Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்ட தமிழருவி சஞ்சிகை வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு)

Featured Replies

பல தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்ட தமிழருவி சஞ்சிகை வெளியீட்டு விழா 1.10.2010 வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணியளவில் Homebush ஆண்கள் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.

மொழியால் இணைந்து உணர்வாய் எழுவதற்காய் சிட்னியில் ஊற்றெடுத்திருக்கும் தமிழருவி விழாவில் திரு. திருநந்தகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

திருமதி சோனா பிறின்ஸ் அவர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்வில் மங்கள விளக்கை திருமதி. திருநந்தகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார். மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து இன மொழி விடுதலைப் போராட்டங்களில் வீரச்சாவடைந்தோருக்கும் அந்நிய சக்திகளால் படுகொலை செய்யப்பட்டோருக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அகவணக்கம் நிறைவடைந்ததும் சுதா தனபாலசிங்கம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். வரவேற்புரையைத் தொடர்ந்து பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.

கவிஞர் ஆறு.குமாரச்செல்வம் அவர்களின் புத்தக விமர்சனத்துடன் புத்தக வெளியீடு ஆரம்பமானது. முதல் பிரதியை ஆஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் தலைவர் திரு. திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள் பிரதம விருந்தினரிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ் சங்கத்தின் தலைவரிடமிருந்து சஞ்சிகைகளைப் பெற்றுக்கொண்டனர். நிகழ்வின் பிரதான அனுசரணையாளர் MSN Worldwide Money Transfer செல்வக்குமார் ருத்திரசீலன் அவர்கள் கேணல் அமுதாப்பின் சகோதரனிடமிருந்து சஞ்சிகையைப் பெற்றுக்கொண்டார்.

பிரதம விருந்தினர் மற்றும் தமிழ் சங்கத் தலைவர் ஆகியோரின் வாழ்த்துரையைத் தொடர்ந்து தமிழருவி குடும்பத்தைச் சேர்ந்த திருமதி. நிதர்சினி செல்வக்குமாரின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.

படங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

-பூராயம்-

Edited by ஊர்பூராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.