Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அதிபரின் வசம் 82 அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் :-எப்படி நிர்வகிப்பார் என்று ஜே.வி.பி கேள்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அதிபரின் வசம் 82 அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் :-எப்படி நிர்வகிப்பார் என்று ஜே.வி.பி கேள்வி.

[Wednesday, 2010-12-01 07:37:28]

அதிகளவிலான அமைச்சர்களை நியமித்துள்ள போதும் பெரும்பாலான அரச திணைக்களங்கள் நிறுவனங்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது கைக்குள்ளேயே வைத்திருப்பதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது.

ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க இதுகுறித்த நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது "அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி 82 அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் சிறிலங்கா அதிபரின் கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஒருவர் இத்தனை அரச நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மிகவும் சிரமமானது. நிர்வாகத்தைச் சரியாகக் கவனத்துக் கொள்ள முடியாது.

நிதிஅமைச்சின் கீழ் உள்ள 46 நிறுவனங்களும், விமான சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள 5 நிறுவனங்களும் சிறிலங்கா அதிபரிடம் உள்ளன.

அதைவிட சிறிலங்கா அதிபரின் பொறுப்பில் ஏனைய நிறுவனங்கள் உள்ளன.

இவற்றையெல்லாம் ஒருவரால் எப்படி திறமையாக நிர்வகிக்க முடியும்" என்று அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கடையே சிறிலங்காவில் அமைச்சர்களின் எண்ணிக்கை விரைவிலேயே 100ஐ எட்டிவிடலாம் என்று ஐ.தே.க அச்சம் வெளியிட்டுள்ளது.

60 அமைச்சர்களும் 31 பிரதி அமைச்சர்களும் பதவியேற்ற சில நாட்களிலேயே ஒரு அமைச்சரும் மூன்று பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கே போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை" என்றும் ஐ.தே.க மேலும் கூறியுள்ளது.

seithy.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.