Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரசிங்கம் மண்டபம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரசிங்கம் மண்டபம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது!

2010-12-08 08:23:04 [views = 424]

வீரசிங்கம் மண்டபம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வருடம் தேசிய பாதுகாப்புதின நிகழ்வுகள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு வீரசிங்கம் மண்டபம் புனரமைக்கப்படவுள்ளது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார். தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளை ஒருங்கமைப்பதற்காக அமைக்கப்பட்ட 14 உபகுழுக்கள் நேற்று செவ்வாய் கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் கூடி கலந்துரையாடல்கள் மேற்கொண்டது.

அத்துடன் அன்றைய தினத்தையொட்டி பல நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘இயற்கை அனர்த்தத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பது’ என்கிற தொனிப்பொருளில் 23 ஊர்திகளின் அணிவகுப்பு கண்காட்சியும் இதில் ஒன்றாகும். இந்த அணிவகுப்பு யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகி யாழ்.நகரைச் சென்றடைந்து மீண்டும் முற்றவெளியை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கே மாடிகளைக் (ஐந்து தளங்கள்) கொண்ட வீரசிங்கம் மண்டபம் யாழ்ப்பாணத்தின் உயரமான கட்டடமாக விளங்குகின்றது. யாழ் நகரில் பொது நிகழ்வுகளுக்கு களம் அமைத்துக்கொடுப்பதற்காக யாழ் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினால் 1960 -களில் யாழின் கூட்டுறவுத்துறை ஆர்வலரும் முன்னாள் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினருமான திருவாளர் வீரசிங்கத்தின் ஞாபகார்த்தமாக இந்தக்கட்டடம் எழுப்பப்பட்டது.

யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் பண்பாட்டு நிலையமாக இது விளங்குகின்றது. மாடிகளில் வேறு அரச அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கீழ்த்தளத்தில் யாழ்ப்பாணத்தின் கலாசார நிகழ்வுகள் நடாத்துவதற்கு ஏற்ற அரங்குள்ளது. இந்த அரங்கில் மேடையேறாத நிகழ்ச்சிகளே கிடையாது. நடன அரங்கேற்றங்கள்இ கூட்டங்கள்இ கலை நிகழ்ச்சிகள்இ சிறுவர் நிகழ்வுகள் எனப் பல மேடையேறியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் கலை நிகழ்வுகள் நடைபெறும் கலாசார மண்டபங்கள் சில இருந்தன். பழைய யாழ்ப்பாண மாநகர சபையின் கட்டிடத்தில் இருந்த நகர மண்டபம்இ முற்றவெளியில் அமைந்திருந்த திறந்தவெளி அரங்கு நல்லூர் துர்க்கா மணிமண்டபம் நல்லூர் ஆதீனம்இ இளங்கலைஞர் மண்டபம்இ நல்லூர் கம்பன் கோட்டம் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கன. நகர மண்டபம் திறந்தவெளி அரங்கு என்பன யுத்தத்தின் காரணமாகச் சிதைந்து விட்டன.

கோட்டை யுத்தத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்ட கட்டிடம் வீரசிங்கம் மண்டபமாகும்.

கோட்டையைப் பார்த்தபடி நேரெதிரே இம்மண்டபம் இருந்தமையால் இம்மண்டபத்துள் இராணும் நிலைகொண்டுவிடலாம் என ஐயப்பட்ட போராளிகள் இம்மண்டபத்தை எரியூட்டினர். இதனால் கீழ்ப்பகுதியும் முதலாம் தளமும் சேதமடைந்தன. யுத்தம் முடிவடைந்த பின்னர் இம் மண்டபம் திருத்தி மீளமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தினுள் 4வது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடந்தேறியது. இம்மண்டபத்தினுள் அமைந்திருந்த சக்தி வானொலி ஒரு தடவை அடித்து சேதமாக்கப்பட்டது. இன்று யாழ்ப்பாணத்தின் கலாசாரச் சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது.யாழ் கோட்டை சுற்றாடலில் யுத்தத்தின் அகோரங்களுக்கு முகங்கொடுத்த வீரசிங்கம் மண்டபம் இன்றுவரை அசையாதிருக்கின்றது.

http://newjaffna.com/fullview.php?id=MTEzNQ==

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.