Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலமடையும் நாவற்குழி சிங்களக் குடியேற்றம்: தமிழர்கள் வெளியேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலமடையும் நாவற்குழி சிங்களக் குடியேற்றம்: தமிழர்கள் வெளியேற்றம்

டிச 5, 2010

நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறிய சிங்களவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என சிறிலங்கா அரசாங்கமும், அதன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும்; தெரிவித்து வருகின்ற போதிலும், அங்கு சிங்களக் குடியேற்றம் பலப்படுத்தப்பட்டு தமிழர்கள் வெளியேற்றப்படுவதைக் காணக்கூடியதாக இருப்பதாக யாழ. நகரிலிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

புதிதாகக் குடியேறியிருக்கும் சிங்கள மக்கள் டிசெம்பர் மாத விடுமுறை காலத்தில் தென்பகுதியிலுள்ள தமது பாடசாலைச் சிறுவர்களையும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வருவதற்குத் திட்டமிடிருக்கும் அதேவேளையில், அவர்களுக்கு வசதியாக யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ள சிங்கள மகாவித்தியாலயத்தை மீண்டும் திறக்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளனர்.

‘கடந்த கால வன்செயல்களால் மூடப்பட்ட யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்தை மீளத்திறக்கக் கோயுள்ளோம். அரசு அடுத்த ஆண்டின் முற்பகுதியில் இவ்விடயம் தொடர்பில் உய நடவடிக்கைகளை எடுக்குமென நம்புகின்றோம்’ என நாவற்குழி சிங்கள குடியேற்றவாசிகள் இது தொடர்பாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.

‘பத்திகைகள் தொடர்பில் எங்களுக்கு அச்சமாக உள்ளது. எங்களை இடம்பிடிக்க வந்த குடியேற்ற வாசிகளென செய்திகளைப் போடுகின்றனர். நாங்கள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் வசித்தவர்கள். யுத்தத்தால் வெளியேறிச் சென்றவர்கள்’ எனவும் அவர்கள் தெவித்தனர்.

இதுவரை 186 சிங்களக் குடும்பங்கள், தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான நாவற்குழி காணியில் குடியேறியுள்ளனர். ஜனாதிபதியையும், படைத்துறை அமைச்சின் செயலாளரையும் வாழ்த்தும் பதாதைகளை அவர்கள் தொங்கவிட்டுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் பதாகை தொங்க விடப்பட்டுள்ளது.

தொடரும் அடை மழையால் அவர்களால் கொண்டு வரப்பட்ட ஓட்டோக்கள், வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நனைந்த வண்ணமுள்ளன. அவற்றை நிறுத்தவும் இடம் தேடுகின்றனர்.

தற்போது தெற்கிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் தமது பிள்ளைகளை இறுதித் தவணை முடிந்தும், புதிய ஆண்டிலாவது யாழ்ப்பாணத்திற்கு அவர்களை அழைத்து வரவேண்டியுள்ளது. அதற்காக பாடசாலை ஒன்றை அவசரமாகத் திறக்க வேண்டியுள்ளது எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு போட்டியாக அங்கு இடம்பிடித்த உள்ளூர்த் தமிழ்க் குடும்பங்களில் பெரும்பாலானவை வெளியேறியுள்ளன. அவர்கள் பிடித்தவை பெரும்பாலும் தாழ் நிலப் பகுதிகளே. இரவோடிரவாக சிங்களக் குடியேற்றவாசிகள் மேட்டு நிலங்களை ஆக்கிரமித்து விட்டனர்.

அண்மைய மழை காரணமாக, தாழ்நில வீடுகளுள் வெள்ளம் புகுந்து விட்டது. அதனாலேயே பெரும்பாலான தமிழ்க் குடும்பங்கள் வெளியேறியுள்ளன. நாங்கள் திரும்பி வருவோம் என்கின்றனர் தமிழ்க் குடும்பங்கள். வெளியேறிய வீடுகளில் இருந்த மரம், தடிகள் சிங்கள குடியேற்ற வாசிகளால் சூறையாடப்படு வருதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஆனாலும் 330 வரையான தமிழ் குடும்பங்கள் குடியமர விருப்பம் கொண்டுள்ளனர். அரசு காணிகளில் அத்துமீறிக் குடியமர்ந்துள்ள குடியேற்றவாசிகள் வெளியேற்றப்படுவர் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

சிறிலங்காவின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதையையே கூறுகின்றார். ஆனால் வாரந்தோறும் தெற்கிலிருந்து சேகரிக்கப்படும் உணவுப் பொருட்களுடன் பௌத்த மதகுருமார் சிங்கள குடியேற்றவாசிகளைச் சந்தித்து திரும்புவதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் குறிப்பிடுகின்றன.

sangathie

... உந்த சிங்களவர்கள் எல்லாம் வாழ் நாள் பூராக ... அத்தியடிக்குத்திக்கு விசுவாசமாக இருப்பார்கள்! ... ஒருவேளை குத்தி இவர்களின் வாக்குகளை எடுக்கலாமென்ற நோக்கில் குடியமர்த்துகிறதோ, சிங்களத்துடன் சேர்ந்து??????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.