Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீர்வேலி

Featured Replies

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் நீர்வேலிக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் கோப்பாய் என்ற ஊரினை தெற்கெல்லையாகவும் ஊரெழு, உரும்பிராய், அச்செழு ஆகிய ஊர்களை மேற்கு எல்லையாகவும் சிறுப்பிட்டி என்ற ஊரினை வடக்கெல்லையாகவும் நீண்ட தரவை மற்றும் நீரேரியை கிழக்கெல்லையாகவும் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் என்றதும் பனைமரம் அதன் குறியீடாக அமைவதைப்போல நீர்வேலி என்றதும் எல்லோரது நினைவுக்கும் வருவது வாழைமரம் ஆகும்.

பெயர்க்காரணம்

கோப்பாய் உதவி அரசாங்க அதிபர் பிரிவினுள் நீர்வேலிக் கிராம நிர்வாகம் உள்ளடங்குகிறது. இவ்வூரின் பெயர்க்காரணமாக நீரை வேலியாக உடையதால் நீர்வேலி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது. நீர்வேலி ஊரின் கிழக்கெல்லையாக நீர்நிலை உள்ளமை இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது. இது தவிர 'வேலி' என்ற சொல்லிற்கு ஊர், இடம் என்ற பொருள்களும் தமிழ் அகராதியில் உண்டு. ஆகவே மன நீர்மை மிக்க மக்கள் வாழும் ஊர் என்ற பொருளிலும் இது வழங்கப்பெறக் காணலாம்.

அச்சுவேலி, கட்டைவேலி, விளைவேலி, சங்குவேலி, திருநெல்வேலி போன்ற யாழ்ப்பாணத்துக் கிரமங்களின் பெயர்களும் வேலி என்ற சொற்பதத்தைத் தம்மகத்தே உடையனவாயுள்ளமை ஈண்டு சிந்திக்கத்தக்கது. இந்த வகையில் நீர்வேலி என்ற பெயர் இக்கிராமத்திற்கு உண்டாகியிருக்கின்றமையும் கவனிக்கத்தக்கதே.

யாழ்ப்பாணத்திலிருந்து பதினைந்து கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தை இராஜவீதி மற்றும் யாழ் - பருத்தித்துறை நெடுஞ்சாலை என்பன நகரத்துடன் தொடுக்கின்றன. பெயருக்கேற்ற வகையில் நீர்வேலி தண்ணீருக்குப் பஞ்சம் இல்லாத ஊர். இதனால் நீர்ப்பஞ்சம் இல்லாத இந்த ஊரில் விளைச்சலுக்கும் குறைவில்லை. பஞ்சமில்லாத இந்த ஊரில் வாழ்வோர் கொடைச்சிறப்பு உடையவர்களாக வாழ்கின்றனர். இக்காரணத்தால் தொன்மைக்காலம் தொட்டு ஒழுக்கத்துடனும் கொடைச்சிறப்புடனும் இக்கிராம மக்கள் வாழ்ந்துள்ளனர்.

இக்கிராம மக்கள் வழங்கிய விருந்துபசாரத்தில் மகிழ்ந்த வரகவி சின்னத்தம்பிப்புலவர் 'நீர்வேலி கோப்பாய் நிறை செல்வமாகும்' என்று பாடியுள்ளார்.

இக்கிராம வளத்தைப் பாடமுனைந்த அறிஞர் கு.சிற்சபேசன்

'புன்னை மாதுளை பூங்கொதி மாபுளி

தென்னை கூவிளந் தேனுகர் வண்டினம்

துன்னு பூக வனந்தொறும் வாழையோ

அன்ன தாழையோடு அடர்ந்தது சோலையே' என்று வியந்து பாடுகிறார்.

நீர்வையம்பதி - நீர்வேலி என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற இந்த ஊர் வரலாற்றுச்சிறப்புமிக்கது. யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசர்களில் ஒருவனான சிங்கைப் பரராஜசேகரனின் மருமகனும் அவனது முதல் மந்திரியாகத் திகழ்ந்தவனுமாகிய தமிழில் இரகுவம்ச மகா காவியத்தை யாத்த 'அரசகேசரி' என்பவன் அமைத்ததாகக் கருதப்படும் அருள்வளர் ஸ்ரீஅரசகேசரிப் பிள்ளையார் கோயில் நீர்வேலியூரின் நடுநாயகமாக விளங்குகிறது. இது இவ்வூரின் தொன்மைச் சிறப்பைக் காட்டி நிற்கிறது. இவ்வூரினூடே பழங்கால ராஜாக்கள் பாவித்த 'இராஜவீதி' ஊடறுத்துச் செல்கின்றமையும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

இயற்கை வளங்கள் நிறைந்த இந்த ஊர் வாழைக்குப் பெயர் பெற்றது. இதனால் 'கதலிவனம்' என்கிற சிறப்பை உடையது. தவிர அறிஞர்களும் குருமார்களும் கலைஞர்களும் வேளாண்மை செய்பவர்களும் கவிஞர்களும் நிறைந்து வாழ்ந்ததாலும் வாழ்வதாலும் இவ்வூர் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றது. அதிகளவில் இந்துக்கள் வாழும் இந்த ஊரில் இந்துக்கோயில்கள் அதிகளவிலும் சிறப்புற்றும் காணப்படுகின்றன.

மேலதிக கட்டுரைக்கு .... www.yarlmann.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.