Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெனிக்பாமில் இருந்து வலுக்கட்டாயமாக மக்கள் மாற்றப்படுகின்றனர்.

Featured Replies

புதன்கிழமை, நவம்பர் 17, 2010

இலங்கையின் வடக்கே மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் தொகுதியில் உள்ள இராமநாதன் முகாமில் இருப்பவர்களை அதே தொகுதியில் உள்ள கதிர்காமர் முகாமுக்கு பலாத்காரமாக மாற்றுவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் தாம் இடம்மாறுவதற்குத் தங்களுக்கு விருப்பமில்லை என்ற தமது நிலைப்பாட்டை அதிகாரிகளிடம் தெரிவித்து, மாற்று நடவடிக்கை எடுக்குமாறு கோருவதற்காக எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை என முகாமில் வதிவோர் தெரிவித்துள்ளனர்.

இராமநாதன் முகாமில் மாத்திரம் 4500 பேர் வரையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இங்குள்ளவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி கதிர்காமர் முகாமுக்கு இடம் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களுக்கு இங்குள்ள குடும்பங்கள் 19 ஆம் திகதி மீள்குடியேற்றத்திற்காகக் கொண்டு செல்லப்படவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் இராமநாதன் முகாமில் உள்ளவர்கள் கூறியுள்ளார்கள்.

புதிய இடத்தில் இந்த மக்களின் நலன்கள் கவனிக்கப்படும் என மனிக்பாம்முகாம் இராணுவத்தினர் உறுதியளித்துள்ள போதிலும், தற்போதுள்ள இடத்திலிருந்து தமது சொந்த இடத்தில் சென்று மீள்குடியேறுவதையே இவர்கள் விரும்புகின்றார்கள்.

மனிக்பாம் முகாமில் இருந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதையடுத்து, அங்கு எஞ்சியுள்ளவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கான நிர்வாகச் செயற்பாடுகளுக்கு வசதியாகவே இவ்வாறாக மக்கள் இடம்மாற்றப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

மனிக்பாம் ஸோன் 4 எனப்படும் வலயம் நான்கைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாக அண்மையில் அதிகாரிகளினால் கதிர்காமர் முகாமுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நிர்வாகத்திற்கு இலகை அதிகாரிகள் பார்க்கின்றார்களே ஒழிய மக்களின் நலனை பார்க்கவில்லை என்றார் முகாமில் வதியும் குழுத்தலைவர்.

EElanatham.Net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.