றோம். நாட்டினுடைய எல்லைகளைக் கடந்து கொண்டு போகின்றோம். இப்படிக் கொண்டு போகும் போது அந்த Nation state என்ற எங்களது விடுதலைக் கோரி;க்கைக்கு தந்த எதிர்ப்பை ஓரளவுக்கு எங்களால மழுங்கடிக்கக் கூடியதாகவிருக்கும்.

Q4: இன்றைய பிராந்திய வல்லாதிக்க அரசியல் சூழலிலே சீனாவும் இந்தியாவும் தமது வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக எல்லா வகையான ஜனநாயக விழுமியங்களையும் தகர்த்துக் கொண்டிருக்கின்றன. தகர்த்த தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலே இந்த சீனாவினுடைய இந்தியாவினுடைய அல்லது அருகாமையிலிருக்கின்ற பாகிஸ்தானுடைய அரசியல் தாக்கங்கள் அதனுடைய நடவடிக்கைகள் எல்லாம் இலங்கை மீது ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற போது இலங்கையில் தமிழ் மக்களுடைய அரசியல் குரலுக்கு சாதகமான சமிக்ஞைகள் சர்வதேச அளவிலேயோ அல்லது பிராந்திய அளவிலேயோ ஏற்படும் ?

நிச்சயமாக உலகம் மாறுகின்றது. உலகம் மாறுகின்ற போது அதனுடன் சேர்ந்து political situation அரசியல் நிலைப்பாடுகள் மாறுகின்றது. தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்ற இந்த மாற்றலின் போது அங்கு ஒரு விடியல் எங்களுக்கு வாசல்கதவு திறக்கும். குறிப்பாக விளக்கமாகச் சொல்லப் போனால் இன்றைக்கு இந்தியாவும் சீனாவும் ஒரு முரண்பட்ட நிலையில் இருக்கின்றன. அது மட்டுமல்ல இன்றைக்கு சர்வதேச வல்லரசுகளும் பிராந்திய அரசுகளும் தென்னாசியாவில் இலங்கையை மையமாக வைத்துத்தான் முட்டி மோதுகிறார்கள். இலங்கையை மையமாக வைத்து முட்டி மோதும் போது நிச்சயமாக அங்கு ஒரு வெளி ஒன்று கட்டாயம் வருவது அங்கு தவிர்க்க முடியாதது. அப்படி வருகின்ற வெளி ,வந்து எங்களுடைய தமிழீழத்திறான வாசற்கதவு என்றுதான் நாங்கள் கருதுகின்றோம். மாறி வரும் புவிசார் நிலைமைகள் எங்களுய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு சாதகமானதாக இருக்கும்.

Q5: நடந்து முடிந்த இலங்கையினுடைய பொதுத்தேர்தல் சூழலில் நாடு கடந்த அரசு உருவாக்கத்தின் கருத்தாக்கம் என்னவாகவிருக்கின்றது?

இந்தத் தேர்தல் திரும்பவும் எதைக்காட்டியிருக்கிறதெண்டால் சிங்கள மக்கள் இனவாத அடிப்படையில் ஒன்று திரண்டு ஒரு சிங்கள இன ஆட்சியை, பேரினவாதத்தைத்தான் மீண்டும் அங்கு வலியுறுத்தியிருக்கின்ற ஒன்று. இவ்வளவு காலமும் சர்வதேசம் கூறியது சிங்கள அரசியல் தலைவர்கள்தான் பேரினவாதிகள். மக்கள் இல்லை என்று. ஆனால் நடந்து முடிந்த தேர்தல் என்னத்தைக் காட்டுது என்றால் சிங்கள மக்களும் இனவாத அடிப்படையில்தான் முன்னின்று அங்கு ஒரு இனவாத அரசைத்தான் அங்கு உருவாக்கியிருக்கிறார்கள் என்பதனையே.

Q6: மக்களுடைய முன்னுரிமை என்று சொல்லப்படும் நிலையிலே முதலாவது மக்களுடைய வாழ்வாதாரம் தங்களுடைய பாதுகாப்பு தங்களுடைய இருப்பு என்கின்ற விடயங்களிலே நாடுகடந்த அரசினுடைய சாத்தியப்பாடுகள் என்னவாக இருக்கும்?

இந்த நாடுகடந்த அரசு தேர்தல் முடிந்தவுடன் தெரிவுசெய்யப்படுபவர்கள் தங்களை அரசியல் நிர்ணய சபையாக மாற்றிக்கொள்வார்கள். பின் அங்கே யாப்பு எழுதுவார்கள். இதுமட்டும் அல்லாது ஒரு நிறைவேற்றுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்காலிகமாக மனிதாபிமான மனித உரிமை தொடர்பான விடயங்களைப் பார்ப்பதற்கு இன்னொரு குழுவும் போடப்பட்டிருக்கிறது. எங்களுடைய ஆலோசனைச் சபை அறிக்கையிலும் இதனை நாங்கள் கூறியிருக்கிறோம். இதற்குத்தான் தற்போது நாங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

* தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்கள் விடயமாக மிக முக்கிய கவனம் எடுத்து ஒரு வேலைத்திட்டம்

* 12 ஆயிரம் போராளிகள் அவர்களுடைய நிலையைப் பற்றி அவர்கள் இருக்கிறார்களா இல்லையா சித்திரவதைக்குள்ளாகி இருக்கிறார்களா சட்டத்தரணிகள் அவர்களைப் போயப் பார்க்கலாமா

* நாடுகடந்த அரசாங்கம் வந்து தாயகத்திலும் ஒரு அரசியல் வெளியைத் திறக்க ஒரு pressure point ஆக அதாவது அமுக்க புள்ளியாக இருக்கும்

எனவே இதில் வந்து எங்களுடைய நாடுகடந்த அரசாங்கத்தில் வந்து மக்களுடைய உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு உந்துசக்த்தியாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.