Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்தாம் நூற்றாண்டில் வந்து சேர்ந்த பரதேசிகள்தான் இலங்கைத் தமிழர்களென நிரூபிக்க முயற்சி! முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் எச்சரிக்கை

Featured Replies

பத்தாம் நூற்றாண்டில் வந்து சேர்ந்த பரதேசிகள்தான் இலங்கைத் தமிழர்களென நிரூபிக்க முயற்சி! முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 05 டிசம்பர் 2010 23:29

Share 0

vikki_200_200.jpg

பத்தாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் இங்கு வந்து சேர்ந்த பரதேசிகள்தான் இந்த இலங்கைத் தமிழர்கள் என்று கூற சில சக்திகள் வழி வகுத்துக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தினக்குரல் ஆசிரியர் வீ.தனபாலசிங்கத்தால் அப்பத்திரிகையில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பு ஊருக்கு நல்லது சொல்வேன் என்கிற பெயரில் நூலாக மலர்ந்துள்ளது.

இந்நூலின் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் தமிழ் சங்கத்தில் இன்று மாலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நீண்ட உரை ஒன்றை இவர் ஆற்றினார். அவ்வுரையில் ஓரிடத்திலேயே இவ்வாறு கூறினார்.

அவர் இவ்வுரையில் முக்கியமாக தெரிவித்து இருந்த விடயங்கள் வருமாறு:-

”இன்றைய இலங்கைத் தமிழரின் வாழ்க்கை முறை கேள்விக்குறியாகி வருகின்றது. 1981 ஆம் ஆண்டில் யாழ். நூலகம் எரிக்கப்பட்டது. எரிந்த இடிபாடுகளுக்குள் இருந்து, சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து இருக்கும் அதே வாசிகசாலையினுள் இன்னும் காடையரா? எங்கள் அறிவைக் குறி வைக்கும் ஒரு சதி சிலருக்குப் புரிகின்றது.

சிலருக்கு இவை வெறும் மரங்களா? வனமா? என்று புரிய மாட்டேன் என்கிறது. இப்பேர்ப்பட்ட சூழலில் எமது அறிவுப் பொக்கிசங்கள் ஆவணப்படுத்தப்படுதல் வேண்டும். மதிப்புக்குரிய கருத்துக்கள் ஆவணப்படுத்தப்படுதல் வேண்டும்.

கிடைத்தற்கு அரிய பல நூல்கள் அன்று 95,000 நூல்களுடன் அக்கினி பகவானுக்கு ஆகுதி ஆகி விட்டன. அதனால்தான் போலும் புதிய சரித்திரத்தை புத்தர் அடியார்கள் இன்று புரளியாய்ப் புரள விட்டு உள்ளனர்.”

எங்கே உங்கள் மேற்கோள்களை காட்டுங்கள் பார்க்கலாம்?” என்று கேட்க தளம் அமைத்து விட்டோம் என்ற இறுமாப்போ நாம் அறியோம்! இன்று கிடைக்கக் கூடிய இலங்கைத் தமிழர்களின் அறிவுப் பொக்கிசங்கள் அனைத்தும் பிற நாடு ஒன்றில் அல்லது இரண்டில் ஆவணப்படுத்தப்பட்டு, கோப்பிடப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம் என எனக்குப் படுகின்றது........

இன்று இலங்கைத் தமிழர் வசம் இருக்கும் அவர்களுக்கு சார்பான சான்றுகள், சான்றாவணங்கள் யாவற்றையும் இல்லாதொழித்து விட்டு பத்தாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் இங்கு வந்த பரதேசிகள்தான் இலங்கைத் தமிழர்கள் என்று கூற சில சக்திகள் வழி வகுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இந்த மாதிரியான தமிழர் பற்றிய தவறான முடிவுக்குப் பல படித்த தமிழ் மக்கள் கூட மாறி வருகின்றமையைக் காண்கின்றேன். இது அறிவுக் குறைவால் ஏற்படும் குளறுபடியே ஆகும். ஆகவே எமது தொன்மை, கலைகள், கலாசாரம், இலக்கியம், சரித்திரம் போன்றவை சம்பந்தமான சான்றுகள், சான்றாவணங்கள், கல்வெட்டுக்கள் போன்றவை பிரதியோ, படமோ எடுக்கப்பட்டு பிற நாட்டுத் தமிழ் நூலகம் ஒன்றில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

அத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்ற மனோ நிலையை நாங்கள் களைய வேண்டும். யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்பதை மறந்து விடக் கூடாது. அரசியல் யாப்பில் அன்று யானைக்கு சார்பாகச் செய்யப்பட்டது.

இன்று கை மாறி இருக்கின்றது......... இன்று ஒரு வித்தியாசமான சூழல் இந்த நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கின்றது. வடகிழக்கில் இருக்கும் ஒவ்வொரு அரச மரமும் அரச மதத்தின் சான்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றது. எங்கள் பாட்டனார், பூட்டனார் காலத்தில் தானாக முளைத்த அரச மரங்கள் எல்லாம் சங்கமித்தை காலம் வரையில் உயிர் நீடிக்கப்பட்டு அவளால் நாட்டப்பட்ட மரங்களாக மாறி வருகின்றன.

பத்தாம் நூற்றாண்டில் வந்த பரதேசியே போ! எங்கள் அரச மரங்களை அழிக்காது விட்டுச் செல்! என்று கூற கூடிய காலம் உதயமாகி வருகின்றது. ஆகவேதான் கூறுகின்றேன் எங்கள் அறிவு நூல்களை, அறிஞர்கள் ஆக்கங்களை, ஆன்றோர் ஆய்வுகளை, ஆராய்ச்சி முடிவுகளை எல்லாம் ஆவணப்படுத்தி அடுத்து வருஞ் சந்ததியினருக்கு கிடைக்கும் வகையில் பாதுகாத்து ஆவணப்படுத்தி அடுத்து வருஞ் சந்ததியினருக்கு கிடைக்கும் வகையில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்று.

இதற்காக செம்மொழியாம் தமிழுக்கு மட்டுமல்ல, செம்மாந்த இலங்கைத் தமிழர் பற்றியதாகவும் அவர்கள் தொன்மையை, பெருமையை, மாண்புகளை, படைப்புக்களை, பண்பாட்டை பிரதிபலிக்கும் வண்ணம் நூலகங்கள், பொருட்காட்சி சாலைகள் பிற நாடுகளில் உருவாக்கப்பட வேண்டும்.......... இப்போது போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால் முன்னர் நடந்த போரை சாட்டாக வைத்துக் கொண்டு தமிழரை பௌத்தர்களாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன போல் தெரிகின்றது. பல நூற்றாண்டு காலம் பௌத்தர்கள் வசிக்காத இடங்களில் புத்த கோயில்கள் எதற்கு? நீர்கொழும்பு, புத்தளம் பகுதிகளில் சுமார் நூறு வருடங்களுக்கு முன் இப்பேர்ப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அப்பிரதேச மக்கள் அன்று சிங்களவர்களாக மாறினார்கள்...

மாற்றப்பட்டார்கள். இன்று சரித்திரம் மாற்றப்பட்டு இலங்கைத் தமிழர்கள் நேற்று வந்த கள்ளத் தோணிகள் என்ற மாயையை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பௌத்தத் தமிழர்களை உருவாக்கி விட்டால் அவர்கள்தான் வடமாகாண ஆதிக் குடிமக்களின் வாரிசுகள் என்று கூறலாம் என்று எதிர்பார்க்கின்றார்களோ நான் அறியேன்.

இராணுவத்தை மையமாக வைத்து ஊர்களை, கிராமங்களை, அடி பணிய வைத்துத் தமது இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த இலக்கு என்ன? நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த நாட்களில் இலங்கையில் சிறுபான்மையினர் தொகை நூற்றுக்கு கிட்டத் தட்ட இருபத்தைந்து வீதமாக இருந்தது.

இதனைப் பத்து வீதமாகக் குறைத்தால் சிறுபான்மை இனத்தவரைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு சிரேஷ்ட சிங்கள சட்டத்தரணி அறிவுரை வழங்கினார் என்று கூறப்படுகின்றது. ..... அந்த அடிப்படையில் பறங்கியர்கள் , மலேயர்கள் போன்றோர் நாட்டை விட்டு வெளியேற நடவடிக்கைகள் ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்டன.

மலையகத் தமிழர்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் பின் இலங்கைத் தமிழர்களை 1958, 1961, 1977, 1983 என்று பலவருடங்களிலும் தாம் குடியிருந்த இடங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதுமட்டுமல்ல. அவர்களுள் பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்நாட்டில் எஞ்சி இருக்கும் சிறுபான்மையினரின் தொகையைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

போரிலும் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். தொகையைக் குறைக்கும் கைங்கரியம் இன்று நடந்து முடிந்துள்ளது. எஞ்சியிருப்போரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகத்தான் காவல் துருப்புக்கள் கிராமம் கிராமமாக வடக்குக் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ”புலிகள் உயிர்த்தெழுவார்கள்...ஆகவே அதைத் தடுக்க கிராமம் தோறும் துருப்புக்கள் தேவை” என்று கூறி, தமிழ் பேசும் மக்களைப் “ புலி வருது, புலி வருது” என்று கூறி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அடுத்து பௌத்தத்தில் சேர்ந்தால் சலுகைகள் கிடைக்கும் என்பார்கள். முன்னர் சிங்களவர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் தமிழர்கள் குடியேறி உள்ளார்கள் என்ற தற்கால பெரும்பான்மையினரின் கூற்றின் உண்மை பொய்மைகளை அறிய வேண்டுமானால் பிற நாட்டுச் சரித்திரவியலாளர் வாயில் இருந்தே உண்மை பெறப்பட வேண்டும்.

காவியணிந்து கண்டதையும் பிதற்றும் பேச்சுக்களை நம்பத் தேவை இல்லை. சிங்கள இனம் என்று ஒன்றில்லை; ஆரியர் என்றுமொரு இனமும் இல்லை;சிங்கள மொழி கி.பி 200 ஆம் ஆண்டளவில்தான் உருப்பெற்றது; அதற்கு முன் இலங்கையில் திராவிடரும் அவர்களின் மொழியுமே இருந்தன போன்றன கருத்துக்கள் பிற நாட்டுச் சரித்திரவியலாளர்கள் வாயிலாக வெளிவந்தால்தான் அதை உலகம் கணக்கெடுக்கும்.

இன்று போர் முடிவுக்கு வந்துள்ளதால் நாட்டின் பாதுகாப்பிலும் பார்க்க தனி மனித பாதுகாப்பு, குறிப்பிட்ட இடங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மக்களின் பாதுகாப்பு போன்றவையே முக்கியம் என்பதை நாங்கள் உலகறியச் செய்ய வேண்டும்.

எங்கள் தமிழ் பேசும் நாடாளுமன்றத்தினரில் பலருக்கு யுத்த காலம் மலையேறி விட்டது என்பது தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றது. இது வரை காலமும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்கள் தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களாக இருந்தன. இன்று வட மாகாண நீதிமன்றங்களுக்கு பெரும்பான்மை இனத்து அலுவலர்கள் சிறிது சிறிதாக அனுப்பப்படுகின்றார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்வி எழுகின்றது. மற்றைய நாடுகளில் இதே சூழலில் சிறுபான்மை இனத்தினர்கள் முன்னேற என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள்? என்பது பற்றி எல்லாம் எங்கள் அங்கத்தினர்கள் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

இதுவரை காலம் நாங்கள் நடத்திய அரசியல் வேறு. இனி நடத்த வேண்டிய அரசியல் வேறு. புதிய அரசியல் நடத்த எங்கள் பழைய பாணிகள் துணை நிற்கா. புதிய சூழலுக்கேற்ப நடந்து கொள்ள எங்கள் அறிவை மேம்படுத்த வேண்டும்.

நடைமுறைகளையும் மாற்றி அமைக்க வேண்டும். இதில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியம்....... தமிழ் மக்களின் எதிர்காலம் மனித உரிமைகளின் அடிப்படையில்தான் இனி நிர்மாணிக்கப்படும் என்று பலர் எண்ணுகின்றார்கள். உலகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட பல இனங்கள் இனங்கள் இருந்து வந்துள்ளன.

விடுதலைக்காக அவர்கள் ஆயுதம் தாங்காது போராடிய அணுகுமுறைகளும் எங்களால் இதன் பொருட்டு கிரகிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சாசனங்கள், உடன்பாடுகள் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கு முரணான விதத்தில் அரசாங்கங்கள் நடந்து கொண்டால் அது மக்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை உரிமையாவணங்கள் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஈடுபட்ட களைப்பில் பல்வேறு நாடுகளால் நடைமுறைச் சாத்தியமான விடயங்களை உள்ளடக்கியே தயாரிக்கப்பட்டது. அந்த ஏற்பாடுகளின் அடிப்படையில் ஒரு நாட்டின் சிறுபான்மையினர் நடத்தப்பட்டாலே அவர்களுக்கு நல் வாழ்க்கை அமையலாம்.

அவ்வாறு அந்த ஏற்பாடுகளுக்கு அமைவாக எங்கள் நாட்டில் நடக்கின்றதா? என்பதை நாடாளுமன்ற பிரதிநிதிகள் தொடக்கம் படித்த இளைஞர்கள் வரையில் சகலரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அவ்வாறு இல்லையேல் மனித உரிமை ஆவணங்களின் ஏற்பாடுகளுக்கு பங்கம் ஏற்பட்டிருப்பதை உலகுக்கு தெரிவிக்க வேண்டும்....... ஒற்றுமையாக புலிகள் இருந்தபோது அவர்களுக்கு இருந்த பலம் ஒன்றுமை அழிந்ததும் கருகி விட்டது.......ஒற்றுமையுடன் எங்கள் தமிழ் மக்கள் ஒருமித்து முன்னேற பத்திரிகைகளின் பங்கு மகத்தானது....”

tamilcnn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.