Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய பாதுகாவலருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய பாதுகாவலருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்: ஏவுகணைப் படையணியிலும் தளபதியாக இருந்துள்ளார்

வெள்ளிக்கிழமை, 10 டிசம்பர் 2010 02:05

judgementவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருக்கமான மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரான புலிகளின் முக்கிய உறுப்பினரொருவரை எதிர்வரும் 15ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருளானந்தன் நிசாந்தன் எனப்படும் பிரஸ்தாப சந்தேக நபர் தற்போதைக்கு ஒரு வருடகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் முதலாம் திகதி அவர் வவுனியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஒரு காலத்தில் அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய நெருக்கமான மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1993ம் வருடம் இடம்பெற்ற பூநகரி இராணுவத்தளம் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களில் அவர் முக்கிய பங்காற்றியிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அத்துடன் அவர் ஒரு கட்டத்தில் புலிகளின் ஏவுகணைப் பிரிவிலும் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளதுடன், அவர் தலைமையிலான குழுவே விமானப்படையின் எம்.ஐ. 24 ஹெலிகொப்டர் ஒன்றை ஏவுகணைத் தாக்குதல் மூலம் வீழ்த்தியிருந்ததாகவும் பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் பொதுமக்கள் மத்தியில் மறைந்திருந்த அவர் பற்றிய இரகசியத் தகவல் ஒன்றையடுத்தே கடந்த வருடம் அவர் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணைகள் தொடர்ந்து முன் கொண்டு செல்லப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் 15ம் திகதி நிசாந்தனின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டது.

sangamam.com

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.