Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னேற்றம் அடையவில்லை! - அமெரிக்கா

Featured Replies

இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னேற்றம் அடையவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் காணப்படும் அளவுக்கு, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் வெளிவிவகாரக் கொள்கையில் தென் மற்றும் மத்திய ஆசியாவின் முன்னுரிமைகள் என்ற தலைப்பில் அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போதே சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் இவ்வாறு கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் இலங்கையில் இடம்பெற்று வந்த போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அந் நாட்டின் பொருளாதாரம் துரித வளர்ச்சியைக் கண்டுள்ள போதிலும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்கள் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தனதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய ஆசியா தொடர்பாக தனதுரையில் அதிக கருத்துக்களை வெளியிட்ட ரொபர்ட் ஓ பிளேக், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து அந் நாடுகளில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உதவியாக உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் கருத்தில் எடுத்துச் செயற்படும் என தான் நம்புவதாக அவர் நம்பினக்கை வெளிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.

2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தனது அமர்வுகளை ஆரம்பித்த உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக இதுவரை பல அமர்வுகளை நடாத்தியிருப்பதுடன், கடந்த நவம்பர் மாதம் இந்த ஆணைக்குழுவின் கால எல்லையை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்வாண்டு மே மாதம் 15ஆம் திகதி வரை நீடித்திருந்தார்.

இலங்கையின் வடக்குக் கிழக்கில் மீளக் குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் வகையில் பல நிர்வாக ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்திருந்தது.

இந் நிலையில் குறிப்பிட்ட இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் பல்வேறுபட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை அமைத்திருக்கின்றது.

தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் என்ற வகையில் தெற்கே இலங்கை தொடக்கம் வடக்கே கசகஸ்தான் வரைக்கும், மாலைதீவு முதல் பூட்டான் வரைக்குமான பிராந்தியங்களுக்கு ரொபர்ட் ஓ பிளேக் பொறுப்பாகச் செயற்பட்டு வருவதுடன், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை பிறிதொரு தூதுவர் ஒருங்கிணைத்து வருகின்றார்.

இப் பிராந்தியம் குறித்த பராக் ஒபாமா அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாகக் குறிப்பிடுகையில், மத்திய மற்றும் தென்னாசியாவைப் பொறுத்த வரை தமக்கு மூன்று முக்கிய இலக்குகள் இருப்பதாகப் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவளித்தல், இந்தியாவுடனான மூலோபாய உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் உறுதியான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் என்பவையே அவை என அவர் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு முதல்; 2009ஆம் ஆண்டு வரை சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக ரொபர்ட் ஓ பிளேக் கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={BE2E0F12-6CBE-400C-A593-A92EAB0AF658}

  • தொடங்கியவர்

The Obama Administration’s Priorities in South and Central Asia

Remarks by Assistant Secretary Robert O. Blake, Jr. Rice University January 19, 2011 Houston, TX

Nepal and Sri Lanka have both ended terrible internal conflicts in the last few years, but each must now secure the peace.

While Sri Lanka’s economy has thrived since the end of its brutal civil war, during the end of which I served as ambassador, its reconciliation has proceeded more slowly. I hope that the government will act on the recommendations of the Lessons Learnt and Reconciliation Commission it set up, as part of wider efforts that will be needed to help establish a lasting peace.

http://chennai.usconsulate.gov/prind110120.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.