Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோட்டத் தொழிலாளர்களது தாய்ப்பாலில் விஷம்- ஆய்வில் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டத் தொழிலாளர்களது தாய்ப்பாலில் விஷம்- ஆய்வில் தகவல்

வீரகேசரி இணையம் 12/7/2010 10:53:00 AM

பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மேற்கொண்ட ஆய்வின் படி ஊவா மாகாண ஹல்துமுல்ல பிரதேசத்திலுள்ள பெண் தோட்டத் தொழிலாளர்களது தாய்ப்பாலில் கூட கொடிய விஷங்களில் ஒன்றான ‘பெரகொட்' இரசாயனம் கலந்திருந்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்றை சுற்றாடல் மற்றும் மண்ணியல் ஆய்வாளரான கலாநிதி பி.ஐ.யாப்பா தெரிவித்தார்.

நேற்றுப் மாலை சர்வதேச இரசாயன பீடைகொள்ளி எதிர்ப்பு தினம் தொடர்பாக கண்டி அனிவத்தையிலுள்ள ‘கெண்டியன் ரிக் ரீட்' சுற்றுலா விடுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஆராய்ச்சி அதிகாரியும், பேராதனைப் பல்கலைக்கழக விவசாய கற்கை நெறிகளுக்கான விரிவுரையாளருமான கலாநிதி யாப்பா மேலும் தெரிவித்ததாவது-

‘பெரகொட்' என்ற இரசாயனப் பதார்த்தம் கொடிய நஞ்சாகும். இதனை உற்கெண்டால் மாற்று முறி கிடையாது. மரணமே இறுதி விளைவு. அதனைத் தயாரிக்கும் நாடுகளே அதன் பாவனைக்கு தடைவிதித்துள்ளது. பிரபல தயரரிப்பு நிறுவனமான ‘சின்ஜென்டா’ சிறுவனத்தின் தலைமையகம் சுவீஸ் நாட்டில் உள்ளது. அங்கு ‘பெரகொட்' பீடைகொள்ளி பாவிப்பது தடைசெய்யப் பட்டுள்ளது.

1964ன் பின் இலங்கையில் இரசாயனக் கலைகொள்ளிகள், பீடைகொள்ளிகள், இரசாயனப் பசளை, இரசாயனக் கிருமிநாசினிகள் என்பன பாவனைக்கு வந்தன. இதன் விளைவாக இவ் இரசாயனங்கள் மிக குறைந்த அளவில் தொடர்ச்சியாக எமது உடம்பில் சேகரிக்கப்பட்டு புற்று நோய், சிறு நீரகக் நோய், பாக்கின்சன் என்ற நரம்பு நோய், கண்வியாதி, தோல்வியாதி போன்ற பல நோய்களுக்குக் காரணமாக உள்ளது. வருடம் 5ஆயிரம் பேர் இந்த கெரகொட் இரசாயனம் உணவில் சேர்வதன் காரணமாக இறக்கின்றனர். ஆனால் டெங்கு போன்ற நோய்களினால் வருடம் 350 பேர் அளவிலேதான் இறந்துள்ளனர். எனவே டெங்கை விடக் கொடுரமானது இந்த ‘பெரகொட்' இரசாயனமாகும்.

பெரகொட் மண்ணுடன் சேர்ந்தால் எக்காரணம் கொண்டும் அது அழியமாட்டாது. மண்ணின் அகத்துறுஞ்சும் தன்மை, வடிதிறன் என்பன குறைகின்றது. இதனால் மண் பாதிப்படைகிறது.

ஏதிர்காலத்தில் இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கையில் மூன்று வருட இடைவெளியில் இதன் பாவனையை முற்றாக ஒழிப்பதாகக் கூறிய போதும் அப்பால எல்லை முடிவடைந்த போதும் புதுப் புதுப் பெயர்களில் அவை விதைந்துரைக்கப் பட்ட செறிவிலும் அதிகமானதாக திறந்த சந்தைக்கு வந்துள்ளது. _

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.