Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சே லண்டனுக்கு செல்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Print | E-mail : Email this Article

புதன்கிழமை, 24, நவம்பர் 2010 (21:36 IST)

ராஜபக்சே லண்டனுக்கு செல்கிறார்

இலங்கையில் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றிருக்கும் ராஜபக்சே வரும் 30ம் தேதி லண்டன் செல்கிறார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்கிறார்.

ராஜபக்சே அங்கு நான்கு நாட்கள் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்சே லண்டன் வந்தால் போர்க் குற்றச் செயல்களின் அடிப்படையில் லண்டனில் வைத்து கைது செய்யப்படக் கூடுமென முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் அமைச்சர்களை சந்திப்பதற்கும் ராஜபக்சே முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

nakkheeran

மகிந்தர் கைது செய்யப்படுவாரா இல்லையா என்பதற்கு அப்பால் ( அநேகமாக இருக்காது) இந்த ஒக்ஸ்போட் யூனியன் பல புகழ் பூத்த தலைவர்களை அழைப்பது வழக்கம் ( அன்னை திரேசா உட்பட).

http://www.oxford-union.org/about_us/famous_speakers

இந்த வரிசையில் இவரையும் கூப்பிட்டது உண்மையாகவே இவரை ஒரு திறமான மக்களால் விரும்பப்படும் தலைவர் என உலகிற்கு காட்டவா இல்லை இவரை கேள்விகள் கேட்டு மடக்கவா என்பது புதிராகவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில், மகிந்துவுக்குச் சாதகமாக அனைத்து ஒழுங்குகளும் செய்தாயிற்று. அதாவது மகிந்து பிரித்தானியா வருகிறார் எனும் வதந்தி ஒன்றின்மூலம், தனது வருகையால் தனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமா என்பதை அறிவதற்கே, தனது பயணத் திகதியை முன்கொணாந்து வெளிவரப் பண்ணியதன் பின்பு, எந்த இடங்களில் இருந்து அழுத்தங்கள் வரும் என்பதைத் தீர்மானித்து, அந்த இடங்களை பலம்வாய்ந்த ஏஜண்டுகள் மூலம் கையாண்டு, (இங்கு புலம்பொயர் ஏஜண்டுகள் எனச் சொல்லவது இங்கு வாழும் வால்பிடித்தமிழர்கள் அல்ல அவர்களை மகிந்து தனது முக்கியமான வேலைத்திட்டங்களுக்குப் பயன்னடுத்த மாட்டான். நான் சொன்னது சட்டச்சிக்கல்களையும் இராஜதந்திரச் சிக்கல்களையும் தீர்க்கக்கூடிய ஏஜண்டுகளை) தான் பிரித்தானியா வந்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை இனங்கண்டு தீர்வுபெற்று, அதன்பின்பே மகிந்து பிரித்தானியா வருகிறார் பாருங்கோ. இதன்முலம் பிரித்தானியாவில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பது மட்டுமல்லாது, புலம்பெயர் தமிழர்களது எதிர்ப்பையும் அச்சுறுத்தலையும் மீறி அவர்களது புலம்பொயர் கோட்டையாகிய லண்டன் மாநகரத்துக்குள்ளும் நான் சென்று திரும்பி வந்துவிட்டேன் எனச் சிங்களர் மத்தியில் தம்பட்டமடிப்பதுமாகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை இரவு லண்டனுக்குப் பயணமாகிறார் மகிந்த ராஜபக்ச:- ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் டிசம்பர் 2ம் திகதி உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[sunday, 2010-11-28 11:29:33]

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாளை திங்கட்கிழமை இரவு பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் அவர் எதிர்வரும் டிசம்பர் 2ம் திகதி உரையாற்றவுள்ளதாக அதிபர் செயலகத்தக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆறு நாட்கள் பிரித்தானியாவில் தங்கவுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜஸபக்சவுடன் அவரது வெளிவிவகார ஆலோசகர்க்ளில் ஒருவரான சஜின் வாஸ் குணவர்த்தனவும் லண்டன் செல்லவுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் பயணத்தின் போது பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூனை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனாலும் இது தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் பதில் எதுவும் சிறிலங்கா அரசுக்கு இன்னமும் கிடைக்கவில்லை.

பிரித்தானியப் பிரதமருக்கு நேரம் கிடைக்காது போனால் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹகியூ அல்லது பிரதிப் பிரதமர் நிக் கிளேக்கைச் சந்திப்பதற்கு சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார். இந்த மாதம் ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றவிருந்தார்.

லண்டன் வரும்பொது மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றச்சாட்டுகளின் பேரில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக புலம்பெயர் தமிழர்கள் எச்சரித்திருந்த நிலையில் அவரது பயணம் திடீரெனக் கைவிடப்பட்டது.

இதனால் அனைத்துலக ரீதியாக ஊடகங்களில் பெரும் பரபரப்பு எற்பட்டது.

ஆனாலும் அச்சம் காரணமாக பயணத்தைக் கைவிடவில்லை என்றும் வேலைப் பளுகாரணமாகவே அவரது பணயம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

seithy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.