Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்பானவர்களுக்கு ஒரு பகிரங்க மடல்

Featured Replies

2011ஆம் ஆண்டின் நடவடிக்கைகளுக்குத் தயாராகி இருக்கின்ற உங்களோடு சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென விரும்பி இம்மடலை எழுதுகின்றோம்.

யாழ்ப்பாணத்தில் பலரதும் பகைமைக்கு ஆளான துறையாகப் பத்திரிகைகள் இருக்கின்றன என்பதை இவ்விடத்தில் முதலில் கூறியாக வேண்டும்.

தமக்குச் சாதகமாகச் செய்தி வெளிவரும் போது பத்திரிகைகள் சரியாக இயங்குகின்றன எனக் கூறுவோர், உண்மையைக் கூற முற்படும் போது பல கோணங்களில் நின்று விமர்சிக்கத் தொடங்கி விடுவர். இந்நிலைமை அரச நிர்வாகத்திலும், அரசியல் புலத்திலும் தாராளமாக உண்டு.

இந்தக் குறை அளப்பிற்குப் பத்திரிகையின் பொறுப்பை அவர்கள் அறியாமல் இருப்பதும் பத்திரிகைகளை வாசிக்காமல் விடுவதுமே காரணம் எனலாம்.

பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள் (இது அரச நிர்வாகம் சார்ந்ததாகவோ அல்லது அரசியல் சார்ந்ததாகவோ இருக்கலாம்) கட்டாயமாகப் பத்திரிகைகளை வாசிக்க வேண்டும். தொடர்ச்சியாகவும் வாசிக்க வேண்டும்.

பத்திரிகைகளை வாசிக்காமல் விட்டுவிட்டு மூன்றாம் நபர் கூறுவதைக் கேட்டு உணர்ச்சி வசப்படுவதோ உண்மையை அறியாமல் துள்ளிக் குதிப்பதோ அறிவார் தொழிலன்று. மெய்ப்பொருள் காண்பவர்களே அறிவுடையவர்கள் என்பது வள்ளுவரின் முடிபு. அந்த முடிபில் இருந்து விடுபட்டு அறிவுடைமைக்குப் புதியதோர் வரைவிலக்கணம் தேடும் முயற்சியும் அறிவிலித்தனமாக இருக்கும் என்பதால், வள்ளுவரின் முடிபோடு நின்றால், எங்களில் பலர் பத்திரிகைகளைப் பயனுறுதிமிக்க வகையில் பயன்படுத்த இல்லையென்றே கூற வேண்டும்.

பத்திரிகைகள்தான் மக்களின் பல்கலைக் கழகமென ஓர் அறிஞன் கூறிய கருத்தைச் சிந்திக்க வேண்டும். அந்தச் சிந்தனையில் பத்திரிகைகள் மூலம் மக்கள் மத்தியில் அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒழுக்கமுடைமையையும் விரைவாக ஏற்படுத்த முடியும்.

எனினும் எங்கள் யாழ்.பிராந்தியத்தில் பத்திரிகைகளைப் பகைமை உணர்வோடு பார்க்கும் பரிதாப நிலையே உண்டு. இதற்கு மேலாகப் பத்திரிகைகளுக்குத் தகவல்களை வழங்குவது வெறுப்புக்குரிய விடயமாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் இங்குள்ள பொலிஸ் நிலையங்கள் தகவல்களை மூடி மறைப்பதில் மிகவும் மும்முரமாகச் செயற்படுகின்றன. மறைக்க வேண்டிய செய்திகளை மறைப்பது அறத்தின் பாற்பட்டது. அதேநேரம் செய்திகளை அறியும் உரிமை வாசகர்களுக்குண்டு என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

எனவே எதற்கெடுத்தாலும் சீறிச் சினக்கும் இயல்பால் நாம் எதனையும் சாதிக்க முடியாது. அதுதான் இயல்பென்றால் அதற்குச் சிகிச்சையும் உண்டு. எனவே அன்பார்ந்தவர்களே! 2011ஆம் ஆண்டில் உங்கள் வலம்புரி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இவ்விடத்தில் ஆராயவுள்ளது. இது தொடர்பில் தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள் அல்லது உங்கள் விளக்கங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். தேவையற்ற விமர்சனங்கள் பயனற்றவை. பல வழிகளிலும் நொந்து போயுள்ள எங்கள் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அனைவரும் பாடுபடுவோம்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=14139

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.