Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராளிகளை மீட்டுத்தர நான் பணம் வாங்கினேனா? தப்பு என்கிறார் வினாயகமூர்த்தி எம்.பி.

Featured Replies

போராளிகளை மீட்டுத்தர நான் பணம் வாங்கினேனா? தப்பு என்கிறார் வினாயகமூர்த்தி எம்.பி.

போராளி எழிலனின் மனைவி அரசியல் துறை துணைப்பொறுப்பாளர் சுதாவின் உறவினர் ஆகியோரிடம் சம்பந்தப்பட்டவர்களை மீட்டுத்தர காசு வாங்கியதாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உண்மையில் நான் வாங்கவில்லைஇவ்வாறு கூறியுள்ளார் கூட்டமைப்பு எம்.பி. வினாகமூர்த்தி

உண்மையில் நடந்தது என்ன?

கடந்த சில வாரங்களிற்கு முன்பு மேஜர் மதியழகன் என்று தன்னை அறிமுகப்படுத்தியவர் தான் பயங்கரவாத புலனாய்வுத்துறையைச் சார்ந்தவர். விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான எழிலன் இராணுவத்தினரிடம் சரணடைந்து இப்பொழுது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரை விடுவிப்பதற்கு 15 இலட்சம் ரூபா அவருடைய மனைவி தரவேண்டும் என்று கூறி எழிலனின் மனைவியுடைய தொலைபேசி இலக்கத்தினையும் தந்தார்.

அதேபோன்று மற்றுமொரு விடுதலைப்புலி உறுப்பினரான சுதா மாஸ்ரர், என்பவரின் விடுதலை தொடர்பாகவும் பேசியதுடன் 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி இராணுவத்தினரால் கடத்தி செல்லப்பட்ட வரணியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனும் இங்கு உள்ளான். அவரை விடுதலை செய்வது தொடர்பாகவும் அவர்களது உறவினர்களுக்கு அறிவிக்கும் படி சொன்னார்.

காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்னும் செய்தியினை அவர்களது உறவினர்களுக்கு சொல்லுவது ஒரு சந்தோஷமான செய்தியாக அவர்களுக்கு இருக்கும் என்று எண்ணி இவ்வறிவித்தல்களை அவர்களுக்கு சொன்னேன். இந்த விடயங்கள் தொடர்பாக உறவினர்கள் எனக்கு அனுப்பிய கடிதங்களும் நான் கொழும்பு இராணுவத் தளபதிக்கு எழுதிய கடிதங்களும் எனக்கு சாட்சியாக உள்ளன.

பயங்கரவாத புலனாய்வு பிரிவினைச்சேர்ந்த மேஜர் மதியழகன் சொன்ன செய்திகளையே அவர்களது உறவினர்களுக்கு தெரியப்படுத்தினேன். மேஜர் மதியழகன் செய்த பணமோசடியில் எனக்கு எந்தவிதத்தில் தொடர்பாக இருக்கும் என்று ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நான் பணம் கொடுக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லவும் இல்லை. உறவினர்கள் மதியழகனிடம் பணம் கொடுக்கும் போது எனக்கு கூறவும் இல்லை.

எவரோ அரசியல் நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வீண்பழி சுமத்தப்படுகின்றது. ஊடகம் என்பது தனது தர்மத்தின் வழியில் செய்திகளை வெளியிட வேண்டும். எந்த ஆதாரங்களும் இல்லாமல் செய்தியை வெளியிட முடியாது. இப்பொய்யான செய்தி தொடர்பில் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Eelanatham.Net

என்னதான் குறைகள் இருந்தாலும் விநாயகமூர்த்தி அப்படிச் செய்வார் என்பதை நம்பமுடியாது.

இது சிங்கள பயங்கரவாதிகளின் திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.