Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்னிச்சையாக உள்ளூராட்சி எல்லைகளை வரையறுக்க அரசு இரகசிய முயற்சி - எதிரணி குற்றச்சாட்டு

Featured Replies

பாராளுமன்றத்தில் தேவையான சட்டமூலத்தை நிறைவேற்றாமல் புதிய முறைமையின் கீழ் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தவிருக்கும் அரசாங்கமானது வட்டாரங்களை இரகசியமான முறையில் மட்டுப்படுத்தும் வேலைகளை முன்னெடுத்துச் செல்வதாக அரசாங்கத்தின் மீது பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இக் குற்றச்

சாட்டைத் தெரிவித்திருக்கிறார். இந்த விடயம் குறித்து தேவையான அடிப்படை வேலைகளைச் செய்யுமாறு உத்தியோகபற்றற்ற முறையில் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தும்போது வெளிப்படைத்தன்மை மற்றும் பதிலளிக்கும் கடப்பாட்டை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அரசாங்கத்துடன் நாங்கள் ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். எமது யோசனைகளையும் முன்வைத்திருந்தோம். இப்போது பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் இந்த விடயம் ஆலோசிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. சபையில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இந்த விடயம் ஆலோசிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் அரசாங்கம் மட்டுப்படுத்துவதற்கான வேலையை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக எமக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதுவொரு இரகசியமான நடவடிக்கையாகும் என்றும் அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கம் கொண்டுவரவுள்ள உள்ளூராட்சி சட்டமூலத்தை எதிர்க்கவில்லையாயினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விதந்துரைப்புகளில் உடன்பாடில்லையென திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

பல்லின மக்கள் தேர்வு முறைமை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளிடமும் மக்களிடமும் கால அவகாசத்தை வழங்கி ஆலோசனை பெற வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்குக் கொண்டுவர நடவடிக்கையெடுத்துள்ளது. இந்தச் சட்டமூலத்தில் உள்ள சில விதந்துரைப்புகளை எம்மால் ஏற்க முடியாது. 35 வயதுக்குட்பட்ட இளைஞர்,பெண்கள் தேர்தலில் போட்டியிடுவது 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 88,89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இளைஞர் தொடர்பில் அமைக்கப்பட்ட ஆணைக்குழு 40 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.

இந்த 25 சதவீதத்திலேயே பெண்களுக்கு இடமளிக்க வேண்டுமென்பதால் இளைய சமூகம் போட்டியிடும் தன்மை குறைக்கப்படுகின்றது. உள்ளூராட்சித் தேர்தலே இளைஞர்,பெண்களை அரசியலில் நுழைய இடமளிப்பதால் இதனை 40 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டுமெனக் கோருகின்றோம்.

புதிய அரசியல் கட்சிக,ள் குழுக்கள் ஆசனம் பெறுவதற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பல்லின மக்கள் தேர்வு முறை தொடர்பில் தெளிவில்லை. சிறுபான்மையினத்தவர்களைப் பாதிக்காத வகையில் தொகுதிகளை நிர்ணயம் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் மாவட்ட மற்றும் தேசியக் குழுக்களின் ஆலோசனை மட்டுமன்றி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களிடமும் தகுந்த கால அவகாசத்தை வழங்கி ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

அரசாங்கம் தமக்கு வேண்டிய விதத்தில் இதனைச் செய்யாது மலையகப் பகுதிகளில் தோட்டங்கள், கிராமங்கள் உள்ளன. அதேபோல் சில இடங்களில் சிங்களமுஸ்லிம் மக்கள் உள்ளனர். இந்நிலையில், சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையில் தொகுதிகளை அமைத்து அவர்களது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

இது தொடர்பில் அரசுடன் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமன்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடத்தியது. உள்ளூராட்சி தேர்தல் முறை தொடர்பில் குறைபாடுள்ள நிலையில் அதனைச் சீர்படுத்த ஆரம்பிப்பதற்கு பேச்சுக்குச் சென்றோம்.

இந்நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளூராட்சி தேர்தலை அரசு நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கொழும்பு மாநகர சபையை அதிகார சபையாக மாற்ற நடவடிக்கையெடுக்கப்படுகின்றது. கொழும்பு மாநகரசபையை அதிகாரசபை அதிகாரிகள் ஊடாகவே நிர்வகிக்க முடியுமென அரசு தரப்பினர் கூறுகின்றனர். இந்த மாநகரசபையை மக்கள் பிரதிநிதிகள் ஊடாக அபிவிருத்தி செய்ய முடியாதா என்று கேட்கின்றேன்.

மக்களின் வாக்குரிமையை இல்லாமல் செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை. இதனை எதிர்த்து மாநகரசபை மக்களினை தெளிவுபடுத்தி மகஜரில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம். இதனைத் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பவுள்ளோம். அத்துடன், மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

Eelanatham

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.