Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கம்பீரமிக்க நாடுகடந்த தமிழீழ அரசை களங்கப்படுத்துபவர்க்கள் யார்? – கலாநிதி ராம் சிவலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கம்பீரமிக்க நாடுகடந்த தமிழீழ அரசை களங்கப்படுத்துபவர்க்கள் யார்? – கலாநிதி ராம் சிவலிங்கம்

உலக அரங்கிலே மாண்புமிகு தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக மற்றய அரசுகளுடன் சரிசமமாக நின்று எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டிய வேளை எம் மக்களின் தேவைகளை கவனிக்கவேண்டிய நேரம் நம்மில் சிலரின் அறியாமையாலும் சந்தற்பவதிகளின் சதிகாரகத்தாலும் தனித்துவமான ஓர் அரசியல் சக்தியான நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் தாமத்மாவது கண்டு வேதனையடைகிறேன் வெட்கப்படுகிறேன் வருந்துகிறேன்.

நாம் எடுக்கவேண்டிய பணிகளைத் தாமதிக்க வைக்க எம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்த கே.பீ இதைச் சொன்னார் என்று ஒருவர் கூற அதற்கு இன்னொருவர் விளக்கம் கூற அதைக்கண்டு சந்தற்பவாதிகளும் சதிகாரக்கும்பல்களும் வியாக்கியாணம் சொல்ல இதனால் பாதிக்கப்படுபவர்கள் யாரப்பா? கொட்டும் மழையிலும் முள்ளுவேலிக்குள் முடங்கி வாழும் எம் அன்பு உறவுகள்தானே.

கே.பீ கூறாததையே அவர் கூறினார் எனக்கூறி கும்மாளம் அடிப்பவர்களே! கே. பீ யாரப்பா? அவர் ஓர் சிங்கள அரசாங்கத்தின் சிறைக்கைதி. அவர் கூறும் எதற்குமே அர்ததம் இல்லாதபோது அவர் நாடுகடந்த தமிழீழ அரசைப்பற்றியும் அதன் தலைவரைப்பற்றியும் இப்படிக் கூரினார் என்று பொய்யான வதந்திகளைப் பரப்புவது ஓர் துரோகச்செயல் என்பதை மறந்துவிடாதீர்கள். சிங்களவர் விருப்பத்திற்கு உருவம் கொடுக்கும் உங்களை எம்மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டர்கள்.

ஈழத்தமிழரின் சாவுக்கு நாள் குறித்த யமனையே தான் போட்ட கணகுகள் பிழைத்துவிடனவே என தடுமாறவைத்த இராசபக்சாவையே கல்ங்கவைத்த நாடுகடந்த தமிழீழ அரசையும் அதன் தகுதிவாய்ந்த தலைவரான உருத்திரகுமாரையும் அர்த்தமற்றஇ உண்மைக்குப் புறம்பான் பிரச்சாரத்தால் முடங்கவைக்க முனைவதை எம்மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என்பதை சிங்களவர்கள்போல் இவர்களும் புரியும் நாள் வெகுதொலைவில் இல்லை.

நாடுகடந்த தமிழீழ அரசை உடைப்போம்இ அழிப்போம் என்ற் இராசபக்சா சகோதரரின் எண்ணத்தை அறிந்தும் செயற்படும் எம்மவர் சிலரின் மனநிலைகண்டு எந்தத் தமிழராலும் வெதும்பாமலோ அல்லது வேதனையடையாமலோ இருக்கமுடியாது. இது உண்மை.

இங்கு கொச்சை பாடவோ அல்லது குறைகூறவோ இடமில்லை என்பதை எம்மவரில் சிலர் என்னும் உணராது கூச்சல் போடுவது விசித்திரமானதும் விரும்பத்தகாததுமாகும். இதைக் கூறுபவர்கள் யார்? எதற்காக இதைச் செய்கிறார்கள் என்பதை ஒவ்வொரு தமிழரும் நன்கு அறிந்துகொள்ள் வேண்டும். பச்சைப் பாம்பா அல்லது பச்சைகொடியா என அறிவதற்கு அனுபவம் தேவை என்பார்கள். அதுபோல அரசியலை வாழ்கையாகக் கொண்ட உங்களுக்கு இவர்கள் யார்? இவர்கள் நோக்கம் என்ன? என்று விளங்காத விடயமா அல்லது புரியாதா புதிரா ?

தந்தை செல்வவின் அறவழிப்போரின் திருப்பம்இ அதன் பின்பு தேசியத் தலைவரின் தலைமயிலான அந்த அபூர்வம்மிக்க ஆயுதப்போர்இ இறுதியாக நாம் நடாத்தும் நாடுகடந்த தமிழீழ அரசின் தனித்துவமான அரசியல் முனெடுப்பு இவைதானே இறமையும்இ சுதந்திரமும் கொண்ட ஓர் தமிழீழத் தாயகத்தைப்பெற நாம்வகுத்த திட்டங்கள்.

எம் அன்பு உறவுகளே! மழையான உங்களை நிலமான நாங்கள் ஏந்துவோம் என்ற உங்கள் எதிர்பார்ப்பை எவராலும் ஒருபோதும் மாற்றமுடியாது. நாடுகடந்த தமிழீழ அரசும்இ அதன் தலைவர் விசுவநாதன் உருத்திரகுமாரனும் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டர்கள். இது நிட்சயம். நாடுகடந்த தமிழீழ அரசின் ஆரம்பகாலம் தொடக்கம் அவரையும் அவரின் செயற்பாடுகளையும் நன்றாகத் தெரிந்தவன் நான்.

தமிழரையும்இ தமிழையும் காக்க தன் உயிரைத் தருவதை ஒரு வ்ரமக எண்ணிச் செயற்பட்ட எம் மாவீரரின் கனவு நனவாகவேண்டும். தந்தை செவாவின் ஆத்மா சாந்தியடையவேண்டும். தேசியத் தலைவரின் முயற்சி முழுமைபெறவேண்டும். இவைதானே தமிழரின் தாகம். இவையெல்லாம் நிறைவுபெற்:

• கே. பி க்கும்இ தனக்கும்இ நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென் பல அறிக்கைகள் வழக்கறிஞர் விசுவநாதன் உருத்திரகுமாரனால் விடப்பட்டும்இ தமக்குச் சாத்தியமானவேளை அவரின் விசுவாசத்திற்கு பரீட்சை வைப்பதுபோல் பாசாங்கு செயும் சந்தற்பவதிகளும்இ சதிகாரக் கும்பலும் தமது முயற்சியை இந்த நிமிடமே கைவிடவேண்டும்.

• நாடுகடந்த தமிழீழ அரசிலும் அதன் தலைவர் உருத்திரகுமரனிலும் முழு நம்பிக்கவைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொடக்கம் ஒவ்வொரு தமிழரும் காலதாமதமின்றி கண்ணியத்துடன் ஒத்துழைக்கவேண்டும்.

• எம் இனத்துக்கு உதவி செயவேண்டும்இ அவர்கள் வாழ்வை வளம்படுத்தவேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு இதுவரை ஒன்றுமே செயமுடியாமல் பதவிகள் வகிக்கும் தமிழீழ அரசின் பிரதிநிதிகள் இனியும் எமது முனேற்றத்துக்கு தடையாக இருக்காமல் உடனடியாக தமது பதவிகளில் இருந்து பெருந்தன்மையாக விலகி மற்ற்வர்களுக்கு இடம்தர வேண்டும்.

• பிரதிநிதிகளாக்த் தெர்வுசெயப்படாத திறமையும்இ இராசதந்திரமும்இ சணக்கியமும் கொண்டவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசில் இணைத்து செயற்பட முன்வரவேண்டும். தேர்வுசெயப்பட்ட பிரதிநிதிகள் இவர்களுக்கு தகுந்த பதவிகளையும்இ அதிகாரத்தையும் கொடுக்கும் மனப்பக்குவத்துடன் செயற்பட வேண்டும்.

அறவழிப் போருக்குத் தேவை மக்களின் பங்களிப்பு ஆயுதப் போர்க்கு வேண்டியது போராளிகள் வீரமும் தீரமும். ஆனால் இன்று நடப்பதோ அரசியல்ப் போர். இது திறமையும்இ இராசதந்திரமும் சணக்கியமும் கொண்டவர்களால் நடத்தப்படவேண்டிய மூளைக்கும் மூளைக்குமான ஓர் போர். ஒவ்வொரு தேர்வு செயப்பட்ட பிரதிநிதிகளும் பொறுப்பான பதவிகளைவகிப்பவர்களும் இந்த வர்ணணைக்குள் அடங்குவதே சாலப்பொருந்தது.

http://meenakam.com/?p=5853

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.