Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் உடனடி மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு போன்ற அதி முக்கிய விடயங்கள் சம்பந்தமாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் - கூட்டமைப்பு

Featured Replies

பத்திரிகைச் செய்தி

2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் 2 ஆம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று (29.11.2010) கூடி ஆராய்ந்தது. பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டமானது தமிழ் மக்களுக்கு விசேடமாக இடம்பெயர்ந்து இன்னல் உற்று இருக்கும் மக்களுக்கு எந்த விதமான நிவாரணத்தையும் வழங்கவில்லை.

இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துவதுதான் தனது முன்னுரிமையென அரசாங்கம் கூறி வருகின்றது. ஆனால் ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகளில் அரசாங்கத்தின் இக்கூற்று எந்த வித்திலும் பிரதிபலிக்கவில்லை.

வடக்கு கிழக்கை சேர்ந்த எமது மக்கள் பல வருடங்களாக தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து சொல்லொணாத் துன்ப நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுடைய மீள்குடியேற்றமென்பது பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் அதி முக்கிய கடமையாகும். இந்த வரவு செலவு திட்டத்திலும் மீள்குடியேற்றம் புனருத்தாரன வேலைகள் தொடர்பாக ஆக்க பூர்வமான கருத்துக்கள் எதுவும் இல்லை. இந்த வரவு செலவு திட்டமும் கூட அக்கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து தவறியுள்ளது.

இதற்கு மேலாக பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடு என்பது போர் முடிவடைந்த நிலையிலும் வருடா வருடம் கூடிக் கொண்டே செல்கின்றது. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான நாம் இவற்றை ஆராய்ந்து பார்த்த போது இந்த வரவு செலவு திட்டத்தை எந்த அடிப்படையிலும் ஆதரிக்க முடியாது என்பதே எமது உறுதியான தீர்மானமாக இருந்தது.

இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதுவித சந்தேகமும் இன்றி இவ்வரவு செலவு திட்டத்தை கண்டித்து பேசியுள்ளனர். தமிழ் மக்களுக்கு எந்த வித நன்மையும் கொடுக்காத இந்த வரவு செலவு திட்டத்தை நாம் ஆதரிக்க முடியாது என்பது எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த கருத்தாக இருந்தது.

தமிழ் மக்களின் உடனடி மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு போன்ற அதி முக்கிய விடயங்கள் சம்பந்தமாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என்பதை ஆரம்ப காலம் தொடக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் இது வரை அரசாங்க தரப்பிலிருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை.

இந்த அரசாங்கம் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆக்க பூர்வமான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற எமது எண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் எமது நல்லெணத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் இன்றைய இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பதில் இருந்து விலகியிருப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

சுரேஸ் க.பிறேமச்சந்திரன் பா.உ- யாழ் மாவட்டம்

பேச்சாளர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.