Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஞ்சிக்குடியாற்றில் கண்ணிவெடி அகற்றியும் மீழ் குடியேற அனுமதி இல்லை

Featured Replies

அம்பாறை மாவட்டத்திலுள்ள கஞ்சிக்குடிச்சாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய இடங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து வெளியேறிய குடும்பங்கள் இதுவரை மீள் குடியேற்றப்படவில்லை என அக் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் தளங்கள் அமைந்திருந்த பிரதேசம் என கருதப்படும் கஞ்சிக்குடிச்சாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்கள் 2006 ம் ஆண்டு அன்றைய யுத்த சூழ்நிலை காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி திருக்கோவில் பிரதேசத்தில் தற்காலிக இருப்பிடங்களில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்கள் கடந்து விட்ட போதிலும் சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் தொடர்பாக மக்கள் ஆர்வம் கொண்டிருந்தாலும் அதிகாரிகளிடம் அந்த ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை என கஞ்சிக்குடிச்சாறு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரான நல்லதம்பி மகேஸ்வரன் கவலையுடன் கூறியுள்ளார்.

1990 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்த தமது கிராம மக்கள் 2003 இல் மீள குடியேறி மீண்டும் 2006 இல் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அந்த பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் விவசாயம் மற்றும் பயிர்ச் செய்கைகளுக்கும் தற்போது சென்று வர தங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரான செல்வராஜா மகேஸ்வரன் கூறுயுள்ளார்.

இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாராந்த உலர் உணவு நிவாரணம் கூட தற்போது நிறுத்தப்பட்டு விட்டதாகவும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல தடவைகள் தொடர்பு கொண்ட போதிலும் சாதகமான பதில்கள் இல்லை. என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

தங்களை மீள் குடியேற்ற முன்பு உரிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இப் பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றும் பணி பூர்த்தியடைந்துள்ளதாக இராணுவ கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறும் திருக்கோவில் பிரதேச செயலாளர் வீ.அழகரத்தினம், மீள் குடியேற்றம் தொடர்பாக அரசாங்க அதிபரின் பணிப்புரைக்காக தான் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உலர் உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே இவர்களுக்கான வாராந்த நிவாரணமும் நிறுத்தப்பட்டதாகவும்

அவர் மேலும் பிபிசி செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

ஈழ நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.