Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமான் கைதைக்கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் கைதைக்கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை சிறையில் அடைத்ததைக்கண்டித்து கனடாவிலுள்ள இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

823_0152.jpg

823_0118.jpg

மேலதிக படங்களுக்கு

http://meenakam.com/?p=6176

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[3ஆம் இணைப்பு] நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை சிறையில் அடைத்ததைக்கண்டித்து கனடாவிலுள்ள இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கனேடிய தமிழ் சமூகம் மற்றும் கனேடிய மாணவர் சமூகம் இணைந்து நடாத்திய அமைதி வழிப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை செர்போர்ன் மற்றும் ப்ளோர் சந்திப்பில் உள்ள இந்திய துணை தூதராலயத்துக்குமுன் நடைபெற்றது.

மாலை இரண்டு மணிக்கு ஆரம்பமாகிய இந்த போராட்டம் ஏழு மணிவரை தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் முக்கியமாக மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் உணர்வாளர் சீமானை விடுதலை செய்யகோரியும், இலங்கை கடற்படையால் அநியாயமாக கொல்லப்படும் தமிழ்நாடு மீனவர்களின் கொலைகளை தடுத்து நிறுத்தக்கோரியும், இலங்கையில் நடைபெறும் போர்குற்றவியல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்ககோரியும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இவைதவிர இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு ஆதரவாக இருந்த இந்திய அரசையும் தமிழ்நாடு அரசையும் கண்டிக்கும் பதாகைகளும் அங்குவந்திருந்த மக்கள் ஏந்தியிருந்தனர். இவற்றோடு, கைதுசெய்யப்பட்ட தமிழ் உணர்வாளர் சீமானின் படங்களும் பலர் கைகளில் காணக்கூடியதாகவிருந்தது. இதில் கலந்துகொண்ட சிலர் இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பான செய்திகள் உள்ள துண்டுபிரசுரங்களை அந்தவழியாக சென்றுகொண்டிருந்த வேற்றினமக்களுக்கு விநியோகித்தார்கள். பலர் இவற்றை ஆவலுடன் வாங்கிச்சென்றதை அவதானிக்ககூடியதாகவிருந்தது. மிகவும் உணர்வெழுச்சியுடன் நிறைவுற்றது.

நாம் தமிழர் இயக்கம் (கனடா) தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடிய தமிழ் சமூகம், கனடிய மாணவர் சமூகம் ஆகியன சேர்ந்து நடத்திய கண்டனப் பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டார்கள். தமிழ் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் முழக்க அட்டைகளையும் நாம்தமிழர் கட்சி நிறுவனர் சீமானின் படத்தையும் தாங்கிய வண்ணம் நடைபாதையின் இரு மருங்கிலும் தமிழ் உணர்வாளர்கள் நீக்கமற நிறைந்து காணப்பட்டார்கள். புலிக் கொடிகளும் ஆங்காங்கே பட்டொளி வீசிப் பறந்தன.

தமிழக முதல்வர் கருணாநிதி, இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இருவரையும் இலக்கு வைத்து கண்டன முழக்கங்கள் ஆங்கிலத்தில் பேரணியில் கலந்து கொண்டவர்களால் எழுப்பப்பட்டன.

யேசு நாதர் சாவுக்கு யூதாஸ் காரணம்

தமிழர்கள் சாவுக்கு கருணாநிதி காரணம்!

கருணாநிதி ஒரு வெட்கம் கெட்ட மனிதர்

சீமானை உடனே விடுதலை செய்!

550 தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

கருணாநிதியும் சோனியாவும் வேடிக்கை பார்த்தனர்!

கருணாநிதியும் சோனியாவும் இலட்சக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு

துணையாகவும் உடந்தையாகவும் இருந்தார்கள்!

சோனியா காந்தி, சிவசங்கர் மேனன், எம்.கே. நாராயணன் தமிழினப் படுகொலையின் சூத்ரதாரிகள்!

கருணாநிதியை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது மறக்காது!

நாங்கள் இறக்க நேரிடலாம் ஆனால் எங்கள் நம்பிக்கைகளும் கனவுகளும் இறப்பதில்லை!

இது போன்ற முழக்கங்களைக் கொண்ட அட்டைகளை தமிழ் உணர்வாளர்கள் ஏந்தி நின்றனர். காவல்துறைக்கு வேலை வைக்காமல் நடை பாதையின் இரண்டு பக்கமும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் மக்கள் திரண்டு நின்றார்கள்.

கழுதையில் ஊர்வலம் போவதைப் போல் சித்தரிக்கும் கருணாநிதி மற்றும் சோனியா இருவரது வெட்டுருக்கள் பலரது கவனத்தை ஈர்ந்தது.

கண்டனப் பேரணியில் உரையாற்றிய வண. பிரான்சிஸ் சேவியர் அடிகளார் தமிழ்நாட்டில் தமிழ் உணர்வாளர்களுக்கு எதிராகத் தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவி சீமான் போன்றோரை கைது செய்வதைக் காட்டமாகக் கண்டித்தார்.

“ஒரு காலத்தில் பேச்சுச் சுதந்திரத்துக்காக குரல் கொடுத்தவர்களும் அதற்காக சிறை சென்றவர்களும் இன்று ஏறிய ஏணியை உதைத்துத் தள்ளிவிட்டு அடக்குமுறை ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். இப்படியான கைதுகள் மூலமோ அடக்குமுறை மூலமோ தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடிக்க முதல்வர் கருணாநிதி நினைத்தால் அது ஒரு போதும் நிறைவேறாது.விடுதலைக்கான எமது பயணம் தொய்வோ இடைவெளியோ இல்லாது தொடரும். உலகத்தில் ஏழு கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். எங்களை ஒன்றறரைக் கோடி சிங்களவர்கள் ஆயுதம் கொண்டு அடக்கிவிட முடியாது. தமிழீழத்தில் ஒரு இலட்சம் எண்ணிக்கை கொண்ட சிங்கள இராணுவம் முகாம் இட்டுள்ளது. அங்கு சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள். யப்பான் அரசு கொடுத்த ஆயிரம் புத்த சிலைகள் வடக்கில் மூலை முடுக்கெல்லாம் நடப்படுகிறது. தமிழ் ஊர்ப்பெயர்கள் சிங்களத்தில் எழுதி வைக்கப்படுகிறது. முகாம்களில் சிக்குண்டுள்ள பொது மக்கள் குடிக்கக் கஞ்சியின்றி உடுக்க உடையின்றி அவலப்படுகிறார்கள். முதல்வர் கருணாநிதி இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதாக இல்லை. அவரது கவனம் ஆட்சியைப் பிடிப்பதிலும் அதனைத் தக்க வைப்பதிலுமே இருக்கிறது. புலம்பெயர் தமிழ் மக்கள் தோல்வி கண்டு துவண்டுவிடாமல் நம்பிக்கையோடும் மன வைராக்கியத்தோடும் எங்களுக்குள் இருக்கும் துரோகிகளைப் பற்றிக் கவலைப்படாமல் எமது விடுதலையை வென்றெடுக்கத் தொடர்ந்து போராட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

மதியம் 2.00 மணி தொடக்கம் மாலை 7.00 வரை நீடித்த கண்டனப் பேரணி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்தோடு நிறைவெய்தியது.

http://meenakam.com/?p=6176

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.