Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளை திருப்பி அனுப்பினால் உயிராபத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jan 16, 2011 / பகுதி: செய்தி /

முன்னாள் போராளிகளை திருப்பி அனுப்பினால் உயிராபத்து – நெதர்லாந்து நீதிமன்றில் வாதாட்டம்

அரசியல் தஞ்சம் கோரிய தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களுக்கு இலங்கை அரசால் கடும் உயிர் ஆபத்துக்கள் ஏற்படும். இவ்வாறு நெதர்லாந்து நீதிமன்றில் நடைபெற்ற அரசியல் தஞ்சக் கோரிக்கை வழக்கு ஒன்றில் வாதாடிய அந்த நாட்டு சட்டத்தரணி நீதிபதியிடம் எடுத்து விளக்கியிருக்கிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறிய முன்னாள் போராளியான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேசு சந்திரகுமார் அந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோரினார்.

அவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நிராகரித்திருந்தது. இதனையடுத்து அவர் நீதிமன்றில் தனது சட்டத்தரணி ஊடாக வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் அந்த நாட்டின் மிடில்புறுக் என்ற இடத்தில் அமைந்துள்ள நீதிமன்றில் கடந்த 12 ஆம் திகதி புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது அகதி அந்தஸ்து கோரிய முன்னாள் போராளி சார்பாக வாதாடிய சட்டத்தரணி திருமதி எல். நந்து , இலங்கையில் போர் முடிந்த பின்னரும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் கொலைகள், ஆள்கடத்தல்கள், கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்கள் நடத்த வண்ணம் உள்ளன என்று தெரிவித்த அவர், அதற்குரிய செய்தி ஆதாரங்களையும் நீதிமன்றில் சமர்பித்தார்.

அதனைப் பெற்றுக் கொண்ட நீதிபதி தமது முடிவினை எதிர்வரும் 45 நாட்களுக்குள் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

pathivu

தீர்ப்பு வழக்கு தாக்கல் செய்தவருக்கு சாதகமாக அமைய வேண்டும். அப்படி அமையும் பட்சத்தில் இவரைப்போன்றவர்களுக்கு ஆறுதலாக அமையும், வேறு நாடுகளும் இந்த தீர்ப்பை கவனிக்கும்.

சிங்களத்தின் பிரச்சாரமும் முறியடிக்கப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.