Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுட்டுக்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுட்டுக்கொலை

2010-12-26 22:14:08

]வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் .

இச்சம்பவத்தில் உரும்பிராய் மேற்கு மூன்று கோவிலடியைச் சேர்ந்த மார்க்கண்டு சிவலிங்கம் வயது 52 என்பவரே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

நேற்று மாலை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவரினைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் அவரது மகளின் நகைகளை அங்கு வந்தவர்கள் கேட்டதாகவும் மகள் கூக்குரலிட்டபோது அங்கு வந்த தந்தையை ஆயுததாரிகள் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலமாக திருடர்கள் என்ற போர்வையில் ஆயுததாரிகள் அவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டு தங்களின் முயற்சிகளை திசைதிருப்பும் புதிய உத்தியை கையாண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான முயற்சியிலேயே அண்மையில் சங்கானையில் ஆலய குருக்களும் அவரது புதல்வர்களும் சுடப்பட்டதாக தெரியவருகிறது.

newjaffna.com/

வலிகாமம் கல்விப் பணிப்பாளர் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்! பெருமளவானோர் இறுதி அஞ்சலி! – சிறிதரன் எம்.பி. கண்டனம்

உரும்பிராயில் சுட்டுக்கொல்லப்பட்ட வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அதிகாரிகள் சூழ தகனம் செய்யப்பட்டது.

கடந்த 27ம் திகதி தனது மகளுடன் வீட்டிலிருந்த சமயம் கொள்ளைக்கென்ற பெயரில் புகுந்த ஆயுததாரிகள் இவரை சுட்டுக்கொன்றனர்.

இவரது இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது இறுதி அஞ்சலிகளை செலுத்தினர். தொடர்ந்து நண்பகல் 12 மணிவரை பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் நண்பகல் 1.45 மணியளவில் பூதவுடல் வலிகாமம் கல்வி வலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இங்கு வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனதுரையில்,

காலத்திற்குக் காலம் மனநோயாளிகளாலும் கஞ்சாவிற்காக துப்பாக்கியை கொடுப்பவர்களாலும் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இதற்கெல்லாம் எந்தவிதமான நடவடிக்கைகளும் இன்று வரைக்கும் மேற்கொள்ளப்படவில்லை. இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. நாளைக்கும் தொடரும்.

1985காலப்பகுதியில் கிளிநொச்சி ரயில் நிலையத்தில் 16 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது அந்த சிப்பாய் மனநோயாளி என்று மூடிமறைத்தார்கள்.

இன்றைக்கு சங்கானையில் இந்து மதகுரு கொல்லப்பட்டபோது கஞ்சாவிற்காக இராணுவச் சிப்பாய்கள் துப்பாக்கி கொடுத்ததாக கூறுகின்றார்கள்.

தமிழர்கள் தொடர்ந்தும் கொல்லப்பட்டுக்கொண்டிருப்பார்கள் இவர்களும் இப்படி ஏதாவது காரணம் கூறிக்கொண்டேயிருப்பார்கள்.

நேற்று ஒரு கல்வியிலாளர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். இதற்கும் ஏதாவது காரணம் கூறத்தான் போகிறார்கள் அதில் ஆச்சரியப்படவேண்டிய அவசியம் கிடையாது.

குடாநாட்டில் நடந்த சாவுகளுக்கும் கொள்ளைகளுக்கும் அரசாங்கமே முழுப்பொறுப்பபையும் ஏற்றுக்கொண்டாகவேண்டும். குடாநாட்டில் கடந்த 15வருடங்களுக்கும் மேலாக இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது.

இராணுவமும் இராணுவ புலனாய்வுத்துறையினரும் கண்ணில் எண்ணை விட்டுப் பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில் இப்படியான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன.

குடாநாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற சகலதுறைகளையும் அடக்கி ஒடுக்குவதன் முலம் மக்களை மந்தைச்சமூகமாக மாற்றும் நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகின்றது.

இன்று இந்த நிகழ்வை சாதாரண சம்பவமாக பார்க்கமுடியாது. இந்த விடயத்தில் அனைவரும் அக்கறையுடன் நடந்து கொண்டாகவேண்டும்.

இந்த மூத்த கல்வியியலாளருக்கு நடந்திருப்பது நாளைக்கு யாருக்கும் நடக்கலாம். துப்பாக்கி முனையில் மூன்று கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

அவற்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறான சம்பவங்களை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மேலும் கல்விப் பணிப்பாளரின் குடும்பத்திற்காகவும் அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் எனக் கூறினார்.

http://www.eelampress.com/2010/12/9799/

கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் கொலையின் பின்னணியில் அரசியல்!

வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் கொலையின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக தெரிய வருகின்றது.

அதேவேளை, இக் கொலையின் பின்னணியில் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரின் நெருங்கிய தொடர்பும் இருப்பதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தினத்தில் தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

சிறிலங்காப் பிரதமர் டி.எம்.ஜயரட்ன பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந் நிகழ்வில் தேசிய கீதத்தை சிங்களத்தில் பாட வலியுறுத்தப்பட்டிருந்தமை தொடர்பில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் கடுமையான விசனமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை. தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடவேண்டும் என வற்புறுத்தப்பட்டமை தொடர்பில் வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரான மார்க்கண்டு சிவலிங்கம் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரிய வருகின்றது.

இந் நிலையிலேயே, இவர் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரின் ஆதரவுடன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகளின் மூலம் தெரிய வருவதுடன், இக் கொலை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு படுகொலை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இவரின் வீட்டில் கொள்ளையடிக்கச் சென்ற ஒரு குழுவினரே இக் கொலையைச் செய்ததாகக் காட்டிக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச் சம்பவம் குறித்து சிறிலங்காப் பொலிசாரும், படைத்தரப்பும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சங்கானை ஆலையக் குருக்களும், அவரது இரு பிள்ளைகளும் சுடப்பட்ட சம்பவத்தில் சிறிலங்கா படைத்தரப்பினரின் துப்பாக்கிகளே பயன்படுத்தப்பட்டு இருந்ததாக வடமாகாண ஆளுநரும், யாழ் மாவட்டத்தின் முன்னாள் படைத் தளபதியுமான ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={4DC16674-3B3D-4AE8-9903-AAD06B1F8255}

Sri Lankan forces occupying Jaffna planned the assassination of the Deputy Director of Education for Valikaamam, Mr. Markandu Sivalingam, on Sunday night, media sources in Jaffna said. “We cannot keep quiet seeing such murders. If we do so, tomorrow even we will not remain. We have to mobilise ourselves very urgently,” said Rev. Fr. Jesudas, the principal of St. Hendry’s College, I’lavaalai, speaking at the funeral of Mr. Sivalingam at Maruthanaamadam, Tuesday. It was attended by large number of students, teachers, principals and the public. But neither SL military officials, nor the officials of the provincial administration attended the funeral. On the day of his assassination there was the ‘disaster management’ gala attended by SL prime minister forcing students to ‘sing’ Sinhala anthem.

“Whenever academics and intellectuals were assassinated in the past, we were keeping quiet. But we have not achieved anything by that silence. Such assassinations are escalating now. Our continued silence will invite dangerous consequences,” Fr. Jesudas further said in making obituary.

http://tamilnet.com/art.html?catid=13&artid=33288

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.