Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ள அனர்த்தங்களை மதிப்பீடு செய்ய ஐ.நா. வின் உயரதினாரி இலங்கை விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ள அனர்த்தங்களை மதிப்பீடு செய்ய ஐ.நா. வின் உயரதினாரி இலங்கை விஜயம்

வீரகேசரி இணையம் 1/18/2011 5:10:18 PM

இலங்கையில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களை மதிப்பீடு செய்வதற்காக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. வின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசர நிவாரண பிரதி ஒருங்கிணைப்பாளருமான கதரீன் நாளை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரும் கதரீன் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட பகுதிகளை நேரடியாக பார்வையிட உள்ளதுடன் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் பார்வையிட உள்ளார்.

தங்கியிருக்கும் மூன்று நாட்களில் கதரீன் அரசாங்கத்தினதும் உதவி வழங்குவோரினதும் உதவி முகவரமைப்புகளினதும் பிரதிநிதிகளைச் சந்திப்பார்.

இலங்கையின் சகல மனிதாபிமானத் தேவைகளை மதிப்பீடு செய்வது தொடர்பில் பிறாக்கின் விஜயம் அமைந்திருக்கிறது. ஐ.நா.வானது மனிதாபிமான நிவாரண உதவிகளை இலங்கைக்கு வழங்கி வரும் நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நிலைமைகளை அவதானிப்பதற்கு பிராக் வருகைதருவதாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்தது.

கதரீன் பிராக்கின் விஜயத்தின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அவசர நிதியை வழங்குவதற்கான வேண்டுகோள் விடுத்தும் செயற்திட்டத்தை அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.