Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபுணர் குழுவுக்கு நுழைவு அனுமதி வழங்கினால் அரசு வீடு செல்ல நேரிடும்!

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கை வருவதற்கு நுழைவு அனுமதி வழங்கினால் அரசாங்கம் வீடு செல்ல நேரிடும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர எச்சரித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவரது அரசாங்கமும் சாதகமாக செயற்பட முயற்சிக்கக் கூடாது என அவர் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட ஆதரவாளர்கள் மூவருள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவினை நாட்டிற்குள் வர அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கையில் ஜனாதிபதி தொடர்ந்தும் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இல்லையெனில், வேலியில் ஓடிய ஓணானைப் பிடித்து மடிக்குள் விட்ட கதையாக அவஸ்தைப்பட வேண்டி வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கலாநிதி குணதாச அமரசேகர மேலும் தெரிவித்துள்ளதாவது:

'மேற்கத்தைய நாடுகளின் தேவைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய நிபுணர் குழுவிற்கு இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்க தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஒருபோதும் இடமளிக்காது. இந்த நாட்டு மக்களும் அந்த நிபுணர் குழுவின் வருகையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஏனென்றால் அவர்கள் இலங்கைக்கு வருவது எமக்கு உதவிகள் மற்றும்  ஒத்தாசைகளை வழங்குவதற்கல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எமது இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது என குற்றம் சுமத்தி அதனை விசாரணை செய்யவே நிபுணர் குழு இலங்கை வருகின்றது. எமது இராணுவ வீரர்களை தூக்கிலிட வரும் ஐ.நா. நிபுணர் குழுவை நாம் நாட்டிற்குள் வர எவ்வாறு அனுமதிப்பது?

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு இலங்கைக்கு வர நுழைவு அனுமதி வழங்க சம்மதித்துள்ளமை நாட்டிற்கும், இராணுவத்திற்கும் செய்த பாரிய துரோகமாகும்.

இந்த நாட்டு மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியது நாட்டை பிரிவினைவாத சக்திகளுக்கு காட்டிக் கொடுப்பதற்காக அல்ல. எனவே ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு விடயத்தில் எவ்வாறு செயற்படுகின்றது என்பதிலேயே அரசாங்கத்தின் எதிர்காலம் உள்ளது' என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடந்த வருட ஆரம்பத்தில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழுவை நியமித்த போது சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச கண்டனம் தெரிவித்திருந்ததோடு, உண்ணாவிரதம் போராட்டத்தையும் நடத்தியிருந்தார்.

இந் நிபுணர் குழு தற்போது இலங்கை செல்ல முற்படும் வேளையில் இதற்கு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={3B946D28-CC40-41B5-B5D7-46A8F5E99AFD}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.