Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்லுக்கு முன் செயல் - சண் தவராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத பல நாட்களுள் நவம்பர் 27 உம் ஒன்று. அன்றுதான் தமிழீழத் தேசிய விடுதலை என்ற உன்னத இலட்சியத்துக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர்களை நினைவு கூரும் நாள். விடுதலைப் புலிகளின் களப்பலியான முதற் போராளியின் நினைவாக அனுட்டிக்கப்படும் இந்த நாள் களத்தில் புலிகள் மிகப் பலமாக இருந்த நாட்களில் மிகவும் எழுச்சியுடன் நினைவு கூரப்படுவது வழக்கம். வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் கல்லறைகளில் மலர் வணக்கம் செய்து அவர்களின் தியாகங்களை நினைவு கூர்வது மட்டுமன்றி மாவீரர்களை இந்த உலகுக்கு வழங்கிய அவர்தம் பெற்றோரையும் கௌரவிப்பது வழக்கமாக இருந்தது.

2009 மே இல், தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற நிலையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னைப்போன்ற எழுச்சியுடன் கொண்டாட முடியாத நிலை தாயகத்தில் உள்ளது. இந்நிலையில், தாயகத்துக்கு வெளியே மாத்திரமே அனுட்டிக்கப்படக் கூடிய ஒரு நிகழ்வாக மாவீரர் நாள் மாறிப் போயுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் மாவீரர் நாள் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டு தாயக நிகழ்வுகளுக்கு இணையாக நினைவு கூரப்பட்டு வருகின்றது. இன்றைய சூழலில் புலம்பெயர் ஈழத் தமிழரிடையே ஒன்றுக்கொன்று எதிரான பல்வேறு அரசியல் முனைப்புகள் உள்ள போதிலும் கூட மாவீரர் நாள் தொடர்ந்தும் முன்னரைப் போன்று நினைவு கூரப்பட்டே வருகின்றது.

எந்நவொரு நிழ்வும் அர்த்தத்துடனேயே அனுட்டிக்கப் படுவது வழமை. அதேபோன்று, மாவீரர் நாள் நிகழ்வுக்கும் கனதியான அர்த்தமுள்ளது.

தாயகத்தில் எழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகள், மாவீரர்களின் தியாகத்தை மனதில் இருத்தியதுடன், மாவீரர் பெற்றோருக்கு மதிப்பளித்து போராட்டத்தின்பால் மக்கள் ஆதரவை மென்மேலும் ஈர்க்கும் நோக்கில் அமைந்திருந்தன. யதார்த்தத்தில் ஒவ்வொரு மாவீரர் நாள் நிகழ்வின் முடிவிலும் அதிக எண்ணிக்கையிலான புதிய போராளிகள் போராட்டத்தோடு தம்மை இணைத்துக் கொண்டமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

புலம்பெயர் சூழலில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயகத்தைப் போன்ற இலக்குகளைக் கொண்டதாக அமைந்திருக்கவில்லை. ஆயினும், இங்கும் கூட மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

தாயகத்தைப் பொறுத்தவரை மாவீரர்களை ஈந்த அநேக பெற்றோர்கள் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்துவரும் நிலையில் மாவீரர் நாளை ஒட்டி அவர்களுக்குப் பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இன்றைய சூழ்நிலையில் அத்தகைய உதவிகள் எவையுமே அவர்களுக்குக் கிட்ட முடியாத நிலை உள்ளது.

அதேவேளை, இன்றைய நிலையில் முன்னெப்போதையும்விட மாவீரர் பெற்றோருக்கு அதிக உதவிகள் தேவைப்படுகின்றன. தங்கள் குழந்தைச் செல்வங்களை மட்டுமன்றி வீடு வாசல்களையும் பொருள் பண்டங்களையும் கூட அவர்கள் இழந்து நிற்கின்றார்கள். முன்னர் கிடைத்து வந்த நிதியுதவி உட்பட எந்தவொரு உதவியும் அவர்களுக்குக் கிட்டாத நிலையில் அவர்களின் வாழ்வு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக, அவர்களின் நலவாழ்வுக்காக தம்மிடம் இருந்த ஒரேயொரு சொத்தான பிள்ளைச் செல்வங்களை போராட்டத்துக்கெனத் தாரைவார்த்துவிட்ட மாவீரர்களின் பெற்றோர் துன்பத்தில் வாட, போராட்டத்தின் விளைவாக புலம்பெயர்ந்து, அந்தந்த நாடுகளில் வளமாகவும் வசதியாகவும் வாழுகின்ற எம்போன்றோர், அவர்களைப் பற்றி, அவர்களின் எதிர்கால நலவாழ்வுபற்றி அதுவும் மாவீரர் நாளில் நினைக்காமல் இருப்பது எத்துணை பாரிய துரோகம்?

இன்றைய நாளில் மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமன்றி இறுதிக் கட்ட யுத்தத்தில் காயப்பட்ட, கை கால் உட்பட அவயவங்களை இழந்த போராளிகளும் கூட தாயகமெங்கும் உதவி வேண்டிக் காத்திருக்கின்றார்கள். மாவீரர் நாளில் இந்த மறவர்களையும் ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியமானது.

ஒரு காலத்தில் நாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய பல தளபதிகள் கூட இன்று ஒருவேளைச் சாப்பாட்டுக்கே கையேந்தும் துயரம் தாயகத்தில் நிலவுகின்றது. தவிர, ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கைதானவர்கள் மட்டுமன்றி, 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கைதாகி தென்னிலங்கையின் பல்வேறு சிறைகளிலும் வாடிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான போராளிகளும் உள்ளனர். இவர்களில் அநேகர் தமது விடுதலைக்காக அல்லது கிடைக்கப் போகும் தண்டனைக் காலத்தைக் குறைத்துக் கொள்வதற்காகப் புலம்யெர்ந்த உறவுகளிடம் கையேந்தி நிற்கின்றார்கள். அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுவது எமது கடமையே.

அது மட்டுமன்றி, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சிறி லங்காவை விட்டு வெளியேறி இந்தியா உட்பட ஆசிய நாடுகளிலும், ஐரோப்பாவை நோக்கிய பயணத்தில் பல்வேறு உலக நாடுகளிலும், தரையிலும் கடலிலும் ஆயிரக் கணக்கானோர் தனியாகவும் குடும்பமாகவும் நிர்க்கதியாக நிற்கின்றனர். இவர்களும் எமது அனுதாபத்துக்கு உரியவர்களே.

புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காக பெருமளவில் நிதி செலவிடப்பட்டு வருகின்றது. தனிநபர்களாகவும் குழுக்களாகவும் நேரடியாகவும் பல்வேறு விற்பனைகள், சேவைகள் ஊடாகவும் இந்த நிதி திரட்டப்பட்டு வருகின்றது. போராட்டத்தின் பால் ஈர்ப்பு உள்ளவர்களாக மக்களை வைத்திருக்கவும் அடுத்த கட்ட அரசியற் செயற்பாட்டுக்கு அவர்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், எமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவும் மாவீரர் நாள் அனுட்டானங்கள் போன்றவை இன்றியமையாதவை. எனவே, அவை தொடர்பில் நிதி செலவிடப்படுவதை விமர்சிப்பது பொருத்தமானதல்ல.

இதுநாள்வரை ஒரு அரசாங்கத்துக்கு ஈடான நிதிப்பங்களிப்பின் ஊடாக எமது போராட்டத்தைத் தோள்களில் தாங்கிய நம்மில் அநேகர், 2009 மே இற்குப் பின்னான சூழலில் அதிலிருந்து விலகியிருக்கின்றோம். இந்நிலையில், தலைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் தாயகத்தில் துயருறும் ஒரு மாவீரர் குடும்பத்திற்கோ அன்றி போராளி குடும்பத்திற்கோ நிதியுதவி வழங்கி எமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதே சாலப் பொருத்தமானது. நன்றிக் கடனாகக் கருதியேனும் அதனைச் செய்ய வேண்டும்.

ஒரு மாவீரனுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி அவனது இலட்சியக் கனவை நனவாக்குவதே. எனினும் இன்றைய தருணத்தில் அதற்கான வாய்ப்பு மிகவும் அரிதாகவே உள்ளது. அவர்களது இலட்சியக் கனவை எம்மால் நிறைவேற்ற முடியாவிட்டாலும், ‘வீரச்சாவைத் தழுவிக் கொண்டபின் தான்விட்டுச் செல்லும் தனது குடும்பத்தை தன் தேசம் என்றென்றும் தாங்கும்’ என்ற அவர்களது இறுதிநேர எதிர்பார்ப்பையாவது நாம் பூர்த்தி செய்ய முடியுமல்லவா?

எனவே, மாவீரர் நாளை அனுட்டிக்கத் தயாராகும் நாம் அதனை அர்த்தமுள்ளவகையில் நினைவுகூரத் தயாராவோம். எமக்காகத் தமது இன்னுயிர்களை ஈந்தவர்களுக்காக எமது வருவாயில் ஒரு சிறுதொகையையேனும்செலவு செய்வோம். மாவீரர்களை நினைத்து அவர்தம் கல்லறைமீது நாம் வைக்கும் கார்த்திகைப் பூவாக அதனைக் கருதிச் செயற்படுவோம்.

இந்த பந்தியில் கூறப்பட்டுள்ளது போல, புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் மாபெரும் சக்தியாக உள்ளது எம் மாவீரர் நாள் - தமிழீழ மக்கள் எழுச்சி நாள்.

"புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் மாவீரர் நாள் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டு தாயக நிகழ்வுகளுக்கு இணையாக நினைவு கூரப்பட்டு வருகின்றது. இன்றைய சூழலில் புலம்பெயர் ஈழத் தமிழரிடையே ஒன்றுக்கொன்று எதிரான பல்வேறு அரசியல் முனைப்புகள் உள்ள போதிலும் கூட மாவீரர் நாள் தொடர்ந்தும் முன்னரைப் போன்று நினைவு கூரப்பட்டே வருகின்றது."

மக்களை, போராளிகளை இருகரம் கொண்டு அரவணைப்போமாக!

மாவீர் தம் கனவுகளை வெல்ல தொடர்ந்து, இன்றைய உலக அணுகு முறைகளுக்கு ஏற்ப,

போராடுவதை தவிர சிங்களம் எமக்கு வேறு எந்த வழியையும் திறந்து வைத்திருப்பதாக தெரியவில்லை.

Tamil Poppy blooms from rubbles – By Jay Tharan

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77983&pid=623204&st=0&#entry623204

Edited by akootha

மாவீர் தம் கனவுகளை வெல்ல தொடர்ந்து, இன்றைய உலக அணுகு முறைகளுக்கு ஏற்ப,

போராடுவதை தவிர சிங்களம் எமக்கு வேறு எந்த வழியையும் திறந்து வைத்திருப்பதாக தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.