Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் கால்நடைகளுக்கும் சுதந்திரம் இல்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் கால்நடைகளுக்கும் சுதந்திரம் இல்லை! 32 எருமை மாடுகள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றன.

[Monday, 2010-12-06 04:21:02]

தமிழர்களுக்கும் சுதந்திரமில்லை அவர்களுக்கு சொந்தமான கால்நடைகளுக்கும் சுதந்திரமில்லை என்ற நிலையில் எவ்வாறு பாலுற்பத்தியை எதிர்பார்க்க முடியும் என்று நான் கேட்கின்றேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம் கடற்றொழில் நீரியல் மூலங்கள் அபிவிருத்தி கைத்தொழில் வாணிபம் கால்நடை வளர்ப்பு சனசமூக அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று காலை இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் திரு பா.அரியநேத்திரன் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;...

தற்போது யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசாங்கம் கூறுகின்றது உண்மையிலே மனிதர்களுக்கெதிரான துப்பாக்கி சூடு நிறுத்தப்பட்டிருக்கின்றன ஆனால் கால்நடைகளுக்கெதிரான (மாடுகள்) துப்பாக்கிச் சூடு தொடர்கின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காலம் காலமாக மேச்சல் தரைகளுக்காக ஒதுக்கப்பட்ட படுவான்கரைப்பகுதியில் இருக்கின்ற பட்டிப்பளை வவுணதீவு செங்கலடி போன்ற நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் அங்கு மேச்சலுக்காக கொண்டுசெல்லப்படுகின்ற கால்நடைகள் அத்துமீறி விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற வெளிமாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்ற சிங்கள விவசாயிகளால் துப்பாக்கியால் சுடப்படுகின்றன இதை நான் கடந்த காலங்களிலும் பேசி இருக்கின்றேன் ஆனால் இந்த சம்பவம் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

கடந்த மூன்று வாரத்திற்குள் இதுவரை 32 எருமை மாடுகள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றன.

13 மாடுகள் சூட்டுக் காயங்களுடன் திரும்பி இருக்கின்றன. இந்த இடத்திலே கௌரவமான சமாதானம் என்று நாங்கள் கூறுகின்றோம் இங்கிருக்கின்ற அமைச்சர்கள் கூறுகின்றார்கள் ஆனால் தமிழர்களின் வாழ்விடங்களில் இருந்த தமிழர்கள் இறந்திருக்கின்றார்கள் தமிழர்களின் பொருளாதார வளங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்ற ஒரு சம்பவம்தான் இப்போது இங்கு இடம்பெறுகின்றது.

ஆகவே இன்று நாங்கள் கால்நடை வளர்ப்பு பாலுற்பத்தி என்று அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூறிக்கொண்டிருக்கின்றார்கள் ஆனால் இங்கு நடப்பதென்ன யுத்தம் நிறைவுபெற்றாலும் இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் காரணமாக கால்நடைகள் அழிக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறக்குறைய ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இருக்கின்றன இவைகள் சுதந்திரமாக மேய்வதற்கு முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக தமிழர்களுக்கும் சுதந்திரமில்லை அவர்களுக்கு சொந்தமான கால்நடைகளுக்கும் சுதந்திரமில்லை என்ற நிலையில் எவ்வாறு பாலுற்பத்தியை எதிர்பார்க்க முடியும் என்று நான் கேட்கின்றேன்.

இதைவிட தற்போது கூட்டுறவுத் துறைக்கு பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்ற மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பசீர் சேகுதாவூத் அவர்கள் இந்த சபையிலே கூறி இருந்தார் கூட்டுறவு அமைச்சு என்பது சுரண்டலுக்கு எதிராக தாங்கள் போராடுகின்ற ஒரு சக்தியாக இந்த கூட்டுறவுத்துறையை கட்டியெழுப்பப் போவதாக உண்மையிலே இது ஒரு வரவேற்கத்தக்க விடயமாக இருக்கின்றது.

ஆனால் கூட்டுறவுத் திணைக்களத்திலோ அல்லது ப.நோ.கூ. சங்கங்களிலோ இருக்கின்றவர்கள் பல இடங்களில் சுரண்டிக்கொண்டிருக்கின்றார்கள் ஆகவே இதை முதலில் அமைச்சர் கவனத்தில் எடுத்து சுரண்டலில் ஈடுபடுகின்றவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பல ப.நோ.கூ. சங்கங்கள் இவ்வாறான ஊழல்கள் நிறைந்த சங்கங்களாகக் காணப்படுகின்றன தேவை ஏற்பட்டால் அவைகளின் விபரங்களையும் நான் சமர்ப்பிக்க தயாராக இருக்கின்றேன் எனவே இந்த சங்கங்களை இனங்கண்டு ஊழல்களில் இருந்த தடுத்து நிறுத்துவதற்கு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் இந்த கூட்டுறவுத்துறையை விருத்தி செய்ய முடியும்.

இதைவிட இன்று இந்த மீன்பிடி சம்பந்தமாக கூறுகின்றபோது மீன்பிடி தடைச் சட்டம் அதாவது மீன்பிடி வலயற் சட்டம் நீக்கப்பட்டதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஈபிடீபி கட்சியைச் சேர்ந்த சந்திரகுமார் அவர்கள் கூறி இருந்தார் உண்மையிலே மீன்படி வலயற் சட்டம் நீக்கப்பட்டிருக்கின்றதென்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன் ஆனால் சட்டங்கள் மட்டும் நீக்கப்பட்டு அறிக்கைகள் வருகின்றது வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்னும் பல இடங்களில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாமல் அச்சுறுத்தப்படுகின்றார்கள் குறிப்பாக வாகரை மன்னார் போன்ற இடங்களில் மீன் பிடிக்க செல்கின்றவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

இதைவிட மீன்பிடிக்க செல்லுமுன் அருகில் இருக்கின்ற இராணுவ முகாமில் அவர்களின் அடையாள அடைடையை ஒப்படைக் வேண்டும் பின்பு மீன் பிடித்து திரும்பி வரும்போது குறிப்பிட்ட ஒருதொகை மீனை அவர்களுக்கு கொடுத்தால்தான் அவர்களின் அடையாள அட்டையை அந்த இராணுவ அதிகாரிகள் மீள வழங்குகிறார்கள் இந்த நடைமுறை தொடர்ந்து நடைபெறுகின்றது. ஆகவே சட்டங்கள் நிறுத்தப்பட்டாலும்கூட மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக 30 வருட காலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் இருக்கின்ற நிலமையில் அங்கிருக்கின்ற படையினர் சட்டங்களை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக இயங்குகின்ற நிலமை தொடர்ச்சியாக இருந்துகொண்டிருக்கின்றது.

எனவே இதற்கு பொறுப்பான அமைச்சர்கள் இந்த விடயத்தையும் கவனத்தில் எடுத்து வடகிழக்கை சேர்ந்த மீனவர்களும் சுதந்திரமான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்து ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இதைவிடுத்து உதட்டளவில் மாத்திரம் அபிவிருத்தி பற்றி பேச வேண்டாம்..

இதனைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற 1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை தேசிய காகித ஆலை ஆரம்பத்தில் 3500 தொழிலாளர்களுடன் மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வந்தது ஆனால் தற்போது மிகவும் மோசமான முறையில் அழுதுகொண்டிருக்கின்றது. தற்போது ஏறக்குறைய 300 தொழிலாளர்களே இங்கு கடமையாற்றுகின்றார்கள்.

இவர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் வழங்குவதற்கே இந்த ஆலையால் முடியாமல் உள்ளது. எனவே இந்த நவீன உலகில் இந்த ஆலையை நவீன மயமாக்கி சிறந்த முறையில் இயங்க வைப்பதற்கும் அங்குள்ள தொழிலாளர்களுக்கு சிறந்த முறையில் வேதனம் கிடைப்பதற்கும் சம்பந்தபபட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithy.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.