Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் 2000 ஊர்காவல்படையினரைக் குடியேற்ற பாதுகாப்பு அமைச்சு திட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Dec 3, 2010 / பகுதி: செய்தி /

மன்னாரில் 2000 ஊர்காவல்படையினரைக் குடியேற்ற பாதுகாப்பு அமைச்சு திட்டம்!

மன்னார்- கொண்டச்சிப் பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலத்தில் மரமுந்திரிகையை பயிரிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அங்கு சுமார் 2000 சிங்கள ஊர்காவல்படையினரை குடியேற்றத் திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடி வழிகாட்டலின் பேரிலேயே மரமுந்திரகைப் பண்ணைகள் உருவாக்கப்பட்டு அங்கு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாவத்துறைப் பிரதேசத்தில் உள்ள கொண்டச்சிப் பகுதியில் முன்னர் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு 6444 ஏக்கர் பரப்பளவில் மரமுந்திரிகைப் பண்ணைகள் உருவாக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அந்தப் பகுதியை கஜுவத்தை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1990ம் ஆண்டு புலிகள் கொண்டச்சியில் இருந்த இராணுவ முகாமை அழித்து அந்தப் பகுதியை விடுவித்தனர். இதன் மூலம் சிங்களக் குடியேற்ற முயற்சிகள் தடுக்கப்பட்டன.

போர்முடிவுக்கு வந்துள்ள நிலையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அந்தப் பகுதியில் மீளவும் மரமுந்திரிகைப் பண்ணைகளை உருவாக்க ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக சுமார் 500ஏக்கர் பரப்பளவு நிலம் துப்புரவாக்கப்பட்டு கடந்த முதலாம் திகதி 20 ஆயிரம் மரமுந்திரிகைக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. மூன்று கட்டங்களாக இந்த மரமுந்திரிகைப் பண்ணைகள் உருவாக்கப்படவுள்ளன.

தற்போது இந்த பணியில் சுமார் 2000 சிங்கள ஊர்காவற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தப் பகுதியில் நிரந்தரமாகக் குடியமர்த்தப்படவுள்ளனர்.

கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் இருந்து 660 தொன் மரமுந்திரிகை விதைகள் அறுவடை செய்யப்பட்டன. இன்னும் நான்கு ஆண்டுகளில் புதிதாக பயிரிடப்பட்ட மரங்களில் இருந்து அறுவடை செய்ய முடியும் என்று ஊர்காவல் படைகளின் தளபதி றியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு, சிறிலங்கா இராணுவம், கடற்படை ஆகியவற்றின் துணையுடன் இந்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.