Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா சு.கவின் உபதலைவராக இருக்கின்றமைதான் சந்திரிகாவுக்கு அதிக வேதனை! சட்டத்தரணி வாதம்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ தளபதிகளில் ஒருவராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக இருக்கின்றமையால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மிகவும் மன வேதனையை அனுபவித்து வருகின்றார்.

கொழும்பு நகர சபை மண்டப வளவில் வைத்து புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலால் அவர் அடைந்த கடுமையான வேதனையை விட இது அதிகமானது.”

கொழும்பு நகரசபை மண்டப வளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மீது 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகளால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.

அத்தாக்குதலில் சந்திரிகாவின் கண் ஒன்று பறி போனது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் ,பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், சில பொலிஸ் உத்தியோகத்தர்கள்,இராணுவ அதிகாரி ஒருவர்,பௌத்த பிக்கு ஒருவர், சிவிலியன்கள் ஆகியோர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயம் அடைந்தனர்.

இத்தாக்குதல் சம்பந்தமாக நால்வருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது. வேலாயுதன் வரதராஜா (உதயன்), எஸ். இலங்கேஸ்வரன், வேலாயுதன் வரதராஜா (உதயன்), பூசகர் எஸ்.ரகுபதி சர்மா, பூசகர் ரகுபதி சர்மாவின் மனைவி சந்திரா ரகுபதி ஆகியோரே அவர்கள்.

2002 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரம் சட்ட மா அதிபரால் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கினர், 26 பேரின் மரணங்களுக்கும் 80 பேரின் படுகாயங்களுக்கும் காரணமாகினர், நாட்டின் முதல் பிரஜையை கொல்லச் சதித் திட்டம் தீட்டி இருந்தனர் ஆகியன உட்பட 110 குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

எதிரிகளில் ஒருவரான இலங்கேஸ்வரன் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

நேற்று இவ்வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்றது. அப்போது இலங்கேஸ்வரனை ஆதரித்து சட்டத்தரணி ரவீந்திர டீ சில்வா ஆஜராகி வாதாடினார்.

குற்றங்களை ஒப்புக் கொண்டிருக்கும் அவரது கட்சிக்காரருக்கு குறைந்த பட்சத் தண்டனையையே வழங்க வேண்டும் கோரினார். அப்படி வாதாடியபோதே இப்படித் தெரிவித்தார்.

அவரது வாதம் வருமாறு:-

சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க அன்று இத்தாக்குதலால் அடைந்த கடுமையான வேதனையை விட இன்று அனுபவித்து வரும் மன வேதனை அதிகமானது. இத்தாக்குதலை நடத்திய புலிகள் இயக்கத்தின் இராணுவத் தளபதிகளில் ஒருவர்தான் கருணா.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர்களில் ஒருவராக இன்று கருணா இருக்கின்றார். இதுவே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அன்றைய தற்கொலைத் தாக்குதலை விட மிகுந்த மன வேதனையைக் கொடுத்திருக்கும் விடயம்.

கொடிய யுத்தத்தில் பங்கேற்ற பலர் அதற்காக தற்போது வேதனைப்படுகின்றனர். குற்றம் இழைத்தபோது அவர்கள் வயதில் சிறியவர்கள். அவர்கள் சிறையில் காலத்தை கழிக்க வேண்டி உள்ளது. இவ்வழக்கோடு சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்பானவர்களில் சிலர் இறந்து விட்டார்கள்.

சிலர் இன்று சுகபோகங்களை அனுபவித்து வருகின்றார்கள். எனது கட்சிக்காரர் கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 19. கடந்த 11 வருடங்களாகச் சிறையில் இருந்து வருகின்றார். திருந்தி வாழ ஆசைப்படுகின்றார்.

புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்புகின்றார். இவரைத் திருமணம் செய்கின்றமைக்குயுவதி ஒருவர்- காதலி தயாராக உள்ளார். ( நீதிமன்றில் பிரசன்னமாகி இருந்த யுவதி ஒருவரை நீதிபதிக்கு சுட்டிக் காட்டினார் சட்டத்தரணி.) எனவே இந்நீதிமன்றம் எனது கட்சிக்காரருக்கு குறைந்த பட்சத் தண்டனையையே வழங்க வேண்டும்." சட்டமா அதிபரின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கபில விஜேவர்தன ஆஜராகி வாதாடினார்.

அவரது வாதங்கள் வருமாறு:-

”இத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரங்க ஒரு கண்ணின் பார்வையை முழுமையாக இழந்து விட்டார். இத்தாக்குதலால் ஏராளமான உயிரிழப்புக்களும், சேதங்களும், பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்கின்றன.

மிகப் பெரிய வெடிபொருள் இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட்ருக்கின்றன அரச பகுப்பாய்வாளர்கள் இந்நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கைகள் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. எதிரிகளில் ஒருவரனான இலங்கேஸ்வரன் புத்தளம்வாசி.

அவர் இப்பாரிய வெடிபொருளை முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வான் ஒன்றில் மறைத்து வைத்து கொழும்புக்கு கொண்டு வந்திருக்கின்றார். எதிரி இலங்கேஸ்வரன் நன்றாக அறிந்துகொண்டே இக்குற்றச்செயலைச் செய்து இருக்கின்றார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியும் இதே மாதிரியான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில்தான் கொல்லப்பட்டார். அங்கு குற்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்தார்கள்.

எவருக்கும் எவருடைய உயிர் வாழும் உரிமையைப் பறிக்கும் அதிகாரம் கிடையாது என்று இந்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாட்டின் முதல் பிரஜையைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமையும், இப்படுகொலை முயற்சிக்கு உதவி, ஒத்தாசை வழங்கியமையும் மிகப் பெரிய குற்றங்கள் ஆகும்.

இத்தாக்குதலில் ஏற்பட்ட பாரிய உயிர் இழப்புக்கள், கடுமையான சேதங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், உயிர் இழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும் இந்நீதிமன்றம் எதிர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.”

நீதிபதி டபிள்யூ.ரி.எம்.பி.வி.வரவெவ இரு தரப்பு வாதங்களையும் கவனமாக செவிமடுத்தார். அவர் நீதிமன்ற உத்தரவு எதிர்வரும் 25 ஆம் திகதி ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=11994:2010-10-11-10-12-07&catid=55:2009-12-16-09-39-06&Itemid=413

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.